வியாழன், 12 செப்டம்பர், 2019

தேசிய குடியுரிமை பதிவேடு .. நெருப்புடன் விளையாடாதீர்கள் - மம்தா எச்சரிக்கை

தேசிய குடியுரிமை பதிவேடு என்ற பெயரில் நெருப்புடன் விளையாடாதீர்கள் - பாஜகவுக்கு மம்தா எச்சரிக்கை
தேசிய குடியுரிமை பதிவேடு என்ற பெயரில் நெருப்புடன் விளையாடாதீர்கள் என பா.ஜ.க.வுக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். அசாம் மாநிலத்தில் சமீபத்தில் வெளியான தேசிய குடியுரிமைக்கான இறுதிப் பட்டியலில் இருந்து 19  லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தேசிய குடியுரிமை பதிவேடு என்ற பெயரில் நெருப்புடன் விளையாடாதீர்கள் என பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய குடியுரிமை பதிவேட்டை பெங்காலில் கொண்டுவர அனுமதிக்க முடியாது. மதம் மற்றும் ஜாதி வாரியாக மக்களை பிரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அசாம் தேசிய குடியுரிமை பதிவேட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. போலீசாரை கொண்டு அசாம் மக்களை அமைதியாக வைத்துள்ளனர். ஆனால் பெங்காலில் அப்படி நடக்கவிட மாட்டோம் என தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக