செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

விஜயகாந்த் :எனக்கும் மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு ??? பேரீச்சம் சாப்பிடுகிறேன் மெக்கா பெர்பியும் யூஸ் பண்றேன்

சென்னை: ""எனக்கும் மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு; அங்கிருந்து . கட்சி கொள்கைப்படி, பெண்களுக்காக பல உதவிகளை செய்திருக்கிறேன். என் கையை கட்டி போட்டாலும், தர்மம் செய்வதை நிறுத்த மாட்டேன். இந்தியாவில் பிறந்த நாம், வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தண்ணீர், என் வீட்டில் இருக்கிறது. பலருக்கும் கிடைக்காத அந்த தண்ணீரை குடிப்பதற்கு, நான் பாக்கியம் செய்திருக்கவேண்டும். எனக்கும், மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு. அங்கு வாங்கிய, ஆல்கஹால் கலக்காத, "பெர்பியூம்' தான் நான் பயன்படுத்துகிறேன். என் அருகில் வந்து நுகர்ந்து பார்த்தால், அது தெரியும். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம் பழத்தை சாப்பிடுகிறேன். இவ்வாறு, அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், பார்த்தசாரதி, சந்திரக்குமார், சுதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாங்கி வரப்பட்ட, ஆல்கஹால் கலக்காத, "பெர்பியூம்' தான் பயன்படுத்துகிறேன்; பேரீச்சம் பழம் சாப்பிடுகிறேன்,'' என, இப்தார் நோன்பு திறப்பு விழாவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த, இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்று, விஜயகாந்த் பேசியதாவது: இப்தார் நோன்பு பற்றி நிறைய பேசவேண்டும். இஸ்லாமியர்களுக்கு, ஐந்து விதமான விஷயங்கள் உண்டு. அதில் நோன்பு திறப்பது, ஒரு முக்கியமான விஷயம். சிறு வயதாக இருக்கும்போது, மதுரையில் பள்ளி வாசல்களுக்கு சென்று நோன்பு கஞ்சி வாங்கி குடித்திருக்கிறேன்; கஞ்சி அவ்வளவு ருசியாக இருக்கும். "இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கே' என்ற தே.மு.தி.க., கொள்கையும், இஸ்லாமியர்களின் ஐந்து விதமான விஷயங்களும் ஒன்று தான். சில தலைவர்கள், தலையில் குல்லா போட்டு நோன்பு திறந்து படம் எடுத்து சென்று விடுவர். ஆனால், நான், 2005ல் கட்சி துவக்கியதில் இருந்து நோன்பு திறந்து வருகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக