புதன், 19 செப்டம்பர், 2018

சங்கர் மீது எகிறிப்பாய்ந்த ரஜினி. . என்ன சொன்னீங்க என்ன பண்ணி வச்சுருக்கீங்க ?

சென்னை: உச்ச நடிகர் பிரமாண்ட இயக்குனர் மீது கோபத்தில் இருப்பதாக
கூறப்படுகிறது. உச்ச நடிகரை வைத்து பிரமாண்ட இயக்குனர் எடுத்த படம் ஒரு வழியாக ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் வெளியான டீஸர் தமிழை விட இந்தியில் பட்டையை கிளப்பியது. அதற்கு முக்கிய காரணம் வில்லனாக நடித்திருக்கும் பாலிவுட் நடிகர்.
டீஸரில் பாலிவுட் நடிகர் வந்த வேகத்தில் போய்விட்டாலும் அனைவரும் அவரை பற்றித் தான் பேசினார்கள். உச்ச நடிகரின் இரண்டு கதாபாத்திரங்களுமே ஏற்கனவே தெரிந்தது தான் என்பதால் வில்லன் கதாபாத்திரம் மீது மக்களுக்கு அப்படி ஒரு ஆர்வம். அந்த கதாபாத்திரம் அப்படியாக இருக்குமோ, இப்படியாக இருக்குமோ என்று விவாதித்தனர்.
உச்ச நடிகரின் ரசிகர்கள் டீஸரை கொண்டாடியபோதிலும் இந்தி ரசிகர்கள் வில்லனுக்காக அதை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கினார்கள். அங்கேயே உச்ச நடிகரை வில்லன் நடிகர் ஓவர்டேக் செய்துவிட்டார்.
உச்ச நடிகரை விட வில்லன் நடிகரின் கதாபாத்திரம் குறித்து தெரிந்து கொள்ளவே அனைவரும் விரும்புகிறார்கள்.
டீஸரால் இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று உச்ச நடிகர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

படத்தின் எடிட்டர் வெர்ஷனை பார்த்த உச்ச நடிகர் கடுப்பாகிவிட்டாராம். நீங்கள் என்னிடம் என்ன கதை சொன்னீங்க, படத்தில் என்ன காட்டியிருக்கிறீர்கள். படத்தை பார்த்தால் நான் தான் வில்லன் போன்று இருக்கிறேன்.
நான் ஹீரோவா, வில்லனா என்று உச்ச நடிகர் பிரமாண்ட இயக்குனர் மீது கோபப்பட்டாராம். டீஸரில் கிராபிக்ஸில் ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டியுள்ளனர். ஆனால் கார்டூன் படம் பார்த்தது போன்று இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்தனர்.
இது உச்ச நடிகர் படம் என்பதை தாண்டி பிரமாண்ட இயக்குனரின் படம் என்று பேசப்படுகிறது. இதனால் உச்ச நடிகரின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது  பிலிம்பீட்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக