வியாழன், 12 செப்டம்பர், 2019

கலைஞர் கட்டிய 42 அணைகள் ..பட்டியல் .. விபரம் தெரியாமல் உளறிய முதல்வர் எடப்பாடி...

5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தடுப்பணைகள் கட்டாதது ஏன்? முதலமைச்சர் பழனிச்சாமி கேள்வி.
இதை பொதுவெளியில் கேட்பதற்கு மூன்பு உயர் அதிகாரிகளிடம் கேட்டிருக்கணும். அதை விடுத்து பொதுப்பணித்துறை அமைச்சராம் உங்களை போலவே எடுபுடி ஓபிஎஸ்ஸிடம் கேட்டால்?
நீங்க மட்டும் வெளிநாடு சுற்றுப்பயணம் போய் அவரை விட்டுட்டு போனதால் அவரும் திமுக கட்டவே இல்லைனு சொன்னதை நீங்களும் நம்பி மோசம் போய்ட்டீங்களே?
1967 முதல் 1969ல் அண்ணா மறைவு வரை கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அந்த காலகட்டத்திலும், முதல்வரான பின்னர் அவருடைய அமைச்சரவையில் சாதிக் பாட்சா, ப.உ.சண்முகம், செ.மாதவன் ஆகியோர் பொதுப்பணித்துறை அமைச்சர்களாக பொறுப்பு வகித்திருக்கிறார்கள்.
1976ல் திமுக ஆட்சி கலைக்கப்படும் வரை திமுக அரசாங்கம் கட்டிய அணைகள் 20. அவை,
1.தும்பலஹள்ளி அணை,
2.சின்னாறு அணை,
3.குண்டேரிப்பள்ளம் அணை, 4.வறட்டுப்பள்ளம் அணை,

5.பாலறு பொருந்தலாறு அணை, 6.வரதமாநதி அணை,
7.வட்டமலைக்கரை ஓடை அணை, 8.பரப்பலாறு அணை,
9.பொன்னியாறு அணை,
10.மருதாநதி அணை,
11.பிளவுக்கல் (பெரியாறு) அணை, 13.கடானா அணை,
14.இராமாநதி அணை,
15.கருப்பாநதி அணை,
16.சித்தாறு-1 அணை,
17.சித்தாறு-2 அணை,
18.மேல் நீராறு அணை,
19.கீழ் நீராறு அணை,
20.பெருவாரிப்பள்ளம் அணை.
இந்த அணைகள் தவிர, 1989 ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி அமைந்த போது பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் பொறுப்பேற்றார். அதன்பிறகு, 1996 முதல் 2001 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலும் கலைஞர் தலைமையில் திமுக அரசு அமைந்தபோதெல்லாம் துரைமுருகனே பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அவருடைய பொறுப்புக் காலத்தில் கலைஞரின் ஆணைப்படி கட்டி முடிக்கப்பட்ட அணைகள் 22. அவை,
1.மோர்தானா அணை,
2.இராஜாதோப்பு அணை,
3. ஆண்டியப்பனூர் ஓடை அணை, 4.குப்பநத்தம் அணை,
5.மிருகண்டா நதி அணை, 6.செண்பகத்தோப்பு அணை,
7.புத்தன் அணை,
8.மாம்பழத்துறையார் அணை,
9.பொய்கை அணை,
10.நல்லாறு அணை,
11.வடக்கு பச்சையாறு அணை,
12.கொடுமுடி அணை,
13.அடவிநயினார் அணை, 14.சாஸ்தாகோவில் அணை,
15.இருக்கன்குடி அணை,
16.சென்னம்பட்டி அணை,
17.கிருதமால் அணை,
18.நல்லதங்காள் ஓடை அணை, 19.நங்காஞ்சியார் அணை,
20.வரட்டாறு வள்ளி மதுரை அணை, 21.பச்சைமலை அணை, 22.ஆனைவிழுந்தான் ஓடை அணை.
ஆக, மொத்தத்தில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மொத்த அணைகள் 42.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் மாயனுர் பகுதியில் காவிரியின் குறுக்கே இரு வழிச் சாலையுடன் கூடிய தடுப்பணை திமுக ஆட்சியில் கடந்த2006-11 ல் வரலாற்று நாயகர் தலைவர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்டது.
இவைதவிர பாசன வசதிகளுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மு.ரா. விவேக் பதிவிலிருந்து.

3 கருத்துகள்:

  1. உண்மைகள்
    உள்ளுணர்வோடும்
    உள்ளன்போடும்
    உயிருள்ளவரை
    உரத்தக்குரலில்
    உலாவரும்

    நவின கரிகாலன்
    ❤️ #கலைஞரென்று... ❤️

    பதிலளிநீக்கு
  2. Kulathai ellam alithuvittu thatuppanai kattiathellam anai endru pattial poda vendam

    பதிலளிநீக்கு