வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

கண்மாய் நடுவில் பிராடு பிளாட்கள் விற்பனை? பலர் வீடும் கட்டி விட்டனர் !

மேலூர்: மேலூர் அருகே பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள கண்மாய், குறைந்த விலைக்கு "பிளாட்' போட்டு விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலூர் தும்பைப்பட்டி ஊராட்சியில் உள்ளது தாமரைப்பட்டி. இங்கு சர்வே எண் 469/2ல், 16 ஏக்கர் பரப்பளவில் ஒடுங்காபுலி கண்மாய் உள்ளது. பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள இக்கண்மாயை நம்பி, பல ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இக்கண்மாயை ஆக்கிரமித்து சில வீடுகள் கட்டப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள இடங்களையும் "பிளாட்' போட்டு விற்கும் பணி பணி நடக்கிறது.ரங்கசாமி: கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து கடந்த மாதமே பொதுப்பணித்துறை மற்றும் தாசில்தாருக்கு மனு கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. தற்போது, "பிளாட்' போட்டு குறைந்த விலைக்கு விற்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதனால் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதை அடைபட்டுள்ளது, என்றார்.


வெள்ளைச்சாமி: ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட வீடுகள், கண்மாயில் கட்டப்பட்டுள்ளன. மீதி பகுதியையும் "பிளாட்டாக' மாறினால், டிராக்டர், கதிர் அடிக்கும் இயந்திரங்கள் இவ்வழியாக செல்ல முடியாது. இப்பாதை வழியாகதான் சுடுகாட்டிற்கு செல்ல வேண்டும். ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள், இனி கண்மாய்க்கு நீர் செல்லும் வரத்து கால்வாய்களை மூட வாய்ப்புள்ளது. இதனால் விவசாயம் பாதிப்பதுடன், குடிநீர் ஆதாரமான இக்கண்மாய் முற்றிலும் மறைந்து விடவாய்ப்புள்ளது.பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி : கண்மாயில் இப்படி ஒரு ஆக்கிரமிப்பு இருப்பது, இதுவரை தெரியாது. உடனடியாக சர்வேயர்களை கொண்டு அளந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். வீடுகள் கட்டியிருந்தால் கண்டிப்பாக இடிக்கப்படும் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக