புதன், 11 செப்டம்பர், 2019

காவேரி கூக்குரல்: சத்குருவை வரவேற்கும் தமிழகம்?

 காவேரி கூக்குரல்: சத்குருவை வரவேற்கும் தமிழகம்!மின்னம்பலம் : தென்னிந்தியாவின் நீர் தேவதையான காவேரி நதியைக் காப்பாற்றுவதற்காக செப்டம்பர் 3 ஆம் தேதியில் இருந்து, தலைக்காவேரி தொடங்கி சத்குரு அவர்கள், ‘காவேரி கூக்குரல்’ பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
கர்நாடக அரசின் முழு ஆதரவு மட்டுமல்ல, கர்நாடக மக்களும் முழு ஆதரவு தந்து காவேரி ஆற்றை காப்பாற்றுவது பற்றிய விழிப்புணர்வை கடந்த வாரத்தில் அதிக அளவு ஏற்படுத்தியிருக்கின்றனர்.
காவேரி கூக்குரல் என்ற முழக்கத்தின் விரிவான அளவாக புதுடெல்லியில் ஐ.நா.வின் பாலைவனமாகுதலை தடுக்கும் மாநாடு - 14வது கருத்தரங்கத்தின் (UNCCD - COP14ன்) உயர் நிலை பிரிவு (HLS - High Level Segment) சந்திப்பை மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 9 ஆம் தேதி
துவக்கிவைத்தார். சத்குரு இதில் கலந்துகொண்டார், காவேரியின் கூக்குரலை டெல்லியில் இருந்தபடி உலகத்தின் காதுகளிலும் உரக்க ஒலித்திருக்கிறார் சத்குரு. இந்நிகழ்வை அடுத்து இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி முதல், காவேரி கூக்குரலை தமிழகத்தில் முன்னெடுக்கிறார் சத்குரு. தமிழக கர்நாடக எல்லையில் இருந்து காவேரி கூக்குரல் பயணம் இன்று தமிழகத்தில் தடம் பதிக்கத் தொடங்குகிறது.


கர்நாடக அரசைப் போல தமிழக அரசும் காவேரி கூக்குரல் பயணத்துக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்கும் என்று சத்குரு நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதுபோல, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காவேரி கூக்குரலுக்கு தனது ஒத்துழைப்பையும் ஆதரவையும் நல்குவதாக தெரிவித்திருக்கிறார்.’
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திரு.ஹெச்.ராஜா அவர்கள், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் திரு.கேசவ விநாயகம் அவர்கள் ஆகியோர் காவேரி கூக்குரலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்
சத்குருவின் வார்த்தைகள்படி, கர்நாடகத்தை விட தமிழ்நாடு , காவேரி கூக்குரலுக்கு பத்து மடங்கு அதிக ஆதரவை வழங்க வேண்டும் காவேரி நதியின் ஜலக் குரல் தமிழகத்தில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், காவேரியின் கூக்குரலும் இன்று முதல் ஒலிக்கிறது.
சத்குருவை வரவேற்கிறது தமிழகம்!
(காவேரி கூக்குரல் ஒலிக்கும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக