சனி, 10 ஆகஸ்ட், 2013

இந்திய மாணவி georgianna வின் சடலம் இன்று சென்னை வருகிறது ! லண்டன் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட

சென்னை: லண்டன் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக
கூறப்பட்ட இந்திய மாணவியின் சடலம் மறு பிரேத பரிசோதனை முடிந்து இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது.முகப்பேர் மேற்கு பாடி குப்பம் பகுதியில் வசிப்பவர் நாஞ்சில் சாம்சன் (49). ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மகள் ஜார்ஜியானா (18). லண்டன் லிவர்புல் யுனிவர்சிட்டியில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் முதலாண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 12ம் தேதி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக சாம்சனுக்கு தகவல் வந்தது.இதையடுத்து 14ம் தேதி அவர் லண்டன் சென்றார். அதற்குள் சடலத்தை பல்கலைக்கழக நிர்வாகம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டது. தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந் தார். இதையடுத்து நீதிமன்றம் ஜார்ஜியானா சடலத்தை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. கடந்த 4ம் தேதி பிரேத பரிசோதனை நடந்தது. ஜார்ஜியானா சடலம் நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று மாலை லண்டனில் இருந்து புறப்பட்ட அவர்கள், இன்று காலை 8 மணியளவில் சென்னை வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக