சனி, 22 செப்டம்பர், 2018

இம்ரான் கான்: பெரிய இடங்களில் சிறிய மனிதர்கள் ... மோடி மீது விமர்சனம்


dinamalar.comn :இஸ்லாமாபாத்: இந்தியா - பாக்., இடையேயான பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டது குறித்து பாக்., பிரதமர் இம்ரான் கான் விமர்சனம் செய்துள்ளார். 3 போலீசார் கொலை
இந்தியா - பாக்., இடையே பேச்சு வார்த்தை துவங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, பாக்., பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதினார். இதையடுத்து இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், காஷ்மீரில் மூன்று போலீசாரை பயங்கரவாதிகள் கடத்தி சென்று கொடுரமாக கொலை செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, இரு நாடுகளுக்கு இடையோன பேச்சு வார்த்தையை ரத்து செய்தது. இது குறித்து பாக்., பிரதமர் இம்ரான் கான் டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். அதில் அவர்,' அமைதி பேச்சு வார்த்தைக்கான எனது அழைப்புக்கு இந்தியாவின் முரட்டுதனமான மற்றும் எதிர்மறை பதிலால் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன். எனினும், என் வாழ்நாள் முழுவதும் பெரிய பதவிகளை வகித்து வந்த சிறிய மனிதர்களை பார்த்துள்ளேன். அவர்களுக்கு தொலை நோக்கு பார்வை இல்லை' என, குறிப்பிட்டுள்ளார்.

மும்பை தாராவியில் தமிழ் இளைஞன் அடித்து கொலை .. சிவசேனா அட்டகாசம்

தமிழ் வாலிபர் கொலை .. மீண்டும் ஒரு வரதராஜ முதலியார் தேவை, மும்பை
தமிழனின் பாதுகாப்புக்கு...
தாராவி லட்சுமி சாலில் வசித்துவந்த கேட்டரிங் வேலை செய்யும் தம்பி வினோத், இரவு பகல் என்று பாராமல் கடுமையாக உழைப்பவன், யார் வம்புக்கு போகதவன், 21/09/2018 அன்று மாலை 5.30 மணியளவில் தனது கேட்டரிங் வேலையாக 90 அடி சாலை காமராஜர் பள்ளி எதிரில் உள்ள கணபதி மண்டபம் அருகில் தனது மோட்டர் வாகனத்தில் செல்லும் பொழுது எதிராய் வந்த சிவசேனா முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ரவி கோடம் தம்பி நாகேஷ் என்பவன் நல்ல குடிபோதையில் மோட்டர் வாகனத்தில் வந்து இடித்துவிட்டு வினோத்தை மிக கொடூரமான முறையில் சரமாரியாக அடித்து அவர் உயிர்நாடியில் மிதித்து அவர் இறந்து போகும் அளவுக்கு மிக கொடூரமாக
தாக்கியதில் அவர் உயிர்இழந்தார்,
ஒரு தமிழனுக்கு மும்பையிலும் பாதுகாப்பு இல்லை, அதிகாரம் மற்றும் பதவி, பணம் இருக்கும் தைரியத்தில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், செய்கின்றார்கள், தாராவி காவல்துறை கொலை வழக்கு சரியானமுறையில் பதிவு செய்தார்களா என்ற சந்தேகம் உள்ளது...?

விலங்கை பேச வைக்கும் நித்தியானந்தா: டுவிட்டரில் வைரலாகும் மீம்ஸ்.!

செக்ஸ் புகார்: tamil.gizbot.com -rajivganth-gurusamy : ஐன்ஸ்டீன் விதியை தவறு என்று கூறிய சர்ச்சையை ஏற்படுத்திய சுவாமி நித்தியானந்தா தற்போது, விலங்குகளை பேச வைக்க தனி சாப்ட்வேர் கண்டுபிடித்துள்ளதாக கூறி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில், நித்தியானந்தாவை கலாய்கும் விதமாக மீஸ் கிரியேட்டர்கள் உருவாக்கிய மீஸ்களும், ட்ரோல்களும் பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும், #சையின்ஸ்டிஸ்ட்_நித்தியானந்தா என்ற பெயரில் வைரலாகி வருகின்றது சுவாமி நித்தியானாந்தா முதலில் ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் தியான ஆசானாக அறியப்பட்டார். தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தனது ஆரசிமத்தை துவங்கினார். இவரின் தேன் ஊரிய பேச்சுக்கு மயங்கிய பக்தர்கள் கூட்டம் கூட்டாக அதிகரிக்க தொடங்கினர். இதனால் இந்தியா முழுக்கவும் இவரது புகழ் உயர்ந்தது. செக்ஸ் புகார்: மேலும், வெளிநாடுகளிலும் இவருக்கு ஆசிரமங்களும் சொத்துக்களும் கோடி கணக்கில் சேர்ந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சுவாமி நித்தியானந்தா தன்னிடம் வரும் பக்தர்களிடம் வலுக்காட்டயாக செக்ஸில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஆர்த்தி ராவ் என்று பெண் புகார் கூறியிருந்தார்.

"வில்லேஜ் ராக்ஸ்டார்" ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியத் திரைப்படம்!


மின்னம்பலம்:  2019ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதிற்கு, இந்தியாவின் சார்பில் அஸ்ஸாமிய திரைப்படமான "வில்லேஜ் ராக்ஸ்டார்" பரிந்துரைக்கப்பட்டுள்ளது!
உலகின் தலைசிறந்த திரைப்பட விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஹாலிவுட் படங்களுக்கு வழங்கப்படும் இவ்விருதில், உலகம் முழுவதிலும் இருந்து உருவாகும் சிறந்த திரைப்படங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், ‘சிறந்த வெளிநாட்டுப் படம்’ என்ற விருதை வழங்கி வருகின்றனர்.
இதில் இந்தியா சார்பில் ஆண்டு தோறும் ஒரு திரைப்படம் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ஆறு திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ஆம் ஆண்டில், வெற்றிமாறன் இயக்கியிருந்த ‘விசாரணை’ படம் இடம் பெற்றிருந்தது.

நாகர்கோவில் மாநகராட்சியாக மாறுகிறது!

நாகர்கோவில் மாநகராட்சியாக மாறுகிறது!மின்னம்பலம் : நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவைக் கடந்த ஆண்டில் இருந்து அதிமுக அரசு கொண்டாடி வருகிறது. இதுவரை 30 மாவட்டங்களில் நடைபெற்றுள்ள நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா சென்னையில் வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் இன்று(செப்டம்பர் 22) நூற்றாண்டு விழா நடைபெற்றது.

கைதான பிஷப் பிரோங்கோவுக்கு நெஞ்சுவலி! கேரள கன்னியாஸ்திரி பாலியல் விவகாரம்..

பிஷப் பிரோங்கோtamil.indianexpress.com; புகார் அளித்த கன்னியாஸ்திரி பாவமன்னிப்பு கேட்டது குறித்தும் கேட்கப்பட்டது" கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜலந்தர் பிஷப் பிராங்கோ திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிஷப் பிரோங்கோ: கேரள மாநிலம் குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக கடந்த ஜூன் 28ம் தேதி ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகார் மீது அதிரடியாக விசாரணையில் இறங்கிய போலீசார், பிஷப்புக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை திரட்டினர். இதையடுத்து அவரிடம் நேரடியாக விசாரித்து வாக்குமூலம் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மோடியை ‘திருடன்’ என்று விமர்சித்த முன்னாள் பிரான்ஸ் அதிபர், பிரதமர் பதில் என்ன?": ராகுல் காந்தி கேள்வி

Tamilthehindu :டெல்லியில் இன்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி   -  படம்: ஏஎன்ஐ ஐ.ஏ.என்.எஸ் புதுடெல்லி,
ரபேல் போர்விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று முன்னாள் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலன்டே விமர்சித்துள்ளார். இதற்குப் பிரதமர் மோடி என்ன பதில் சொல்லப்போகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

கனிமொழி மீது அவதூறு பேச்சு! - ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு

ஹெச் ராஜாvikatan.com - gruprasad: தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் கனிமொழி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பேசியதற்காக பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது கோவை கருமத்தம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குறித்து, பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். அதற்கு, கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து, கோவை மாவட்டம் கனியூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் (தி.மு.க) வேலுச்சாமி என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் கருமத்தம்பட்டி போலீஸில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஹெச்.ராஜா மீது 500, 501 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது

ரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது
மாலைமலர் : பா.ஜனதா நடத்திய குதிரை பேர வீடியோ சிக்கி இருப்பதாகவும், அதை வைத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப் போவதாக குமாரசாமி எச்சரித்ததையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சமாதானமாகி உள்ளனர். பெங்களூரு: கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்தது. இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவர் நேரடியாகவே மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் ஆட்சியை கவிழ்க்க சதியில் ஈடுபடும் பா.ஜனதா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜே.டி.எஸ். கட்சி சார்பில் கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

ராஜீவ் படுகொலையில் உயிரிழந்த தலைமைக் காவலரின் மகன் புதுச்சேரியில் காந்தி சிலை முன்பு சத்தியாகிரகம்

tamil.thehindu.com செ.ஞானபிரகாஷ் ராஜீவ் காந்தி படுகொலையில் பாதுகாப்புப் பணியில் உயிரிழந்த தலைமைக்காவலரின் மகன் புதுச்சேரியில் காந்தி சிலை முன்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். இவ்வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7 பேர் விடுதலை செய்ய அமைச்சரவையைக் கூட்டி விடுதலைக்கான அமைச்சர்கள் கையெழுத்திட்ட கோப்பினை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.

தங்க தமிழ்செல்வன் : ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டு உண்மை தான்!

ammknakkheeran.in - sakthivel.: காற்றாலை மின்சாரம் வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டு உண்மை தான் என தங்கத் தமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார். தேனி மாவட்டத்தில் உள்ள  ஆண்டிபட்டிக்கு வந்திருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழககொள்கை பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடன்  பேசுகையில், காற்றாலை மின்சாரம் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறாரே என கேள்வி எழுப்பப்பட்டது. 
அதற்கு பதிலளித்த தங்கத் தமிழ்ச்செல்வனோ. ஒருநாளின்  மின்சாரத்தேவை 16 ஆயிரம் மெகாவாட். ஆனால், வெறும் 5000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரத்தை எப்படி உற்பத்தி செய்யலாம் என்று பார்ப்பதை விட்டுவிட்டு தனியாரிடம் அதிக தொகை கொடுத்து மின்சாரம் வாங்குகிறார்கள். நிச்சயம் அதில் முறைகேடுகள் நடந்திருக்கும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம். அந்த வகையில் மு.க. ஸ்டாலின் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்றார்..

சந்திரிக்கா பண்டாரநாயகாவுக்கு பிரான்ஸ் அரசின் மிக உயர்ந்த விருது .. Legion of Honour பெறும் முதல் இலங்கையர்

பிரான்ஸ் அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா
பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அதியுயர் விருது வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதியுயர்ந்த விருதான Commander of the Legion of Honour என்ற விருதே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசுக்கு  இணையான இந்த பெருமையை பெறும் முதலாவது இலங்கையர் என்ற பெருமையை முன்னாள் ஜனாதிபதி பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்மெரீன்; இந்த விருதினை பிரன்ஸ் அரசாங்கத்தின் சார்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளார். கொழும்புதமிழ்.lk

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

ரபேல் ஊழல் பிரான்ஸ் அதிபர் ஹாலன்ட் போட்ட குண்டு ... மோடி அரசு அம்பானியை திணித்தது ,, எங்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை


dailythanthi.com: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் புதுடெல்லி, ரபேல் போர் விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்டை (எச்.ஏ.எல்.) புறக்கணித்து விட்டு, ரிலையன்ஸ் நிறுவனத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்தது சர்ச்சை ஆகியுள்ளது.
இதுகுறித்து எச்.ஏ.எல். முன்னாள் தலைவர் சுவர்ணா ராஜு அளித்த பேட்டியில், ‘‘நான்காம் தலைமுறை போர் விமானமான, 25 டன் எடையுள்ள சுகோய்–30 ரக போர் விமானங்களையே எச்.ஏ.எல். தயாரிக்கும்போது, ‘ரபேல்’ விமானங்களை எளிதாக தயாரித்து இருக்க முடியும்’’ என்று கூறினார். இதையடுத்து, இவ்விவகாரத்தில் பொய் கூறிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

ஜார்ஜைப் போல கொள்ளையடித்த ஒரு காவல் ஆணையர் சென்னை காவல் துறை வரலாற்றில் கிடையாது

சவுக்கு :சேட்டனின் சேட்டைகள். செப்டம்பர் 2018 அன்று  முன்னாள் மாநகர ஆணையர் ஜார்ஜ் குட்கா ஊழலில் தனக்கு சம்பந்தமே இல்லை என்று பத்திரிக்கையாளர்களை அழைத்து பேசினார்.  ஏதோ ஒரு அப்பாவி மீது அபாண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது போல, புலம்பினார்.
தனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகள் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்றும், அவர்களால் தன் மீது களங்கம் சுமத்தப்பட்டுள்ளது என்று உத்தமர் போலவே நடித்தார்.
குட்கா ஊழலில் வருமான வரித் துறை கைப்பற்றிய ஆவணங்களில், அவர் பெயருக்கு நேராக, முன்னாள் காவல் ஆணையர், கிறிஸ்துமஸ் பரிசு என்று உள்ளதே என்று கேட்டதும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.   கேள்விக்கு பதில் சொல்லாமல், கேள்வி கேட்ட நிருபரை பார்த்து நீங்கள் முஸ்லீம்தானே என்றார்.
அடுத்தடுத்து கேள்விகள் வந்ததும் திணறினார். ஒரு கட்டத்தில் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், தப்பி ஓடினார்.
ஜார்ஜ் சொல்லிக் கொள்வது போல அவர் அத்தனை உத்தமரா ?

சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் டாக்டர் பிரபுவுக்கு வாய்ப்பு?

டிஜிட்டல் திண்ணை: சேலத்தில் ஸ்டாலின் போடும் புதுக் கணக்கு!மின்னம்பலம்: "திமுகவின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாதான் சேலம் கிழக்கு மாவட்டத்தின் பொறுப்பாளர். மத்திய மாவட்டப் பொறுப்பாளர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன்தான் ஸ்டாலினுக்கு நெருக்கம் என்பது திமுகவினருக்குத் தெரியும். சேலத்தில் எந்தத் தகவல் என்றாலும் அது ராஜேந்திரன் மூலமாகத்தான் ஸ்டாலின் கவனத்துக்கு வரும். அதேபோலக் கட்சியிலிருந்து தகவல் சொல்வதாக இருந்தாலும் அது ராஜேந்திரன் மூலம்தான் சேலத்துக்குச் சொல்லப்படும். இதுதான் இதுநாள் வரை நடைமுறையாக இருந்தது. இது அப்படியே இருக்கட்டும்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் துணைவியார் லீலாவதி. அதாவது வீரபாண்டியாரின் இரண்டாவது மனைவி. இவர்களது மகன் டாக்டர் பிரபு. வீரபாண்டியார் மறைவுக்குப் பிறகுதான் திமுகவில் தலைகாட்ட ஆரம்பித்தார் பிரபு.

திரிஷா டால்பினை குளத்தில் அடைத்து கேளிக்கை .. பிராணிகள் வதை ... இவர் பீட்டாவின் தூதர் வேற..

த்ரிஷா: விவகாரமாக மாறிய புகைப்படங்கள்!மின்னம்பலம்: நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படங்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
த்ரிஷா துபாயில் உள்ள ரிசார்ட்டில் டால்பினைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கண்டதும் காதல் என்று தலைப்பிட்டு அவர் சில புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது அந்த புகைப்படங்களால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் த்ரிஷா.
த்ரிஷாவின் புகைப்படங்களை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் கோபம் அடைந்துள்ளனர். பீட்டா விளம்பர தூதுவராக இருந்துகொண்டு டால்பினை கொடுமைப்படுத்தியுள்ளார் த்ரிஷா என்று அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஆணவ கொலை ..தெலுங்கானா சென்று அம்ருதாவை சந்தித்த கௌசல்யா

telenganakausalyanakkheeran.in : தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரணய் என்ற வாலிபரும், அம்ருதா என்ற இளம் பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அம்ருதா தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இந்த திருமணத்தை செய்து கொண்டார். வேறொரு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் அம்ருதாவின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனிடையே அம்ருதா மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிர் யல்குடா என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கர்ப்பிணி மனைவியை மருத்துவ ஆலோனைக்காக அழைத்து சென்றுள்ளார் பிரணய். பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பிரணய் மற்றும் அம்ருதாவை ஒருவர் பின்தொடர்ந்து வந்துள்ளார். பின்தொடர்ந்து வந்த அந்த நபர் பிரணய்யை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிரணய் உயிரிழந்தார்.

வனிதா ( மஞ்சுளா மகள் ) : நடிகர் அருண் விஜய், ஹரி பேச்சைக்கேட்டு ஆடுகிறார் விஜயகுமார்


THE HINDU TAMIL< தனது தாயாரின் பல சொத்துகள் அருண் விஜய் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும், அவர்கள் பேச்சைக் கேட்டு தனது தந்தை நடப்பதாகவும் வனிதா தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள என் வீட்டை, படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுத்த என் மகள் வனிதா அதைக் காலி செய்ய மறுக்கிறார் என அவரது தந்தை நடிகர் விஜயகுமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் அங்கு சென்ற மதுரவாயல் போலீஸார் விஜயகுமார் வீட்டிற்குள் அத்துமீறி தங்கியிருநததாக வனிதா விஜயகுமார் உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்களில் 7 பேரைக் கைது செய்த போலீஸார் அவர்களைச் சிறையில் அடைத்தனர்.

நடிகை நிலானி குணமாகி வருகிறார். .. தற்கொலை முயற்சி.. மருத்துவ மனையில்

நடிகை நிலானி vikatan.com -s.magesh : கொசு மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற நடிகை நிலானிக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தற்கொலை செய்தபிறகு நடிகை நிலானி கடும் மனவேதனையில் இருந்தார். குன்றத்தூர் அபிராமியை ஒப்பிட்டு நிலானி மீது சமூகவலைதளங்களில் பதிவுகள் வெளியாகின. இதனால், அவர், மீடியா முன், கண்ணீர்மல்க காந்தி லலித்குமார் குறித்த தகவல்களைக் கூறினார். இந்தச் சூழ்நிலையில்தான் வீட்டிலிருந்த கொசு மருந்தைக் குடித்து நடிகை நிலானி தற்கொலைக்கு முயன்றார். அவரைக் காப்பாற்றி, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

கருணாஸ் : உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டேன் .. மன்னிச்சுகோங்கோ

உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - கருணாஸ் விளக்கம்மாலைமலர் :முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் விளக்கம் அளித்த கருணாஸ், உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார். சென்னை: நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.& மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

புழல் சிறையில் டிவி, மின்சார ஸ்டவ், 2 மூட்டை பிரியாணி அரிசி பறிமுதல்: தீவிரவாதிகளுக்கு சலுகைகள்

THE HINDU TAMIL": புழல் சிறைக்குள் சொகுசாக இருக்கும் கைதிகள் புழல் சிறையில் எஸ்.பி. தலைமை யில் நடத்தப்பட்ட சோதனையில் டிவி, எலெக்ட்ரிக் ஸ்டவ், 2 மூட்டை பிரியாணி அரிசி, வாசனை திரவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உயர் பாதுகாப்புப் பிரிவில் உள்ள தீவிரவாதிகளுக்கு சலுகைககள் அளிக்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
சென்னை புழல் சிறையில் கைதிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. கைதிகளின் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து புழல், கோவை, சேலம், கடலூர், பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். புழல் சிறை வார்டர்கள் 17 பேரை இடமாற் றம் செய்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா நடவடிக்கை எடுத்தார்.

ஜெயலலிதா ஈழத்திற்காக பேசிய பேச்சுக்கள்..!

Babu Vmk : நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான எல்டிடியின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கே கொண்டுவந்து சேர்த்து ராஜிவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென்று திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தேன். 20-9-1991 அன்று பி.வி.நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்ரீலங்கா அரசினுடைய அனுமதி பெற்று நம்முடைய ராணுவத்தை அனுப்பியேனும் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். படுகொலையைப் புரிந்ததற்காக பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டுமென்று கோரியிருந்தேன். அதன்பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வற்புறுத்தினேன்.
🔷 16-4-2002 அன்று சட்டப் பேரவையிலே ஜெயலலிதாவே முன்மொழிந்த தீர்மானம் :
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக் கொண்டு வர வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலைக்கு முதல் நாளே பயண திட்டத்தை மாற்றிய மூவர் .. ஜெயா ,சு.சாமி,வாழப்பாடி .

Kalai Selvi : உண்மையை சொல்லட்டுமா...!! 1991 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை மும்முரமாக நடந்து கொண்டிருந்த நேரம், மும்முனை போட்டி, அனைத்து தலைவர்களும் சுழன்றடித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது அந்த மே மாதம் 21 ஆம் நாள் ஸ்ரீபெரும்புதூரில் இளந்தலைவர், காங்கிரஸ் கட்சியின் பிரதம வேட்பாளர் இரவு 10.15 மணிக்கு மனித வெடிக்குண்டுக்கு பலியான செய்தி வெளிவந்த பிறகுதான் இந்தியாவில் பரபரப்பாக பரப்புரை நடத்தி வந்த அத்தனை தலைவர்களின் சுற்றுப்பயண திட்டங்களும் மாற்றப்படுகின்றன. ஆனால் மூன்று பேரின் பயணத்திட்டம் மட்டும் ஒரு நாளைக்கு முன்பே மாற்றப் படுகிறது ..!
அந்த மூவரில் முதல்வர் ஜெயலலிதா. அன்றைய ஒருங்கிணைந்த அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர். இரண்டாமவர் சுப்பிரமணியன் சாமி. அன்றைய மத்திய சந்திரசேகர் தலைமையிலான காபந்து அமைச்சரவையின் உள்துறை அமைச்சர். விடுதலைப் புலிகளோடு உறவு என்று தமிழகத்தில் கலைஞரின் ஆட்சியை ஆளுநரின் அறிக்கையின்றி கலைத்த ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனன். இன்னொருவர் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி.

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்தினத்தந்தி :சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டன. இதற்கு, பொதுமக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்தநிலையில், இந்த திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக, தர்மபுரி மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவரை தொடர்ந்து, இந்த திட்டத்தை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட மேலும் சிலரும் வழக்கு தொடர்ந்தனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 50 ஆண்டுகள் சிறை.. கடலூர்

Samayam Tamil : சிதம்பரம் அருகே 2 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு கடும் தண்டனை சிதம்பரம் அருகே 2 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இரண்டரை வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பழனிசாமி என்பவர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.
கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட பழனிசாமிக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். பச்சிளம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அந்த நபருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் அந்த நபருக்கு மரண தண்டனை விதித்திருக்கலாம் என்ற தங்களின் கருத்தையும் தெரிவித்து வருகின்றனர்.<

கருணாஸ் பேச்சு.. பின்னணியில் சசிகலா? ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டார் என்பதையே காட்டுகிறது

Hemavandhana -ONEINDIA TAMIL ON
சென்னை: தமிழ்நாட்டு நிலைமை இவ்வளவு
கேவலமாக போயிடும்னு நாம கொஞ்சம்கூட நினைத்தே பார்த்திருக்க மாட்டோம். 
கருணாஸ் பேசிய பேச்சுக்கள் எல்லாம் தகுமா? எவ்வளவு வன்முறை வார்த்தைகளை வாரி இறைத்திருக்கிறார்? எவ்வளவு துணிச்சலாக ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்? எங்கிருந்து இவ்வளவு தைரியம் கருணாஸ்-க்கு வந்தது? யார் கொடுத்த பலம் இது? 
 ஒரு சாதாரண நடிகராக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு திரையில் நுழைந்தவர் கருணாஸ். அப்போதெல்லாம் தன்னை ஒரு அப்பாவி போலவும், ஏழ்மை, வறுமை, போன்றவற்றை முன்னிறுத்தியே ஆரம்ப கட்டத்தில் வலம் வந்தவர். ஆனால் இன்று ஜாதியை பலமாக வைத்துக் கொண்டு புதிய விளையாட்டை தொடங்கியுள்ளார். 
இதுவரை தமிழக வரலாற்றில் "ஒரு முதலமைச்சர் தன்னை பார்த்து பயப்படுகிறார்" என்று ஒரு சாதாரண எம்.எல்.ஏ. சொல்லி யாராவது கேட்டிருப்போமா? பார்த்திருப்போமா? எங்காவது இந்த அதிசயம் நடந்திருக்கிறதா? அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று யாரை பார்த்தாவது ஒரு நபர் இப்படி பேசியிருப்பார்களா? இல்லை, அவர்களை பேசத்தான் வாய் வருமா? 
கருணாஸ் பேசியதைவிட கொடுமை இதற்கெல்லாம் முதலமைச்சர் தரப்பு வாய் மூடி மவுனமாக இருப்பதுதான்.

அண்ணாவின் கோரிக்கையை ஏற்ற போப் .. கோவா சுதந்திர போராட்ட வீரர் மோகன் ரானடே விடுதலை ...!

Mohan Ranade is an Indian freedom fighter who participated in Goa liberation movement. He was arrested by Portuguese police in 1955. Later he was incarcerated at the Fort of Caxias near Lisbon in Portugal. He was kept in solitary confinement for six years. After the liberation of Goa by India, and having served 14 years in prison, Ranade was released in January 1969. Ranade was born in 1929 in Sangli in Maharashtra[clarification needed] state, India. He was inspired by leaders like Ganesh Damodar Savarkar and Vinayak Damodar Savarkar. He is a qualified lawyer. When Annadurai, the then Chief Minister of Tamil Nadu, met Pope Paul VI during his visit to the Vatican City, he requested the Pope to put pressure on the Portuguese authorities to release Ranade. The Pope was astonished by his compassion and made possible Ranade's release.
Bala Subramanian : சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
---------------------------------------------------
தமிழக முதல்வர் சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாளன்று பலரும் அவரைப் பற்றிய நினைவுகளை, சாதனைகளைப் பகிர்ந்திருந்தனர். அதில் ஒரு குறிப்பில், போர்ச்சுகலிடமிருந்து கோவாவை விடுவிக்கப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரான மோகன் ரானடேவின் விடுதலைக்காக போப் ஆறாவது பாலிடம் பேசியதாகப் படித்தேன்.
என்னதான் அண்ணாவைப் பிடிக்கும் என்றாலும் இந்தக் குறிப்பு சற்று அதிகமாகவேபட்டது. இதற்குப் பிறகு தொடர்ந்து தேடிப்பார்த்ததில் உண்மையாகவே அப்படி நடந்திருக்கிறது!!
கோவா விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மோகன் ரானடே 1955ல் கைதுசெய்யப்பட்டு, 5 ஆண்டுகள் தனிமைச் சிறையில் இருந்த பிறகு, 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
1960ல் அவர் ஒரு சரக்குக் கப்பலில் லிஸ்பனுக்கு கொண்டுசெல்லப்பட்டு, அதற்கு அருகில் உள்ள காஸியஸ் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 1961ல் இந்தியப் படைகள் கோவாவை விடுவித்துவிட்ட பிறகும் மோகன் ரானடே விடுதலைசெய்யப்படவில்லை.

இலங்கை தமிழ் அமைச்சர் ஹிஸ்புல்லாவும் மகனும் கைது .. 94 மில்லியன் ரூபா ஊழல் ...

இலங்கை  இராஜாங்க அமைச்சர்
ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் இன்று கைது செய்யப்படனர் .
 அவர்களை நீதிமன்றத்திற்குள் ஆஜர்படுத்திய சம்பவம் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தமை போன்ற சம்பவங்கள் அனைத்தையும் ஊடகங்களின் கண்ணில் மண்ணைதத் தூவி அவர்களது புகைப்படங்களோ அல்லது வீடியோ காட்சிகளோ வெளிவராத வண்ணம் கனகச்சிதமாக அனைத்து தரப்பினரும் செயற்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை பொலீசாருக்கு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்ட போதும் அதனை அவர்கள் செய்யாது சட்டத்தரணி ஊடாக நேரடியாக நிதிமன்றத்திற்கு செல்வதற்கு பொலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

வசமாக சிக்கிய அமைச்சர் தங்கமணி . வாங்காத காற்றாலை மின்சாரத்திற்கு ரூ.9 கோடி; ஆதாரம் இதோ

tamil.thehindu.com : காற்றாலை மின்சாரத்தில் போலி ஒதுக்கீடு கணக்கு காட்டி ஊழல் நடந்திருப்பது ஆதாரபூர்வமானது. இதோ ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறேன். அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, பேட்டி அளித்திருப்பதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு ஊழல் புகாரை வெளியிடும் போது ஆதாரங்களை மறைத்து பதில் கொடுப்பது அமைச்சருக்கு கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு தான் அறிக்கை விடுவேன் என்பது கூடத்தெரியாமல் - அல்லது புரியாமல், அமைச்சர் காற்றாலை தொடர்பான இமாலய ஊழலை மறைக்க முயற்சிக்கிறார்.

கோகுல்ராஜ் ஆணவக்கொலை .. சுவாதியின் நண்பர் கார்த்திக்ராஜா பரபரப்பு சாட்சியம்!

கொல்லப்பட்ட கோகுல்ராஜ் ...  கொலை செய்த யுவராஜ்
nakkheeran.in - elayaraja": கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் முக்கிய
சாட்சியான சுவாதியின் நண்பர் கார்த்திக்ராஜா, சிசிடிவி கேமரா வீடியோ காட்சிகளைப் பார்த்து சுவாதி மற்றும் கோகுல்ராஜ் ஆகியோரை அடையாளம் காட்டி பரபரப்பு சாட்சியம் அளித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் (23) கடந்த 23.6.2015ம் தேதி வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. மறுநாள் 24.6.2015ம் தேதியன்று மாலை, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தார். தலை வேறு உடல் வேறாக துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கிடந்தது. கோகுல்ராஜ், திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பி.இ., படிப்பை முடித்து இருந்தார். அப்போது தன்னுடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நடந்தை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகள் சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார்.
 கல்லூரி படிப்பை முடித்த பிறகும் அவர்களுடைய நட்பு தொடர்ந்தது. 23.6.2015ம் தேதியன்று கோகுல்ராஜும், சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர், அவர்கள் இருவரையும் மிரட்டியுள்ளனர்.

கர்நாடகா, ஆந்திரா, கேரளாகாரனை எல்லாம் பெரியாரா படிக்க வைச்சார்?

Ravishankar Ayyakkannu : கேள்வி: கர்நாடகா, ஆந்திரா, கேரளாகாரனை எல்லாம் பெரியாரா படிக்க வைச்சார்? சும்மா எல்லாத்துக்கும் ஏன் பெரியார் புகழ் பாடுறீங்க?
பதில்: 1956 வரை கர்நாடகா, ஆந்திரா, கேரளா எல்லாம் மதராஸ் மாகாணத்தின் கீழ் தான் இருந்தன. நீதிக் கட்சியும் திராவிட இயக்கமும் முன்னெடுத்த பல சீர்திருத்தங்கள் அவர்களுக்கும் உதவின.
சரி, ஒரு பேச்சுக்கு அவர்கள் எல்லாம் தானாகப் படித்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.
கேரளாவில் ஒரு நாராயணகுருவையும் கர்நாடகத்தில் ஒரு பசவண்ணாவையும் ஒடுக்கப்பட்டோருக்கு ஒரு அம்பேத்கரையும் காட்டுகிறார்கள். ஆனால், எவ்வளவு தான் சமூக சீர்திருத்தம் பேசினாலும், கடைசியில் இந்து சமயம் இவர்களைத் தின்று செரித்து கொண்டிருக்கிறது.
அதனால் தான் உசார் பேர்வழியான பெரியார் தூங்கும் போதும் காலாட்டிக் கொண்டே தூங்குகிறார். புத்தருக்கு நேர்ந்த கதி தனக்கு நேரக்கூடாது என்று சிலையாக நின்றாலும் கீழே
"கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை.

வியாழன், 20 செப்டம்பர், 2018

தமிழறிஞர் பச்சையப்பன் மரணம்.. கணினி, செல்பேசிக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர்!

Famous Tamil Scholar Pachchaiyappan dies in Chennai tamil.oneindia.com - shyamsundar. கணினி, செல்பேசிக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம் சென்னை: கணினி, செல்பேசிகளுக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய பிரபல தமிழறிஞர் பச்சையப்பன் சென்னையில் இன்று காலை காலமானார்.
கி.த பச்சையப்பன் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். இவர் தனது 85 வயதில் மரணம் அடைந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் தமிழறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசி மூச்சு வரை தமிழ் மொழிக்காக பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளிதழ்களில் சமஸ்கிருத ஆதிக்கம் இருந்த போது அதை தமிழை நோக்கி திருப்பியவர் பச்சையப்பன்.
இவரது குடும்பம் தொடர்பான சிவில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றம் வந்துள்ளார். அப்போது இவர் மயங்கி விழுந்து உள்ளார். பின்புதான் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

நடிகை நிலானியின் காதலன் லலிதகுமார் உதயநிதியின் ரசிகர் மன்ற பிரமுகராம் ...

டிஜிட்டல் திண்ணை:    திமுகவை உலுக்கும்  நடிகை தற்கொலை முயற்சி!மின்னம்பலம் :“கடந்த சில தினங்களுக்கு முன்பு காந்தி லலித் குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டதும், அந்த தற்கொலையின் பின்னணியில் நடிகை நிலானி பெயர் அடிபட்டதும் தெரிந்த விஷயம்தான். இன்று நிலானியும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
காந்தி - நிலானி விவாகரத்தில் லேட்டஸ்ட் ஆடியோ ஒன்று மின்னம்பலத்துக்குக் கிடைத்துள்ளது. அந்த ஆடியோ காந்தி தற்கொலைக்கு சில தினங்களுக்கு முன்பாக இருவரும் பேசியது. இடையில் கான்ஃபரன்ஸ் காலில் போலீஸாரும் பஞ்சாயத்து செய்வது அந்த ஆடியோவில் பதிவாகியிருக்கிறது.
ஆடியோவில் உள்ளதை அப்படியே இங்கே தருகிறேன். மற்றவற்றை அடுத்து சொல்கிறேன்.
நிலானி: இதுக்கு மேல எனக்கு கால் பண்ணாதே. எதுவா இருந்தாலும் அவங்ககிட்ட பேசிக்கோ. நானும் அங்கே பேசிக்கிறேன்.
காந்தி: நீதானே வீராப்பா சொன்ன... கான்ஃப்ரன்ஸ் கால் போடு. இப்போதானே பண்ணின..

நடிகை மஞ்சுளாவின் மகள் வனிதாவுக்கு எதிராக நடிகர் விஜயகுமார் போலீசில் முறையீடு

நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியினரின் மகள் வனிதா. இன்று விஜயகுமார் தனது வீட்டை ஆக்கிரமித்துக்கொண்டு காலி செய்ய மறுப்பதாக கூறி தனது மகள் மீது போலீஸாரிடம் புகார் அளித்தார். நடிகர் விஜயகுமார் மஞ்சுளாவுக்கு பிறந்த வனிதாவுக்கு சொத்தில் போதிய பங்கை அளிக்காமல் தனது முதல் மனைவிக்கு பிறந்த நடிகர் அருண் போன்றோருக்கே கொடுத்துள்ளார். அருணை பெரிய நடிகராகக மஞ்சுளா சம்பாத்த சொத்துக்களை பெருமளவில் அள்ளி வீசியுள்ளார். இருந்தாலும் அவர் சினிமாவில் பெரிதாக வளரவில்லை.
விஜயகுமாருக்கு மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை சினிமா படப்பிடிப்பிற்காக வாடகைக்கு வழங்குவது வழக்கமானது. அதுபோல அவரது மகள் வனிதாவிற்கு படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விட்டதாக தெரிகிறது.;

கருணாஸ் வில்லங்க பேச்சு ! விரைவில் கைது செய்யப்படுவார் . 6 பிரிவுகளில் வழக்கு

நக்கீரன் :முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் நுங்கம்பாக்கம் காவல்நிலைய போலீசார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர், போலீசாரை மிரட்டும் விதமாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, கருணாஸ் பேச்சு குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், கருணாஸ் அதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை எவ்வாறு கையாளுவது எனத் தெரியாமல் நிலை தடுமாறியுள்ளார் என தெரிவித்தார்.

BBC : 30 ஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்: .. காற்றழுத்த விசையை அழுத்த விமானி மறந்துவிட்டாராம்

மும்பை .ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 30க்கும்
மேற்பட்டோருக்கு மூக்கிலும், காதிலும் ரத்தம் வழிந்ததாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். e>விமான கேபின் காற்றழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் விசையை இயக்க ஜெட் ஏர்வேஸ் விமானிகள் மறந்துவிட்டதால் இப்பயணிகளுக்கு ரத்தம் வந்துள்ளது.
மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் 9 டபிள்யூ 697 விமானம் மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில், திரும்பி வந்து மும்பையில் தரையிறங்கியது.
விமானத்திற்குள் ஆக்ஸிஜன் முகமூடிகள் வழங்கப்பட்டதை இந்த விமானத்தில் இருந்த பயணிகள் டுவிட்டரில் பதிவிட்ட காணொளிகள் காட்டுகின்றன.
166 பயணிகளுடன் சென்ற போயிங்-737 வகை விமானம், பாதுகாப்பாக தரையிறங்கியது.
விமான கேபின் குழுவினர் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டு விசாரிக்கப்படவுள்ளனர் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடிகை நிலானி தற்கொலை முயற்சி ...மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் அனுமதி

மாலைமலர் : சின்னத்திரை  நடிகை நிலானி இன்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 வளசரவாக்கம் வீட்டில் இருந்து மருத்துவ மனைக்கு...
 சின்னத்திரை நடிகை நிலானி - உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் இருவரும் காதலித்து வந்தார்கள். காந்தி நிலானியை திருமணம் செய்யவும் விரும்பினார். ஆனால் நிலானிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் போலீசில் புகார் அளித்தார். இதனால் மனம் உடைந்த காந்தி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், நிலானி, காந்தி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

கவிஞர் கலி.பூங்குன்றன்: பறைச்சிகள் இரவிக்கை கட்டியதால் என்று பெரியார் கூறினாரா?

by Ravi Pallet
"பறைச்சிகள் எல்லாம் இரவிக்கை கட்டியதால் தான் துணி விலை கூடியது",
எனப் பெரியார் சொன்னதாகச் சமூக வலைத் தளங்களில் சிலர் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றனர். அதற்கான விளக்கம்:
வேலூர் நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்த சமயம். வேலூர் நாராயணன் அவர்கள் மகனுக்கும், அமைச்சர் சத்யவாணி முத்து அம்மையார் அவர்கள் மகளுக்கும் இடையே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது. அதனை விரும்பாமல் ஜாதிப் பெயரை சொல்லி மேயர் திட்டியதாக ஒரு பிரச்சினை வெடித்தது.
அந்தச் சூழலில் வேலூர் நாராயணன் அவர்கள் தம் பிறந்த நாள் விழாவில், தந்தை பெரியார் அவர்களை உரையாற்றிட அழைத்திருந்தார். இந்தக் கூட்டத்தின் பின்னணியை அறிந்த தந்தை பெரியார் அவர்கள், பொதுக் கூட்டத்திலேயே விவரங்களைப் போட்டு உடைத்து விட்டார்.
வேலூர் நாராயணன் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அப்படியா சொல்லியிருக்க மாட்டார். ஒருக்கால் அப்படி சொல்லியிருந்தால் அவர் தி.மு.க.வில் இருப்பதற்கே லாயக்கற்றவர் என்று கடுமையாகப் பேசினார் தந்தை பெரியார்.

சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை !

ஆகஸ்ட் 6, 2018 அதிகாலையில் மாவட்ட ரிசர்வ் படையினரால் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது மாவோயிஸ்டுகளா? அப்பாவி பொதுமக்களா? தி லீஃப்லெட் இணையதள பத்திரிகையாளர் கிரித்திகா அகர்வாலின் நேரடி ரிப்போர்ட்!
View image on TwitterMadkam Hidme, killed by Chhattisgarh Police, alleging she was a Maoist guerrilla from 'Kistaram Platoon no Villagers allege she was tending to paddy in her village Gompad when she was taken by police, raped, and then shot in cold blood + சுக்மாவில், ஆகஸ்ட்6, 2018 வினவு :அதிகாலையில் மாவட்ட ரிசர்வ் படையினரால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த என்கவுண்டரில் 15 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக நக்சல் எதிர்ப்புப் படை டி.ஐ.ஜி டி.எம். அவஸ்தி கூறினார். ஆனால் கோம்பத், நல்கடோங், வெல்போச்சா, கிண்டர்பாத் மற்றும் எடகட்டா கிராம மக்கள் அதனை மறுக்கின்றனர். அங்கு நடத்தப்பட்ட பயங்கரத்தை அவர்கள் விவரிக்கின்றனர்.அங்கு விசாரிக்கச் சென்ற ஒரு உண்மை கண்டறியும் குழுவுடன் இணைந்து பத்திரிகையாளர்களோடு சென்ற, தி லீஃப்லெட் இணையதளத்தின் கிரித்திகா அகர்வால்,பாதுகாப்பு என்ற பெயரில் குற்றமற்றவர்கள் மீதான கண்ணுக்குத் தெரியாத மற்றும் இதுவரை கேட்டறியாத அநீதியான வன்முறைகளை கிராம மக்களிடம் கேட்டு பதிவு செய்துள்ளார்.
 அன்புக்குரியவர்களின் இழப்பு, சிதைக்கப்பட்ட உடல்களின் நினைவுகள் மற்றும் பதிலில்லா கேள்விகள் என இழப்புகள் மற்றும் அதிர்ச்சிகளால் நிறைந்த கதைகளால் பஸ்தாருக்கு (Bastar) செல்லும் சாலை நிரப்பப்பட்டுள்ளது.
மாவட்ட ரிசர்வ் படையால் (District Reserve Guards) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க என்கவுண்டரில் 15 மாவோயிஸ்டுகள் 2018, அகஸ்டு, 6-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதாக நக்சல் எதிர்ப்புப்படை டி.ஐ.ஜி.  டி.எம் அவஸ்தி கூறினார். ஆனால் அக்கிராம மக்கள் தங்களுக்கு நேர்ந்த பயங்கரத்தை விவரிக்கின்றனர். 

அம்ருதா : தந்தை மாருதிராவை தூக்கிலிட கோரி பேரணி .. ஆணவ கொலையான பிரணாய் மனைவி ..

தீக்கதிர் : தெலுங்கானாவில் நடந்த சாதி ஆணவப்படுகொலை: மாருதி ராவை தூக்கிலிடக் கோரி செப். 23ல் ஹைதராபாத்தில் பேரணி-பிரணாய் மனைவி அம்ருதா அறிவிப்பு

ஹைதராபாத், செப்.19-
தனது கணவரைக் கொலை செய்ததற்காக, தன் னைப் பெற்ற தந்தையை தூக்கிலிட வேண்டும் என்றுவலியுறுத்தி, தெலுங்கானாவைச் சேர்ந்த இளம்பெண் அம்ருதா, செப்டம்பர் 23-ஆம்தேதி பேரணி அறிவித்துள்ளார்.தெலுங்கானா மாநிலம்,நல்கொண்டா மாவட்டம், மிர்யாலகுடா பகுதியைச் சேர்ந்தவர் அம்ருதா வர் ஷினி. சாதி ஆதிக்கப் பிரிவைச் சேர்ந்த இவர், தலித்வகுப்பைச் சேர்ந்த பெருமல்ல பிரணாய்குமாரை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது 5 மாதகர்ப்பிணியாகவும் இருக்கிறார்.இந்நிலையில், தலித் ஒருவரின் கருவை, தனது மகள்சுமப்பதா? என்று ஆத்திரமடைந்த அம்ருதாவின் தந்தைமாருதி ராவ், கடந்த வியாழக்கிழமையன்று அம்ருதாவின் கண் முன்பாகவே பிரணாய் குமாரைப் படுகொலைசெய்தார்.

ஹெச்.ராஜாவை கைது செய்ய அறநிலைய துறையினர் ஆர்ப்பாட்டம் . செப்.27-ல் உண்ணாவிரத போராட்டம்

tamil.thehindu.com/ திருச்சி . இந்து அறநிலைய துறை பணியாளர்கள் நேற்று கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையினரையும், அவர்களது குடும்பத்தினரையும் ஹெச்.ராஜா அவதூறாகவும், இழிவாகவும் பேசியதாகக் கூறி அவரைக் கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் முன்பு நேற்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி தலைமை வகித்தார்.

ஒரு கோடி ரூபாய் கூலி… 4 அட்டெம்ப்ட்..சிக்கிய 7 பேர்! – பிரனய் கொலை வழக்கின் பின்னணி

ஆணவக்கொலை
அம்ருதாவின் தந்தைvikatan.com -அஷ்வினி சிவலிங்கம் : தெலங்கானாவில் பட்டப்பகலில் மருத்துவமனை வளாகத்தில் காதல் மனைவி முன்பு கணவன் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணும் காதலித்துள்ளனர். அம்ருதாவின் தந்தை மாருதிராவ், ஒரு தொழிலதிபர். பிரனய் -அம்ருதா காதல் விவகாரம் இருவர் வீட்டிலும் தெரிய வர, பிரச்னை வெடித்தது. பிரனய், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அம்ருதாவிடம் பிரனய் உடனான காதலை முறித்துக்கொள்ளும்படி மிரட்டினார்.
அம்ருதாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுசெய்தார். இதையடுத்து பிரனய் – அம்ருதா, கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், 5 மாதம் கர்ப்பமாக இருந்த அம்ருதாவும் பிரனய்யும் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, மர்ம நபர் ஒருவர், பிரனய்யை வெட்டிக் கொலைசெய்தார். சிசிடிவி-யில் பதிவான இந்தக் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முட்டைக்கு 1000 கோடி, எடப்பாடிக்கு 3,120 கோடி.. தங்கமணிக்கு 1 லட்சம் கோடி!” ஸ்டாலின் கணக்கு

ஊழல் பட்டியல் வெளியிட்ட ஸ்டாலின்``முட்டைக்கு 1000 கோடி, எடப்பாடிக்கு 3,120 கோடி.. தங்கமணிக்கு 1 லட்சம் கோடி!vikatan.com--k.dhanasekaran" “இதைச் சொல்வதால் சிறைக்குச் செல்லவும் தயார். இதற்கெல்லாம் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. நாங்கள் சிறையைப் பார்க்காதவர்கள் இல்லை. தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டுவந்தால் முதலில் ஓ.பி.எஸ்ஸும்,  ஈ.பி.எஸ்ஸும்தான் சிறைக்குப் போவார்கள்” – ஸ்டாலின்< “நெடுஞ்சாலைத் துறை, ஸ்மார்ட் சிட்டி, குட்கா, எல்.இ.டி பல்ப் மற்றும் பருப்பு, அரிசி, பால் தவிர படிக்கும் மாணவர்களின் மார்க் ஷீட் என  இந்த ஆட்சியில் நடைபெறும் ஊழல்கள் ஏராளம். இந்த ஊழல் பட்டியலை முன்வைத்து, `எங்கும் ஊழல்… எதிலும் ஊழல்’ என்ற முழக்கத்துடன் சேலம் ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு எதிரே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதன், 19 செப்டம்பர், 2018

சி.பி.ராதாகிருஷன் :கோவை குண்டுவெடிப்பு கலவரம் செய்த போலீசை நாம் காட்டி கொடுக்கவில்லை .. அந்த நன்றி வேண்டாமா?

வாய் தவறி சொல்லியதை பெரிதாக்காதீர்கள்
பொன்னர்.. சரி பொன்னரே இந்த வாய் அடிக்கடி தவறாய் அல்ல தப்பாய் பேசுகிறதே
ஒன்று திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்க நினைக்கிறார் .. அல்லது மனநலம் பிறழ்ந்து வந்ததை பேசுகிறார் .. இதைவிட கொடுமை சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை கலவரத்தில் போலீஸை காட்டிக்கொடுக்காதற்கு நன்றிகடன் வேண்டாமா என்கிறார்..
என்னை கைது செய்தால் அடுத்த நொடி இந்த அரசு கவிழும் என்கிறார் எச்.ராசா ..
இதெற்கெல்லாம் என்ன பொருள்..
வாய்தவறியதல்ல திட்டமிடுகிறீர் .. ஒரு உளறல்காரனை வைத்து முடிந்தவரை பார்க்கிறீர் ஆனால் இந்த மண்ணில் உங்கள் செயல் எடுபடவில்லை என்ன காரணம் இங்கே அறிவுக்கொண்டு சிந்தி என #பெருங்கிழவன் எம்மை பழக்கிவிட்டு போயிருக்கிறான் ..


நீங்கள் நடத்துகிற அராஜகசெயல்கள் எல்லாம் உங்களையே திருப்பி தாக்குகிறது .. சோபியாவின் பேச்சு உலகமே திருப்பி சொன்னது பாசிசபாஜக ஒழிக ..
இதோ நந்தினியின் இரு சக்கர வாகனத்தில் மோடி நாட்டுக்கு கேடு வாசகத்தை போலீஸை துணைக்கழைத்து கிழித்து போட்டால் சரியாகிபோகுமா .. இனி நிறைய பதாகைகள் இருசக்கரங்களை அலங்கரிக்கும்..

சங்கர் மீது எகிறிப்பாய்ந்த ரஜினி. . என்ன சொன்னீங்க என்ன பண்ணி வச்சுருக்கீங்க ?

சென்னை: உச்ச நடிகர் பிரமாண்ட இயக்குனர் மீது கோபத்தில் இருப்பதாக
கூறப்படுகிறது. உச்ச நடிகரை வைத்து பிரமாண்ட இயக்குனர் எடுத்த படம் ஒரு வழியாக ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் வெளியான டீஸர் தமிழை விட இந்தியில் பட்டையை கிளப்பியது. அதற்கு முக்கிய காரணம் வில்லனாக நடித்திருக்கும் பாலிவுட் நடிகர்.
டீஸரில் பாலிவுட் நடிகர் வந்த வேகத்தில் போய்விட்டாலும் அனைவரும் அவரை பற்றித் தான் பேசினார்கள். உச்ச நடிகரின் இரண்டு கதாபாத்திரங்களுமே ஏற்கனவே தெரிந்தது தான் என்பதால் வில்லன் கதாபாத்திரம் மீது மக்களுக்கு அப்படி ஒரு ஆர்வம். அந்த கதாபாத்திரம் அப்படியாக இருக்குமோ, இப்படியாக இருக்குமோ என்று விவாதித்தனர்.
உச்ச நடிகரின் ரசிகர்கள் டீஸரை கொண்டாடியபோதிலும் இந்தி ரசிகர்கள் வில்லனுக்காக அதை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கினார்கள். அங்கேயே உச்ச நடிகரை வில்லன் நடிகர் ஓவர்டேக் செய்துவிட்டார்.
உச்ச நடிகரை விட வில்லன் நடிகரின் கதாபாத்திரம் குறித்து தெரிந்து கொள்ளவே அனைவரும் விரும்புகிறார்கள்.
டீஸரால் இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று உச்ச நடிகர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

ஒரே மாதத்தில் கலைஞரை மறந்த திமுகவினர்

வெப்துனியா : திமுக தலைவர் கலைஞர்  கடந்த மாதம் காலமானதை அடுத்து மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்று அக்கட்சியை வழிநடத்தி வருகிறார். கருணாநிதி உயிருடன் இருந்தபோது எந்த விழாவானாலும் கலைஞரின்  படத்தை முதலில் போட்டு போஸ்டர் அடிக்கும் திமுகவினர் தற்போது கலைஞரை  மறந்து மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து போஸ்டர் அடித்து வருவதாக கூறப்படுகிறது. சிலவேளை உதயநிதிக்கு கூட முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு சமீபத்தில் திமுகவின் முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம் செய்யப்பட்டார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்துள்ளனர். இந்த போஸ்டரில் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு படங்கள் மட்டுமே உள்ளது. கலைஞரின்  பெயரோ, படமோ இல்லாதது உண்மையான திமுக தொண்டர்களை வருத்தமடைய செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு - அப்பல்லோ மருத்துவமனை தகவல்

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு - அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல்மாலைமலர் : ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை:மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது.
இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய விசாரணை கமி‌ஷனின் காலம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் நீட்டிக்கப்பட்டது.
நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர், அப்பல்லோ ஆஸ்பத்திரி நர்சுகள், பிசியோதெரபிஸ்ட்கள், டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர், செயலாளர் என அனைத்து தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தெலங்கான ஆணவக்கொலை கூலிப்படை ஷர்மா கைது . பிகார் மாநில பார்ப்பான்

ஆணவக் கொலை: குற்றவாளி கைது!மின்னம்பலம் : தெலங்கானா மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் பிரனய் ஆணவக் கொலைக்குப் பலியான விவகாரத்தில், முக்கியக் குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்ட ஷர்மா எனும் கூலிப்படையைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யாலகுடா பகுதியைச் சேர்ந்த பெருமல்ல பிரனய்குமார் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 14) அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனை வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். மனைவி அம்ருதவர்ஷினி மற்றும் தாய் பிரேமலதா ஆகியோர் உடன் சென்றபோது, பின்பக்கமாக வந்த ஒரு நபர் அவரது கழுத்தில் கத்தியால் வெட்டினார். தலை மற்றும் கழுத்தில் கடுமையாகத் தாக்கியதால், சம்பவ இடத்திலேயே பிரனய் பலியானார்.