வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

பார்ப்பனர்களின் எச்சில் இலைகளை எடுப்பதா ? பெண் ஊழியர்கள் போர்க்கொடி ! அன்னபூர்ணேஸ்வரி கோயில் அநியாயம்

கண்ணூர், ஆக.7- கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை எடுக்கவேண்டும் என்ற பழைய பழக்கவழக்கத்தை இன்றும் வலி யுறுத்தும் இழிவை எதிர்த்து கோயில் பெண் ஊழி யர்கள் இருவர் போர்க்கொடி உயர்த்தி யுள்ளனர்.
தீண்டாமையும், பார்ப்பனர் ஆதிக்கமும் இன் னமும் சில குறிப்பிட்ட கோயில்களில் கடைப் பிடிக்கப்படுவது பற்றிய கடுமையான கருத்து வேறு பாடுகளும், விவாதமும் புதிய உச்சத்தை அடைந் துள்ளன. செருகுண்ணு அன்னபூர்ணேஸ்வரி கோயி லில் பணியாற்றும் இரண்டு பெண் ஊழியர்கள் சடங்குகளின்போது பார்ப்பனர்கள் விருந்து  உண்ட எச்சில் இலைகளை எடுக்க மறுத்து போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
பார்ப்பனர்கள் உணவு உண்டபின்னர், அவர் களது எச்சில் இலைகளை இதுவரை கோயில் பார்ப்பனரல்லாத பெண் ஊழியர்களே எடுப்பது நீண்ட நாட்களாக நிலவி வரும் வழக்கமாகும்.
ஆனால் இக் கோயிலில் உணவு அருந்தியபிறகு உணவு அருந்தியவர்களே எச்சில் இலையை எடுக்க வேண்டும் என்று அந்தக் கோயிலில் பணியாற்றும் பார்ப்பனரல்லாத பெண் ஊழியர்கள் கோரி யுள்ளனர்.
பி.வி. கமலாட்சி மடரஸ்யார் மற்றும் ஏ.வி. வசந்தகுமாரி என்ற கோயிலின், இரண்டு பார்ப் பனரல்லாத பெண் ஊழியர்கள்  மலபார் தேவசம் பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், இதுபற்றி தொடர்ந்து  கோயில் அதிகாரிகளிடம் நாங்கள் தெரிவித்து வந்த கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிப் பயனற்றுப் போன காரணத்தால்,  இனியும் இந்தப் பழக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டு கடைப்பிடிக்கப் போவதில்லை என்றும் அதற்கு எதிராகப் போராட இருப்பதாகவும் தெரிவித் துள்ளனர். இப்பிரச்சினையைப் பற்றி சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.வி. சீனிவாசன் பேசுகையில், தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வந்த காலத்தில் தோன்றிய இந்தப் பழக்கவழக்கங்கள் மாற்றம் பெற வேண்டும் என்பதால், இப்பிரச்சினையை நாங்கள் மிகமிக முக்கியமானதாகக் கருதுவதால்,  பார்ப் பனர்கள் உணவு அருந்திய இலைகளை அவர்கள் எடுக்காமல், பார்ப்பனரல்லாத ஊழியர்கள்தான் எடுக்கவேண்டும்  என்ற இதுபோன்ற பழைய  பழக்கவழக்கங்களுக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் தொடங்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.
தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது
பணியாளர்கள் மட்டுமல்லாமல், பல கோயில் களில் பக்தர்களுக்கிடையேயும் வேறுபாடுகள் காட்டப்படுகின்றன. தலிப் பறம்பா ராஜராஜேஸ் வர கோயிலில் பார்ப்பனர் அல்லாதபக்தர்களுக்கு எதிராக தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக பல அறிக்கைகள் தெரிவித்துள்ளன என்றும் அவர் கூறினார்.
பார்ப்பனர் அல்லாதவர்கள் உள்ளிட்ட அனைத் துப் பக்தர்களும், கோயிலுக்கு அளிக்கும் காணிக் கைப் பணம், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்ற பெயரில் பார்ப்பனர்களின் ஆதாயத்துக்காக மட்டுமே செலவிடப்படுவதை இனியும்  ஏற்றுக் கொள்ள முடியாது.  பார்ப்பனரல்லாத மக்களை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காத கோயில்கள் இன்றும் கூட உள்ளன, இது மாறவேண்டும். இதற்கு மற்றொரு கோயில் நுழைவுப் போராட்டத்தைத் தான் நடத்த வேண்டியிருக்கிறது  என்று அவர் கூறினார்.
என்றாலும்  இத்தகைய தீண்டாமை உணர்வு கொண்ட பழைய பழக்கவழக்கங்களைப் பல கோயில்கள் கைவிட்டுவிட்டன என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார். பார்ப்பனர்களுக்கு மட்டும் தனியாக விருந்தளிக்கும் பழக்கம் கரியவல்லூர் அருகே உள்ள சிறீநாராயணபுரம் கோயிலில் கைவிடப்பட்டுவிட்டதாக அவர் கூறுகிறார்.
38 கோயில்களுக்குப் பொறுப்பாக இருக்கும் சிரக்கல் கோவிலகம் தேவசம் குழுவின் நிர்வாக அதிகாரியான  கே.எம். அரவிந்தாட்சன் என்பவர், செருகுண்ணு அன்னபூர்ணேஸ்வரி கோயில் விவ காரம் பற்றி முறையான புகார் மனு எதுவும் இன்ன மும் எனக்கு கிடைக்கவில்லை. சங்கத்திடம் ஒரு புகாரை அவர்கள் அளித்திருப்பதாக நான் கேள்விப் ப ட்டேன்.  கோயில் நிர்வாக அறங்காவல் குழுவைக் கலந்து ஆலோசித்த பின்னர் முறையான நடவடிக் கையை நான் நிச்சயமாக எடுப்பேன் என்று  அவர் கூறினார்.
இருண்ட காலத்திற்குச் செல்லுவதா?
காலம் கடந்து போன பழைய பழக்கவழக்கங் களைவிடாமல் கடைப்பிடிப்பது குழந்தைத்தன மானதாகும். இப்போதெல்லாம் சமூகம் பெருமள வுக்கு மாற்றம் பெற்றுள்ளது என்று கரியவல்லூர் சிவன் கோயில் தலைமை அர்ச்சகர் சி. நாராயணன் நம்பூதிரி கூறுகிறார். பார்ப்பனர்கள் உணவு அருந்திய பிறகு அவர்கள் உண்ட எச்சில் இலைகளை தாழ்த் தப்பட்ட மக்கள் எடுக்கும் பழக்கம் முன்பு பழங் காலத்தில் இருந்து வந்துள்ளது. இத்தகைய பழக்க வழக்கங்களை இப்போதும் தொடர்ந்து கடைப் பிடிப்பது கேலிக்குரியதாகும். எங்கள் கோயிலில் இத்தகைய பழக்கவழக்கங்கள் கடைப்பிடிப்பதை நாங்கள் அனுமதிப்பதில்லை; மாறி வரும் காலத் திற்கேற்ப நாமும் மாறாவிட்டால், நாம் திரும்பவும் இருண்ட காலத்திற்கே திரும்பிச் செல்லத்தான் நேரிடும் என்று அவர் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக