வெள்ளி, 13 செப்டம்பர், 2019

பாஜகவின் மோசடி தேர்தல் வெற்றி ... உலக அரங்கில் அம்பலமாகுமா?.. ஆய்வு கட்டுரை

கடந்த மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதும் எதிர்க்கட்சிகள
அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டன . அதில் அதிசயம் ஏதுமில்லை.
ஆனால் ஆளும் பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அவர்களை பெரும் மகிழ்சிக்கு உள்ளாக்கி இருக்கவேண்டும் .. அந்த மகிழ்ச்சி இருக்கும் ..
ஆனால் அவர்கள் அந்த வெற்றியை கொண்டாடிய விதத்தை கூர்ந்து
கவனித்தால் அதில் ஒரு முன்ஜாக்கிரதை அல்லது திருடனுக்கு
தேள்கொட்டிய பாவம் எல்லாம் அவதானிக்க கூடியதாக இருந்தது..
மீண்டும் பழைய காணொளிகளை நோக்கினால் அது தெளிவாக தெரியும் .
அந்த வெற்றியை அவர்கள் எதிரபார்த்தார்களா என்பதை விட அந்த வெற்றியை யாரும் சந்தேக கண்கொண்டு பார்க்கிறார்களா என்ற அவதானம் அவர்களின் சகல நடமாட்டங்களிலும்  தெரிந்தது.
தேர்தலுக்கு சில நாட்கள்வரை பாஜக தோல்வியை நோக்கி இருப்பதாக அவர்களின் ஊடகங்களே கருத்து கணிப்புக்கள் வெளியிட்டு கொண்டிருந்த நிலையில் திடீர் என்று நிலைமை மாறி பாஜக மிகபெரும் வெற்றியை நோக்கி இருப்பதாக அதே ஊடகங்கள் கருத்து கணிப்புக்களை வெளியிட்டன .
அப்போது அவற்றை எதிர்கட்சிகள் பெரிதாக எடுத்து கொள்ளவில்ல்லை.
இப்போது அலசி பார்க்கும் போது அவர்கள் கிடைக்க இருக்கும்
பெருவெற்றிக்கு ஒரு நம்பகத்தன்மையை உருவாக்கி உள்ளார்கள்.
இதுதான் அவர்களின் சூழ்ச்சி பற்றி ஒரு சந்தேக கீற்றை காட்டுகிறது.
அவர்கள் உருவாக்கிய அந்த நம்பக தன்மை ஏற்ப தேர்தல் முடிவுகளும் வந்தன .

கிடைத்த தேர்தல் முடிவுகள் பற்றி எதிர்க்கட்சிகளும் உலக நாடுகளும் சந்தேக கண்கொண்டு பார்க்கின்றனவா என்ற எச்சரிக்கை உணர்வு அவர்கள் எல்லோரின் முகங்களிலும் பேச்சுக்களிலும் மிக தெளிவாக தெரிந்தது.

இந்த முக்கியமான நேரத்தில்  பிரதான எதிர்கட்சியோ காற்று போன பலூன் போல அப்படியே அமர்ந்து விட்டது . ஏனைய எதிர்கட்சிகளில் குறிப்பிட்டு சொல்ல கூடிய கட்சியன திமுக தமிழகத்தில் பெற்ற பிரமாண்ட வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தது .

மம்தா பானர்ஜியின் திருணாமூல காங்கிரசோ  பாஜகவோடு மாக்சிட்டுக்களும் சேர்ந்து கொள்ள பாஜக  எதிர்பாராத அளவு தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிர்ச்சியில் இருந்தது.

எதிர்கட்சிகளே தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பெரிய சந்தேகங்களை தெரிவிக்காமையால்  உலக நாடுகள் சந்தேகம் இருந்தாலும் அமைதியாக இருந்துவிட்டன.

ஒரு நாட்டின் தேர்தல் பற்றிய விடயங்களை முழுக்க முழுக்க ஒரு உள்நாட்டு விவகாரமாக உலகம் பார்ப்பதில்லை .

எதிர்கட்சிகள் ஓங்கி குரல் கொடுத்தால் நிச்சயம் உலக அரங்கில் பாஜகவுக்கு நெருக்கடி வந்திருக்கும் ..  இப்போதும் காலம் முற்று முழுதாக கடந்து விடவில்லை .

ஆனால் இந்த திசையில் காங்கிரஸ் பயணிக்காது . ஏனெனில் காங்கிரசில் உள்ள பலம் வாய்த்த ஆர் எஸ் எஸ் லாபி பாஜகவோடு கள்ள உறவில் உள்ளது.

தேர்தலில் வாக்கு இயந்திரங்கள் மாற்றுதல் வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்வது போன்ற பல முறைகளில் இந்த வெற்றி பாஜகவுக்கு சாத்தியம் ஆகி இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

ஏனெனில் இன்றுவரை பாஜகவின் இந்த இமாலய வெற்றி பற்றி எந்த பாஜக தலைவரும் பேசுவதில்லை
ஒரு வெற்றி ஏற்பட்டால் அந்த வெற்றிக்கு உரிமை கொண்டாடி பலரும் போட்டி போட்டுகொண்டு காரண காரியங்களை முன்வைப்பது மிகவும் சாதரணமான ஒரு நிகழ்வாகும் ..
அது ஒரு உளவியல் போதை.

 ஆனால் இன்றுவரை பாஜகவினர் தேர்தலில் மக்கள் தங்களை ஏன் ஆதரிக்கிறார்கள் எனபது பற்றி பெரிதாக அலட்டி கொள்வதில்லை .. அது ஏன்?
இப்போதும் கூட பாஜக தலைவர்கள் முகங்களில் ஒரு இறுக்கமே காணப்படுகிறது.
ஏனெனில் அவர்களால் பாஜகவின் இமாலைய வெற்றிக்கு  பொருத்தமான காரணத்தை அவர்களால் கூற முடியாது.
அது பற்றி வாயை திறந்தால் மாட்டி கொள்ள நேரிடும் என்ற ஜாக்கிரதை உணர்வு அவர்களுக்கு இருகிறது.

 எதிர்கட்சிகளுக்கு எந்த சந்தேகமும் வந்துவிடகூடாது அப்படி வந்தாலும் வாயை திறக்க கூடாது என்பதற்காக அவர்களை பயமுறுத்தும் வேலைதான் நடக்கிறது.

சிதம்பரம் விடயத்தில் அதுதான் நடக்கிறது.
சிறையில் உள்ள ஒரு மோசமான கொலைகாரியின் வாக்கு மூலத்தை கொண்டு  மத்திய அரசின்   protocol இன்படி முக்கிய  இடத்தில இருந்த  ஒரு அமைச்சரை சிறையில் தள்ளி அவருக்கு அந்த  பெண்ணோடு தொடர்பு வேறு இருக்கிறது என்ற அளவுக்கு தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டு இருக்கிறர்கள .
சிதம்பரம் தேர்தலில் தில்லு முல்லு நடந்திருக்கிறது என்று உலக அரங்கில் கூறினால் அது உலகின் கவனத்தை நிச்சயம் பெறும்.

அப்படி ஒரு நிலை வந்தால் பாஜக சந்திக்க இருக்கும் சிக்கல்கள் வெறும் சில்லறைகளாக இருக்காது .. விளைவுகள் பாரதூரமாக இருக்கும்!

அமித் ஷா மோடி கும்பல் மீது உள்ள கொலை குற்ற சாட்டுக்கள் மற்றும் உலக மகா ஊழல்கள் எல்லாம் உலகுக்கு தெரியாததல்ல.
எதிர்க்கட்சிகள் இவற்றை அலட்சியம் செய்தாலும் பாஜகவினர் உண்மையில் மிகவும் அவதானமாகத்தான் உள்ளனர் .

அதனால்தான் அவர்கள் எதிர்கட்சியிலும் தங்களுக்கு எதிராக பேச கூடியவர்களை தேடி தேடி முடக்குகிறார்கள் அல்லது அழிக்கிறார்கள்.
இந்த நிலை நீடிக்காது . ஏனெனில் பாஜகவில் அளவு கணக்கில்லாமல அயோக்கியர்கள் குடி கொண்டிருக்கிறார்கள்.

ஒருவரை ஒருவர் சந்தர்ப்பம் பார்த்து காலை வாருவார்கள்.  ஏனெனில் அவர்கள் தங்கள் தலைமேல் தூக்கி வைத்திருப்பது அவர்களின் சக்திக்கு மீறிய சுமையாகும் .
எந்த வித அடிப்படை அறிவும் அற்ற கும்பல்கள் ஒருநாளும் ஒற்றுமையாக இருக்காது.
பாஜக ஆட்சியின் அலங்கோலங்கள் ஒவ்வொன்றாக வெடித்து கிளம்பும் .   அப்போது எதிர்கட்சிகள் மீதான ஒடுக்குமறை அளவு கணக்கிலாமல் இருக்கும்.
காஷ்மீர் பிரச்சனை காட்டி நாட்டின் சட்டங்களை இஷ்டப்படபடி மாற்றி நிரந்தர சர்வாதிகார ஆட்சியை நிறுவ முயற்சிப்பார்கள் .
மக்கள் முன் இருப்பது மிகப் பெரிய சவால்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக