புதன், 7 ஆகஸ்ட், 2013

ஆக்கிரமித்த நிலத்தை திருப்பி கொடுப்பதாக அதிமுக தம்பிதுரை உயர்நீதிமன்றில் தெரிவிப்பு

ஆவடி அருகே தனியாரிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை
உரிமையாளர்களிடமே திரும்ப வழங்குவதாக, அதிமுக நாடாளுமன்றக் குழு தலைவர் தம்பித்துரை சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த உமா பிரசாத் மற்றம் சலீம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தம்பித்துரைக்கு சொந்தமான கல்லூரி ஆவடிக்கு அருகே செயல்பட்டுவருவதாகவும், அந்தக் கல்லூரிக்கு அருகே உள்ள இடங்களை தம்பித்துரை தரப்பினர் மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கி வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக தங்களுடைய நிலங்களை விற்கும்படி மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
ஆனால், நிலத்தை விற்காததால், தங்கள் நிலத்திற்கு போகும் வழியை ஆக்கிரமித்து, சுவர்களை எழுப்பி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தனர்.இந்த வழக்கு நீதிபதி சுசீந்திரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தம்பித்துரை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை திரும்ப வழங்குவதாக ஒப்புக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஆவணமாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது   nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக