வெள்ளி, 21 செப்டம்பர், 2018

வனிதா ( மஞ்சுளா மகள் ) : நடிகர் அருண் விஜய், ஹரி பேச்சைக்கேட்டு ஆடுகிறார் விஜயகுமார்


THE HINDU TAMIL< தனது தாயாரின் பல சொத்துகள் அருண் விஜய் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும், அவர்கள் பேச்சைக் கேட்டு தனது தந்தை நடப்பதாகவும் வனிதா தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள என் வீட்டை, படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுத்த என் மகள் வனிதா அதைக் காலி செய்ய மறுக்கிறார் என அவரது தந்தை நடிகர் விஜயகுமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் அங்கு சென்ற மதுரவாயல் போலீஸார் விஜயகுமார் வீட்டிற்குள் அத்துமீறி தங்கியிருநததாக வனிதா விஜயகுமார் உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்களில் 7 பேரைக் கைது செய்த போலீஸார் அவர்களைச் சிறையில் அடைத்தனர்.

வனிதா தலைமறைவானதாகக் கூறப்பட்ட நிலையில் திடீரென காவல் ஆணையர் அலுவலகத்துக்கு இன்று வந்தார். தனது தரப்புப் புகாரை அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த வனிதா கூறியதாவது:
“நான் அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கவில்லை, சொந்த வீட்டுக்கு யாராவது வாடகை தருவார்களா? அப்படி எதாவது அக்ரிமென்ட் எனக்கும் என் தந்தைக்கும் போடப்பட்டுள்ளதா? கேளுங்கள். நான் அந்த வீட்டில் வருடக்கணக்கில் இருக்கிறேன்.
திருமணம் ஆகிச் சென்றது வேற விஷயம். பிரச்சினையானால் தாய் வீட்டுக்குத்தானே வருவோம். எனது தாயார் மறைவுக்குப் பின்னர் அந்த வீட்டில்தான் இருக்கிறேன்.
17 வயதிலிருந்து நான் திரைப்படத்தில் நடிக்கிறேன். என்னை வைத்து நன்றாகச் சம்பாதித்தார்கள். அந்த வீட்டில் எனது தாயார் சம்பாதித்ததும் நான் சம்பாதித்ததும்தான் சஅதிகம் உள்ளது. எனது தாய்வீட்டில் நான் இருக்கிறேன். என்னை வெளியே போகச்சொல்ல இவர்கள் யார்?
இந்த வீட்டில் நான் இருப்பதற்கு இதுவரை என் தந்தை பிரச்சினை செய்ததில்லை. அவர் பிரச்சினை செய்யவும் ஒன்றுமில்லை. சமீபத்தில் அவர் ஒரு பட நிறுவனத்துக்கு பெரிதாக கான்ட்ராக்ட் விடுவதற்குய் பேசியுள்ளார். அதன் பின்னர் என்னை வெளியேறச் சொன்னார். நான் வீட்டில் மேலே உள்ள இடத்தில் தங்கிக்கொள்கிறேன் என்று தெரிவித்தேன்.
25000 சதுர அடி உள்ள வீட்டில் ஒரு 1000 சதுர அடியை நானும் என் மகளும் தங்கிக்கொள்வதில் என்ன பிரச்சினை? அது வீட்டுக்குப் பாதுகாப்பும்கூட. ஆனால் என்னை வெளியேறச்சொல்லி கட்டாயப்படுத்தினார். அதனால் நான் கடந்த திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஒரு பெட்டிஷன் போட்டேன். அதில் என்னை என் தந்தை தொந்தரவு செய்யாமலிருக்க உத்தரவிடக் கேட்டு மனு செய்தேன்.
அதற்கு என் தந்தைக்கு நோட்டீஸ் போனது. அதற்குப் பதில் சொல்ல வேண்டி வருமே என்பதற்காக இவ்வளவு வேலைகளைச் செய்கிறார். அதற்காகத்தான் மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆட்களை செட் செய்து எங்களை மிரட்டுகிறார். நான் ஆய்வாளரிடம் நீதிமன்ற பெட்டிஷன் காப்பியைக் காண்பித்தேன். ஆனால், அவர் என்னைக் கன்னத்தில் அடித்தார். பெண் போலீஸை வைத்து இழுத்துச் சாலையில் போட்டார்கள்.
வீடு வாடகை போன்ற பிரச்சினைகளில் போலீஸ் எப்படித் தலையிட முடியும். நான் படம் ஒன்று எடுத்து வருகிறேன். அதன் பெயர் 'டாடி'. அந்தப் படத்துக்கான ஷூட்டிங் நடக்கும்போதே போலீஸார் ஸ்டிங் ஆபரேஷன் போன்று உள்ளே வந்து என்னுடன் இருந்தவர்களைக் கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளார்கள்.
இதற்கு நியாயம் கேட்டுத்தான் இன்று காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தேன். நான் மீடியாவை எதிர்க்கவில்லை. மீடியா என்னைப் பல முறை காப்பாற்றி உள்ளது. என்னையே குறிவைத்து நெடுநேரம் வீடியோ எடுத்தார்கள். அதைத்தான் கேட்டேன். ஏனென்றால் என் அப்பா அனுப்பிய ஆளாக இருக்கலாம் என்று கேட்டேன்.
என்னை வீட்டை விட்டு துரத்தியதால் நான் நடுரோட்டில் நிற்கிறேன். எனக்கு 13 வயதில் பெண் இருக்கிறார். எல்லாவற்றையும் பிடுங்கிவிட்டு இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு கதவைப் பூட்டிவிட்டார்கள்.
அருண் விஜய்யும், ஹரியும்தான் எங்கள் ஹரி குடும்பத்தைப் பிரிக்கிறார்கள். எங்கள் குடும்பச் சொத்தை அருண் விஜய் பெயருக்கு மாற்றிவிட்டனர். தாய்ப்பத்திரத்தைக் கூடிய விரைவில் நான் தருகிறேன்.”
இவ்வாறு வனிதா பேசினார்.
மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீஸார், வீட்டைக் காலி செய்யுமாறு கூறி தன்னையும் தனது மகளையும் தாக்கியதாகக் கூறினார். வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதால் தற்போது நடுரோட்டில் நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது சகோதரர் அருண் விஜய் மற்றும் தனது சகோதரி ப்ரீதா விஜயகுமாரின் கணவரும், திரைப்பட இயக்குநருமான ஹரியின் தூண்டுதலின் பேரிலேயே தனக்கெதிராக தனது தந்தை நடந்து கொள்வதாக வனிதா குற்றம் சாட்டினார். தனது தாய் மஞ்சுளா பெயரில் இருந்த 8 சொத்துகள் 6 மாதங்களில் விஜயகுமாரின் பெயருக்கு மாற்றப்பட்டு, பின்னர் அருண் விஜய்யின் தாயார் பெயருக்கும் பிறகு அருண் விஜய்யின் பெயருக்கும் அடுத்தடுத்து மாற்றப்பட்டிருப்பதாக வனிதா தெரிவித்தார்.
ஏற்கெனவே வீடு தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டபோது குடும்ப நண்பரான ரஜினி தீர்த்து வைத்ததாகவும், தற்போது அவரைச் சந்திக்க முடியவில்லை என்றும் வனிதா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக