வியாழன், 20 செப்டம்பர், 2018

நடிகை நிலானியின் காதலன் லலிதகுமார் உதயநிதியின் ரசிகர் மன்ற பிரமுகராம் ...

டிஜிட்டல் திண்ணை:    திமுகவை உலுக்கும்  நடிகை தற்கொலை முயற்சி!மின்னம்பலம் :“கடந்த சில தினங்களுக்கு முன்பு காந்தி லலித் குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டதும், அந்த தற்கொலையின் பின்னணியில் நடிகை நிலானி பெயர் அடிபட்டதும் தெரிந்த விஷயம்தான். இன்று நிலானியும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
காந்தி - நிலானி விவாகரத்தில் லேட்டஸ்ட் ஆடியோ ஒன்று மின்னம்பலத்துக்குக் கிடைத்துள்ளது. அந்த ஆடியோ காந்தி தற்கொலைக்கு சில தினங்களுக்கு முன்பாக இருவரும் பேசியது. இடையில் கான்ஃபரன்ஸ் காலில் போலீஸாரும் பஞ்சாயத்து செய்வது அந்த ஆடியோவில் பதிவாகியிருக்கிறது.
ஆடியோவில் உள்ளதை அப்படியே இங்கே தருகிறேன். மற்றவற்றை அடுத்து சொல்கிறேன்.
நிலானி: இதுக்கு மேல எனக்கு கால் பண்ணாதே. எதுவா இருந்தாலும் அவங்ககிட்ட பேசிக்கோ. நானும் அங்கே பேசிக்கிறேன்.
காந்தி: நீதானே வீராப்பா சொன்ன... கான்ஃப்ரன்ஸ் கால் போடு. இப்போதானே பண்ணின..

நிலானி: அதான் 10 நிமிஷத்துல கொல்றேன்னு சொன்ன இல்ல. கொன்னுக்கோ. போலீஸ் வரலை இல்ல... போனை வை.
காந்தி: உனக்குதான் எல்லா இடத்துலயும் ஆள் இருக்காங்க இல்ல. அதான் வடபழனி ஸ்டேஷன்ல சந்துரு சார் இருக்காரு...
நிலானி: சந்துரு சார் என்ன என் சொந்தக்காரரா?
(அதற்குள் கான்ஃப்ரன்ஸ் காலில் வடபழனி காவல் நிலைய எஸ்.ஐ. ரவிகுமார் வருகிறார்.)
எஸ்.ஐ.: நான் அவன்கிட்ட பேசிட்டம்மா..
நிலானி: அவரும் லைன்லதான் இருக்காங்க.. இப்பவே ஸ்டேஷனுக்கு கூப்பிடுறாங்க.
எஸ்.ஐ.: அவன் என்கிட்ட ஒதை வாங்கப் போறான். இரும்மா நான் பேசுறேன்.
காந்தி: ஹல்லோ... ஹல்லோ...
எஸ்.ஐ.: உங்களுக்குதான் எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டு இப்போ எதுக்கு போய் அந்த பொம்பளையை மிரட்டுறீங்க?
காந்தி: இந்த சவுண்ட் எல்லாம் என்கிட்ட வேண்டாம். என்ன சொன்ன நீ? வாடா போடான்னு சொல்றியா?
எஸ்.ஐ.: எதுக்கு அந்த பொம்பளையை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கீங்க... தோ பாரும்மா நீ வந்து கம்ப்ளைண்ட் கொடும்மா...
காந்தி: நீங்க பேசி முடிங்க நான் பேசுறேன்.
(எஸ்.ஐ. இணைப்பு துண்டிக்கப்படுகிறது.)
காந்தி: என்னம்மா அவரு கட் பண்ணிட்டாரா... உன்னால எவ்வளவு ஸ்டிராங்கா கொடுக்க முடியுமோ கொடுத்துக்கோ. என்ன பண்றியோ பண்ணு...
என்பதுடன் அந்த ஆடியோ முடிகிறது.
மேட்டருக்கு வருவோம். இந்த காந்தி லலித்குமாருக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை. உதயநிதி ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். உதயநிதி பெயரை பயன்படுத்திதான் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக பல பெண்களை ஏமாற்றியிருக்கிறார் காந்தி என்பது நிலானியின் புகார் .
அதேபோல திமுக கூட்டங்களில் பேசுவதற்கு வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் சொல்லி நிலானியிடம் டீல் பேசியிருக்கிறார் காந்தி லலித்குமார். இந்த விவகாரத்தில் காந்திக்கு ஆதரவாக யாரும் இதுவரை புகார் கொடுக்கவில்லை. அதனால் நிலானி மீது காவல் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கெனவே 5 முறை காந்தி மீது நிலானி புகார் கொடுத்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் இரு தரப்பையும் அழைத்து சமாதானம் பேசித்தான் அனுப்பியிருக்கிறது காவல் துறை.
காந்தியும் நிலானியும் பேசிக்கொண்ட செல்போன் பேச்சுக்கள் முழுவதும் இப்போது காவல் துறை கையில் இருக்கிறது. அதில் பல இடங்களில், திமுகவின் பெயரையும் உதயநிதி பெயரையும் பயன்படுத்தி இருக்கிறாராம் காந்தி. இதை வைத்து, உதயநிதியை விசாரணைக்கு அழைக்கலாமா என காவல் துறையில் ஆலோசனை நடந்திருக்கிறது. திமுக பெயரை சொல்லியும், உதயநிதி பெயரைச் சொல்லியும்தான் ஏமாற்றினார் காந்தி என புகார் கொடுக்கச் சொல்லி நிலானியிடம் சிலர் பேசியிருக்கிறார்கள். ஆனால், அவரோ அதற்கு மறுத்துவிட்டாராம். ‘என்கிட்ட இருக்கிற எல்லா ஆடியோ ஆதாரங்களையும் நான் கொடுத்துடுறேன். ஆனால் நான் யாரு மீதும் புகார் கொடுக்க தயாராக இல்லை..’ என்று சொல்ல... ‘நீங்க ஆடியோ தரவே வேண்டாம். எல்லா ஆடியோவும் எங்க கையில் இருக்கு...’என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது.
இந்த விவகாரம் முதல்வர் கவனத்துக்குப் போனதும், ‘புகார் இல்லாமல் யாரையும் விசாரணைக்கு கூப்பிட வேண்டாம். ஏற்கெனவே ஸ்டாலின் நம்ம மேல கடுமையான கோபத்துல இருக்காரு. இது, அவரோட பையனை விசாரணைக்கு கூப்பிட்டா அது இன்னும் சிக்கலை உண்டாக்கிடும். புகாராக வந்தால் பார்த்துக்கலாம். அதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் வேண்டாம்..’ என ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லிவிட்டாராம் ”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக