சனி, 10 ஆகஸ்ட், 2013

விஜய் ரசிகர் தற்கொலை! தனது விளம்பரத்திற்காக ஆட்டு மந்தைகளை போஷிக்கும் சினிமாகாரன்

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர்
ஒருவர் தலைவா படம் பார்க்க முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட விக்ரம் என்கிற விஷ்ணு குமார் கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு வயது 20.இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகாராம்! எந்த ஒரு விஜய்யின் படத்தையும் முதல் நாளே பார்த்து விடுவதுதான் இவரது வழக்கம் என்று கூறுகின்றனர்.கோவை சென்ட்ரல் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தார் விஷ்ணு குமார் ஆனால் படம் ரிலீஸ் ஆகவில்லை. அங்கிருந்து பாலக்காட்டிற்கு தலைவா படம் பார்க்கச் சென்றுள்ளார்.ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் இவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.மீண்டும் கோவை வந்து தியேட்டருக்குச் சென்று தலைவா ரிலீஸ் ஆகியுள்ளதா என்று பார்த்த்துள்ளார்  இந்த முட்டாள் தனத்தை வளர்க்கும் கதாநாயகர்கள் எல்லாருமே பக்கா கிரிமினல்கள்

சேரன் மகள் காதல் : காவல்துறைக்கு கவுன்சிலிங் தேவைதான் காதலர்களுக்கு தேவை இல்ல

16 வயதுகூட நிரம்பாத சிறுமியை கதாநாயகியாக ஆடை குறைத்து, கிழவர்களுக்கு ஜோடியாகவும் அதைவிட மோசமாக கவர்ச்சி உடையில் பாலியல் பொருளாகவும் காட்டுகிறவர்கள் சொல்கிறார்கள்:
“அந்தப் பொண்ணுக்கு 20 வயது. அதுக்கு என்ன விவரம் தெரியும்? பெத்தவனுக்கு இல்லாத அக்கறையா?” தன்னுடைய தந்தை மேல் காவல்துறையில் புகார் கொடுக்கக் கூடிய அளவிற்கு ஒரு பெண்ணிற்கு தைரியம் இருக்கும்போது, தன் தந்தையை மீறி தன் காதலனை கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன்? கல்யாணம் ஆகி இருந்தால் இந்தப் பிரச்சினை இவ்வளவு தூரம் வந்திருக்காது.
தன் தந்தையை கிரிமினலாக குற்றம்சாட்டி புகார் கொடுப்பதை விட, தன் மனதுக்கு பிடித்தவனை தந்தைக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வது தவறில்லை. அதுவே தந்தைக்கு காட்டும் மரியாதையும்கூட.
ஏன் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை? அதைத் தடுத்தது, தடுப்பது யார்? இந்த முடிச்சை அவிழ்த்தால், இதன் குற்றவாளிகள் யார் என்று தெரியும்?

கிரானைட் முறைகேடு :பி.ஆர்.பி நிறுவனம் மீது ரூ1,061 கோடி இழப்பு வழக்கு!

மதுரை: பி.ஆர்.பி. நிறுவனம் முறைகேடாக கிரனைட் கற்களைவெட்டி எடுத்ததில், அரசுக்கு ஆயிரத்து 61 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் மீது மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ள கிரானைட் முறைகேடு வழக்குகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கீழையூர், கீழவளவு மற்றும் பூரண்குளம் பகுதிகளில், பி.ஆர்.பி. நிறுவனம், முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்த காரணத்தால், அரசுக்கு சுமார் ஆயிரத்து 61 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்த குற்றச்சாட்டின் பேரில், பி.ஆர்.பி. நிறுவனம் மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நில ஊழல் : சோனியா மருமகனுக்கு சிக்கல் ! 200 கோடி மதிப்புள்ள இந்த நிலம் வெறும் 7. 5 கோடி

குர்கான்: அரியானா மாநிலத்தில் அரசு நிலத்தை தனது பெயரில் மாற்ற
சோனியா மருமகன் ராபர்ட் வதோரா போலியான ஆவணங்கள் மற்றும சட்ட மீறல்களை செய்ததாக ஐ.ஏ.எஸ்.அதிகாரி அசோக் கேம்கா தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அரியானா மாநிலத்தில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வர் பூபிந்தர்சிங்ஹூடா முதல்வராக இருந்து வருகிறார். குர்கான் அருகே ஷிக்கோபூர் கிராமத்தில் 3. 5 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானதாக இருந்தது. இந்த நிலம் முதன்முதலில் டி.எல்.எப்., என்ற நிறுவனத்திற்கு குறைந்த விலையில் விற்கப்பட்டது. அதாவது சுமார் 200 கோடி மதிப்புள்ள இந்த நிலம் வெறும் 7. 5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கடந்த ஆண்டு அன்னா ஹசாரேயின் நெருங்கிய நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். நிழல் உலக தாதா தாவுத்....நிஜ உலக தாதா ராபர்ட் வதோரா ..

பி.வி.சிந்து வெண்கலம் வென்றார்! உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில்


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்து வெண்கலம் இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், உலகின் 3ம் தரநிலை வீராங்கனை ரட்சனோக் இன்டானனை (தாய்லாந்து) சிந்து எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ரட்சனோக் முன்னிலையில் இருந்தார். அவருக்கு ஈடுகொடுத்து சிந்து போராடினார். ஆனால் அடுத்தடுத்து 5 புள்ளிகளை எடுத்து அசத்திய ரட்சனோக், முதல் செட்டை எளிதாக வென்றார். அதே வேகத்தில் 2-வது செட்டையும் கைப்பற்றினார். 35 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இப்போட்டியில், 10-21, 13-21 என்ற செட்கணக்கில் சிந்து தோல்வியடைந்தார். இதனால் அவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ராமதாஸ் :ஆந்திராவில் திருப்பதி, காளஹஸ்தி தமிழர் இழந்த பகுதிகளை மீட்கவேண்டும் ! 32 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை நாம் ஆந்திராவிடம் இழந்தோம்.

ஆந்திராவில் தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராம தாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.;இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ’’ஆந்திரத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக் கை எழுந்துள்ளது. ஆந்திரத்தில் உரிமை இழந்து வாடும் நமது தமிழ் சொந்தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.1956-ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழ்நாடு தான். தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டு அருகில் உள்ள ஆந்திரா, கர்னாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. இதனால், தமிழகம் மொத்தம் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிகளை இழந்தது. இதில் பாதி, அதாவது 32 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை நாம் ஆந்திராவிடம் இழந்தோம்.  தமிழ்நாட்டில் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கிய 9 வட்டங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தெலுங்கு பேசும் மக்களுக்காக மட்டுமே ஆந்திரா உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழை தாய் மொழியாகக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் 300-க்கும் அதிகமான கிராமங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது தமிழர்களுக்கு செய்யப்பட்ட துரோகம் ஆகும். இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள தமிழர்களும், இப்பகுதிகளைச் சேர்ந்த மக்களும் போராடியதன் பயனாக 1961-ஆம் ஆண்டில் திருத்தணி வட்டமும், பள்ளிப்பட்டு பகுதியும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன.

தலைவாவுக்கு ஜெயாவின் மிரட்டல் ! கலைஞர் கண்டனம் !

சென்னை: தலைவா திரைப்படம் வெளியிடுவதில் தொடரும் தடங்கலுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அரசியல் வாதிகள் மேடைகளில் முதலமைச்சரைப் பற்றி வாயைத் திறந்தாலே போதும், உடனடியாக அவர்கள் மீது அவதூறு வழக்கு போடப்படுகிறது. பத்திரிகைகள் அந்தப் பேச்சினை வெளியிட்டால் அவர்கள் மீதும் அவதுhறு வழக்கு. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்கே பொதுக் கூட்டமோ, நிகழ்ச்சிகளோ நடத்த முடியவில்லை. ஒரு சில அரசியல் தலைவர்கள் ஒரு சில மாவட்டங்களில் உள்ளேயே நுழையக் கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. நெருக்கடி நிலை காலத்திலே கூட இப்படிப்பட்ட நிலைமைகள் இல்லை. அந்த வரிசையிலே தான் "தலைவா" திரைப்படம் பல கோடி ரூபாய்ச் செலவிலே தயாரிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்தப் படத்தில் தம்பி விஜய் நடித்து, அது வெளிவருவதை அவருடைய ரசிக நண்பர்கள் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து நிற்கிறார்கள். இந்த நிலையில் அந்தப் படத்திலே ஏதோ ஒரு வாக்கியம் அரசைத் தாக்குவதைப் போல இருப்பதாகக் கூறி, அந்தப் படம் வெளிவரும் திரையரங்குகளுக்கெல்லாம் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா கொடைநாட்டில் இருக்கும் வரை தலைவா வராது ! ஜெயலலிதா ஏன் பயப்படுகிறார் ? புரியல்லையே ?

சென்னை: வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குப் பிறகு முதல்வரைச் சந்திக்க விஜய்க்கு நேரம் ஒதுக்குவார் முதல்வர் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு சுதந்திர தினத்தில் தலைவா படம் வெளியாகக் கூடும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வெளியாக இருந்த தலைவா ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டிக்கெட் புக் செய்தவர்களுக்கான கட்டணங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆக 12-ம் தேதிக்குப் பிறகு விஜய் & கோவுக்கு முதல்வர் அப்பாயின்ட்மென்ட்..15ல் ரிலீஸ்? தலைவா இன்று தமிழ்நாட்டில் வெளியாகாத நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர்களோ கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குச் சென்று படம் பார்க்கின்றனர். 'தலைவா' படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்திருந்ததால் வரிவிலக்கு குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது.

தலைமைச் செயலரிடம் ஜேம்ஸ் வசந்தன் புகார் செய்ய முடிவு

சென்னை: நில விற்பனை விவகாரத்தில் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் இதுகுறித்து தலைமை செயலாளரிடம் புகார் செய்யப் போவதாகவும் இசையமைப்பார் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார். சுப்பிரமணியபுரம், ஈசன் உள்பட சில திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் மீது ராதா வேணு பிரசாத் (வயது 65) என்பவர் நீலாங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜேம்ஸ் வசந்தன் கடந்த 4-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த ஜேம்ஸ்வசந்தன், தன் மனைவி ஹேமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுடன் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

பாக் பாடகி : இந்திய ராணுவத்தினரின் மரணத்தால் இதயம் நொறுங்கிவிட்டது

டெல்லி பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லையில் நடத்திய தாக்குதலில் 5
இந்திய வீரர்கள் பலியானது பெரும் வருத்தம் தருகிறது. இந்த செயலுக்காக நான் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலமான சுஃபி பாடகி சனம் மார்வி. டெல்லியில் இசைக்கச்சேரியில் பங்கேற்க வந்திருந்தார் சனம். ஆனால் பாகிஸ்தான் வீரர்களின் திடீர் தாக்குதலால் ஏற்பட்ட சூழலால் அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பாகிஸ்தான் திரும்பினார். இந்தநிலையில், தனது நாட்டு ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு சனம் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது.. இந்த தாக்குதலில் தங்களது பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் வேதனையில் நானும் பங்கேற்கிறேன். ஒரு தாயாக அவர்களது வலியில் நானும் பங்கேற்கிறேன். என்னுடைய இதயம் வலிக்கிறது. இப்படிப்பட்ட சோகமான சூழலில் என்னால் பாட முடியாத நிலை

தூர்வாராததால் 4 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில்! தண்ணீர் வந்தும் கண்ணீரில் விவசாயிகள்


சென்னை, ஆறு, ஏரி, கால்வாய்கள் தூர்வாராத காரணத் தால் தண்ணீர் திறந்து விடப்பட்டும் உபரி நீர் கடலில் கலந்து வீணா கிறது.
மழை வெள்ள காலங்களில் காவிரியை, உபரி நீர் கால்வாயாக பயன்படுத்தும், கர்நாடக மாநிலத்தை போல, கொள்ளிடம் ஆற்றை, தமிழகம் பயன்படுத்து வது தொடர்கிறது. நேற்று ஒரே நாளில், கிட்டத்தட்ட நான்கு டி.எம்.சி., தண்ணீர், கொள்ளிடம் வழியாக, கடலில் கலந்து வீணாகி யுள்ளது. முறையான திட் டமிடல் இல்லாததே, இதற்கு முக்கிய காரணம் என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்திய மாணவி georgianna வின் சடலம் இன்று சென்னை வருகிறது ! லண்டன் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட

சென்னை: லண்டன் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக
கூறப்பட்ட இந்திய மாணவியின் சடலம் மறு பிரேத பரிசோதனை முடிந்து இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது.முகப்பேர் மேற்கு பாடி குப்பம் பகுதியில் வசிப்பவர் நாஞ்சில் சாம்சன் (49). ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மகள் ஜார்ஜியானா (18). லண்டன் லிவர்புல் யுனிவர்சிட்டியில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் முதலாண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 12ம் தேதி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக சாம்சனுக்கு தகவல் வந்தது.இதையடுத்து 14ம் தேதி அவர் லண்டன் சென்றார். அதற்குள் சடலத்தை பல்கலைக்கழக நிர்வாகம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டது. தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந் தார். இதையடுத்து நீதிமன்றம் ஜார்ஜியானா சடலத்தை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. கடந்த 4ம் தேதி பிரேத பரிசோதனை நடந்தது. ஜார்ஜியானா சடலம் நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று மாலை லண்டனில் இருந்து புறப்பட்ட அவர்கள், இன்று காலை 8 மணியளவில் சென்னை வருகிறார்கள்.

போலீஸ் முன்பாகவே தமிழ் நாய் என இழிவுப்படுத்திய மலையாளி அதிகார வர்க்கம் : ஜேம்ஸ் வசந்தன் ஆவேசம் !

சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் ராதாதேவிபிரசாத். இவர், நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், “எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார். இதுபற்றி நீலாங்கரை போலீசார் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் சென்னையில் வெள்ளிக்கிழமை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பொய் வழக்கு போட்டு காவல்துறை கைது செய்தது குறித்து தமிழக முதல்வர் முழு விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தனக்கு உரிய நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் ஜேம்ஸ் வசந்தன் கோரிக்கை வைத்தார்.
65 வயது மூதாட்டிக்கு தான் எவ்வாறு பாலியல் தொந்தரவு கொடுக்க முடியும் என்றும், தன் மீது நிலப் பிரச்சனை காரணமாக வேண்டும் என்றே பொய் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர் என்றும், இதற்கு பின்னணியில் பெரிய மலையாளி அதிகார ஊடுருவல் இருப்பதாகவும் தெரிவித்த அவர், காவல்துறை முன்னிலையில் தன்னை தமிழ் நாய் என்று ராதாதேவிபிரசாத் இழிவு படுத்தியதாகவும், இது குறித்து புகார் அளித்தும் காவல்துறை அப்புகாரை ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
ஜேம்ஸ் வசந்தனுடன், அவரது மனைவியும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். காவல் துறையால் தாங்கள் எப்படி நடத்தப்பட்டோம் என்று அவர் கூறினார்.
இசை அமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார், சின்னத்திரை கலைஞர்கள் உமா பத்மநாபன், விஜய் ஆதிராஜ் ஆகியோர் ஜேம்ஸ் வசந்தனுக்கு ஆதராவாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி கொடுத்தனர்.
நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், மே 17 இயக்கம், தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி, தமிழர் பண்பாட்டு நடுவம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சி இயக்கங்களின் சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், ஜேம்ஸ் வசந்தனை 'தமிழ் நாய்' என்று இழிவு படுத்திய பெண்மணிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இழிவு படுத்தி பேசியதற்கு அப்பெண் உடனடியாக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில்

தலைவா 22ம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது? படமோ மொக்கை இன்னும் எதுக்கு இந்த பில்டு அப்.

சென்னை:நடிகர் விஜய் நடித்த, "தலைவா' படம், தமிழகத்தை தவிர, தென் மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் வரும், 22ம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது. "படம் வெளியிட ஏற்பட்ட தாமதத்திற்கு, தமிழக போலீசிற்கு பங்கில்லை' என்று, டி.ஜி.பி., ராமானுஜம் தெரிவித்துள்ளார்.விஜய் - அமலாபால் நடித்த, "தலைவா' படம், நேற்று (9ம் தேதி) தமிழகம் உட்பட, உலகம் முழுவதும், 2,000 தியேட்டர்களில் வெளியாக இருந்தது. படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு தாமதமானதாலும், அரசியல் கலந்த வசனங்கள் இருப்பதாக தகவல் வெளியானதாலும், இப்படத்தை திரையிடும், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாலும், "தலைவா' படம், நேற்று தமிழகத்தில் வெளியிடப்படவில்லை.ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை மற்றும் வெளிநாடுகளில், நேற்று படம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில், நேற்று காலை தியேட்டர்களுக்கு வந்த விஜய் ரசிகர்கள், ஏமாற்றமடைந்தனர்.கருணாநிதி ஆட்சியில் இவர் திரைப்படம் வெளியிட கருணாநிதி குடும்பத்தார் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று இவரும் இவர் தந்தையும் பெரிய சீன் போட்டு தேர்தலில் அம்மாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்கள்.

பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற்றம்

The U.S. Consulate in the Pakistani city of Lahore was shut Friday following “specific threats,” 
சர்வதேச நாடுகளில் இயங்கும் அமெரிக்க தூதரங்கள் மீது தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தனர். அதுபற்றி தகவலறிந்த அமெரிக்க உளவுத்துறை முஸ்லிம் நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை தற்காலிகமாக மூடியது. இந்த நிலையில் பாகிஸ்தானில் லாகூரில் இயங்கும் அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களை வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இங்கு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் அதிரடி திட்டம் தீட்டியிருந்தனர். எனவே தங்களது ஊழியர்களின் உயிரை காப்பாற்றவே இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தவிர பாகிஸ்தானுக்கு யாரும் சுற்றுலா செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டி.ஆர்.எஸ்., கட்சி உடைகிறது! நடிகை விஜயசாந்தி காங்கிரசில் சேருகிறார் ?

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கினால், தன் கட்சியை காங்கிரசுடன்
இணைப்பதாக, வாக்குறுதி அளித்த, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியான, டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவ், அந்த வாக்குறுதியை மீறுவதோடு, பல நிபந்தனைகளையும் விதிப்பதால், பிரபல நடிகை விஜயசாந்தி மூலம், அந்தக் கட்சியை உடைக்க, காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.ஆந்திர மாநிலத்தை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க, காங்கிரஸ் செயற்குழுவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் ஒப்புதல் அளித்து விட்டன. தெலுங்கானா அமைவது, கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதால், டி.ஆர்.எஸ்., கட்சியை, காங்கிரசுடன் இணைக்க வேண்டும் என, காங்., மேலிட தலைவர்கள் வலிறுத்தி வருகின்றனர்."தெலுங்கானா தனி மாநில கோரிக்கை ஏற்கப்பட்டால், என் கட்சியை, காங்கிரசுடன் இணைத்து விட தயார்' என, ஏற்கனவே சந்திசேகர ராவ் வாக்குறுதி அளித்திருந்ததே, இதற்கு காரணம். ஆனால், சமீப நாட்களாக, சந்திரசேகர் ராவ் அளித்து வரும் பேட்டிகளில், "தெலுங்கானா தனி மாநிலம் குறித்த மசோதாவை, பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றிய பிறகே, கட்சியை காங்கிரசுடன் இணைப்பது குறித்து யோசிக்க முடியும்' என, தெரிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி, "ஐதராபாத்தை எந்தக் காரணத்திற்காகவும், ஆந்திராவுக்கான தலைநகராக மட்டும் இருக்க, அனுமதிக்க முடியாது. அந்த நகரம், ஈட்டக்கூடிய வருவாயில், ஒரு பைசாவை கூட, ஆந்திராவுக்கு தர முடியாது' என்றும், சொல்லி வருகிறார். சந்திரசேகர ராவின் இந்தப் பேச்சு, காங்கிரசுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

தனுஷ் கஸ்துரி ராஜாவின் மகனே இல்லையாமே ? உண்மை பெற்றோர் விவகாரமொன்று?

“ரஞ்ஜனா’ இந்திப் படம் மூலம் டெல்லிச் சீமை வரை கொடிநாட்டிய நடிகர் தனுஷுக்கு சிவ கங்கை சீமையிலிருந்து புது சிக்கல் உருவாகியுள்ளது.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன்  “துள்ளு வதோ இளமை’ பட  நாயகனாக அறிமுகமானார் தனுஷ். அறிமுகமான  ஆண்டு 2002. அதே  ஆண் டில், தொலைந்த தன் மகன்  கலைச்செல்வன்தான் இன் றைய நடிகர்  தனுஷ் என புதிய விவகாரத்திற்கு  கோடிட்டுள்ளார்  சிவகங்கை பேருந்து  நிலையத்தில் டைம் கீப்பராக பணியாற்றும் கதிரேசன்.
‘என் சொந்த ஊரு திருப்பாசேத்திப் பக்கத்திலுள்ள கல்லூரணி. என் மனைவி பேரு மீனாள். எங்களுக்கு இரண்டு குழந்தைகள்.  மூத்தவன் கலைச்செல்வன். இரண்டாவது தன பாக்கியம். நான் கண் டக்டரா வேலை பார்த்துக்கிட்டிருந்தப்ப எங்க  வீடு மேலூர் பக்கத்தில எம். மலம் பட்டி ஆர்-டி.ஓ. ஆபீஸ் பக்கம்  இருந்துச்சு. 10-ம் வகுப்பில் 365 மார்க் எடுத்தான் கலை.
திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் சீதையம்மாள் பள்ளியில் +1 சேர்த்துவிட் டோம். ஹாஸ்டலுடன்   சேர்ந்தது அந்த ஸ்கூல். ஹாஸ்டல்   வார்டன் சீதாபதி எங்க   ஊருக்காரரு என்பதால் அவர் பொறுப்பில் இவனை விட்டோம். கொஞ்ச நாளிலேயே இவன் வைச்சிருந்த டிரங்க் பெட்டியில்ஸ “அம்மா, என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு இந்த படிப்பு பிடிக்கலை. நான் ஊரைவிட்டே போறேன். எனக்கு எப்பத் தோணுதோ, அப்ப உங்களைத் தேடி வருவேன்” அப்படின்னு எழுதி வைச்சுட்டு வெளியேறிட்டான்’. அவன் போனது 2002-ம் வருஷம்.

ஜேம்ஸ் வசந்தன் தவறான அதிகாரிகளுக்கு பாடம் கற்பிக்க திட்டம்?

தவறான வழியில் செல்லும் அதிகாரிகளுக்கு பாடம் கற்பிக்க பல அமைப்புகள் (மலையாளிகள் )அமர்ந்து கொண்டு, நம் மேலேயே பொய் வழக்கும் பதிந்து, நம்மை அடிமைகளாய் நடத்தி, சமூக ஒற்றுமையை குலைக்க முயற்சிக்கும் சின்ன புத்திக்காரர்களுக்கு எதிராகத்தான் இந்த கண்டனம். உயர் பதவிகள் ஒன்றும் அவர்கள் வீட்டு சொத்து அல்ல, வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்குவதற்கு. தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள், விழிப்புணர்வு அமைப்புகளின் தலைவர்களும், செயலாளர்களும் நாளை (9th August) சென்னை Press Club அரங்கத்தில் எங்களோடு இணைந்தால் நமது குரல் பலத்து ஒலிக்கும். ஒன்று சேருவோம், உரிமையைப் பெறுவோம்! எனக் கூறியுள்ளார்.

வருங்கால முதலைமச்சர் ஆசையால் தலைவா தொலைஞ்ச கதை ! விஜயின் அடுத்த படத்துக்கு நல்ல கதை! ஜெயா வழங்கியுள்ளார் ?

விஜய் நடித்து, இன்று தமிழகம் எங்கும் ரிலீஸ் ஆயிருக்க வேண்டிய தலைவா,
‘அரசியல்’ சிக்கல்களில் சிக்கியதில் தமிழகத்தில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. பிற மாநிலங்களில் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. சில வெளிநாடுகளில் நேற்றே திரையிடப்பட்டது. படம் எப்படி? இடைவேளை வரை அனைவராலும் ரசிக்கப்படும். இடைவேளைக்குப் பிறகு, தீவிர விஜய் ரசிகர்களுக்கு பிடித்தாலும் பிடிக்கலாம். முதல் பாதி ஆஸ்திரேலியா கதை. இரண்டாம் பாதி மும்பை கதை. மும்பையில் அனைவருமே தமிழ் பேசுகிறார்கள். பேசாமல் மும்பையை தமிழகத்துடன் இணைக்க மனு செய்து, ஆதாரமாக தலைவா டி.வி.டி. ஒன்றையும் கொடுக்கலாம்.
டைரக்டர் விஜய், ‘காப்பி மன்னன்’ என்பது பிரசித்தம். இதில் சக்கரவர்த்தி ஆகியிருக்கிறார். இரண்டாம் பாதியில் தேவர் மகன் உட்பட நாலைந்து படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு கொடுத்திருக்கிறார். அட, அதை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக கொடுத்திருந்தாலாவது, பழைய படம் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்.

ஹன்சிகா 23வது குழந்தையை சட்டப்படி தத்தெடுக்கிறார் ! ஆனா சிம்புவை தத்தெடுக்காதீங்க .

ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ஆதரவற்ற
குழந்தையொன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதுவரை 22 குழந்தைகளை தத்தெடுத்திருக்கும் அவர் பிறந்த நாளான நாளை 23வது குழந்தையை தத்தெடுக்கிறார். அத்துடன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கும் உதவி செய்திருக்கிறார். இது பற்றி ஹன்சிகாவின் தாயார் மோனா மோத்வானி கூறும்போது, ‘இந்த பிறந்த நாளில் ஹன்சிகா ஆதரவற்ற ஒரு குழந்தையை தத்தெடுக்கிறார். ஏற்கனவே அவர் 22 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் தேவைகளை முழுமையாக கவனித்து வருகிறார். இதுதவிர கேன்சரால் பாதிக்கப்பட்ட 10 பெண்களுக்கான மருத்துவ செலவையும் அவர் ஏற்கிறார். சமுதாயத்துக்காக அவர் தன்னால் முடிந்த சிறு சேவையை செய்வதை அறிந்து நாங்கள் சந்தோஷப்படுகிறோம். ஹன்சிகா தெலுங்கு பட ஷூட்டிங்கில் இருக்கிறார். இன்று மாலை அவர் மும்பை சென்று குழந்தையை தத்தெடுப்பதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்கிறார் என்றார்.

பார்ப்பனர்களின் எச்சில் இலைகளை எடுப்பதா ? பெண் ஊழியர்கள் போர்க்கொடி ! அன்னபூர்ணேஸ்வரி கோயில் அநியாயம்

கண்ணூர், ஆக.7- கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை எடுக்கவேண்டும் என்ற பழைய பழக்கவழக்கத்தை இன்றும் வலி யுறுத்தும் இழிவை எதிர்த்து கோயில் பெண் ஊழி யர்கள் இருவர் போர்க்கொடி உயர்த்தி யுள்ளனர்.
தீண்டாமையும், பார்ப்பனர் ஆதிக்கமும் இன் னமும் சில குறிப்பிட்ட கோயில்களில் கடைப் பிடிக்கப்படுவது பற்றிய கடுமையான கருத்து வேறு பாடுகளும், விவாதமும் புதிய உச்சத்தை அடைந் துள்ளன. செருகுண்ணு அன்னபூர்ணேஸ்வரி கோயி லில் பணியாற்றும் இரண்டு பெண் ஊழியர்கள் சடங்குகளின்போது பார்ப்பனர்கள் விருந்து  உண்ட எச்சில் இலைகளை எடுக்க மறுத்து போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
பார்ப்பனர்கள் உணவு உண்டபின்னர், அவர் களது எச்சில் இலைகளை இதுவரை கோயில் பார்ப்பனரல்லாத பெண் ஊழியர்களே எடுப்பது நீண்ட நாட்களாக நிலவி வரும் வழக்கமாகும்.

கண்மாய் நடுவில் பிராடு பிளாட்கள் விற்பனை? பலர் வீடும் கட்டி விட்டனர் !

மேலூர்: மேலூர் அருகே பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள கண்மாய், குறைந்த விலைக்கு "பிளாட்' போட்டு விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலூர் தும்பைப்பட்டி ஊராட்சியில் உள்ளது தாமரைப்பட்டி. இங்கு சர்வே எண் 469/2ல், 16 ஏக்கர் பரப்பளவில் ஒடுங்காபுலி கண்மாய் உள்ளது. பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள இக்கண்மாயை நம்பி, பல ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இக்கண்மாயை ஆக்கிரமித்து சில வீடுகள் கட்டப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள இடங்களையும் "பிளாட்' போட்டு விற்கும் பணி பணி நடக்கிறது.ரங்கசாமி: கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து கடந்த மாதமே பொதுப்பணித்துறை மற்றும் தாசில்தாருக்கு மனு கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. தற்போது, "பிளாட்' போட்டு குறைந்த விலைக்கு விற்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதனால் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதை அடைபட்டுள்ளது, என்றார்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

தலைவா டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்!

சென்னை: விஜய்யின் தலைவா திரைப்படம் சில நிபந்தனைகளுடன் வரி இதற்கிடையே, தலைவா திரைப்படத்தை ஃபோர் ஃபிரேம்ஸ் தியேட்டரில் வரிவிலக்கு கமிட்டியும், அரசு அதிகாரிகளும் இன்று பார்த்தனர். படம் பார்த்து முடித்த பிறகு நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சில நிபந்தனைகளுடன் தலைவா திரைப்படத்தை வெளியிட மேலிடத்திலிருந்து அனுமதி வழங்கப்பட்டதாகக் கூற்பட்டது. படத்தின் நீளமும் 2.40 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் கசிந்தன. ரிலீஸ் இல்லை இந்த நிலையில் தலைவா படம் நாளை வெளியாகாது என திரையரங்குகள் அறிவித்துவிட்டன. தலைவா ரிலீஸை ஒட்டி தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்ட பேனர்கள், கட் அவுட்டுகள் அகற்றப்பட்டு வருகின்றன. பணம் வாபஸ் இந்தப் படத்துக்கு சில தினங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன (நேற்றுதான் அவை நிறுத்தப்பட்டன).

கலைஞர் டிவியில் குஷ்புவின் தஞ்சாவூர் டெசோ நிகழ்ச்சி இருட்டடிப்பு ! திருந்தாத ஸ்டாலின்

டெசோ இயக்கத்தின் சார்பில் தஞ்சையில்
ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:–
ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்காக கடந்த 50 ஆண்டுகாலமாக குரல் கொடுத்து வருகிறோம். ஐ.நா. சபையிலும் இது குறித்து தி.மு.க. வலியுறுத்தி உள்ளது. ஆனால் இன்று வரை ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இலங்கையில் தமிழர்கள் 2–ம் தர குடிமக்களாக மட்டும் அல்ல அடிமைகளாக நடத்தப்பட்டு வருகிறார்கள். அங்கு ஏராளமான தமிழ்ப்பெண்கள் விதவைகளாக உள்ளனர். 4½ லட்சம் குழந்தைகள் அனாதைகளாக உள்ளனர். லட்சக்கணக்கான குடும்பங்கள் வெளியிடங்களுக்கு சென்று விட்டனர்.
சாதாரண திமுக தொண்டனின் திமுக பற்றுதலை வெறும் கேலிகூத்தாக்கும் ஸ்டாலினின் மோசமான அரசியல் . தஞ்சாவூரில் குஷ்பூ கலந்து கொண்ட நிகழ்ச்சியை பற்றி ஒரு வரி தானும் சொல்லவில்லை , அதைவிட மோசமான விடயம் என்னவென்றால் ஸ்டாலினின் வழ வழா பேச்சை வேண்டுமென்றே கலைஞர் டிவியில்

Delhi Gang Rape சிறார் காப்பகத்தில் திடீர் மோதல்!

டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான சிறுவன் அடைக்கப்பட்டிருக்கும் சிறார் காப்பகத்தில் திடீரென இன்று மோதல் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் இயங்கி வரும் இந்த சிறார் காப்பகத்தில் இன்று காலை அங்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகளிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. உள்ளே தீ வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே பலாத்கார வழக்கில் கைதான குற்றவாளிகள், திஹார் சிறையில் கொடூரமாக துன்புறுத்தலுக்குள்ளாகினர் என்ற புகார் எழுந்த நிலையில் சிறார் காப்பக சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோதலை கட்டுப்படுத்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தாலும் விதிகளின் படி உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
tamil.oneindia.in

விஜய்யின் எதிராளி இன்று மற்றொரு மனு தாக்கல் செய்தால் தலைவனின் கதை கந்தல்!

நடிகர் விஜய் நடித்துள்ள தலைவா படத்துக்கு தலைக்கு மேல் ஏகப்பட்ட
சிக்கல்கள் தொங்கிக் கொண்டுள்ள நிலையில், இந்தப் படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி, ‘தலைவா’ பட தயாரிப்பாளர், இயக்குனருக்கு சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் இவர்கள் வரும் 14-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தலைவா படம் நாளை (9-ம் தேதி) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே வேறு சில சிக்கல்கள் உள்ளன (அவற்றை தனிக் கட்டுரையாக பார்க்கலாம்) இப்போது, படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் 14-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதால், புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
ஆம். 14-ம் தேதி பதில் அளிக்கப்படும்வரை, ‘தலைவா’ படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று, வழக்கு தொடர்ந்தவரால் மற்றொரு மனு செய்ய முடியும்!
இந்த வழக்கின் பின்னணி என்ன?
நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு இது. அந்த மனுவில், தமது தாத்தா மற்றும் தந்தை பற்றிய கதைதான், ‘தலைவா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா திருவாசகம் / லண்டன்! கணக்குகள் காட்டவில்லையாமே ? லண்டன் தமிழர் ஆத்திரம்

How Isaignani Illayarajah Seized Control of the Thiruvasakham Symphony Project to Fatten his
Own Purse.
by
Rajasingham Jayadevan
The darker side of the composer Isai Gnani Illaiyarajah has never been reported in the media. Having experienced his ruthless double-cross, I write this piece with the view to create greater awareness of the deception practiced by the much boasted Tamil music composer from Tamil Nadu.
‘Isai Gnani Illarajah is coming to London for an unforgettable show joined by a troupe of amazing singers and musicians including Chinmayi, Yuvan Shankar Raja, SP Balasubramaniam, Karthik and many more, this will be a truly magical experience for Tamil music lovers in the United Kingdom’ – states Thamarai.com.< A campaign of relentless TV publicity is undertaken in all major Tamil TV stations in the UK. The concert will be held on Saturday, 24 August 2013 at the London O2 Arena in Greenwich. The prices of the tickets to see the questionable Isai Gnani’s thamasha is set at VVIP £250, VIP £150, General admissions £100 and £50.

நடிகர் விஜயை சந்திக்க ஜெயலலிதா மறுப்பு ! பாம்பின் கால் பாம்பறியும் ! பேராசையால் வந்தது வினை ?

வருங்கால முதல்வரை இந்நாள் முதல்வர் சந்திப்பார் என்று எப்படி அப்பனும் பிள்ளையும் எதிர்பார்த்தார்கள் ? வெங்காய ரசிகர் கூட்டம் போல  ஜெயாவும் ஏமாறுவார் என்றா நினைத்தார்கள் ?
விஜய நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் 9ம் தேதி திரைக்கு வரும் நிலையில், அப்படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதால்  முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தலைவா படத்தை திரையிட அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமா? என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், மேலும், போலீஸார் தங்கள் தரப்பில் இத்தனை திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கூறியிருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.இதையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் புதன்கிழமை மாலை அவசர கூட்டம் நடைபெற்றது. அதில், ‘’நடிகர் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் இப்பிரச்சனையில் தலையிட்டு தமிழக அரசிடம் பேசினால் நல்ல தீர்வு கிடைக்கும். விஜய்யும், சந்திரசேகரும் பேசி நல்ல முடிவை தரும் பட்சத்தில், அரசு தரப்பின் ஒத்துழைப்பை பெற்றுத் தரும் பட்சத்தில் படத்தை வெளியிட எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை’’ என்று அபிராமி ராமநாதன் தெரிவித்திருந்தார்.

இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாக். ராணுவம் -ஏ.கே. அந்தோணி

இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாக். ராணுவ சிறப்புப் பிரிவு -ஏ.கே. அந்தோணி டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் பிரிவுதான் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி விளக்கம் அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவம் நாட்டை அதிரவைத்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, பாகிஸ்தான் ராணுவ சீருடை அணிந்த தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிட்டார். ஆனால் ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முரண்பாடு பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

சொத்துகுவிப்பு வழக்கில் மாயாவதி விடுதலை ! இனி தைர்யமா குவிக்கலாம் ?

புதுடில்லி: உ .பி., மாநில முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு எதிரான மனுவை
சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் இவருக்கு எதிரான ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும், இநத மனு தேயைற்றது என்றும் கூறியுள்ளது. மாயாவதி முதல்வராக இருந்த போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆதாரமில்லை என்று சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மீண்டும் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரப்பட்ட மனு கமலேஷ் வர்மா என்பவரால் தொடரப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை நீதிபதி சதாசிவம் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்தது. இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த வழக்கில் மாயாவதிக்கு எதிரான வழக்கில் போதிய ஆதாரமில்லை என்றும், இது தேவையற்றது என்றும் சி.பி.ஐ., அறிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது

புதன், 7 ஆகஸ்ட், 2013

தூத்துக்குடி கலக்டர் ஆஷிஷ் குமார் திடீர் இடமாற்றம் !பின்னணியில் மணல்மாபியா ! அகிலேஷ் பாணியில் ஜெயலலிதா

CHENNAI: Close on the heels of Uttar Pradesh government suspending Durga Sakthi Nagpal for cracking down on the sand mafia, Ashish Kumar, the district collector of Tuticorin in Tamil Nadu, was transferred on Tuesday, hours after he ordered a raid on sand mines in his area. Kumar, a 2005 batch IAS officer, has been shunted out to a relatively inconspicuous post in Chennai as deputy secretary in department of social welfare and nutritious meal programme
Tamil Nadu official shunted out for taking on sand mafia
Following complaints of illegal mining in Vaippar and Vembar villages of Vilathikulam taluk in Tuticorin, teams led by his junior, assistant collector G S Sameeran, and revenue officer Kathiresan conducted the searches through the day. 
   தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டம் துறையின் துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் 22வது கலெக்டராக கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி பொறுப்பேற்ற ஆஷிஷ்குமார் இரண்டு ஆண்டுகள் இப்பொறுப்பில் இருந்துள்ளார். இவரைவிட இதற்கு முன்பு 4 கலெக்டர்கள் மட்டுமே அதிக நாட்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தூத்துக்குடி மாவட்டத்தின் கலெக்டராக எம்.ரவிகுமார் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆடிட்டர் ரமேஷ் கொலை: கோவையில் 2 பேர் சிக்கினர் !

பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் படுகொலை செய்யப் பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் தீவிர விசாரணையில் பாளையங்கோட்டையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிட மிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் தொடர் விசாரணையில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் மேலும் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களில் 2 பேர் கோவையில் பதுங்கியிருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உறுதியான தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்கள் கோவை விரைந்து வந்து முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் பிடிபட்டனர். அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

தலைவா'வை திரையிடமுடியாது!- சென்னை, செங்கல்பட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி! சினிமாகாரனை சினிமாகாரிக்கு தெரியாதா ?

இந்தப் படத்துக்கு தலைவா என தலைப்பு வைத்ததிலிருந்தே சிக்கல்தான்.
காரணம், அடுத்த சிஎம் என்ற இலக்கை முன்வைத்து விஜய்யும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரும் பேசி வந்த பேச்சுகள் ஆட்சியாளர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை: அரசின் ஒத்துழைப்பின்றி தலைவா படத்தைத் தமிழகத்தில் திரையிட முடியாது என சென்னை - செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. விஜய் நடித்த தலைவா படத்தை தமிழகத்தில் 500 ப்ளஸ் அரங்குகளிலும், வேறு சில நாடுகளிலும் திரையிட முடிவு செய்திருந்தனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பையில் இந்தப் படம் வெளியாகிறது. நாளை மறுநாள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தைத் திரையிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. 'தலைவா'வை தமிழகத்தில் திரையிடமுடியாது!- சென்னை, செங்கல்பட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி தலைவா இப்போது படம் வெளியாகுமா என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு தலைவா என தலைப்பு வைத்ததிலிருந்தே சிக்கல்தான். காரணம், அடுத்த சிஎம் என்ற இலக்கை முன்வைத்து விஜய்யும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரும் பேசி வந்த பேச்சுகள் ஆட்சியாளர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் கதையும் அரசியல் களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால், படத்துக்கு வரிவிலக்கு உள்பட எந்த சலுகையும் அரசுத் தரப்பிலிருந்து கிடைக்காத நிலை. இந்த சூழலில் படம் வரும 9-ம் தேதி, அதாவது நாளை மறுநாள் உலகெங்கும் 2000 அரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்தார். அந்த செய்தி வெளிவந்த அடுத்த சில நிமிடங்களில் படத்தின் முன்பதிவு நிறுத்தப்பட்டது.

டெல்லியின் நீரா ராடியவை ஏன் கைது பண்ணவில்லை? ராசாவையும் கனிமொழியையும் கைது பண்ணுவதில் இருந்த அவசரம்?

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விவரங்களை விட எல்லை கடந்து பணப் பரிமாற்றம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்கள் நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களில் இருக்கின்றன என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்களுடன் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த உரையாடல் பதிவுகளை பகிரங்கப்படுத்தி அரசு தகவல்களை தனியாரிடம் பரிமாறிக் கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அரசு சார்பற்ற நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் டாடா குழுமத்தின் வழக்கறிஞரோ இதை பகிரங்கப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் மீது ஏன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத் துறைக்கு கண்டனம் தெரிவித்திருந்தது உச்சநீதிமன்றம். மேலும் உரையாடல் பதிவுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வருமான வரித் துறை, சிபிஐயின் போக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

சந்துருவின் குடும்பமே ஒரு மோசடி கும்பல்.! சேரன் மகள் காதலன் அதிரவைக்கும் படங்கள்


சேரன் மகள் விவகாரம் தொடர்பாக இயக்குநர் அமீர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் சேரன் மகள் தாமினியின் காதலன் சந்துரு குடும்பம் பற்றி அதிரவைக்கும் ஆதாரங்களை காட்டினார்.சந்துருவின் சகோதரி  கவுரி, சேரன் மகள் விவகாரத்தில் தலையிட நீ யார் என்று கேட்டுள்ளார்.  சேரன் மகள் என் மகள்.  சேரனுக்காக நாங்கள் வராமல் வேறு யாரு வருவார்.சந்துருவின் குடும்பமே ஒரு மோசடி கும்பல்.  நல்ல குடும்பமாக மட்டும் இருந்தால் நாங்களே முன் நின்று இந்த காதலை சேர்த்து வைக்க நினைத்தோம்.   மோசடி கும்பல் என்பதை தெரிந்தும் எங்கள் வீட்டு பெண் ணை எப்படி மனசு வந்து சேர்ந்து வாழ அனுமதிக்க முடியும்.சந்துருவின் குடும்பம் மோசடி கும்பல் என்பதற்கு ஆதாரமாக நக்கீரன் இதழ், மற்றும் குடும்ப அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்களை செய்தியாளர்களுக்கு கொடுத்தார் அமீர். அதிரவைக்கும் ஆதாரம் (படங்கள் )

கோச்சடையான் ஹாலிவூட் போகிறதாம் ! வழமைபோல பாமரத்தனத்தை குறிவைத்து பணம்பறிக்கும் பில்டப் !

நவீன கடவுள் எளிமையின் சிகரம் ரஜனியின் பங்களாக்கள் சில சாம்பிள் மட்டுமே இவை
கோச்சடையான் ஒரு சர்வதேச ( பில்டப் ) படம் என்று தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படம் மூலம் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குனர் அவதாரம் ( பில்டப் )எடுத்துள்ளார். முதன் முதலாக தமிழ் படத்தில் நடித்துள்ள இந்தி நடிகை தீபிகா இந்த படத்தை பெரிதும் (பில்டப் )எதிர்பார்க்கிறார்.
கோச்சடையானில் விஷுவல் எபெக்ட்ஸ் மிகவும் அருமையாக ( பில்டப்) வந்திருக்கிறது. இதுவரை வந்த எந்த இந்திய படத்திலும் இல்லாத
அளவுக்கு இந்த படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ்( பில்டப் ) உள்ளது என்று தீபிகா தெரிவித்துள்ளார்.
கோச்சடையான் படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸாகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் படம் ரஜினியின் பிறந்தநாளன்று வெளியாகுமா என்பது பெரிய கேள்வியாக( பில்டப் )  உள்ளது
tamil.oneindia.in

வடிவேலு: 20 படங்களில் நடிக்க போகிறேன் ! வாங்கண்ணே நீங்கதேன் இன்னைக்கும் உண்மயான சூப்பர் ஸ்டார் ! தொலைகாட்சிஎல்லாம் உங்களை வச்சுதேன் பிழைக்குது

நீ............ண்ட இடைவேளைக்குப்பிறகு தெனாலிராமன் படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு. இப்படத்தை எப்படியும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவந்து விடவேண்டும் என்கிற மும்முரத்தில் இருக்கிறார். இடைவெளியை நிரைப்பும் விதமாக இந்தப்படம் இருக்கும் என்று மிகவும் நம்புகிறார் வடிவேலு. இந்தப் படம் தனது பலத்தை நிரூபிக்கும் என்று மார்தட்டி சொல்லி வருகிறார் வடிவேலு. இப்போ என் காமெடிப்பஞ்சம் இருக்குது. இந்தப்படம் ரிலீஸுக்கு பிறகு இருக்காது. இந்தப்பஞ்சத்தை எல்லாம் போக்குறதுக்கு தெனாலிராமன் ரிலிஸூக்கு பிறகு தொடர்ச்சியா கேப் விடாம இரவு பகலாக 20 படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளப்போகிறேன்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறார் வடிவேலு.

சுப்ரீம் கோர்ட்: நீரா ராடியா டேப் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவங்க நம்ம ஆளுங்க! இந்த கனிதான் நம்ம ஆளு இல்லைங்க !

நீரா ராடியா டேப் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அரசு மீது சுப்ரீம் கோர்ட் எரிச்சல்! டெல்லி: அரசியல் தரகர் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்கள் மீது உரிய நடவடிக்கையை இன்னமும் எடுக்காமல் இருப்பது ஏன் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்களுடன் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த உரையாடல் பதிவுகளை பகிரங்கப்படுத்தி அரசு தகவல்களை தனியாரிடம் பரிமாறிக் கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அரசு சார்பற்ற நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் டாடா குழுமத்தின் வழக்கறிஞரோ இதை பகிரங்கப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் மீது ஏன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத் துறைக்கு கண்டனம் தெரிவித்திருந்தது உச்சநீதிமன்றம். மேலும் உரையாடல் பதிவுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வருமான வரித் துறை, சிபிஐயின் போக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. இந்த வழக்கு விசாரணை வரும் 6-ந் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. அதற்குள் இரு துறைகளும் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மீண்டும் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "தொலைபேசி உரையாடல் பதிவுகள் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதா? அப்படி தெரிவிக்கப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே? இப்படி நீண்ட தாமதம் என்பது சரியானது அல்ல என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இருப்பினும் அரசுத் தரப்பில் இன்று பதிலளிக்க கால அவகாசம் கோரியிருந்தார். இன்றும் இந்த வழக்கின் மீது விசாரணை நடைபெற இருக்கிறது.
tamil.oneindia.in

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 61.80 என்ற அளவுக்கு செவ்வாய்க்கிழமை வீழ்ச்சி அடைந்தது.
செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. மேலும் சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று தொய்வடைந்த நிலையில், வங்கிகளும் இறக்குமதியாளர்களும் அதிக அளவில் டாலர்களை வாங்க முன்வந்தனர்.
திங்கள்கிழமை செலாவணி சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தின் இறுதி நிலவரப்படி, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 60.88 ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை அன்னிய செலாவணி சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோதே, ஒரு டாலருக்கு ரூ. 61.05 தர வேண்டியதாக இருந்தது. காலையில் வர்த்தகம் தொடர்ந்தபோது, ரூபாய் மதிப்பு மேலும் முன் எப்போதும் இல்லாத நிலையான 61.80 என்ற வரலாறு காணாத வகையில் ரூபாய் மதிப்பு குறைந்தது. பின்னர் 61.43 என்ற நிலைக்கு சற்று உயர்ந்தது. dinamani.com

செல்வராகவன் துண்டு துண்டாக பிலிம் பண்ணுவார் ! Parallel world? விறுவிறுப்பின் விறு விறு காமெண்ட்ஸ்

செல்வராகவனின் டைரக்ஷனில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட
‘இரண்டாம் உலகம்’ அடுத்த மாதம் திரைக்கு வருகிறது என்று சொல்லப்படுகிறது. தமிழ், தெலுங்கு (டப்பிங்) மொழிகளில் வெளிவரவுள்ள இ.உ., தமக்கு ஒரு டர்ன்ங் பாயின்ட்டாக இருக்கும் என்பது ஆர்யாவின் எதிர்பார்ப்பு. இந்தப் படத்தில் இவருடன் அனுஷ்கா ஹீரோயினாக நடித்துள்ளார். ஹீரோ, ஹீரோயின் இருவருக்குமே, படத்தின் முழு கதை உத்தரவாதமாக இதுதான் என்று தெரியாதாம்! 
அதுதான், செல்வராகவன் ஸ்டைல். படத்தை துண்டு துண்டாக பிலிம் பண்ணுவார். அந்தந்த காட்சிகளில் நடிக்க வேண்டியதை மட்டுமே, நட்சத்திரங்களுக்கு சொல்வார். ஷூட்டிங் முழுமையாக முடிந்து, எடிட் பண்ணி திரையில் பார்க்கும்போதுதான், அதில் நடித்தவர்களுக்கே, தாம் நடித்த காட்சிகள் எந்தெந்த இடங்களில் பிட் ஆகின்றன என்று தெரியவரும்! செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ எடுத்தபோது, அதில் நடித்த மற்றொரு டைரக்டரான பார்த்திபனுக்கு நடந்ததுகூட அதுதான். கொடுக்கப்பட்ட டயலாக்கை, செல்வா சொல்லும் முகபாவத்துடன் ஒப்பிக்க வேண்டியதுதான். அதில் தனது கேரக்டர் ஏதோ ஒரு சோழ மன்னன் என்பதை தவிர, படத்தின் ப்ரீவியூவரை, இந்தக் கதையில் சோழ மன்னன் எங்கே வருகிறார் என்பது பார்த்திபனுக்கு தெரியாது. இரண்டாம் உலகத்தில் நடந்ததும் அதுதான்! ரசிகர்கள் மட்டுமல்ல, ஹீரோ, ஹீரோயினும் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளார்கள்!

ஜேம்ஸ் வசந்தன் ஹேமலதா: கமிஷனரும், ராதாவும் ஒரே மாநிலத்தை KERALA சேர்ந்தவர்கள் ! சாதாரண விஷயத்திற்கு பெண் வன்கொடுமை வழக்கா?


எங்கள் வீட்டின் பின்புறம் ராதா பிரசா:த் என்பவர் வீடு கட்டி உள்ளார். இவர்கள் வீடு கட்டிய நாள் முதல் தொடர் பிரச்னைதான். 3 ஆண்டுகளாக தொடர்ந்து தகராறு செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ராதாவை நான் கத்தியால் குத்த முயன்றதாக பொய் புகார் அளித்தார். சென்னை : சாதாரண குற்றத்திற்காக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மனைவி ஹேமலதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.சென்னை பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (50) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது வீட்டு அருகில் வசித்து வரும் ராதா பிரசாத் (60) என்ற பெண்ணுக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது.இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நடந்து வருகிறது. இந்நிலையில், ராதா பிரசாத் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார். அதில் “ஜேம்ஸ் வசந்தன் என்னை ஆபாசமாக திட்டினார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்று கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த 4ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

ஆக்கிரமித்த நிலத்தை திருப்பி கொடுப்பதாக அதிமுக தம்பிதுரை உயர்நீதிமன்றில் தெரிவிப்பு

ஆவடி அருகே தனியாரிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை
உரிமையாளர்களிடமே திரும்ப வழங்குவதாக, அதிமுக நாடாளுமன்றக் குழு தலைவர் தம்பித்துரை சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த உமா பிரசாத் மற்றம் சலீம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தம்பித்துரைக்கு சொந்தமான கல்லூரி ஆவடிக்கு அருகே செயல்பட்டுவருவதாகவும், அந்தக் கல்லூரிக்கு அருகே உள்ள இடங்களை தம்பித்துரை தரப்பினர் மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கி வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக தங்களுடைய நிலங்களை விற்கும்படி மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

சமாஜ்வாதி எம்.பி.,யை அடிக்க பாய்ந்த மணிசங்கர் அய்யர்

நீ ஒரு பாகிஸ்தான் ஏஜென்ட்,'' என, சமாஜ்வாதி எம்.பி., நரேஷ் அகர்வால் விமர்சனம் செய்ததால், ஆவேசம் அடைந்த, காங்கிரஸ் எம்.பி., மணிசங்கர் அய்யர், கைகளை முறுக்கியபடி, அவரை நோக்கி பாய்ந்தார். இதனால், ராஜ்யசபாவில், கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. சக எம்.பி.,க்கள் தலையிட்டு, விலக்கி விட்டதால், நிகழவிருந்த கைகலப்பு தவிர்க்கப்பட்டது.
கடும் அமளி:ராஜ்யசபா நேற்று காலை கூடியதும், ஜம்மு - காஷ்மீரில், ராணுவ வீரர்கள் ஐந்து பேர், பாக்., ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பெரிய அளவில் வெடித்தது. "இந்தப் பிரச்னை குறித்து, உடனே விவாதம் நடத்த வேண்டும்' என, பா.ஜ., உட்பட, எதிர்க்கட்சிகள் பலவும் கோரிக்கை விடுத்தன; அத்துடன், அமளியிலும் ஈடுபட்டன. இந்த அமளிக்கு இடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி பேசியதாவது: ஐந்து ராணுவ வீரர்களை, இந்தியா பறிகொடுத்திருக்கிறது.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

ஓராண்டில் 11 லட்சம் கருக்கலைப்புகள் ! இதைவிட வெள்ளைக்காரன் கலாசாரமே மேல்?

கருக்கலைப்பு மற்றும் பிரசவகால மரணங்கள் தொடர்பாக
மாநிலங்களவையில் இன்று எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம் நபி ஆசாத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:- நாட்டில் 2008-09 ஆண்டில் 11.06 லட்சம் கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய பதிவுத்துறை தலைவர் தகவலின்படி, பிரசவகால மரணத்தில் 8 சதவீத மரணத்திற்கு கருக்கலைப்பு காரணமாக இருந்துள்ளது. 2008-ல் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு காரணமாக தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்தில் 13 சதவீத தாய்மார்கள் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. ஒரு லட்சம் பாதுகாப்பற்ற கருக்கக்கலைப்பில் 200 மரணங்கள் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிக அளவில் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் நடக்கும் இடமாக இந்தியா இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது அந்த அறிக்கையில் இல்லை. போதுமான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்கி சுகாதார வசதிகளுடன் பாதுகாப்பான கருக்கலைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.

பழங்குடி இந்திய நாடோடிகளை கொன்ற ஹங்கேரியர்களுக்கு தண்டனை ! Who's Killing Hungary's Gypsies?

 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் ஹங்கேரியின் வடகிழக்கில்
தட்டார்சென்ட்கியோர்கி பகுதி கிராமங்களில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட  நாடோடிக் குழுவினர் வசித்து வந்தனர். ஹங்கேரியின் 10 மில்லியன் மக்கள் தொகையில் இவர்களின் சதவிகிதம் ஏழாகும். இனவெறி காரணமாக அர்பட் கிஸ், இஸ்ட்வான் கிஸ், சோல்ட் பெடோ, சோண்டோஸ் என்ற நால்வரும் சேர்ந்து 14 மாதங்களுக்குள் இவர்கள் மீது ஒன்பது முறை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதற்கு இவர்கள் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், பெட்ரோல் குண்டுகள் போன்றவற்றை உபயோகப்படுத்தியுள்ளனர். ஒருமுறை நடத்திய தாக்குதலில், இவர்கள் ஒரு வீட்டிற்குத் தீ வைத்துள்ளனர். அங்கிருந்த நாடோடி தந்து, தனது ஐந்து வயது மகனுடன் தப்பி ஓட முயற்சித்தபோது, அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இதுபோல் மொத்தம் ஆறு பேர் இவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்கள் நாடோடி இன மக்களிடையே பயத்தைத் தூண்டியது. இந்த வன்முறைத் தாக்குதல்கள் ஹங்கேரி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின. காவல்துறையினரின் மெத்தனமே இதற்குக் காரணம் என்று அவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

இந்திய எல்லையில் 5 வீரர்கள் பலி ! அந்தோணி விளக்கம்!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் செவ்வாய்க்கிழமை காலை காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையான சக்கந்தாபாத் அருகே, இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து ராணுவ மந்திரி ஏ.கே அந்தோணி மக்களவையில் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், இந்திய எல்லையில், பூஞ்ச் செக்டாரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரி மற்றும் 5 வீரர்கள் தாக்கப்பட்டனர். பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த சுமார் 20 தீவிரவாதிகள், அவர்களுடன் பாகிஸ்தான் ராணுவ சீருடையில் இணைந்து வந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தினர்.

ஜேம்ஸ் வசந்தனின் வீட்டை அபகரிக்கும் முயற்சியே கைது ! பின்னணியில் அனைவரும் மலையாளிகளே! கமிஷனர் ஜார்ஜ், ராதா வேணு பிரசாத்,ராதாவின் மகன் லண்டன் துதராலய அதிகாரி

Sixty three-year-old Radha and her husband Venuprasad, an advisor of the UK-based Warwick University in India, reside at VGP Golden Seaview in Palavakkam. 
.சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளரும், சினிமா இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனை போலீஸார் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்கைது செய்திருக்கிறார்கள். மொத்தம் 4 வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் சிறையில் இருக்கிறார்.இவ்வளவு பெரிய குற்றச்சாற்றுக்கு ஆளாகும்படி ஜேம்ஸ் வசந்தன் என்ன செய்தார்? அவர் மீதான புகார் என்ன?ஜேம்ஸ் வசந்தனின் பக்கத்து வீட்டில் வசிக்கும், ராதா வேணு பிரசாத் என்ற பெண்மணியை பார்த்து ஆபாசமாக சைகை செய்தாராம். அதற்குத்தான் இத்தனை களேபரமும். பெண்மணி என்று குறிப்பிட்டது மரியாதைக்காக. 68 வயது கிழவியாம் இந்த ராதா வேணு பிரசாத். இந்த 68 வயது பேரிளம் பெண்ணுக்கு ஜேம்ஸ் வசந்தன் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்பதே சந்தேகத்தை எழுப்பும் விஷயம். ராதா வேணு பிரசாத்தின் பின்னணியும் அதை உறுதி செய்கிறது.ராதா வேணு பிரசாத் தனது பக்கத்து வீட்டை - அதாவத ஜேம்ஸ் வசந்தனின் வீட்டை தனது மகனுக்காக வாங்க நினைத்து கேட்டிருக்கிறார். அவரின் மகன் லண்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனில் அதிகாரியாம். ஆனால் வீட்டை விற்க ஜேம்ஸ் வசந்தன் மறுத்திருக்கிறார். இதன் காரணமாக ராதா வேணு பிரசாத் வன்மத்துடன் பலமுறை பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கிறார். கடைசி அஸ்திரமாக கமிஷனர் ஜார்ஜின் மூலம் செக்ஸ் டார்ச்சர் என்று சிறையில் அடைத்திருக்கிறார்கள்.கமிஷனர் ஜார்ஜ் மலையாளி. ராதா வேணு பிரசாத்தின் உறவுக்காரர்களுக்கு வேண்டப்பட்டவர். மலையாளிகள் நினைத்தால் 68 வயசு பேரிளம் பெண்ணை செக்ஸ் டார்ச்சர் செய்ததாக தமிழக்த்தின் பிரபலமான ஒருவரையே சிறையில் தள்ள முடிகிறது. இதுவே கேரளாவில் நடக்குமா? போராட்டம், சாலை மறியல் என்று களேபரப்படுத்திவிட மாட்டார்களா? இப்படியொரு அநியாயம் நடந்தும் ஜேம்ஸ் வசந்தன் பணிபுரிகிற தொலைக்காட்சி ஊடகங்களும், சினிமாதுறையும் மௌனம் காத்துக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை... வேதனை.முதல்வர் தலையிட்டு இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. tamil.webdunia.com

ஜெயலலிதாவின் துரோகங்களை பட்டியலிட முற்பட்டால்! இன்னும் 170000 TV குடோனில் வீணாகிறது !

சென்னை: 'ஜெயலலிதா துரோகங்களை பட்டியலிட முற்பட்டால்
என்னவாகும்?' என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: 'உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு ஆதரவு, தமிழக மக்களுக்கு கருணாநிதி துரோகம், ஜெயலலிதா குற்றச்சாட்டு' என்ற தலைப்பில் முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை ஏடுகளிலே இன்று வெளிவந்துள்ளது. நான் எப்போது, எந்த தேதியில் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை கொடுத்திருக்கிறேன்? ஜெயலலிதா தேதியை குறிப்பிட்டோ அல்லது ஏடுகளை குறிப்பிட்டோ சொல்ல முடியுமா?
ஜெயலலிதாவே தனது அறிக்கையில், 'தேசிய உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்திய போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தற்போது ஆதரிக்க போவதாகத் தெரிவித்துள்ளது' என்று கூறியிருக்கிறார். எனவே அந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்திய போது திமுக அதை எதிர்த்தது என்பதை அவரே ஒப்புக் கொண்டுவிட்டு, தற்போது அறிக்கையில் திமுக தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்து விட்டதாக கூறுகிறார்.

திருச்சி விழாவில் பெண்களுக்கு சாட்டை அடி

தா.பேட்டை:திருச்சி அருகே நேற்று பேய் விரட்டும் திருவிழாவில் பெண்களை பூசாரிகள் சாட்டையால் அடித்தனர்.திருச்சி மாவட்டம்
தாத்தையங்கார்பேட்டை அடுத்த சோழம்பட்டியில் சோழராஜா கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி 19 அன்று பெண்களுக்கு பேய் விரட்டும் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 100 ஆண்டுகளாக இந்த விழா நடக்கிறது. நேற்று நடந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். மண்டு கருப்பு, கஸ்தூரி அம்மாள், அரவாயி, அரவாயி சின்னக்கோயில் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் கோயில் முன்பு 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஈரத்துணியுடன் தலைவிரி கோலமாக அமர வைக்கப்பட்டனர். பெண்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் பூசாரிகள் தண்ணீர் தெளித்தனர். பெண்களிடம், ‘நல்லா இருக்கியா‘ என்று பூசாரிகள் கேட்கின்றனர். ‘நல்லா இருக்கேன் சாமி‘ என்று சொல்லும் பெண்ககளுக்கு பேய் பிடித்திருக்கவில்லை என்று முடிவு செய்கின்றனர். பதில் சொல்ல மறுத்து ஆக்ரோஷமாக ஆடும் பெண்களை பூசாரி சாட்டையால் அடிக்கிறார். சாட்டையடி வாங்கிய பெண்கள், ‘நான் போயிடுறேன்‘ என்று பதில் அளித்தால் அடிப்பதை நிறுத்தி விடுகிறார். ‘இனி வர மாட்டேன்‘ என்று வேல், சாட்டை மீது சத்தியமும் வாங்கப்படுகிறது.

ஆறுகளில் மணல் அள்ளக்கூடாது: பசுமை தீர்ப்பாயம் அதிரடி

புதுடில்லி: "முறையான உரிமம் பெறாமல் அல்லது சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், எந்த ஆற்றிலும் மணல் அள்ளக் கூடாது. இந்த உத்தரவு, நாடு முழுவதற்கும் பொருந்தும்' என, தேசிய பசுமை தீர்ப்பாயம், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தேசிய பசுமை தீர்ப்பாய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு: ஆற்றுப் படுகைகளில், முறையான உரிமம் பெறாமல், சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகின்றன. மணல் கடத்தல்காரர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். உ.பி.,யில், பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, அம்மாநில அரசு, "சஸ்பெண்ட்' செய்துள்ளது. மற்றொரு இடத்தில், மணல் கடத்தல்காரர்களுக்கு எதிராக குரல் கொடுத்த ஒருவரை, அவரின் வீட்டில் வைத்தே, பட்டப் பகலில், மணல் மாபியாக்கள் கொலை செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள ஆறுகளில், தினம்தோறும் லட்சக்கணக்கான டன் மணல், சட்ட விரோதமாக அள்ளப்படுகிறது.

துர்கா பள்ளிவாசலை இடிக்க உத்தரவிடவில்லை ! Wakf Board backs Durga IAS உண்மையை போட்டுடைத்த இஸ்லாமிய அமைப்புக்கள்

தன்கவுர் : உத்திர பிரதேச பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காசக்தி, வழிபாட்டு தல
சுவரை இடிக்க உத்தரவிட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்ததாக உ.பி., அரசு கூறி வரும் குற்றச்சாட்டு பொய்யானவை என இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் வழிபாட்டு தலத்தின் சுவரை இடிக்க எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும் இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளதால் உ.பி.,அரசின் பொய் குற்றச்சாட்டு அம்பலத்திற்கு வந்துள்ளது.துர்கா சஸ்பெண்ட் : மணல் கொள்ளை மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காசக்தி நாக்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் அவர் இஸ்லாமிய வழிபாட்டு தலத்தின் சுவரை இடிக்க உத்தரவிட்டதாகவும், அதனால் மத நல்லிணக்கத்தை காப்பதற்காக அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்ததாக உத்திர பிரதேச அரசு தெரிவித்தது. துர்கா சஸ்பெண்ட்டை எதிர்த்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கழகம், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் சஸ்பெண்ட் உத்தரவை மாற்றிக் கொள்ள முடியாது என சமாஜ்வாதி கட்சியும், மாநில முதல்வர் அகிலேஷூம் பிடிவாதமாக இருந்து வருகின்றனர். இதனால் உத்திர பிரதேச அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஷர்மிளா: ஜெகனின் அரசியலை தடுக்கவே தெலுங்கனா பிரிவினை

ஜெகன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடவே தெலுங்கானா: ஷர்மிளா
சாடல்! ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகனின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடவே தெலுங்கானா தனி மாநிலத்தை காங்கிரஸ் உருவாக்கியுள்ளதாக அவரது சகோதரி ஷர்மிளா சாடியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஷர்மிளா, தனி தெலுங்கானா அமைக்கும் மத்திய அரசின் முடிவானது அதிர்ச்சி அளிக்கிறது. எனது சகோதரர் ஜெகனின் செல்வாக்கு அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவே காங்கிரஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது என்றார். ஜெகன் மோகன் ரெட்டி 2011ஆம் ஆண்டு காங்கிரஸை விட்டு வெளியேறினார். ராயலசீமா, கடலோர ஆந்திரா மாவட்டங்களில் ஜெகனின் ஆதரவு காங்கிரஸை திகிலடைய வைத்தது. இதைத் தொடர்ந்து அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 14 மாத காலமாக ஜெகன் சிறையில் இருக்கிறார். இருப்பினும் ஷர்மிளாவும் அவரது தாயாரும் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.tamil.oneindia.in

விஜயகாந்த் :எனக்கும் மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு ??? பேரீச்சம் சாப்பிடுகிறேன் மெக்கா பெர்பியும் யூஸ் பண்றேன்

சென்னை: ""எனக்கும் மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு; அங்கிருந்து . கட்சி கொள்கைப்படி, பெண்களுக்காக பல உதவிகளை செய்திருக்கிறேன். என் கையை கட்டி போட்டாலும், தர்மம் செய்வதை நிறுத்த மாட்டேன். இந்தியாவில் பிறந்த நாம், வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தண்ணீர், என் வீட்டில் இருக்கிறது. பலருக்கும் கிடைக்காத அந்த தண்ணீரை குடிப்பதற்கு, நான் பாக்கியம் செய்திருக்கவேண்டும். எனக்கும், மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு. அங்கு வாங்கிய, ஆல்கஹால் கலக்காத, "பெர்பியூம்' தான் நான் பயன்படுத்துகிறேன். என் அருகில் வந்து நுகர்ந்து பார்த்தால், அது தெரியும். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம் பழத்தை சாப்பிடுகிறேன். இவ்வாறு, அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், பார்த்தசாரதி, சந்திரக்குமார், சுதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாங்கி வரப்பட்ட, ஆல்கஹால் கலக்காத, "பெர்பியூம்' தான் பயன்படுத்துகிறேன்; பேரீச்சம் பழம் சாப்பிடுகிறேன்,'' என, இப்தார் நோன்பு திறப்பு விழாவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.