புதன், 11 செப்டம்பர், 2019

சந்திரபாபு நாய்டுவும் மகனும் வீட்டுக்காவலில் .. ஜெகன் மோகன் அரசு .. அதிரடி

Nara LokeshChandrababu Naiduவிகடன் :தங்கள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், தொடர்ச்சியாக கொல்லப்படுவதாகக் கூறி, அதை எதிர்த்து இன்று போராட்டம் அறிவித்துள்ளது தெலுங்கு தேசம் கட்சி. ஆந்திராவில், ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவர் தன் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். மறு புறம், ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவிவருகிறது.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பிரஜா வேதிகா கட்டடத்தை இடித்தது, அவரது வீட்டை காலிசெய்ய நோட்டீஸ் அனுப்பியது, சந்திரபாபுவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார், ஜெகன்மோகன் ரெட்டி .

ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம், பேரணி, மக்கள் குறை கூறும் வீடியோக்கள், ஆதாரங்கள், ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான விமர்சனங்கள் போன்றவற்றை முன்வைத்துவருகிறார், சந்திரபாபு நாயுடு.


இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியினரை, ஆளும் கட்சி திட்டமிட்டுத் தாக்குவதாகவும், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 8 தெலுங்கு தேசம் கட்சியினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இதை எதிர்த்து, இன்று மாநிலம் முழுவதும் உள்ள தன் கட்சித் தொண்டர்களைத் திரட்டி, ‘சலோ அட்மகூர்’ என்ற பெயரில் குண்டூரிலிருந்து அட்மகூர் வரை பேரணியாகச் சென்று, அங்கு 12 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தார்.
 TDP party




TDP party




இன்று காலை, பேரணிக்காக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் தயாரானார்கள். ஆனால், அவர்களை சாலையில் இறங்கிப் போராடவிடாமல் தடுத்துவருகிறது ஆந்திர போலீஸ். மேலும் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நர லோகேஷ் மற்றும் டி.டி.பி தலைவர்கள் போன்ற பலரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவல் அறிந்து சந்திரபாபு நாயுடுவின் வீட்டின் முன்பாகத் திரண்ட டி.டி.பி தொண்டர்களையும் ஆந்திர போலீஸார் கைது செய்து வருவதால், மாநிலம் முழுவதும் பரபரப்பு காணப்படுகிறது. ”அட்மகூரில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றவும் நான் அட்மகூருக்கு வருகிறேன். பொது அமைப்புகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூட உள்ளனர். 'நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்' என நேற்று தன் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார் சந்திரபாபு நாயுடு.

 TDP party




TDP party




'கடந்த நான்கு மாதங்களில் மட்டும் பல்வேறு இடங்களில் 8 தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுமட்டுமில்லாமல், அட்மகூரைச் சேர்ந்த 500 குடும்பங்கள் வலுக்கட்டாயமாகத் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் வன்முறை காரணமாக வெளியேறியதாக ஆளும் கட்சி கூறுகிறது’ என்பது தெலுங்கு தேசம் கட்சியின் வாதமாக உள்ளது.
”சலோ அட்மகூர் பேரணி, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக உள்ளது. இந்தப் பேரணி தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு டிஜிபி-யிடம் தெரிவித்துள்ளேன்” என்று ஆந்திராவின் உள்துறை அமைச்சர் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக