சனி, 14 செப்டம்பர், 2019

அமித் ஷா : நாட்டின் ஒரே மொழி ஹிந்தி: வீடியோ


தினமலர் : புதுடில்லி: நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருந்தால், உலக அளவில் இந்தியாவை பிரபலப்படுத்த முடியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஹிந்தி தினத்தை முன்னிட்டு, அமித்ஷா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
இந்தியா வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும், முக்கியத்துவம் உண்டு. ஆனால், ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது அவசியம். நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும். இதன் மூலம், உலக அளவில், இந்தியாவை பிரபலபடுத்த முடியும்.
ஹிந்தி தினத்தை முன்னிட்டு, மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நம் தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அத்துடன், ஹிந்தி மொழியை கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண விமான நிலையம் என பெயர் மாற்றம் .. கனிமொழியிடம் ரணில் விக்கிரமசிங்கா

Palali Airport would be named Jaffna Airport - PM Ranil Wickremasinga
வீரகேசரி :விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் என்று
பெயரிடப்படவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் சிறிலங்கா அக்கறை கொண்டிருப்பதாகவும் இதன் போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சந்திப்பில் பங்கேற்ற சிறிலங்கா பிரதமர் செயலக அதிகாரி சுதர்சன குணவர்த்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 2011ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும், போதிய வரவேற்பு இல்லாமையால் அது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Prime Minister Ranil Wickremesinghe told a DMK delegation from India yesterday that the Palali Airport would be named the Jaffna Airport for regional flight operations after renovation next month. A DMK delegation led by Kanimozhi who is a Lok Sabha MP and the daughter of former Tamil Nadu Chief Minister Muthuvel Karunanidhi called on the Prime Minister yesterday.

இதுவரை 2500க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றியுள்ள மாநகராட்சி அதிகாரிகள்..

admkநக்கீரன் : சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23 வயது) கனடா செல்வதற்காக செப் 12ஆம் தேதி தேர்வு எழுதியுள்ளார்.  தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது,
சென்னை பள்ளிக்கரணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ, பைக்கில் வலதுப்புறம் திரும்ப முயன்ற போது, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, முதலில் லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள். பின்னர், அந்த விசாரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தனது இல்லத்திருமணத்துக்காக, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த திருமணத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் வெடித்தது போராட்டம்.. கன்னட அமைப்பினர் கண்டன பேரணி வீடியோ

tamil.oneindia.com - veerakumaran : பெங்களூர்: கர்நாடகா தலைநகர் பெங்களூரில் இந்தி திணிப்புக்கு எதிராக கன்னட அமைப்பினர் சார்பில் போராட்டம் வெடித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹிந்தி தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரில் போராட்டம் வெடித்துள்ளது. "ஹிந்திதான், நாட்டு மக்களை இணைக்கும், மொழி" என்று அமித் ஷா தெரிவித்த கருத்து கன்னட அமைப்பினரின் கோபத்தை தூண்டியுள்ளது.
கன்னட அமைப்பினர் இன்று ஊர்வலமாக நகரின் மையப்பகுதியில் உள்ள டவுன் ஹால் பகுதிக்கு வந்தனர். ஹிந்திக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும், அவர்கள் கோஷமிட்டனர்.
இதுபற்றி போராட்டக்குழுவை சேர்ந்த நஞ்சப்பா என்பவர் கூறுகையில், "தென் மாநிலங்களை பொறுத்தளவில், ஹிந்தி என்பது அன்னிய மொழி. இங்கே அதிகம் பேருக்கு அந்த மொழி அறிமுகம் இல்லை. வெளிநாட்டு மொழி போலத்தான் ஹிந்தி எங்களுக்கு. அப்படியிருக்கும்போது நாங்கள் எதற்காக ஹிந்தியை கற்க வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? -ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து

public-exams-in-tamilnadu .hindutamil.in :  5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு சரியா, அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய சட்டத் திருத்தப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வும் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் உடனடி தேர்வும் நடத்த வேண்டும். அந்த தேர்விலும் மாணவர்கள் தோல்வியடையும் பட்சத்தில் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இந்தி - யாவா?: அமித்ஷா கருத்துக்குத் தமிழகத்தில் எதிர்ப்பு!


இந்தியாவா? இந்தி-யாவா?: அமித்ஷா கருத்துக்குத் தமிழகத்தில் எதிர்ப்பு!  மின்னம்பலம:  இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்குத் தமிழகத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது,
தபால் துறை, ரயில்வே துறை ஆகிய தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத முடியும் என்ற அறிவிப்புக்குத் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, மீண்டும் மாநில மொழிகளிலேயும் தேர்வு எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இவ்வாறு தமிழகத்தில் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயல்கிறது என்று குற்றச்சாட்டும் அரசியல் கட்சிகள் தமிழ் மொழி உணர்வோடு விளையாடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 14) இந்தி தினத்தை ஒட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரே நாடு ஒரே மொழி என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு, ஆனால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரே மொழி இருப்பது மிகவும் முக்கியம். ஒரு மொழியால் நாட்டை ஒன்றிணைக்க முடியும் என்றால், அது பரவலாக பேசப்படும் இந்தி மொழியால் தான் முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோரின் கனவுகளை நனவாக்க இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சவுதியின் மிகப்பெரிய பெட்ரோல் உற்பத்தி ஆலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல்.. வீடியோ


மாலைமலர் :சவுதி அரேபியாவின் அரம்கோ பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்தின் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய அளவு சேதம் ஏற்பட்டது.
ரியாத்: சவுதி அரசின் அரம்கோ பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் ரியாத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்யாக் என்ற இடத்தில் அப்கைக் என்னும் சுத்தகரிப்பு ஆலையின் மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. நாளொன்றுக்கு சுமார் 70 லட்சம் பெட்ரோலிய கச்சா எண்ணையை சுத்திகரிக்கும்
அந்த தொழிற்சாலையின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது. தீப்பற்றி எரியும் பெரோல் சுத்திகரிப்பு ஆலை இதேபோல், குர்அய்ஸ் என்ற பகுதியில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் பெட்ரோல் கிணறு மீதும் ஆளில்லா விமானம் மூலம் இன்று தாக்குதல் நடத்தப்பட்டது.

ஸ்டாலின் : அமித்ஷாவின் இந்தி பேச்சு .. உடனே திரும்ப பெறவேண்டும்!

hindutamil.in : சென்னை இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (செப்.14) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேல்விகளுக்கு பதிலளித்தார்.
இளைஞர் அணியில் 30 லட்சம் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை வைத்து உதயநிதி அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது பற்றி?
அது அவருடைய வேலை, கடமை. அந்த வேலையை அவர் செய்துக் கொண்டிருக்கிறார்.
ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு, ஒரே நாட்டுக்கு ஒரே மொழி இந்தி தான் என்று அமித் ஷா சொல்லியிருக்கிறார். பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் இதுபோன்று கருத்து கூறியிருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்குப் பிறகு, இது போன்று 2-வது முறையாக தொடர்ந்து தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் ரயில்வேயில், தபால் அலுவலகங்களில்,அது தேர்வாக இருந்தாலும், வேலைவாய்ப்பாக இருந்தாலும், அறிக்கைகளாக இருந்தாலும் அவைகளில் எல்லாம் தமிழ் இடம்பெறக் கூடாத ஒரு நிலையை, முயற்சியில் ஈடுபட்டார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் கனிமொழி சந்திப்பு: மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தல்

தினமணி : இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெள்ளிக்கிழமை
சந்தித்த மக்களவை உறுப்பினர் கனிமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்  உள்ளிட்டோர். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது தமிழக மீனவர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசின் கடினமான சட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார். இலங்கை அமைச்சரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவருமான  ரவூப் ஹக்கீம் மகளின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து வியாழக்கிழமை விமானம் மூலம் கனிமொழி இலங்கை சென்றிருந்தார். இந்த நிலையில், இலங்கையில் வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கனிமொழி சந்தித்துப் பேசினார்.

பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது .. ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார்

தினமலர் : புதுடில்லி: 'வரும் காலங்களில் பாகிஸ்தான் என்ற நாடே உலக வரைபடத்தில் இருக்காது' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்தார்.
டில்லி என்.டி.எம்.சி., மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்திரேஷ் குமார் பேசியதாவது: 1947ம் ஆண்டுக்கு முன் பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இல்லை. இனி வரும் காலங்களில் அது நடக்கும் என நம்புகிறேன். காந்தி ஜெயந்தியையும், ஹிந்தி திவாசையும், விரைவில் லாகூரில் கொண்டாடுவோம். பிரிவினைக்கு பின் 1971ம் ஆண்டு பாகிஸ்தான் மேலும் பிரிக்கப்பட்டது. 'பிரிவினைவாத இயக்கங்களால்' பாகிஸ்தான் விரைவில் நொறுங்கிவிடும். தற்போது 5-6 துண்டுகளாக பிரியும் விளிம்பில் அந்நாடு உள்ளது. பாகிஸ்தானிலிருந்து பஷ்டூனிஸ்தான், பலுசிஸ்தான், சிந்து பிரிந்து செல்ல விரும்புகிறது. பாக்., நாளுக்கு நாள் பலவீனமாகி வருவதை நிபுணர்களும் கணித்துள்ளனர்.

காஷ்மீரில் சுயநிர்ணய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் .. இம்ரான் கான் உலகத்திற்கு வேண்டுகோள்


மாலைமலர் : காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக வரும் 13-ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: :  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42-வது கவுன்சில் கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று பங்கேற்று பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மஹ்மூத் ஷா குரேஷி, ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் பிரச்சனை இந்தியாவின் உள்விவகாரம் அல்ல, இது சர்வதேச அக்கறை கொண்ட பிரச்சனை. ஜம்மு காஷ்மீரில் இந்திய படை வீரர்களின் எண்ணிக்கை 7 லட்சத்திலிருந்து 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவே ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிற நாடுகள் எங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் பதிலடி தந்தது.

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு- . 10- ஆம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கு ஒரே தேர்வு-..தமிழக அரசு அறிவிப்பு!

tamilnadu 5th and 8th std board exam tn govt announced nakkheeran.in - santhoshb : தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. மாணவர்களின் தேர்வு முடிவுகளை கொண்டு தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்.
மேலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவு. ஏற்கனவே மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும், இதனை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என கூறிய நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
10- ஆம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கு ஒரே தேர்வு- தமிழக அரசு அறிவிப்பு! தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்பமொழி பாடம், ஆங்கில மொழி தேர்வுகள், முதல் தாள், இரண்டாம் தாள் என தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த முறையை மாற்றி தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்திற்கு ஒரு தேர்வும் மட்டுமே இனி நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிதம்பரத்தின் தனிச் செயலாளர் பெருமாள் அப்ரூவர்?.. அமித் ஷா முழு மூச்சில் சிதம்பரத்தை குறிவைத்து தொடர் சதிகள் ..?

மின்னம்பலம் : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்ந்து திகாரிலேயே வைத்திருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
அதன்படி ப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது அவரை சுற்றியிருந்தவர்களை எல்லாம் விசாரணைக்குள் கொண்டுவர முடிவு செய்துள்ளன சிபிஐயும், அமலாக்கத்துறையும். அவ்வகையில் சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது கூடுதல் தனிச் செயலாளராக இருந்தவரும் இலக்கியவாதியுமான கே.வி.கே. பெருமாளை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது என டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அமலாக்கத்துறையும் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு உட்படுத்த இருக்கிறது.

.. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த ஆடம்பரத் திருமணம்:.. வீடியோ ... தீட்சதர்கள் பேராசை ..


hindutamil.in : கடலூர் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங் கால் மண்டபத்தில் வெகு விமரி சையாக நடைபெற்ற தொழிலதிபர் ஒருவரின் இல்லத் திருமண விழா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில் உலக பிரசித்தி பெற்ற சைவ திருத்தலமாகும். சுமார் இரண்டா யி்ரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாகவும் இக்கோயில் பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
பல்வேறு சிறப்புகளை கொண்ட நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் ராஜ சபை என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் ஆனித் திருமஞ்ச னம், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன உற்சவத்தின்போது நடராஜர் மற்றும் சிவகாம சுந்தரி அம்பாள் எழுந்தருளி மகா அபிஷேகம், லட்சார்ச்சனை ஆகி யவை நடைப்பெறும். அப்போது திருவாபரண அலங்காரத்தில் சுவாமி, அம்பாளும் அருள்பாலிப் பர்.

ஸ்டாலின் உத்தரவு : திமுக நிகழ்சிகளுக்கு பேனர் வைக்க கூடாது .. வைத்தால் நான் கலந்து கொள்ளமாட்டேன்

திமுக நிகழ்ச்சிகளில் பேனர் கூடாது : ஸ்டாலின் உத்தரவு!மின்னம்பலம் ": திமுக நிகழ்ச்சிகளில் பேனர்
வைக்கக் கூடாது என்று ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பேனரால் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்தை தொடர்ந்து பேனர் கலாச்சாரத்துக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
சுபஸ்ரீ உயிரிழப்பைத் தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. அப்போது, சட்ட விரோத பேனர் வைக்கக் கூடாது என கட்சியினருக்கு திமுக தலைவர் கூட ஏன் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இருக்கிறார் என்று திமுக வழக்கறிஞர் கண்ணதாசனிடம் கேள்வி எழுப்பியதுடன் அவ்வாறு ஒரு வேலை தெரிவித்திருந்தாலும் அதை ஏன் மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இன்னும் எத்தனை பேர் பேனர்களுக்காக உயிரை விடவேண்டும் ? நீதிமன்றம்

Subasrivikatan.com - கலிலுல்லா.ச : இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது. ஒரே இரவில் இந்த பேனர்கள் உருவாகிவிடவில்லை. பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்காத உத்தரவுகளே இல்லை. எந்த நிகழ்வு என்றாலும் பேனர் வைத்தால்தான் வருவார்களா?
 டிஜிட்டல் பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் தமிழக அரசு மீது டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் சேஷாயி ஆகிய அமர்வு விசாரித்தது. அப்போது பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், ``பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் ஏன் சென்சிடிவிட்டி இல்லாமல் இருக்கிறார்கள்? இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது.
ஒரே இரவில் இந்த பேனர்கள் உருவாகிவிடவில்லை. பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்காத உத்தரவுகளே இல்லை. எந்த நிகழ்வு என்றாலும் பேனர் வைத்தால்தான் வருவார்களா, பேனர் வைத்துதான் அழைக்க வேண்டுமா. அரசுக்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நீதிமன்றத்தால், அதைச் செயல்படுத்தும் தகுதி இல்லை என நினைக்கிறீர்களா?

இருளப்பசாமி ஜீவசமாதி அடையவில்லை!' மக்கள் ஏமாற்றம் .. இரவு தூங்காமல் பார்வையிட்டோம்; - சிவகங்கை கலெக்டர்

இருளப்பசாமி
ஆட்கள் யாரும் இல்லாத இடம்
பொதுமக்கள் "அருண் சின்னதுரை -சாய் தர்மராஜ்.ச - ஈ.ஜெ.நந்தகுமார்- விகடன் :
இன்று (செப்டம்பர் 13-ம் தேதி) அதிகாலை 12 மணி முதல் 5 மணிக்குள் அவர் ஜீவசமாதி அடையும் நேரம் என அனைவரிடமும் தெரிவித்திருந்தார். இதனால் நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இவர் பல்வேறு இடங்களில் உள்ள சிவ ஆலயங்களுக்குச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் சில நாள்களுக்கு முன் இருளப்பசாமி ஜீவசமாதி அடையப் போவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும், அவர் தன்னுடைய விவசாய நிலத்தில் ஜீவசமாதி அடைய உள்ளதாகவும் வாட்ஸ்அப் குழுக்களில் தகவல் பரவியது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் அவரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக, இன்று (செப்டம்பர் 13-ம் தேதி) அதிகாலை 12 மணி முதல் 5 மணிக்குள் அவர் ஜீவசமாதி அடையும் நேரம் என அனைவரிடமும் தெரிவித்திருந்தார். இதனால் நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்தைக் கடந்தும் அவர் ஜீவசமாதி அடையாததால், கூடி இருந்த பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். திருவிழா கூட்டம்போல் காட்சியளித்த அந்த இடம் தற்போது ஆட்கள் இல்லாமல் காட்சியளிக்கிறது.

எனக்கு பொண்ணு வேணும்.. லாட்ஜ் ஓனரிடம் அடம் பிடித்த முன்னாள் எம்பி சத்தியபாமாவின் கணவர்..

 Hemavandhana - tamil.oneindia.com :  அதிமுக முன்னாள் எம்பி சத்யபாமா கணவரின் மிரட்டல்  கோபி: "எனக்கு ஒரு பொண்ணு வேணும்.. நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலையா? பொண்ணு வேணும்னேன்" என்று லாட்ஜ் பெண் ஓனரிடம் அதிமுக முன்னாள் எம்பியின் கணவர் மிரட்டும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 
கோபிசெட்டிபாளையம் பாஸ்கரன் வீதியை சேர்ந்த தம்பதி சாமுவேல் -  நிர்மலாவுக்கு 45 வயதாகிறது. இவர் கோபியில் கடந்த 12 வருடங்களாக லாட்ஜ் ஒன்றினை நடத்தி வருகிறார். 
இந்நிலையில், நேற்று காலை நிர்மலா வீட்டில் இருந்தபோது அவருக்கு ஒரு செல்போன் வந்துள்ளது. 
முன்னாள் திருப்பூர் எம்பி சத்தியபாமாவின் கணவர் வாசு பேசினார். தான் ரூமில் ஜாலியாக இருக்க பெண் வேண்டும் என கூறி நிர்மலாவை மிரட்டியும் உள்ளதாக கூறப்படுகிறது. 
இது சம்பந்தமாக இருவர் பேசிய ஆடியோவும் வெளியாகி உள்ளது.  
வாசு:  எங்க இருக்கீங்க? சென்னையா ? கோபியா? எப்போ பார்த்தாலும் சோக கீதம் பாடிட்டு இருக்கீங்க? 
 
சென்னையா? பெங்களூரிலேயா இருக்கீங்க? 
நிர்மலா: நான் கோபியில் தான் இருக்கேன். நான் எதுக்கு பெங்களூர் போறேன்? 

BBC :கனிமொழி இலங்கை வருகை .. தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி பேச்சு

கனிமொழி இலங்கை பயணம்: தமிழக மீனவர்கள் மீதான கடற்படை
தாக்குதல் குறித்த கேள்வியும், அமைச்சகத்தின் பதிலும் !
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தற்போது தாக்குதல் நடத்துவதில்லை. ஆனால், அசாம்பாவிதங்கள் தொடர்கின்றன என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவிக்கின்றார்.
 இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர், இலங்கை அமைச்சர்கள் சிலரை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தனர்.
கொழும்பிலுள்ள விவசாய அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கை சார்பில் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் , இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்தனர். இலங்கை கடற்படை இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்தியுள்ள போதிலும், சில சந்தர்ப்பங்களில் சில அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறுவதாகத் தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்" எனவும் கூறியிருந்தார்.

பாஜகவின் மோசடி தேர்தல் வெற்றி ... உலக அரங்கில் அம்பலமாகுமா?.. ஆய்வு கட்டுரை

கடந்த மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதும் எதிர்க்கட்சிகள
அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டன . அதில் அதிசயம் ஏதுமில்லை.
ஆனால் ஆளும் பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அவர்களை பெரும் மகிழ்சிக்கு உள்ளாக்கி இருக்கவேண்டும் .. அந்த மகிழ்ச்சி இருக்கும் ..
ஆனால் அவர்கள் அந்த வெற்றியை கொண்டாடிய விதத்தை கூர்ந்து
கவனித்தால் அதில் ஒரு முன்ஜாக்கிரதை அல்லது திருடனுக்கு
தேள்கொட்டிய பாவம் எல்லாம் அவதானிக்க கூடியதாக இருந்தது..
மீண்டும் பழைய காணொளிகளை நோக்கினால் அது தெளிவாக தெரியும் .
அந்த வெற்றியை அவர்கள் எதிரபார்த்தார்களா என்பதை விட அந்த வெற்றியை யாரும் சந்தேக கண்கொண்டு பார்க்கிறார்களா என்ற அவதானம் அவர்களின் சகல நடமாட்டங்களிலும்  தெரிந்தது.
தேர்தலுக்கு சில நாட்கள்வரை பாஜக தோல்வியை நோக்கி இருப்பதாக அவர்களின் ஊடகங்களே கருத்து கணிப்புக்கள் வெளியிட்டு கொண்டிருந்த நிலையில் திடீர் என்று நிலைமை மாறி பாஜக மிகபெரும் வெற்றியை நோக்கி இருப்பதாக அதே ஊடகங்கள் கருத்து கணிப்புக்களை வெளியிட்டன .
அப்போது அவற்றை எதிர்கட்சிகள் பெரிதாக எடுத்து கொள்ளவில்ல்லை.
இப்போது அலசி பார்க்கும் போது அவர்கள் கிடைக்க இருக்கும்
பெருவெற்றிக்கு ஒரு நம்பகத்தன்மையை உருவாக்கி உள்ளார்கள்.
இதுதான் அவர்களின் சூழ்ச்சி பற்றி ஒரு சந்தேக கீற்றை காட்டுகிறது.
அவர்கள் உருவாக்கிய அந்த நம்பக தன்மை ஏற்ப தேர்தல் முடிவுகளும் வந்தன .

வியாழன், 12 செப்டம்பர், 2019

கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்துள்ளது... முழுப் படமும் இனிமேல்தான்... மோடியின் "ரஜினி பஞ்ச்"

கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்துள்ளது... முழுப் படமும் இனிமேல்தான்... மோடியின் "ரஜினி பஞ்ச்" .dailythanthi.com :ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்துள்ளது... முழுப்படமும் இனிமேல்தான் என கூறினார். ஜார்க்கண்ட் மாநில  தலைநகர் ராஞ்சியில்  பிரபாத் தாரா மைதானத்தில்  பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை  பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது,  "கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்தது, முழுப் படமும்  இனிமேல்தான் காட்டப்பட உள்ளது" என்று கூறினார்.
பிரதமர் மோடி  பேசும்போது கூறியதாவது:
ஏழை மக்களின் பணத்தை சூறையாடியவர்களை சரியான இடத்திற்கு அனுப்புவதே எனது அரசாங்கத்தின் உறுதிப்பாடு. சிலர் ஏற்கனவே அங்கு சென்று விட்டனர்.

கலைஞர் கட்டிய 42 அணைகள் ..பட்டியல் .. விபரம் தெரியாமல் உளறிய முதல்வர் எடப்பாடி...

5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தடுப்பணைகள் கட்டாதது ஏன்? முதலமைச்சர் பழனிச்சாமி கேள்வி.
இதை பொதுவெளியில் கேட்பதற்கு மூன்பு உயர் அதிகாரிகளிடம் கேட்டிருக்கணும். அதை விடுத்து பொதுப்பணித்துறை அமைச்சராம் உங்களை போலவே எடுபுடி ஓபிஎஸ்ஸிடம் கேட்டால்?
நீங்க மட்டும் வெளிநாடு சுற்றுப்பயணம் போய் அவரை விட்டுட்டு போனதால் அவரும் திமுக கட்டவே இல்லைனு சொன்னதை நீங்களும் நம்பி மோசம் போய்ட்டீங்களே?
1967 முதல் 1969ல் அண்ணா மறைவு வரை கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அந்த காலகட்டத்திலும், முதல்வரான பின்னர் அவருடைய அமைச்சரவையில் சாதிக் பாட்சா, ப.உ.சண்முகம், செ.மாதவன் ஆகியோர் பொதுப்பணித்துறை அமைச்சர்களாக பொறுப்பு வகித்திருக்கிறார்கள்.
1976ல் திமுக ஆட்சி கலைக்கப்படும் வரை திமுக அரசாங்கம் கட்டிய அணைகள் 20. அவை,
1.தும்பலஹள்ளி அணை,
2.சின்னாறு அணை,
3.குண்டேரிப்பள்ளம் அணை, 4.வறட்டுப்பள்ளம் அணை,

ராஜ் ராஜரட்ணம் விடுதலை.. 8 வருட சிறைத்தண்டனையின் பின்னர் Kim Kardashian Helped Get Ex-Billionaire Raj Rajaratnam Out Of Jail?


Kim Kardashian and Raj Rajaratnam. theneeweb.net பிரபல கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் 8 வருட சிறைத்தண்டனையின்
பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க செல்வந்தராகும் . 
அமெரிக்க உள்ளக  தகவல்களை முறையற்ற விதத்தில் பெற்று, அமெரிக்க பங்குச்சந்தைக்கு வழங்கியதற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த  ராஜ் ராஜரட்ணம்  தண்டனைக்காலம் நிறைவுறுவதற்கு 2 வருடங்களுக்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
60-இற்கு மேற்பட்ட வயதுடைய கைதிகள் அல்லது பாரிய நோய்ப் பாதிப்பிற்குள்ளானவர்கள் தமது இறுதி சிறையிருப்பை வீட்டில் கழிக்க முடியும் என்ற சட்டத்தின் பிரகாரம் 62 வயதுடைய ராஜரட்ணம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கலோன் குழுமம் LLC-யின் 7 பில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்தை நிர்வகித்த ராஜரட்ணம் சிறைவாசத்தின் எஞ்சிய காலத்தை வீட்டிலேயே அனுபவிப்பார் என அமெரிக்க சிறைச்சாலைகள்  திணைக்களம்   தெரிவித்துள்ளது.

MDH சாம்பார் மசாலா’வில் (சல்மோனல்லா ) வயிற்றுப் போக்கு பாக்டீரியா .. அதிர்ச்சி தகவல்

mdh வெப்துனியா :  ஐக்கிய அமீரகத்தில் சார்ஜாவை தலைமையிடமாகக் கொண்டு R - Pure Agro Specialities என்ற நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் MDH என்ற பெயரில், உணவு மசாலாவை தயாரித்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.  இந்நிலையில் இதன் மசாலா தயாரிப்புகளில்  வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியா இருப்பதாக அமெரிக்க நாட்டிலுள்ள உணவு மற்றும் மருந்துகளை முறைப்படுத்தும்துறை கண்டுபிடுத்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரத்தில், ஐக்கிய அமீரகத்தில் இருந்து ,R - Pure Agro Specialities என்ற நிறுவனம் தயாரித்த, MDH என்ற சாம்பார் மசாலை அமெரிக்காவில் உள்ள கரோலினா மாநிலத்திற்கு,  அனுப்பிவைத்தனர்.

தேசிய குடியுரிமை பதிவேடு .. நெருப்புடன் விளையாடாதீர்கள் - மம்தா எச்சரிக்கை

தேசிய குடியுரிமை பதிவேடு என்ற பெயரில் நெருப்புடன் விளையாடாதீர்கள் - பாஜகவுக்கு மம்தா எச்சரிக்கை
தேசிய குடியுரிமை பதிவேடு என்ற பெயரில் நெருப்புடன் விளையாடாதீர்கள் என பா.ஜ.க.வுக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். அசாம் மாநிலத்தில் சமீபத்தில் வெளியான தேசிய குடியுரிமைக்கான இறுதிப் பட்டியலில் இருந்து 19  லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தேசிய குடியுரிமை பதிவேடு என்ற பெயரில் நெருப்புடன் விளையாடாதீர்கள் என பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய குடியுரிமை பதிவேட்டை பெங்காலில் கொண்டுவர அனுமதிக்க முடியாது. மதம் மற்றும் ஜாதி வாரியாக மக்களை பிரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அசாம் தேசிய குடியுரிமை பதிவேட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. போலீசாரை கொண்டு அசாம் மக்களை அமைதியாக வைத்துள்ளனர். ஆனால் பெங்காலில் அப்படி நடக்கவிட மாட்டோம் என தெரிவித்துள்ளார்

அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் ... வீடியோ


nakkheeran.in - santhoshb : சென்னை பள்ளிக்கரணையில் திருமண வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இளம் பெண் உயிரிழப்பு.
சென்னை பள்ளிக்கரணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ (23), பைக்கில் வலதுப்புறம் திரும்ப முயன்ற போது, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தனது இல்லத்திருமணத்துக்காக, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது

சென்னை லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் இணை சேர்மேன் ரீட்டா லங்காலிங்கம் தூக்கிட்டு தற்கொலை!

tamil.news18.com ; தொழில் நஷ்டம் காரணமாக கணவன் - மனைவி இடையே சமீபத்தில் சண்டை ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. : ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் தமிழகத்தின் டீலரான லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து வருபவர் தொழிலதிபர் லங்கலிங்கம். இவரது மனைவி ரீட்டா லங்காலிங்கம் இதே நிறுவனத்தில் இணை சேர்மேனாக இருந்து வருகிறார். இவர்களுக்கு லாவண்யா என்ற பெண்ணும் லிவாஸ் என்ற மகனும் உள்ளனர். இதில் லாவண்யா என்பவர் சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். மகன் லிவாஸ் திருமணமாகி சென்னையில் தொழிலை கவனித்து வருகிறார்.
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைகளை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நலிவு இவர்களது நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை. பொருளாதார நிலையின் காரணமாக இவர்களது நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்ட செப்டம்பர் 11ஆம் தேதி ... திமுகவினர் மலர்வளையம் வைத்து மரியாதை


தேவேந்திரகுல மக்களின் தலைவரான இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தைச்
சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு ஆசிரியர். பெயர் வேதநாயகம், தாயார் ஞானசுந்தரி. இவர்களது மூத்த மகனாக 9-10-1924ம் ஆண்டு பிறந்தார் இம்மானுவேல்.
1942ம் ஆண்டு தனது தந்தை வேதநாயகத்தோடு வெள்ளையனேவெளியேறு போராட்ட களத்தில் குதித்தார். 3 மாதம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சோதனைகளை சந்தித்தார்.
தனது 19வது வயதில் அருப்புக்கோட்டையில் இரட்டை_டம்ளர் முறைக்கு எதிர்ப்பு மாநாடு நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
1954-ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிக்க வலியுறுத்தி மாநாடு ஒன்றினையும் நடத்திய அவர் மாபெரும் சக்தியாக வலம்வரத் தொடங்கினார். இம்மானுவேல் சேகரனின் வளர்ச்சி பிற சமூகத்தை லேசாக உசுப்பிப் பார்க்க தொடங்கியது.
இந்திய சுதந்திரத்துக்கு பின்னர் இந்தியராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டுடார்
1950-ல் தனது ராணுவ வேலையைத் துறந்தார். "ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபித்தார்.

ஜாக்கி வாசுதேவ் .. தமிழகத்தை சூறையாடும் ஒரு வடநாட்டு சமுக விரோதி ..

ஜக்கி வாசுதேவின் காவிரியின் கூக்குரல் கீழ்கண்ட அம்சங்களில் அரசுக்கு
உதவக்கூடும்.
1. காவிரியில் நீர் இன்மை, மீத்தேன் போன்றவற்றால் முக்கியமான போராட்டகளமாக மாறிவரும் டெல்டாவின் கவனத்தை திசை திருப்பும்.
2. மலைகளில் பயிரிடப்பட்டுள்ள டீ, காபி, ரப்பர், யூக்கலிப்டஸ், தேக்குத் தோட்டங்களாலும், வெட்டப்பட்டுள்ள சுரங்கங்களாலும், அணைகளாலும் பல்லாயிரம் ஓடைகள் வறண்டு போனதும் காவிரியில் நீர் வரத்து குறைந்து விட்டது. ஜக்கியின் செயல் மக்களின் கவனத்தை இந்த உண்மையான காரணங்களை நோக்கித் திருப்பாமல் சமவெளிகளில் மரம் நடும் வேலையை நோக்கித் திசை திருப்பும்.
3.வரைமுறையற்ற நகரமயமாக்கலால் பெருநகரங்கள் விவசாயிகளின் நீரைக் குடித்து வருகின்றன. ஆறுகளின் மணற்பரப்பை அழித்து வருகின்றன. இது மறக்கடிக்கப்படும்.
4. இறுதியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயாய நதிநீர் பிரச்சினையை ஏதோ மரம் நட்டு சரி செய்துவிடலாம் என்ற மாயையை ஏற்படுத்தும். அதுவும் இப்போது கர்நாடகாவில் பிஜேபி அரசு இருக்கும் நிலையில் அந்தக் கட்சிக்கு இந்தப் பிரச்சாரம் பேருதவியாக இருக்கும்.
ஜக்கிக்கு காவிரியின் மேல் உண்மையன அக்கறை இருக்குமென்றால் ஒரு காரியம் செய்ய வேண்டும். அவரது ஆசிரமத்தை ஒட்டி நொய்யல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சுமார் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவில் தேக்கு மரங்களும், புளிய மரங்களும் பயிரிடப்பட்டுள்ளன. வனத்துறைக்கு இவை கொள்ளை லாபம் அளித்து வருகின்றன.

சொல்லாமல் செய்த கலைஞர் - ஜெ.ஜெயரஞ்சன் உரை! வீடியோ


மின்னம்பலம : ஆரணி, ழ புத்தகக்கூடு சார்பில் ‘மாபெரும் ஒரு தமிழ் கனவு’, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘ஒரு மனிதன் ஒரு இயக்கம்’ போன்ற நூல்களின் அறிமுகக் கூட்டம், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பொருளாதார ஆராய்ச்சியாளரும் சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான திரு.ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் உரையாற்றினார்.
அவர் உரையாற்றும்போது, பொதுவாக இந்துக்கள் பெரியாரைக்கூட ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், பேரறிஞர் அண்ணா அவர்களை ஒரு தீவிர எதிர்ப்பாளராகவும் வெறுப்பாளராகவும் நினைத்து அவரை ஏற்றுக்கொள்வது இல்லை. அந்தச் சூழலில் மவுன்ட் ரோடு மகாவிஷ்ணு என்று அண்ணாவால் அழைக்கப்பட்ட தி இந்து குடும்பம் இன்று அவரது புத்தகங்களை வெளியிடுகிறது என்பது காலத்தின் வினோதங்களில் ஒன்று.
இங்கு வெளியிடப்படும் புத்தகங்களின் தலைப்புகளைக் கவனிக்கும்போது அவற்றுள் ஒரு தொடர்பு இருப்பது நமக்குப் புரியவரும். ‘மாபெரும் ஒரு தமிழ் கனவு’, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘ஒரு மனிதன் ஒரு இயக்கம்’ இவை மூன்றையும் பொருத்திப் பார்க்கும்போது ஒரு தொடர்பு இருப்பது நமக்குப் புரியவருவதோடு, இந்த இயக்கம் அது செய்திருக்கக் கூடிய விஷயங்கள் அனைத்தையும் சுருக்கமாக ஒரு முகவரி போன்று புரிந்துகொள்ள இயலும் என்றார்.

மோட்டார் வாகன துறை சரிவுக்கு ஓலா ஊபர் காரணமாம் - நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கண்டனம்


தினத்தந்தி :மோட்டார் வாகன துறை சரிவுக்கு வாடகை கார்கள்தான் காரணம் என கூறிய நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன துறையில் ஏற்பட்ட தேக்கநிலைக்கு மெட்ரோ ரெயில், வாடகை கார் பயணம் ஆகியவையே காரணம் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
அதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில், “பிரமாதம். வாக்காளர்கள் மீது பழிபோடுங்கள். பொருளாதார விவகாரத்தை பா.ஜனதா கையாண்டதை தவிர, வேறு எல்லாவற்றையும் குறை சொல்லுங்கள். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அதற்கும் எதிர்க்கட்சிகளை காரணம் சொல்வீர்களா? நல்லது நடந்தால் எங்களால் நடந்தது என்றும், கெட்டது நடந்தால் மற்றவர்களால் நடந்தது என்றும் கூறுகிறீர்கள்.
பிறகு எதற்கு மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்?” என்று அவர் கூறியுள்ளார்.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல் இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி!

.hindutamil.i :புதிய மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம், 2019 மிகவும்
கடுமையான அபராதங்களை விதித்து ஏழை மக்களை வதைப்பதாக உள்ளது எனவே இந்தச் சட்டம் மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்தப் பட மாட்டாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருவதாக தினசரி செய்திகள் எழுந்து வருகின்றன. இருசக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு டெல்லியில் ஹெல்மெட் போடாதது மற்றும் கையில் ஆவணங்கள் இல்லாமல் வந்தது ஆகியவற்றுக்கு ரூ.25,000 தொகை அபராதம் விதிக்கப்பட்டு அதிச்சியேற்படுத்தியது.

ஜக்கி வாசுதேவ் பைக்கின் விலை 25 இலட்சம் .. காவிரி கூக்குரல் பணவேட்டை...

தினமணி :ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் `காவேரி
கூக்குரல்' என்ற பெயரில் ஓர் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். 
அந்த இயக்கம் குறித்து பிரசாரம் செய்வதற்காக பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவின் தலைக்காவிரியில் தொடங்கி திருவாரூரில் முடியும் இந்தப் பயணத்துக்கு ஜக்கி வாசுதேவ் பயன்படுத்துவது ஹோண்டா VFR 1200X எனும் விலை உயர்ந்த பைக். இந்த பைக்கின் விற்பனை இந்தியாவில் கிடையாது. இறக்குமதி செய்தே பயன்படுத்துகிறார்.
தொலைதூரப் பயணங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பைக்கில் 1237cc V4 இன்ஜின் உள்ளது. 127bhp பவர் மற்றும் 12.6Kgm டார்க் தரக்கூடிய இன்ஜின் இது. வழக்கமாக பைக்குகளில் வரும் செயின் டிரைவுக்குப் பதிலாக ஷாஃப்ட் டிரைவ் இதில் உண்டு. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே. கார்களைப் போல மேனுவல் மோடில் வைத்தும் ஓட்டலாம். அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்டுஸ்கிரீன், IMU சென்சார்கள், முன்பக்கம் டூயல் டிஸ்க் பிரேக் கொண்ட கம்பைண்ட் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகள் கொண்ட பைக் இது.

மனவேதனை அவரைப் பாடாய்ப் படுத்துதுங்க''! சோகத்தில் அழகிரி ஆதரவாளர்கள்!

தூதாக வந்த பாஜகவினரை , நான் கலைஞர் மகன்யா என்று கூறி துரத்தி விட்டார் அழகிரி என்று சமுகவலையில் ஒரு செய்தி உலாவுகிறது
mk azhagirinakkheeran.in - அண்ணல் : கலைஞர் மறைவுக்குப் பின் ஒரு வருடத்திற்கும் மேலாக சைலண்ட் மோடிலேயே இருக்கிறார் மு.க.அழகிரி. அவரது ஆதரவாளர்களின் எண்ணிக்கையும் விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையில்தான் இருக்கிறது. அவர்களிலும் மிக நெருக்கமானவர்களின் வீட்டு விசேஷங்களுக்குப் போவதுடன் சரி, மைக்கில் எதுவும் பேசாமல் திரும்பிவிடுவார்.
அப்படி இருந்தும் சில மாதங்களாக ரொம்பவே மனவேதனைக்குள்ளாகியிருக்கிறாராம் மு.க.அழகிரி. அவரின் மனவேதனையின் வெளிப்பாடு, கடந்த 01-ஆம் தேதி திருமண விழாவில் வெளிப்பட்டது. தனது தீவிர ஆதரவாளரான மாலபட்டி முருகனின் இல்லத் திருமண விழாவுக்குச் சென்றார் அழகிரி. எப்போதும் காரிலிருந்து இறங்கும்போதே மிடுக்குடனும் பளீர் சிரிப்புடனும் இறங்கும் அழகிரி, அன்றைய தினம் மெதுவாக இறங்கி, மெதுவாக நடந்து சென்று, திருமண நிகழ்ச்சிக்கு வந்தார்.

புதன், 11 செப்டம்பர், 2019

கூவத்தில் மிதந்த பெண்ணின் உடல் ..பச்சை நிற நைட்டியுடன் ..

tamiltimes.com :பச்சை கலர் நைட்டியில்.. கூவத்தில் மிதந்த இளம் பெண்.. சென்னை: பச்சை கலர் நைட்டியில்.. கூவத்தில் மிதந்த இளம்பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். இதனால் எழும்பூர் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை செல்லும் வழியில் கூவத்துக்கு நடுவே ஒரு பாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு அடியில் இன்று காலை 9 மணி அளவில் ஒரு பெண்ணின் உடல் கரை ஒதுங்கி கிடப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.
விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் பெண்ணின் சடலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பாலத்துக்கு அடியில் சடலம் இருந்ததால், ஏணி வைத்து, அதன்மூலம் கயிறு கட்டி மேலே இழுத்து தூக்கினர்.
உயிரிழந்த பெண் சிகப்பாக இருக்கிறார். 22 வயது இருக்கும் என தெரிகிறது. பச்சை கலர் நைட்டி அணிந்திருக்கிறார். கழுத்தில் பாசிமணி உள்ளது. அழகான தோற்றம் கொண்ட இந்த பெண் யார், எந்த ஊர் என்று தெரியவில்லை. நைட்டியுடன் இருப்பதால், அநேகமாக சென்னைவாசியாகத்தான் இருக்க முடியும் என தெரிகிறது.

BJP Ex minister சின்மயானந்த் ஓராண்டாக பாலியல் பலாத்காரம் .. வீடியோ எடுத்து மிரட்டி மாணவியை ...

       Mahalaxmi : *ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்ததார் சின்மயானந்த் - மாணவி புகார்*
ஒருவருடமாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரான சாமியார் சின்மயானந்த் மீது புகார் அளித்த மாணவியின் விடுதி அறையை போலீசார் சோதனையிட்டனர்.
உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், தடயவியல் வல்லுனர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஷாஜகான்பூரில் உள்ள மாணவியின் விடுதி அறையில் 5 மணி நேரம் சோதனை நடத்தினர்.
வழக்கு தொடர்பான ஆவணங்களை அவர்கள் கைப்பற்ற வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மாணவியின் அறை மூடி சீல்வைக்கப்பட்டது.
திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அந்த இளம்பெண், சின்மயானந்த் தம்மை மிரட்டி ஒருவருடமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சின்மயானந்தை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.

ஈரான் .. கல்வியும் செல்வமும் மகிழ்ச்சியும் காணமல் போன கதை ஒரு Flashback செய்தி


ஈரான் .. கல்வியும் செல்வமும் மகிழ்ச்சியும் காணமல் போன கதை ..கைகோர்த்த மதவாதிககளும் சி ஐ ஏயும் .. Iran Before and after
1979  இல் ஒரு பூலோக சொர்க்கம் போலிருந்த தேசம்தான் ஈரான் . செல்வமும் கல்வியும் நல்ல பண்பும் வரலாற்று பாரம் பரியம் கொண்டிருந்த அறிவார்ந்த மக்களின் தேசம் அது .
அமெரிக்காவுக்கே கடன் கொடுத்த தேசம் அது. மத்திய கிழக்கு நாடுகள் எல்லாம் வெளிநாட்டு தொழிலாளர்களை பணிக்கு அழைக்கு முன்பே அதை ஆரம்பித்து வைத்த தேசம் அது. .. அதுவும் நல்ல சம்பளத்தில் கௌரவமாக பண்பாக நடத்தினார்கள்.
படிக்கும் மாணவர்கள் எல்லோருக்கும் அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு பணம் கொடுத்து அரசாங்கமே உயர்படிப்புக்கு அனுப்பியது .
அப்படி படிக்க போன மாணவர்கள் மேற்கு நாடுகளின் மாய வலையில் விழுந்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக நாடு திரும்பி நாட்டையே சின்னாபின்னமாக்கினர் .
ஈரான் மன்னர் ஷா பல்லவியின் ஆட்சியில் பெண்களின் கல்வியில் அரசு முழு முதல் அக்கறை காட்டியது .
ஈரான் ஒரு மத சார்பற்ற நாடாக விளங்க வேண்டும் என்பதில் மன்னர் ஷா மிகவும் உறுதியாக இருந்தார்.

BBC : பிரிட்டன் விசாவில் அதிரடி மாற்றம் - இந்திய மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பு !

பிரிட்டனில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் பல புதிய பரிந்துரைகளை அறிவித்துள்ளது. பிரிட்டனில் தங்கி படிக்கும் பல உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படித்து பட்டம் பெற்றபின், இரண்டு ஆண்டுகள்வரை பிரிட்டனில் தங்கி வேலை தேடி கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், 2012ஆம் பிரிட்டன் உள்துறை செயலராக இருந்த தெரீசா மே எடுத்த முக்கிய முடிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தெரீசா மே காலத்தில், ஒரு வெளிநாட்டு மாணவர் பிரிட்டனில் படித்து பட்டம் பெற்றபிறகு 4 மாதங்களுக்குள் சொந்த நாட்டுக்கு திரும்பிவிட வேண்டும். தற்போது, அந்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
புதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள போரிஸ் ஜான்சன், மாணவர்கள் பிரிட்டனில் வேலைவாய்ப்பை தொடங்கவும், முழு திறனை வெளிப்படுத்தவும் இந்த மாற்றம் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசின் இந்த முடிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மைக்ரேஷன் வாட்ச் என்ற பிரசார குழு, அரசின் நடவடிக்கை பிற்போக்கானது என சாடியுள்ளது.

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 15 பேர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு : கோரிக்கை மனு அளித்தனர்

தினகரன் : சென்னை: கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 15 பேர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கொத்தடிமைகள் 15 பேரை ‘‘விடுவிக்கப்பட்ட கொத்தடிமை மறுவாழ்வு நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், இன்டர்நேசனல் ஜஸ்டிஸ் மிஷன் இயக்கத்தைச் சேர்ந்த சமூக  ஆர்வலர் வி.சாம் ஜெபதுரை மற்றும் இயக்குனர் மெர்லின் பிரீடா ஆகியோரும் மீட்டு, மறுவாழ்வு அளித்து அவர்கள் சுயமாக தொழில் செய்து கொத்தடிமை வாழ்க்கையிலிருந்து மீட்பதற்கு உரிய வழிவகை செய்து வருகின்றனர்.

வங்கிகளில் விவசாய நகை கடன் விரைவில் ரத்து

தினமலர் : புதுடில்லி: 'வங்கிகளில் விவசாயத்திற்கான நகை கடன் வழங்குவது குறைக்கப்பட்டு வருகிறது; அக். 1 முதல் 4 சதவீத வட்டியில் நகைக் கடன் என்ற திட்டம் இருக்காது' என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கிகளில் விவசாயிகளுக்காக 7 சதவீத வட்டியில் நகை கடன் வழங்கப்படுகிறது. இதில் முறையாக திரும்ப செலுத்துவோருக்கு 3 சதவீத வட்டி தொகை மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் வரை ஆவணங்கள் இன்றியும் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்கள் இருந்தால் 3 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை நிறுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வங்கிகளில் நகை கடன் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது.

இங்க காலேஜ் நடத்தி வர்றாரே.. ரூ.42 கோடி ஊழல் செய்துள்ளார்.. அவர்தான் அடுத்த கைது.. எச்.ராஜா ஆரூடம்

tamil.oneindia.com - hemavandhana : மயிலாடுதுறை:
"தமிழ்நாட்டில் கல்லூரி நடத்தி வரும் ஒருவர் ரூ.42 கோடி அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார்... சீக்கிரமாகவே அவரும் கைது செய்யப்படுவார்" என்று எச்.ராஜா ஆருடம் சொல்லி உள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். அப்போது, பிரதமர் மோடியை லிஸ்ட் போட்டு பாராட்டி பேசியதுடன், நடுநடுவே திமுகவையும், ப.சிதம்பரம் பற்றியும் விமர்சித்து கருத்து சொன்னார்.
எச்.ராஜா பேசியதாவது: "இந்தியாவில் பொருளாதார பாதிப்பு, நேரு காலத்தில் இருந்தே இருக்கிறது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு,

ஈரான்: ஆண் வேடமிட்டு கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்த பெண் தீக்குளித்து தற்கொலை வீடியோ

ஈரான்: ஆண் வேடமிட்டு கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்த பெண் தீக்குளித்து தற்கொலைமாலைமலர் : ஈரானில் உலககோப்பை கால்பந்து போட்டியை காண ஆண் வேடமிட்டு மைதானத்துக்குள் நுழைந்ததால் கைதான பெண் தண்டனைக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சஹர் கோடயாரி டெஹ்ரான்: ஈரான் நாட்டில் பெண்கள் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து விளையாட்டை ரசிப்பதற்கு கடந்த 1981-ம் ஆண்டு முதல் தடை இருக்கிறது. எழுதப்படாத இந்த சட்டம் அந்த நாட்டு அதிகாரிகளால் மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு அந்த நாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த ஆண்டு டெக்ரானில் உள்ள மைதானத்தில், உலக கோப்பை கால்பந்து போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்ட போது சில பெண்கள் மட்டும் அங்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பொதுவாக ஈரானில் பெண்களுக்கு அனுமதி மறுப்பே நிலவுகிறது.

காவேரி கூக்குரல்: சத்குருவை வரவேற்கும் தமிழகம்?

 காவேரி கூக்குரல்: சத்குருவை வரவேற்கும் தமிழகம்!மின்னம்பலம் : தென்னிந்தியாவின் நீர் தேவதையான காவேரி நதியைக் காப்பாற்றுவதற்காக செப்டம்பர் 3 ஆம் தேதியில் இருந்து, தலைக்காவேரி தொடங்கி சத்குரு அவர்கள், ‘காவேரி கூக்குரல்’ பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
கர்நாடக அரசின் முழு ஆதரவு மட்டுமல்ல, கர்நாடக மக்களும் முழு ஆதரவு தந்து காவேரி ஆற்றை காப்பாற்றுவது பற்றிய விழிப்புணர்வை கடந்த வாரத்தில் அதிக அளவு ஏற்படுத்தியிருக்கின்றனர்.
காவேரி கூக்குரல் என்ற முழக்கத்தின் விரிவான அளவாக புதுடெல்லியில் ஐ.நா.வின் பாலைவனமாகுதலை தடுக்கும் மாநாடு - 14வது கருத்தரங்கத்தின் (UNCCD - COP14ன்) உயர் நிலை பிரிவு (HLS - High Level Segment) சந்திப்பை மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 9 ஆம் தேதி
துவக்கிவைத்தார். சத்குரு இதில் கலந்துகொண்டார், காவேரியின் கூக்குரலை டெல்லியில் இருந்தபடி உலகத்தின் காதுகளிலும் உரக்க ஒலித்திருக்கிறார் சத்குரு. இந்நிகழ்வை அடுத்து இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி முதல், காவேரி கூக்குரலை தமிழகத்தில் முன்னெடுக்கிறார் சத்குரு. தமிழக கர்நாடக எல்லையில் இருந்து காவேரி கூக்குரல் பயணம் இன்று தமிழகத்தில் தடம் பதிக்கத் தொடங்குகிறது.

சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் போதாதாம் .. களம் கண்ட சிங்கம் கார்த்தி சிதம்பரம் கவலை?

தமிழகத்தில் காங்கிரஸுக்கு பலம் இல்லை: கார்த்திமின்னம்பலம் : தமிழகத்தில் காங்கிரஸின் பலம் குறைவாக இருப்பதால் சிதம்பரம் கைதைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடைபெறவில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்ட தமிழக காங்கிரஸ் கட்சியினர், பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடத்தினர்.
அதுபோலவே மற்றொரு காங்கிரஸ் தலைவரான கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் அமலாக்கத் துறையால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். சிவக்குமார் கைதுக்கு எதிராகக் கர்நாடகம் முழுவதும் காங்கிரஸ் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தது. சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது தமிழகத்தில் நடந்த போராட்டங்களைவிட சிவக்குமார் கைதுக்கு எதிராகக் கர்நாடகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

அன்புமணி துணை முதலமைச்சர்? 2021 இல் கூட்டணி ஆட்சிக்கு பாமக அதிமுக தயார்?

டிஜிட்டல் திண்ணை: கூட்டணி ஆட்சி - ஸ்டாலினை வீழ்த்தத் தயாராகும் எடப்பாடி!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“பொதுவாகவே கூட்டணி முடிவுகளையும், எத்தனை தொகுதிகளில் நிற்பது போன்றவற்றையெல்லாம் தேர்தல் தேதி அறிவித்த பிறகு முடிவு செய்வோம் என அரசியல்வாதிகள் பொத்தாம் பொதுவான ஒரு பதிலைச் சொல்லி முழு பூசணிக்காயைப் பேட்டிகளில் மறைக்க பார்த்திருக்கிறோம். இதில் டாக்டர் ராமதாஸ் வித்தியாசமானவராக இருக்கிறார். இதுகுறித்து அன்புமணியின் முப்படை என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் ஏற்கனவே செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது அன்புமணியின் தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை போன்றவை ஆரம்பிக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் 80 தொகுதிகளில் பாமக பலமான சக்தியாக உருவெடுக்க ராமதாஸ் திட்டம் தீட்டி வருகிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பாமக வாக்காளர் மாநாடு என்ற பெயரில் மாநாடு நடத்தப் போவதாகவும் மின்னம்பலத்தில் செய்தி வெளியிடப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்து நிற்பதற்கான வியூகத்தின் முன்னோட்டமே இது என்று பாமக நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டதையும் அச்செய்திகளில் குறிப்பிட்டிருந்தோம். இதற்கிடையில் டாக்டர் ராமதாஸின் திட்டமே வேறு என்று காதை கடிக்கிறார்கள் தைலாபுரம் தோட்டத்தின் தற்போதைய தட்பவெப்பத்தை அறிந்த சிலர்.

வைகோ ஆட்கொணர்வு மனு :பாரூக் அப்துல்லாவை காணவில்லை .. உச்ச நீதிமன்றத்தில் .

பரூக் அப்துல்லாவை காணவில்லை: தேடும் வைகோமின்னம்பலம் : ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டறிந்து தருமாறு உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி ரத்துசெய்யப்பட்டது. காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மதிமுக சார்பில் சென்னை நந்தனத்தில் நடைபெறவுள்ள பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில், பரூக் அப்துல்லா கலந்துகொள்வார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டார்.

சந்திரபாபு நாய்டுவும் மகனும் வீட்டுக்காவலில் .. ஜெகன் மோகன் அரசு .. அதிரடி

Nara LokeshChandrababu Naiduவிகடன் :தங்கள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், தொடர்ச்சியாக கொல்லப்படுவதாகக் கூறி, அதை எதிர்த்து இன்று போராட்டம் அறிவித்துள்ளது தெலுங்கு தேசம் கட்சி. ஆந்திராவில், ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவர் தன் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். மறு புறம், ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவிவருகிறது.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பிரஜா வேதிகா கட்டடத்தை இடித்தது, அவரது வீட்டை காலிசெய்ய நோட்டீஸ் அனுப்பியது, சந்திரபாபுவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார், ஜெகன்மோகன் ரெட்டி .