வியாழன், 12 செப்டம்பர், 2019

இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்ட செப்டம்பர் 11ஆம் தேதி ... திமுகவினர் மலர்வளையம் வைத்து மரியாதை


தேவேந்திரகுல மக்களின் தலைவரான இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தைச்
சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு ஆசிரியர். பெயர் வேதநாயகம், தாயார் ஞானசுந்தரி. இவர்களது மூத்த மகனாக 9-10-1924ம் ஆண்டு பிறந்தார் இம்மானுவேல்.
1942ம் ஆண்டு தனது தந்தை வேதநாயகத்தோடு வெள்ளையனேவெளியேறு போராட்ட களத்தில் குதித்தார். 3 மாதம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சோதனைகளை சந்தித்தார்.
தனது 19வது வயதில் அருப்புக்கோட்டையில் இரட்டை_டம்ளர் முறைக்கு எதிர்ப்பு மாநாடு நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
1954-ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிக்க வலியுறுத்தி மாநாடு ஒன்றினையும் நடத்திய அவர் மாபெரும் சக்தியாக வலம்வரத் தொடங்கினார். இம்மானுவேல் சேகரனின் வளர்ச்சி பிற சமூகத்தை லேசாக உசுப்பிப் பார்க்க தொடங்கியது.
இந்திய சுதந்திரத்துக்கு பின்னர் இந்தியராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டுடார்
1950-ல் தனது ராணுவ வேலையைத் துறந்தார். "ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபித்தார்.

இம்மானுவேல் சேகரனின் வளர்ச்சியும், தேர்தல் மூலம் ஏற்பட்ட பகையும் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தி தரப்போவதை யாரும் அறியவில்லை.
1-9-1957 அன்று காடமங்கலம் கிராமத்தில் இறந்த மூதாட்டியின் பிணத்தை இடுகாட்டுக்கு கொண்டு செல்லும் பாதை தொடர்பாக எதிர்ப்பு ஏற்படுகிறது.
பெருமாள் பீட்டர் என்பவரும், இம்மானுவேல் சேகரனு்ம் கமுதி காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். மூதாட்டி உடல் போலீஸ் பாதுகாப்புடன் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.
5-9-57ல் லாவி என்ற கிராமத்திலுள்ள குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்படுகிறது. பிரச்சனை உருவாகிறது..
1957 செப்டம்பர் 10-ஆம் தேதி நடந்த தேவேந்திர மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியர் பணிக்கரால் ஒரு அமைதிக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த அமைதிக்கூட்டத்தில் மறவர்கள் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கலந்துகொண்டார். , தலித்துகளின் சார்பில் கலந்துகொண்ட ஆறுபேரில் இமானுவேலும் ஒருவர்.
சமாதானக் கூட்டத்தில் இம்மானுவேல் சேகரனும், முத்துராமலிங்கத் தேவரும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட' வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முடிவெடுத்தார்.
இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கையெழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தேவேந்திரர்கள் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியேறினார்
இம்மானுவேல் சேகரன் செப்டம்பர்11 அன்று கொலை_செய்யப்பட்டார்.
(பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஆட்களே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முத்துராமலிங்கதேவர் குற்றமற்றவர் என்று பின்னாளில் விடுதலை செய்யப்பட்டார்.)
12-9-1957 அன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் சட்டம் ஓழுங்கு சீர்குலைந்தது.
இம்மானுவேல் சேகரனை கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் என்ற ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நடந்த கலவரத்தில்
இருதரப்பும் மோதியதில் 85 பேர் பலியாகினர்.
அன்றிலிருந்து இம்மானுவேல் கொலை செய்யப்பட்ட செப்டம்பர் 11ஆம் தேதி குருபூஜையாக கொண்டாடப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக