வியாழன், 12 செப்டம்பர், 2019

சென்னை லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் இணை சேர்மேன் ரீட்டா லங்காலிங்கம் தூக்கிட்டு தற்கொலை!

tamil.news18.com ; தொழில் நஷ்டம் காரணமாக கணவன் - மனைவி இடையே சமீபத்தில் சண்டை ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. : ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் தமிழகத்தின் டீலரான லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து வருபவர் தொழிலதிபர் லங்கலிங்கம். இவரது மனைவி ரீட்டா லங்காலிங்கம் இதே நிறுவனத்தில் இணை சேர்மேனாக இருந்து வருகிறார். இவர்களுக்கு லாவண்யா என்ற பெண்ணும் லிவாஸ் என்ற மகனும் உள்ளனர். இதில் லாவண்யா என்பவர் சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். மகன் லிவாஸ் திருமணமாகி சென்னையில் தொழிலை கவனித்து வருகிறார்.
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைகளை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நலிவு இவர்களது நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை. பொருளாதார நிலையின் காரணமாக இவர்களது நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


சென்னையில் இரு தினங்களுக்கு முன்பாக தமிழகத்திலுள்ள அனைத்து கிளை லான்சன் டொயோட்டோ நிறுவனத்தின் மேலாளர்களுடன் ரீட்டா லங்காலிங்கம் தொழில் நலிவு குறித்து சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தியதாகவும், அந்த சந்திப்பில் மேலாளர்களை கடுமையாக இவர் திட்டியதாகவும் அந்த காரணத்தினால் கணவன்-மனைவிக்குள் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தொழில் பிரச்சினையானது வீட்டுப் பிரச்சனையாக மாற ஆரம்பித்து உள்ளது. இந்த காரணத்தால் தொழிலதிபர் ரீட்டா லங்காலிங்கம் நேற்று இரவு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் அறையில் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை ரீட்டாவின் வீட்டுக்கு சென்ற சூப்பர்வைசர் இயேசுபாதம் என்பவர் ரீட்டா தற்கொலை செய்துகொண்ட விஷயத்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடற்கூறு ஆய்வுக்காக ரீட்டாவின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை பற்றி தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

கடந்த சில நாட்க்களாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தொழிலதிபர் லங்காலிங்கம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி வருகிறார். இந்த நிலையில் நேற்று தேனாம்பேட்டை கார்ப்பரேட் அலுவலகத்தில் மேலாளர்களுடன் ஏற்பட்ட சந்திப்பில் ரீட்டா லங்காலிங்கம், அவர்களை கடுமையாக திட்டியதாகவும் இதனால் ஒரே காரில் வீட்டுக்கு வரும்போது கணவன்-மனைவிக்குள் பெரிய சண்டை எழுந்ததாகவும், வீட்டுக்கு வந்தவுடன் ரீட்டா மட்டும் வீட்டுக்குள் சென்று கணவர் லாங்கா லிங்கத்தை உள்ளே விடாமல் வீட்டை பூட்டி விட்டு வீட்டுக்குள் சென்றதாகவும் தெரிய வருகிறது.

இதனால், தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்த லங்காலிங்கம் இதனை பெரிதுபடுத்தாமல் நேற்றிரவு ஹோட்டலுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தான் இன்று காலை சூப்பர்வைசர் வீட்டிற்கு வந்து பார்க்கையில் ரீட்டா லங்காலிங்கம் ஜன்னல் திரை சீலையை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக