புதன், 7 ஆகஸ்ட், 2013

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 61.80 என்ற அளவுக்கு செவ்வாய்க்கிழமை வீழ்ச்சி அடைந்தது.
செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. மேலும் சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று தொய்வடைந்த நிலையில், வங்கிகளும் இறக்குமதியாளர்களும் அதிக அளவில் டாலர்களை வாங்க முன்வந்தனர்.
திங்கள்கிழமை செலாவணி சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தின் இறுதி நிலவரப்படி, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 60.88 ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை அன்னிய செலாவணி சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோதே, ஒரு டாலருக்கு ரூ. 61.05 தர வேண்டியதாக இருந்தது. காலையில் வர்த்தகம் தொடர்ந்தபோது, ரூபாய் மதிப்பு மேலும் முன் எப்போதும் இல்லாத நிலையான 61.80 என்ற வரலாறு காணாத வகையில் ரூபாய் மதிப்பு குறைந்தது. பின்னர் 61.43 என்ற நிலைக்கு சற்று உயர்ந்தது. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக