வியாழன், 12 செப்டம்பர், 2019

ஜாக்கி வாசுதேவ் .. தமிழகத்தை சூறையாடும் ஒரு வடநாட்டு சமுக விரோதி ..

ஜக்கி வாசுதேவின் காவிரியின் கூக்குரல் கீழ்கண்ட அம்சங்களில் அரசுக்கு
உதவக்கூடும்.
1. காவிரியில் நீர் இன்மை, மீத்தேன் போன்றவற்றால் முக்கியமான போராட்டகளமாக மாறிவரும் டெல்டாவின் கவனத்தை திசை திருப்பும்.
2. மலைகளில் பயிரிடப்பட்டுள்ள டீ, காபி, ரப்பர், யூக்கலிப்டஸ், தேக்குத் தோட்டங்களாலும், வெட்டப்பட்டுள்ள சுரங்கங்களாலும், அணைகளாலும் பல்லாயிரம் ஓடைகள் வறண்டு போனதும் காவிரியில் நீர் வரத்து குறைந்து விட்டது. ஜக்கியின் செயல் மக்களின் கவனத்தை இந்த உண்மையான காரணங்களை நோக்கித் திருப்பாமல் சமவெளிகளில் மரம் நடும் வேலையை நோக்கித் திசை திருப்பும்.
3.வரைமுறையற்ற நகரமயமாக்கலால் பெருநகரங்கள் விவசாயிகளின் நீரைக் குடித்து வருகின்றன. ஆறுகளின் மணற்பரப்பை அழித்து வருகின்றன. இது மறக்கடிக்கப்படும்.
4. இறுதியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயாய நதிநீர் பிரச்சினையை ஏதோ மரம் நட்டு சரி செய்துவிடலாம் என்ற மாயையை ஏற்படுத்தும். அதுவும் இப்போது கர்நாடகாவில் பிஜேபி அரசு இருக்கும் நிலையில் அந்தக் கட்சிக்கு இந்தப் பிரச்சாரம் பேருதவியாக இருக்கும்.
ஜக்கிக்கு காவிரியின் மேல் உண்மையன அக்கறை இருக்குமென்றால் ஒரு காரியம் செய்ய வேண்டும். அவரது ஆசிரமத்தை ஒட்டி நொய்யல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சுமார் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவில் தேக்கு மரங்களும், புளிய மரங்களும் பயிரிடப்பட்டுள்ளன. வனத்துறைக்கு இவை கொள்ளை லாபம் அளித்து வருகின்றன.

இவை சதுப்பு நிலங்களையும், புல்வெளிகளையும் அழித்து நடப்பட்டவை. நொய்யலும் அதன் கிளை நதிகளும் வறண்டு போக இதுவே காரணம்.
மோனோ கல்சர் எனப்படும் ஒரே விதமான மரங்களைக் காடுகளில் நடுவது சுற்றுச் சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பது நாம் கண்ணாரக் கண்ட, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.
வனத்துறையின் இந்த செயல்பாட்டுக்கு எதிராக ஜக்கி ஒரே ஒரு வார்த்தை பேசட்டும். காவிரியைக் காப்பதை இங்கிருந்து தொடங்கட்டும்.
Adv Murugavel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக