புதன், 11 செப்டம்பர், 2019

கூவத்தில் மிதந்த பெண்ணின் உடல் ..பச்சை நிற நைட்டியுடன் ..

tamiltimes.com :பச்சை கலர் நைட்டியில்.. கூவத்தில் மிதந்த இளம் பெண்.. சென்னை: பச்சை கலர் நைட்டியில்.. கூவத்தில் மிதந்த இளம்பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். இதனால் எழும்பூர் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை செல்லும் வழியில் கூவத்துக்கு நடுவே ஒரு பாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு அடியில் இன்று காலை 9 மணி அளவில் ஒரு பெண்ணின் உடல் கரை ஒதுங்கி கிடப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.
விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் பெண்ணின் சடலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பாலத்துக்கு அடியில் சடலம் இருந்ததால், ஏணி வைத்து, அதன்மூலம் கயிறு கட்டி மேலே இழுத்து தூக்கினர்.
உயிரிழந்த பெண் சிகப்பாக இருக்கிறார். 22 வயது இருக்கும் என தெரிகிறது. பச்சை கலர் நைட்டி அணிந்திருக்கிறார். கழுத்தில் பாசிமணி உள்ளது. அழகான தோற்றம் கொண்ட இந்த பெண் யார், எந்த ஊர் என்று தெரியவில்லை. நைட்டியுடன் இருப்பதால், அநேகமாக சென்னைவாசியாகத்தான் இருக்க முடியும் என தெரிகிறது.



ஆனால் இவரை கொலை செய்து வீசிவிட்டார்களா, அல்லது, இவரே கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்று தெரியாததால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இப்போதைக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு பெண்ணின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், இது கொலையா, தற்கொலையா என உறுதி ஆகும். பெண்ணின் சடலம் கூவத்தில் ஒதுங்கியதையடுத்து, பொதுமக்கள் பலர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குவிந்த மக்கள்.. சென்னையில் பரபரப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக