சனி, 10 ஆகஸ்ட், 2013

ஜெயலலிதா கொடைநாட்டில் இருக்கும் வரை தலைவா வராது ! ஜெயலலிதா ஏன் பயப்படுகிறார் ? புரியல்லையே ?

சென்னை: வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குப் பிறகு முதல்வரைச் சந்திக்க விஜய்க்கு நேரம் ஒதுக்குவார் முதல்வர் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு சுதந்திர தினத்தில் தலைவா படம் வெளியாகக் கூடும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வெளியாக இருந்த தலைவா ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டிக்கெட் புக் செய்தவர்களுக்கான கட்டணங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆக 12-ம் தேதிக்குப் பிறகு விஜய் & கோவுக்கு முதல்வர் அப்பாயின்ட்மென்ட்..15ல் ரிலீஸ்? தலைவா இன்று தமிழ்நாட்டில் வெளியாகாத நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர்களோ கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குச் சென்று படம் பார்க்கின்றனர். 'தலைவா' படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்திருந்ததால் வரிவிலக்கு குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தினைப் பார்த்த அதிகாரிகள் வரிவிலக்கு அளித்தாலும், விஜய் பேசும் சில வசனங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலையும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், கொடநாட்டில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா திரும்பும்வரை 'தலைவா' வெளியாக வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி அன்று கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பும் ஜெயலலிதாவைச் சந்திக்க, 'தலைவா' படக் குழுவினர் அனுமதி கேட்டுள்ளனர். அந்த சந்திப்பு நடந்த பிறகுதான் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. அநேகமாக ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக இப்படத்தை வெளியிடுவார்கள் என பெரும்பாலான தியேட்டர் உரிமையாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக