சனி, 14 செப்டம்பர், 2019

காஷ்மீரில் சுயநிர்ணய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் .. இம்ரான் கான் உலகத்திற்கு வேண்டுகோள்


மாலைமலர் : காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக வரும் 13-ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: :  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42-வது கவுன்சில் கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று பங்கேற்று பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மஹ்மூத் ஷா குரேஷி, ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் பிரச்சனை இந்தியாவின் உள்விவகாரம் அல்ல, இது சர்வதேச அக்கறை கொண்ட பிரச்சனை. ஜம்மு காஷ்மீரில் இந்திய படை வீரர்களின் எண்ணிக்கை 7 லட்சத்திலிருந்து 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவே ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிற நாடுகள் எங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் பதிலடி தந்தது.


இந்நிலையில், இந்தியா வசமுள்ள காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக 13-ம் தேதி பேரணி நடத்தப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் அதிபரின் இந்தப் பேச்சு, சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி, விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

உலகின் எந்த மூலையில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தாலும், சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பாகிஸ்தானைப் பற்றிய ஒரு விவாதம் அத்தருணங்களில் வந்துபோகும்.
உலக நாடுகளில் ஜாம்பவான்களான அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான வர்த்தகப் போர், இன்று நமக்கு தினசரி செய்தி. அதேபோல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது,
 சோவியத் ரஷ்யா. நேரடிப் போர், பனிப்போர், வர்த்தகப் போர்…
இதுதவிர, விளையாட்டுப் போட்டிகளைக்கூட போர் மனப்பான்மையில்தான் இரு நாடுகளும் அணுகின.

வெப்துனியா : பாகிஸ்தான் அப்போதெல்லாம், அமெரிக்காவுக்கு ஆதரவாக ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. ஆனால், அது அந்தக் காலம். தற்போது, சீனாவுடன் நட்புறவில் இருக்கும் பாகிஸ்தான், அமெரிக்காவுடன் சுமுகமான உறவு கொண்டிருக்கவில்லை.
காஷ்மீர் பிரச்னையில்கூட, பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை, அமெரிக்கா. ‘பாகிஸ்தான், அதன் மண்ணில் தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்’ எனத் தொடர்ந்து கருத்துவெளியிடுகிறது, ட்ரம்ப் அரசு.

 இந்தச் சூழலில், ‘ரஷ்யா டுடே’ பத்திரிகைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அளித்துள்ள பேட்டியில், “எண்பதுகளில், ஆப்கானிஸ்தானை சோவியத் கைப்பற்றியபோது, சோவியத்துக்கு எதிராக ஜிகாத் செய்வதற்கு வேண்டி முஜாஹிதீன் குழுவினருக்கு நாங்கள் பயிற்சியளித்தோம். ஆகவே இந்தக் குழுவினருக்கு பயிற்சி, பாகிஸ்தானால் வழங்கப்பட்டது.
அதற்கான நிதியுதவியை அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பு வழங்கியது” என்று கூறியிருக்கிறார்.
மேலும், “ஆப்கான் போரில் அமெரிக்காவுடன் இணைந்ததால், பாகிஸ்தானுக்கு பெருத்த நஷ்டமே ஏற்பட்டிருக்கிறது. இந்தப் போரினால் நாங்கள் 70,000 மக்களையும், ஒரு பில்லியன் டாலர் பணத்தையும் இழந்திருக்கிறோம்” எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

 பாகிஸ்தான்  அதுமட்டுமின்றி, அமெரிக்காவுக்காக உருவாக்கப்பட்ட ஜிஹாதி குழுக்கள், தற்போது பாகிஸ்தானிற்கே எதிரியாக இருப்பதாகவும், பாகிஸ்தான் இந்தப் போரில் நடுநிலைமையோடு இருந்திருக்க வேண்டும் எனவும் பேட்டியளித்திருக்கிறார்.

பாகிஸ்தான் அதிபரின் இந்தப் பேச்சு, சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி, விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
சமீபத்தில், ‘இந்திய காஷ்மீர் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, காஷ்மீரிகளுக்கு விடுதலையளிக்க வேண்டும்’ என்ற பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்து, 58 நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், அதற்கு நன்றி தெரிவித்தும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தில் 47 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு, நெட்டிசன்கள் அவரைக் கலாய்த்துவருகின்றனர்.
காஷ்மீர் விவகாரத்தில்… அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பது வெளிப்படையான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
காஸ்மீரில் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உலக நாடுகளில் உள்ள முஸ்லீம்கள் தீவிரவாதத்தை நோக்கி ஈர்க்கப்படும் நிலையை உருவாக்கும் என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஆசாத்காஸ்மீரின் தலைநகர் முஜாபராபாத்தில் ஆற்றிய கடுமையான உரையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காஸ்மீர் மக்களிற்கான ஆதரவை வெளிப்படுத்துவதற்காக அந்த பகுதிக்கு சென்றுள்ள இம்ரான்கான் பாரிய பேரணியில் உரையாற்றியுள்ளார். அநீதிகள் உச்சகட்டத்தை அடையும்போது கௌரவமற்ற வாழ்வை விட மக்கள் மரணமே சிறப்பானது என கருத தொடங்குவார்கள் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார். நீங்கள் ஆயிரக்கணக்கானவர்களை தடுத்துவைத்திருப்பதன் மூலம் மக்களை தீவிரவாதத்தை நோக்கி தள்ளுகின்றீர்கள் என இந்தியாவிற்கு நான் தெரிவிக்கவிரும்புகின்றேன் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மக்கள் இந்தியாவிற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள்,இது வெறுமனே இந்திய முஸ்லீம்கள் தொடர்பான விடயம் மாத்திரமல்ல உலகம் முழுவதும் உள்ள 1.25 மில்லியன் முஸ்லீம்மக்கள் இந்தியாவை உற்றுநோக்கிக்கொண்டுள்ளனர் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக