புதன், 7 ஆகஸ்ட், 2013

ஆடிட்டர் ரமேஷ் கொலை: கோவையில் 2 பேர் சிக்கினர் !

பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் படுகொலை செய்யப் பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் தீவிர விசாரணையில் பாளையங்கோட்டையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிட மிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் தொடர் விசாரணையில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் மேலும் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களில் 2 பேர் கோவையில் பதுங்கியிருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உறுதியான தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்கள் கோவை விரைந்து வந்து முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் பிடிபட்டனர். அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக