புதன், 19 செப்டம்பர், 2018

சி.பி.ராதாகிருஷன் :கோவை குண்டுவெடிப்பு கலவரம் செய்த போலீசை நாம் காட்டி கொடுக்கவில்லை .. அந்த நன்றி வேண்டாமா?

வாய் தவறி சொல்லியதை பெரிதாக்காதீர்கள்
பொன்னர்.. சரி பொன்னரே இந்த வாய் அடிக்கடி தவறாய் அல்ல தப்பாய் பேசுகிறதே
ஒன்று திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்க நினைக்கிறார் .. அல்லது மனநலம் பிறழ்ந்து வந்ததை பேசுகிறார் .. இதைவிட கொடுமை சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை கலவரத்தில் போலீஸை காட்டிக்கொடுக்காதற்கு நன்றிகடன் வேண்டாமா என்கிறார்..
என்னை கைது செய்தால் அடுத்த நொடி இந்த அரசு கவிழும் என்கிறார் எச்.ராசா ..
இதெற்கெல்லாம் என்ன பொருள்..
வாய்தவறியதல்ல திட்டமிடுகிறீர் .. ஒரு உளறல்காரனை வைத்து முடிந்தவரை பார்க்கிறீர் ஆனால் இந்த மண்ணில் உங்கள் செயல் எடுபடவில்லை என்ன காரணம் இங்கே அறிவுக்கொண்டு சிந்தி என #பெருங்கிழவன் எம்மை பழக்கிவிட்டு போயிருக்கிறான் ..


நீங்கள் நடத்துகிற அராஜகசெயல்கள் எல்லாம் உங்களையே திருப்பி தாக்குகிறது .. சோபியாவின் பேச்சு உலகமே திருப்பி சொன்னது பாசிசபாஜக ஒழிக ..
இதோ நந்தினியின் இரு சக்கர வாகனத்தில் மோடி நாட்டுக்கு கேடு வாசகத்தை போலீஸை துணைக்கழைத்து கிழித்து போட்டால் சரியாகிபோகுமா .. இனி நிறைய பதாகைகள் இருசக்கரங்களை அலங்கரிக்கும்..


நந்தினியை கொல்வோம் என மிரட்டுவதாக தொலைப்பேசி மூலம் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார்..நந்தினி உயிருக்கு பாதுகாப்பு தரவேண்டியது தமிழக அரசின் கடமை .. பாஜகவின் வெறியாட்டம் கட்டுக்கடங்காமல் போவதற்கு காரணம் தமிழக அரசுதான் .. ராசா போன்றவர்களை குண்டர் சட்டத்தில் போட்டால் தான் அடங்குவார்கள் .. பெரியார் சிலை மீது செருப்பு வீசிய சூத்தரனை குண்டாஸில் போடும் போது பொது அமைதிக்கு பங்கம் செய்கிற ராசாவையும் போடலாம்
..
யாராக இருந்தாலும்
எந்த கருத்தை உள்வாங்க பழகிகொள்ளுங்கள் மாற்று கருத்தை அறிவோடு எதிர்க்கொள்ளுங்கள் மதமெனும் கிறுக்கு பிடித்தாட்டினால் செய்வதெல்லாம் தமிழகத்தில் கேளிக்கையாக பார்க்கபடும் என்பதை உணருங்கள் ..
..
அதிமுக அரசை கைப்பாவையாய் வைத்துக்கொண்டு ஆடுகிற ஆட்டம் ஓய்கிறபோது தரும் வலியை தாங்கமாட்டீர்கள்
இதே எச்.ராசாவோ சேகரோ திமுக ஆட்சியில் இதுபோல பேசமுடியுமா நாகரீகமில்லாத கலவரத்தை செய்ய ..ஒரு கும்பலை வன்முறைக்கு தூண்டுகிற செயலை செய்ய முடியுமா.. எதை செய்தாலும் பாண்டியராஜன் போல கைக்கூலிகளை வைத்து பேச வைக்கலாம் .. எதற்கு தலையாட்டுகிற பயத்தின் பீதியில் தொடைநடுங்கி கிடக்கிற அடிமைகளை வைத்துக்கொண்டி
பெரியதொரு கலவரத்தை நடத்தினால் பழியை அரசின் மீது போட்டுவிட்டு தப்பிக்கலாம் என்ற எண்ணம் தமிழகத்தில் ஈடேறாது .. இப்போது நடத்துகிற கூத்திற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வெகுவிரைவில் வரும் .. இவர்களின் அராஜகத்தை அடக்க/ஒடுக்க திமுகவை அறியணையேற்றுவதுதான் ஒரே வழி..
வழிபிறக்கும் ..வீணர்கள் வீழ்வர்
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக