புதன், 7 ஆகஸ்ட், 2013

செல்வராகவன் துண்டு துண்டாக பிலிம் பண்ணுவார் ! Parallel world? விறுவிறுப்பின் விறு விறு காமெண்ட்ஸ்

செல்வராகவனின் டைரக்ஷனில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட
‘இரண்டாம் உலகம்’ அடுத்த மாதம் திரைக்கு வருகிறது என்று சொல்லப்படுகிறது. தமிழ், தெலுங்கு (டப்பிங்) மொழிகளில் வெளிவரவுள்ள இ.உ., தமக்கு ஒரு டர்ன்ங் பாயின்ட்டாக இருக்கும் என்பது ஆர்யாவின் எதிர்பார்ப்பு. இந்தப் படத்தில் இவருடன் அனுஷ்கா ஹீரோயினாக நடித்துள்ளார். ஹீரோ, ஹீரோயின் இருவருக்குமே, படத்தின் முழு கதை உத்தரவாதமாக இதுதான் என்று தெரியாதாம்! 
அதுதான், செல்வராகவன் ஸ்டைல். படத்தை துண்டு துண்டாக பிலிம் பண்ணுவார். அந்தந்த காட்சிகளில் நடிக்க வேண்டியதை மட்டுமே, நட்சத்திரங்களுக்கு சொல்வார். ஷூட்டிங் முழுமையாக முடிந்து, எடிட் பண்ணி திரையில் பார்க்கும்போதுதான், அதில் நடித்தவர்களுக்கே, தாம் நடித்த காட்சிகள் எந்தெந்த இடங்களில் பிட் ஆகின்றன என்று தெரியவரும்! செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ எடுத்தபோது, அதில் நடித்த மற்றொரு டைரக்டரான பார்த்திபனுக்கு நடந்ததுகூட அதுதான். கொடுக்கப்பட்ட டயலாக்கை, செல்வா சொல்லும் முகபாவத்துடன் ஒப்பிக்க வேண்டியதுதான். அதில் தனது கேரக்டர் ஏதோ ஒரு சோழ மன்னன் என்பதை தவிர, படத்தின் ப்ரீவியூவரை, இந்தக் கதையில் சோழ மன்னன் எங்கே வருகிறார் என்பது பார்த்திபனுக்கு தெரியாது. இரண்டாம் உலகத்தில் நடந்ததும் அதுதான்! ரசிகர்கள் மட்டுமல்ல, ஹீரோ, ஹீரோயினும் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளார்கள்!

சரி. இது எப்படியான படம் என்பதை, ஸ்டில்ஸ்களை பார்த்து ஊகிக்க முடியுமா? கொஞ்சம் சிரமமான டாஸ்க்தான்.
காரணம், படத்தின் ஸ்டில்ஸ்களை பார்த்தால், இது ஒரு ரெகுலர் A+B=C படம் அல்ல என்று புரிகிறது. கீழேயுள்ள போட்டோ இணைப்பில் படத்தின் ஸ்டில்களுடன், இரண்டாம் உலகம் போஸ்டர்கள் சிலவற்றையும் மிக்ஸ் செய்திருக்கிறோம், பாருங்கள்.
இந்த போஸ்டர் டிசைனிங்கை கவனமாக பாருங்கள். படம் ஒரு ‘ட்ரீம் ஃபான்டஸி’ ரகத்திலான படம் போல உள்ளது. நிகழ்கால காட்சிகள் போஸ்ட்டர் டிசைனில் இல்லை. அல்லது, ‘ட்ரீம் ஃபான்டஸி’ பாணியில் கிராஃபிக் செய்யப்பட்டுள்ளது.
ஹரி படம், அல்லது பேரரசு படம் என்றால், “போஸ்டரில் உள்ளவை கனவுக் காட்சிகள்” என்று அசால்ட்டாக சொல்லிவிடலாம். ஆனால் இது, செல்வா படமாச்சே. அவ்வளவு சிம்பிளாக இருக்காது.
படத்தின் திரைக்கதையில் ‘மிக்ஸ்ட் கன்ட்டென்ட்ஸ்’ நிச்சயம் உள்ளது என்றே ஊகிக்க வேண்டியுள்ளது. ரியாலிடி, பான்டஸி, ட்ரீம் வேர்ள்ட் என்று கலந்து கட்டி திரைக்கதை அமைத்திருக்கலாம்.  அதாவது, ‘நிகழ் காலத்தில் இந்த உலகம்… வேறோர் காலத்தில், மற்றோர் உலகம்…’ இரண்டிலும் ஒரே கேரக்டர்கள் என்பதுதான், நான் குறிப்பிடும் மிக்ஸ்ட் கன்ட்டென்ட்ஸ் பான்டஸி படம்.
ஆங்கிலத்தில் இப்படியான படங்கள் வெளியாவதுண்டு. சில படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. தமிழில் வெளியானதாக தெரியவில்லை.
தமிழில் எடுப்பதற்கு ஒரு தில் வேண்டும். எடுப்பதானால், செல்வராகவன் எடுப்பார், அல்லது எங்கிருந்தோ வரப்போகும் ஒரு புதுமுக டைரக்டர் எடுப்பார்.
இரண்டாம் உலகம் அப்படியான ஒரு ‘மிக்ஸ்ட் கன்ட்டென்ட்ஸ்’ படமாக இருக்கலாம் என்பது எமது ஒரு ஊகம்தான். நிச்சயமாக இருக்கும் என்று அடித்துச் சொல்லவில்லை. “இருந்தால் நன்றாக இருக்கும்”.
மற்றொரு விஷயம். சில ஆண்டுகளுக்குமுன் செல்வா ‘அது மாலை நேரத்து மயக்கம்’ என்று ஒரு படத்தை தொடங்கினார். தனுஷ்தான் ஹீரோ. அந்தப் படம் ட்ராப் ஆகிவிட்டது. அதன் பெயரையும், ‘இரண்டாம் உலகம்’ என்ற பெயரையும் பார்க்கும்போது, அந்த கதையை லேசாக மாற்றி இந்தப் படம் உருவாகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. (அப்படி இல்லை என்கிறார், செல்வராகவன்)
இரண்டாம் உலகத்தின் சில ஸ்டில்கள் முன்பு வெளியாகியிருந்தன. அவற்றைப் பார்த்த ஞாபகம் உங்களுக்கு இருக்கலாம். அதில் தனுஷின் கெட்டப், இரண்டாம் உலகம் ஸ்டில்களில் உள்ள ஆர்யாவின் கெட்டப்புடன் பொருந்துவதை பார்க்கலாம். அதில் ஹீரோ டாக்டர், இதில் ஹீரோயின் டாக்டர் என்றுகூட கதையை மாற்றியிருக்கலாம் (ஸ்டில்களை பார்க்கவும்)
எது எப்படியோ, இரண்டாம் உலகம் பட ஸ்டில்களில் சிலவற்றை தொகுத்து தந்துள்ளோம். 20 போட்டோக்கள் மிக்ஸ்ட் பண்ணப்பட்டு உள்ளன. ஒவ்வொரு போட்டோவும் என்ன என்று விளக்கம் தரப் போவதில்லை. நீங்களே பாருங்கள், சர்பிரைஸாக இருக்கும்.
போட்டோக்களை நாம் எடிட் செய்து தந்துள்ள வரிசையில், அதாவது சீக்வென்ஸில் பார்க்கவும். கூர்ந்து கவனிக்கவும். அப்போதுதான் நாம் மேலே எழுதியது, அதிகமாக புரியும். viruvirupu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக