வெள்ளி, 21 செப்டம்பர், 2018

கர்நாடகா, ஆந்திரா, கேரளாகாரனை எல்லாம் பெரியாரா படிக்க வைச்சார்?

Ravishankar Ayyakkannu : கேள்வி: கர்நாடகா, ஆந்திரா, கேரளாகாரனை எல்லாம் பெரியாரா படிக்க வைச்சார்? சும்மா எல்லாத்துக்கும் ஏன் பெரியார் புகழ் பாடுறீங்க?
பதில்: 1956 வரை கர்நாடகா, ஆந்திரா, கேரளா எல்லாம் மதராஸ் மாகாணத்தின் கீழ் தான் இருந்தன. நீதிக் கட்சியும் திராவிட இயக்கமும் முன்னெடுத்த பல சீர்திருத்தங்கள் அவர்களுக்கும் உதவின.
சரி, ஒரு பேச்சுக்கு அவர்கள் எல்லாம் தானாகப் படித்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.
கேரளாவில் ஒரு நாராயணகுருவையும் கர்நாடகத்தில் ஒரு பசவண்ணாவையும் ஒடுக்கப்பட்டோருக்கு ஒரு அம்பேத்கரையும் காட்டுகிறார்கள். ஆனால், எவ்வளவு தான் சமூக சீர்திருத்தம் பேசினாலும், கடைசியில் இந்து சமயம் இவர்களைத் தின்று செரித்து கொண்டிருக்கிறது.
அதனால் தான் உசார் பேர்வழியான பெரியார் தூங்கும் போதும் காலாட்டிக் கொண்டே தூங்குகிறார். புத்தருக்கு நேர்ந்த கதி தனக்கு நேரக்கூடாது என்று சிலையாக நின்றாலும் கீழே
"கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்,
கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன்,
வணங்குகிறவன் காட்டுமிராண்டி"
என்று எழுதி வைத்து அதன் மேல் நிற்கிறார்.
மற்றவர்களுக்கு எல்லாம் இல்லாத சிறப்பாக, திராவிடச் சீர்திருத்தத்தை நிலைநாட்டிப் பாதுகாக்க ஒரு வெற்றிகரமான அரசியல் இயக்கம் என்னும் சொத்தையும் விட்டுச் சென்றிருக்கிறார்.
உங்கள் நண்பரின் பெற்றோர்கள் தான் உங்கள் நண்பர்களைப் படிக்க வைத்தார்கள். அதற்காக உங்கள் பெற்றோர் பாடு பட்டு உங்களை வளர்த்ததற்கு மதிப்பில்லாமல் போகுமா? உங்கள் பெற்றோர் இல்லாவிட்டால் நீங்கள் அனாதையாக நடுத்தெருவில் தான் நின்றிருப்பீர்கள் என்பது உறைக்க வேண்டாமா?
#திராவிடம் #HBDPeriyar140

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக