வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

வருங்கால முதலைமச்சர் ஆசையால் தலைவா தொலைஞ்ச கதை ! விஜயின் அடுத்த படத்துக்கு நல்ல கதை! ஜெயா வழங்கியுள்ளார் ?

விஜய் நடித்து, இன்று தமிழகம் எங்கும் ரிலீஸ் ஆயிருக்க வேண்டிய தலைவா,
‘அரசியல்’ சிக்கல்களில் சிக்கியதில் தமிழகத்தில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. பிற மாநிலங்களில் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. சில வெளிநாடுகளில் நேற்றே திரையிடப்பட்டது. படம் எப்படி? இடைவேளை வரை அனைவராலும் ரசிக்கப்படும். இடைவேளைக்குப் பிறகு, தீவிர விஜய் ரசிகர்களுக்கு பிடித்தாலும் பிடிக்கலாம். முதல் பாதி ஆஸ்திரேலியா கதை. இரண்டாம் பாதி மும்பை கதை. மும்பையில் அனைவருமே தமிழ் பேசுகிறார்கள். பேசாமல் மும்பையை தமிழகத்துடன் இணைக்க மனு செய்து, ஆதாரமாக தலைவா டி.வி.டி. ஒன்றையும் கொடுக்கலாம்.
டைரக்டர் விஜய், ‘காப்பி மன்னன்’ என்பது பிரசித்தம். இதில் சக்கரவர்த்தி ஆகியிருக்கிறார். இரண்டாம் பாதியில் தேவர் மகன் உட்பட நாலைந்து படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு கொடுத்திருக்கிறார். அட, அதை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக கொடுத்திருந்தாலாவது, பழைய படம் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்.

விஜய் வருகிறார். படத்தின் பிரேமுக்குள் வேறு யார் யாரெல்லாம் வருகிறார்களோ, எல்லோருக்கும் (வில்லனைத் தவிர) உதவுவதை முழுநேர தொழிலாக செய்கிறார். கிறிஸ்துவர்களுக்கு உதவுகிறார்.. முஸ்லிம்களுக்கு உதவுகிறார்.. ஏழைக்கு உதவுகிறார்.. ஏந்திழைக்கு உதவுகிறார்.. பாட்டிக்கு உதவுகிறார்.. பாதசாரிக்கு உதவுகிறார்.. டோராவுக்கும் உதவியிருப்பார், கார்ட்டூன் படமாக இருந்திருந்தால்!
இவ்வளவு பேருக்கும் உதவிய விஜய்க்கு, ‘அம்மா’ உதவி செய்திருக்கிறார், இலவச பில்ட்-அப் கொடுத்து! அம்மா கமலுக்கு விஸ்வரூபத்தில் ஒரு வாய்ப்பு கொடுத்ததுபோல, விஜய்க்கு தலைவாவில் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
சரி, அம்மாவுக்கு என்ன கோபம்?
விஜய்யின் அப்பா சந்திரசேகர், “தமிழகத்தில் இன்றைய எம்.ஜி.ஆர். விஜய்தான். இன்றைய ‘அறிஞர் அண்ணா’ நான்தான்” என்று சீரியசாக கூறி அதிர வைத்தார் அல்லவா? அந்தப் பேச்சு கார்டனை அப்போதே கொதிக்க வைத்தது. அதே கான்செப்ட்டை படத்திலும் கொண்டுவந்தால் எப்படியிருக்கும்?
தலைவா படத்தில், விஜய்யின் அப்பா கேரக்டரில சத்யராஜ். அவரை ‘டமில் மக்கள்’ அண்ணனாக ஏற்றுக் கொள்கிறார்களாம். அதனால் “அண்ணா.. அண்ணா.. ” என்று அன்புடன் அழைக்கிறார்களாம். இந்த ‘அண்ணா’ உசிரை விட்டதும், மகன் விஜய் ‘அண்ணாவின்’ இடத்தை ரீபிளேஸ் பண்ணுகிறாராம்!!
‘அம்மா’ சும்மா விட்டாலும், அண்ணாவின் ஆவி உங்களை சும்மா விடாதுய்யா.. சும்மா விடாது!
‘காப்பி மன்னா’வும் (டைரக்டர் விஜய்), ‘அறிஞர் அண்ணா’வும் (எஸ்.ஏ.சந்திரசேகர்) பிளான் பண்ணி இளைய தளபதியை செமையாக கவிழ்த்து விட்டார்கள்! viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக