செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

இந்திய எல்லையில் 5 வீரர்கள் பலி ! அந்தோணி விளக்கம்!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் செவ்வாய்க்கிழமை காலை காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையான சக்கந்தாபாத் அருகே, இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து ராணுவ மந்திரி ஏ.கே அந்தோணி மக்களவையில் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், இந்திய எல்லையில், பூஞ்ச் செக்டாரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரி மற்றும் 5 வீரர்கள் தாக்கப்பட்டனர். பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த சுமார் 20 தீவிரவாதிகள், அவர்களுடன் பாகிஸ்தான் ராணுவ சீருடையில் இணைந்து வந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தினர்.

அதையடுத்து நடந்த துப்பாக்கிச்சண்டையில் 5 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். வலியவந்து (பாகிஸ்தான்) நடத்திய இந்த தாக்குதல் சம்பவம், கடும் கண்டனத்துக்கு உரியது. எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டின் புனிதத்துவத்தை நிலைநிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு இந்திய ராணுவம் முழு அளவில் தயார் நிலையில் உள்ளது என்பதை சபைக்கு உறுதிபட தெரிவிக்கிறேன்.ராஜ்ய வழிகளில் (தூதரக மட்டங்களில்), பாகிஸ்தான் அரசிடம் இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. 2013ல் மட்டும் பாகிஸ்தான் 57 முறை போர் ஒப்பந்தத்தை மீறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்  .nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக