சனி, 14 செப்டம்பர், 2019

பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண விமான நிலையம் என பெயர் மாற்றம் .. கனிமொழியிடம் ரணில் விக்கிரமசிங்கா

Palali Airport would be named Jaffna Airport - PM Ranil Wickremasinga
வீரகேசரி :விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் என்று
பெயரிடப்படவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் சிறிலங்கா அக்கறை கொண்டிருப்பதாகவும் இதன் போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சந்திப்பில் பங்கேற்ற சிறிலங்கா பிரதமர் செயலக அதிகாரி சுதர்சன குணவர்த்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 2011ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும், போதிய வரவேற்பு இல்லாமையால் அது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Prime Minister Ranil Wickremesinghe told a DMK delegation from India yesterday that the Palali Airport would be named the Jaffna Airport for regional flight operations after renovation next month. A DMK delegation led by Kanimozhi who is a Lok Sabha MP and the daughter of former Tamil Nadu Chief Minister Muthuvel Karunanidhi called on the Prime Minister yesterday.

According to sources, the Prime Minister said there would be flight operations to four Indian destinations from Jaffna. Kanimozhi arrived in Sri Lanka to attend the wedding of the daughter of Sri Lanka Muslim Congress (SLMC) leader Rauff Hakeem on September 12. At yesterday’s meeting, Mr. Wickremesinghe stressed the need for greater connectivity with India through a ferry service. Minister Hakeem who was present at the meeting said the minorities had always felt safe under the governments led by the United National Party (UNP). (Kelum Bandara)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக