vikatan.com - gruprasad:
தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் கனிமொழி குறித்து
சமூகவலைதளங்களில் அவதூறு பேசியதற்காக பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா
மீது கோவை கருமத்தம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதேபோல, ஈரோட்டிலும் நேற்று ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து ஹெச்.ராஜா பேசிய கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், அவருக்கு கிலி ஏற்படுத்துவதற்காகவே, புகார் அளித்து 4 மாதங்களுக்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்களில் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக