புதன், 11 செப்டம்பர், 2019

BJP Ex minister சின்மயானந்த் ஓராண்டாக பாலியல் பலாத்காரம் .. வீடியோ எடுத்து மிரட்டி மாணவியை ...

       Mahalaxmi : *ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்ததார் சின்மயானந்த் - மாணவி புகார்*
ஒருவருடமாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரான சாமியார் சின்மயானந்த் மீது புகார் அளித்த மாணவியின் விடுதி அறையை போலீசார் சோதனையிட்டனர்.
உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், தடயவியல் வல்லுனர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஷாஜகான்பூரில் உள்ள மாணவியின் விடுதி அறையில் 5 மணி நேரம் சோதனை நடத்தினர்.
வழக்கு தொடர்பான ஆவணங்களை அவர்கள் கைப்பற்ற வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மாணவியின் அறை மூடி சீல்வைக்கப்பட்டது.
திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அந்த இளம்பெண், சின்மயானந்த் தம்மை மிரட்டி ஒருவருடமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சின்மயானந்தை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக