சனி, 26 ஜனவரி, 2013

அமெரிக்காவில் மோசடியில் ஈடுபட்ட மதத் தலைவருக்கு சிறை

இந்தியாவை சேர்ந்தவர் இந்து மத தலைவர் சாகர்சென் ஹல்தார். இவர் அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத் தில் உள்ள மில்வாவ்கீ நகரில் இந்துக் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். கவுடியா வைஷ்ணவ சொசைட்டியின் நிறுவன தலைவராகவும் இருந்து வருகிறார்.
இவர் மத தொண் டுக்குரிய விசா பெற்று அமெரிக்கா சென்றார். அங்கிருந்து கொண்டு 2 டஜனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு, ஒவ்வொருவரிடமும் இருந்து தலா 30 ஆயிரம் டாலர்  வாங்கி கொண்டு, மோசடி செய்து விசா வாங்கி கொடுத்திருக் கிறார்.
எனவே ஹல்தார் மீது அமெரிக்காவில், மில் வாவ்கீ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட் டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத் துக்கு இடமின்றி நிரூபிக் கப்பட்டுள்ளதாக கருதி, 37 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
தண்டனை காலம் முடிந் ததும் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என  தெரிவித்துள்ளனர்.

பத்மபூஷன் விருதை புறக்கணித்த S,ஜானகி

சென்னை: பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி புறக்கணித்துள்ளார். இந்தாண்டிற்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜானகி, பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் வட இந்தியர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதும், தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதும் தமக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதனால், தான் மிகவும் ஏமாற்றமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணிப்பதாகவும் ஜானகி தெரிவித்துள்ளார். 74 வயதான எஸ். ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

முக்தா பாய்ச்சல்! விஸ்வரூபம் பிரச்னையால் ‘பத்தாயிரம் கோடி’க்கு 10 பேர்கூட வரலை!

Viruvirupu
விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதாகக் கூறி ரசிகர்களிடம் பணம் வசூலித்த கமல், சொன்னபடி படத்தை வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததோடு, மட்டும் முடிந்துவிடவில்லை. அது எங்கள் படத்தையும் பாதிக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார் முக்தா சீனிவாசன்.
முக்தா சீனிவாசன் தயாரிக்க, அவர் மகன் இயக்கத்தில் நேற்று ‘பத்தாயிரம் கோடி’ (மேலேயுள்ள ஸ்டில்) என்ற படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்குதான் வசூல் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் முக்தா.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், ஒரு படத்தின் ரிலீசுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பாக ரிசர்வேஷன் செய்வது வழக்கம். பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும் போது ரசிகர்கள் அந்த கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்த யோசனை இப்போது மற்ற படங்களின் வசூலை பாதிக்க ஆரம்பித்துள்ளது.

காதல் சந்தியா :ரூமர் கிளப்பறவங்க வாய மூட முடிவு

காதல் படத்தில் கலக்கிய  சந்தியாவுக்கு  கோலிவுட்ல சின்ன வேஷங்களுக்கு வாய்ப்பு வந்ததால மல்லுவுட்டுக்கு போனாராம்... போனாராம்... கோலிவுட் பக்கம் தல காட்டாம இருந்தா தேடி வருவாங்கன்னு எதிர்பாத்தவருக்கு ஏமாத்தம்தான் மிச்சமாம். இனிமே லவ் ஹீரோயின் கோலிவுட்ல நடிக்க மாட்டாருன்னு சிலர் பரப்பிவிட்றாங்களாம். இத கேட்டு ‘உர்’ ஆனாராம். தன்னைபத்தி ரூமர் கிளப்பறவங்க வாய மூட முடிவு பண்ணவரு திடீர்னு கோலிவுட் காமெடி நடிகர் ஜோடியா நடிக்க வந்த வாய்ப்ப ஏத்துகிட்டாராம். வேஷம் முக்கியமில்ல வருமானம் தான் முக்கியம்னு நடிக இப்ப புரிஞ்சிகிட்டாராம்... புரிஞ்சிகிட்டாராம்...

ரயில் பயணிகளுக்கு தரமான உணவு : 250 சமையலறைகள்

புதுடில்லி: ரயில் பயணிகளுக்கு தரமான உணவு வழங்குவதற்காக, நாடு முழுவதும், 250 இடங்களில், சமையலறைகளை அமைக்க, ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, 302 நீண்ட தூர ரயில்களில், பயணிகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை தயாரித்து வழங்குவதற்கு, "பேன்ட்ரி கார்' என்ற தனிப்பெட்டி உள்ளது. இவற்றின் மூலம், ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கும் போதே, பயணிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் தயாரித்து வழங்கப்படுகின்றன.இந்த பேன்ட்ரி கார்களின் பயன்பாட்டிற்கு, இனி, முடிவு கட்டப்படும். அதற்குப் பதிலாக, நாடு முழுவதும், 250 இடங்களில், ரயில்வே சார்பில், சமையலறைகள் அமைக்கப்படும்.இதன்மூலம், ஒவ்வொரு நாளும் ரயில்களில் பயணிக்கும், ஆறு லட்சம் பயணிகளுக்கு தேவையான உணவுப் பண்டங்களும், நொறுக்குத் தீனிகளும் தயாரித்து வழங்கப்படும்.

சிவகாமி IAS ஆவேசம்:வன் கொடுமை வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டும்

வேலூர்: ""வன் கொடுமை வழக்குகளை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்,'' என, சமூக சமத்துவ படை கட்சி தலைவி சிவகாமி பேசினார்.தர்மபுரி கலவரத்துக்கு நீதி கேட்டு சமூக சமத்துவ படை கட்சி தலைவர் சிவகாமி, 22ம் தேதி முதல் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று, வேலூர் மாவட்டம் குடியாத்தம், பள்ளிகொண்டா, கந்தனேரி, செதுவாலை, பொய்கை வழியாக வேலூர் வந்தார். கந்தனேரியில் அவர் பேசியதாவது: தர்மபுரியில் நடந்து முடிந்துள்ள, வன் கொடுமை சம்பவம் தமிழகத்தில் புரையோடிக் கொண்டிருக்கும் தீண்டாமையையும், ஜாதி வெறியையும் அம்பலப்படுத்துவதோடு, நாகரிக வாழ்க்கைக்கு இன்னும் தயாராகவில்லை என்பதை எடுத்துரைக்கிறது. திராவிடம் என்றாலும், தமிழ் அரசியல் என்றாலும், இந்திய சமுதாயத்தில் ஜாதி உணர்வே மேலோங்கி இருப்பதை, கடந்த கால திராவிட ஆட்சியில், ஜாதி ஒழிப்பு பணியை தீவிரவாக மேற்கொள்ளவில்லை என்பதை உறுதிபடுத்தியிருக்கிறது. சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம் என்றாலும், வன் கொடுமை தடுப்பு சட்டமானாலும் ஆதிக்க சக்திகள், அதிகாரத்தில் இருக்கும் வரை, இந்த சட்டங்களால் பயன் இல்லை என்பது தர்மபுரி கலவரத்தின் மூலம் தெளிவாக தெரிகிறது. இதை தடுக்க வேண்டுமானால், கலப்பு திருமணம் ஒன்று தான் தீண்டாமைக்கு நிரந்திர தீர்வாகும். சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, சமத்துவ சமூகம் ஏற்பட செய்தாலே, கலப்பு திருமணங்கள் அதிகமாகும். தர்மபுரியில் வீடு புகுந்து கொள்ளை அடித்துச் சென்ற பொருட்களை மீட்டுத் தர வேண்டும். இல்லையென்றால், பறிமுதல் செய்து தர வேண்டும். இன்னமும் அங்கு அச்சுறுத்தல் உள்ளது. பாதுகாப்பு வேண்டி போலீசாரிடம் மனு கொடுத்தும், பாதுகாப்பு வழங்கவில்லை. டீ கடையில் டீ தர மறுக்கின்றனர். தலித் மக்களுக்கு வேலை தரவில்லை.

விரைவு கோர்ட்டுகளில் வழக்குகளை தீர்க்க மத்திய அரசு

புதுடில்லி: நாடு முழுவதும் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு விரைவு கோர்ட்டுகள் அமைக்க முடிவு செய்துள்ளது. இத‌ற்காக சட்டத்துறை அமைச்சக குழுவினர் தயாரித்துள்ள திட்ட அறிக்கைகள் 13-வது நிதி குழுவின் ஒப்பு‌தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதிகுழுவின் மூலம் சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரையில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நாடு முழுவதும் நி 2010-2015-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்திலான ஆயிரத்து 100 சிறிய வழக்குகள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்‌கப்படுகிறது.

வெள்ளி, 25 ஜனவரி, 2013

Kurbaan (2009) இன்ஸ்பிரேஷன் தான் விஸ்வரூபம் என்று நாம் சொல்லவில்லை


குர்பான் ஹிந்தி படத்தின் தழுவல் அல்லது அதன் இன்ஸ்பிரேஷன் தான் விஸ்வரூபம் என்று நாம் சொல்லவில்லை

இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டம் அத்தியாயம் 14


annavum rajajiyum
மொழிப்போர் / அத்தியாயம் 14  
சின்னச்சாமியின் மரணம் கனன்று கொண்டிருந்த இந்தி எதிர்ப்பு நெருப்பை வேகமாக விசிறிவிட்டது. மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பல தரப்பினரும் போராட்டக் களத்துக்கு வந்தனர். இந்தி ஆட்சிமொழியாக மாறவிருக்கும் 26 ஜனவரி 1965 நெருங்க நெருங்க போராட்டத்தின் வேகம் கூடியது. எங்கு பார்த்தாலும் போராட்டம், கோஷம், கறுப்புக்கொடி, கண்டனக்குரல்.
இன்றைய அத்தியாவசியப் பிரச்னை சோற்றுப் பிரச்னைதானே தவிர மொழிப்பிரச்னை அல்ல என்றார் காமராஜர். உடனடியாக எதிர்வினை ஆற்றினார் அண்ணா. சோற்றுப்பிரச்னைதான் பிரதானம் என்றால் எதற்காக பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இந்தித் திணிப்பு விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும்; பேசாமல் தமிழையும் ஆட்சிமொழியாக அறிவித்துவிட்டு, சோற்றுப் பிரச்னையைத் தீர்க்கும் விஷயத்தில் கவனம் செலுத்தலாமே என்றார் அண்ணா.
8 ஜனவரி 1965 அன்று கூடிய திமுக செயற்குழு, ஜனவரி 26 அன்று குடியரசு நாளை துக்க நாளாக அனுசரிக்க முடிவுசெய்தது. சுதந்தர தினத்தை இன்ப நாளாகக் கொண்டாடிய அண்ணா, குடியரசு தினத்தைத் துக்கநாளாக அனுசரிப்பது துரோகச் செயல் இல்லையா? என்று கேள்வி எழுப்பினர் காங்கிரஸ் தலைவர்கள். குடியரசு தினம் முக்கியத்துவம் வாய்ந்த தினம்தான். அந்த நாளில் இந்தி எதிர்ப்பை ஒத்திவைத்தால் என்ன செய்வீர்கள்? இந்திதான் ஆட்சிமொழி என்பதை திமுகவும் தென்னக மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்று மூலைக்கு மூலை பொய்ப் பிரசாரம் செய்வீர்கள். அதைத் தடுக்கவே குடியரசு நாளை அமைதியான முறையில் துக்கநாளாக அனுசரிக்கிறோம் என்றார் அண்ணா!

ரிசானா நபீக் : கொலைகார சவுதி மன்னனின் அடியாள் பி.ஜெ !

vinavu.com கலங்கலாகத் தெரிகிறது அந்தக் காணொளி. வெண்ணிற பர்தா அணிந்த அந்தப் பெண் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறாள். அருகே  சவுதி ஷேக் உடையணிந்த இரண்டு பேர் நிற்கிறார்கள். அவர்களைச் சுற்றி சீருடை அணிந்த, காவலர்கள் போல தோற்றமளிக்கும் சிலர் நிற்கின்றனர். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். அருகாமையில் சில வாகனங்கள் மற்றும் பல மனிதர்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். ஷேக் உடையணிந்த மனிதர்களில் ஒருவர் இடையிடையே மண்டியிட்டு அமர்ந்திருக்கும் பெண்ணின் காதில் எதையோ சொல்லியவாறே இருக்கிறார். மெல்லக் காட்சிகள் நகர்கின்றன. என்ன நடந்தது என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருந்ததால் உள்ளத்தின் ஆழத்தில் இயலாமையும், ஆத்திரமும் பிசைய, பின்னணியில் வழிந்த இசை இன்னதென்று தெரியாத ஒரு அதீத பயத்தைக் கிளப்புகிறது. சற்று நேரத்தில் அந்த இருவரில் ஒருவர் மட்டும், மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அப்பெண்ணின் கழுத்தைத் தொட்டு குனிய வைக்கிறார்,  பின் அப்பெண்ணின் தோளில் தட்டி விட்டு நகர்கிறார். வேளை நெருங்கி விட்டது என்பதை அப்பெண் உணர்ந்திருப்பாளோ? அந்த நேரம் அவளது மனதில் என்ன நினைத்திருப்பாள் என்று நமது மனம் பரிதவிக்கிறது.
அந்தப் பெண்ணிடமிருந்து நகர்பவர் தனது இடையிலிருந்து நீண்ட வாள் ஒன்றை உருவியெடுக்கிறார். அப்போது மட்டுமல்ல ஆரம்பம் முதலே அந்தப் பெண் அமைதியாய், எந்தச் சலனமும் இன்றி, எந்த எதிர்ப்பும் இன்றித் தலை கவிழ்ந்தபடியேதான் இருக்கிறாள். வெயிலில் பளபளக்கும் அந்த வாள் நிதானமாய் மேலெழுந்து அந்தப் பெண்ணின் பின்னங்கழுத்தைக் குறிவைத்து சட்டெனக் கீழ் இறங்குகிறது. ஒரே வெட்டில் அவள் தலை துண்டிக்கப்படுகிறது….

DMK.. தே.மு.தி.க.வுக்கு 7 MP தொகுதிகள் ,1 ராஜ்யசபா சீட்?

தி.மு.க.-வும், தே.மு.தி.க.வும் பொதுக்கூட்ட மேடைகளில் ஆளாளுக்கு ‘சிக்னல்’ காட்டிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று தே.மு.தி.க.வின் பொதுக்குழு கூட்டம் கூடியுள்ளது. இதில் விஜயகாந்த், தி.மு.க.வுக்கு சிக்னல் காட்டுவாரா என்று இரு கட்சியினரும் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். பொதுக்குழுவில் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார் மற்றும் மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கட்சியின் வளர்ச்சி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பற்றிய பிரஸ்தாபமும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
காங். தி.மு.க. தரப்பில் இருந்து “தே.மு.தி.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகள் பிளஸ் 1 ராஜ்யசபா சீட்” என்று தகவல் பாஸ் பண்ணப்பட்டு இருப்பதாக தகவல். பார்க்கலாம், கேப்டன் என்ன சொல்கிறார் என்று.
இனியும் சுடு மணலில் நடக்க தன்னாலும் முடியாது ரசிகர்களாலும் முடியாது என்பதை கப்டனும் பிரேமாவும் புரிந்து நீண்ட நாளாகி விட்டது ஆனால் இந்த பன்மாமா எதோ ஏதோ சொல்லி பாமாகா ரேஞ்சுக்கு நம்பளை ஆகிடுவாரோ என்ற பயம் இப்போ ஜாஸ்தி ஆகிடுச்சு ஏன்னா அவரு வரலாறு அப்படிங்க 

தி டர்ட்டி பிச்சர்ஸ்’ தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா

வித்யாபாலன் நடித்து வெளிவந்த ‘தி டர்ட்டி பிச்சர்ஸ்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கில் நடிக்க நயன்தாராவிடம் பேசப்பட்டது. எத்தனையோ பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் பேசினாலும் நயன்தாரா ஒப்புக்கொள்ளவே முடியாது என்று சொல்லிவிட்டார். தற்போது வித்யாபாலன் நடித்து இந்தியில் மாபெரும் வெற்றிபெற்ற ‘கஹானி’ படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டாராம்.< கொல்கத்தாவில் கோலாகலமாக  கொண்டாடப்படும் துர்கா பூஜையன்று, காணாமல் போன தனது கணவரைத் தேடித் திரியும் கர்ப்பிணிப் பெண்ணின் கதையே ‘கஹானி’ படத்தின் கதை. நயன்தாரா இதுபோன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையைத் தான் தேடிக்கொண்டிருந்தாராம். இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த வித்யாபாலன் பல பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கதுகஹானி படத்தின் இயக்குனரான சுஜாய் கோஷ் “என் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் செய்வது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். என் படைப்பு தென்னிந்திய ரசிகர்களிடையேயும் சென்றடைவது பெருமையானது” என்று கூறினார்.  இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குனர் சேகர் கம்முலாம் இயக்குகிறார்.

ஆண், பெண் விகிதாசாரத்தில் சீனாவில் பாரிய வித்தியாசம்

சீனாவில் ஆண் பெண் விகிதாசாரத்தில் பாரிய வித்தியாசமுள்ளதாக கணக்கெடுப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 2012 ஆம் ஆண்டு சீனாவில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பில் 117 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றன. இதனால் ஆண் பெண் விகிதாசாரத்தில் சமனிலை ஏற்படாது பாரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.
உலகின் சனத்தொகை மிகுந்த நாடான சீனாவில் கடந்த 1980 ஆம் ஆண்டுமுதல் ஒரு குடும்பத்திற்கு  ஒரு குழந்தை என்ற திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இத் திட்டமே பெண் குழந்தைகளின் பற்றாக்குறைக்குக் காரணமெனக் கூறப்படுகிறது. இச்சட்டம் கட்டாயமாகவுள்ளதால் அதிக பெண்கள், ஆண் குழந்தை பெறவே விரும்புகின்றனர்.
எனவே, கர்ப்பமான பெண் கருவிலே பெண் குழந்தையென உறுதிசெய்து விட்டால் கருக்கலைப்புச் செய்வது வாடிக்கையாக உள்ளது . இந்நிலையை சீர்படுத்தும் நடவடிக்கைகளில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது..thinakkural.com

வியாழன், 24 ஜனவரி, 2013

ஜெ., திடுக் புகார்: மத்திய அரசுக்கு அழகிரியால் ஆயிரம் கோடி இழப்பு

தி.மு.க.வில் முக்கிய பதவி அஞ்சா நெஞ்சருக்கு கிடைக்காத பட்சத்தில் ஜெ.வுடன் சேர்ந்தால் இம்மாதிரியான விமர்சனம் எல்லாம் வராது..... நல்ல யோசிங்க அஞ்சா நெஞ்சரே.... 
சென்னை : மத்திய உரத்துறையில் மானியம் வழங்குதல் மற்றும் விலை நிர்ணயம் ஆகியன தொடர்பான விவகாரத்தை பயன்படுத்தி உர நிறுவனங்களுக்கு லாபம் கிட்டுமாறு முறைகேடு நடத்தி மத்திய அரசுக்கு ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதல்வர் ஜெ., திடுக் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தி தி.மு.க.,வை சேர்ந்த மத்திய உரத்துதுறை அமைச்சர் அழகிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெ., பிரதமருக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது வேளாண்மை. இந்த விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் கிராம விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரம் வழங்கப்படவில்லை.

விஸ்வரூபம் தடை; கமலுக்கு ஆதரவான நடவடிக்கை!

‘விஸ்வரூபம் சிறப்பு காட்சி பார்த்த இஸ்லாமிய தலைவர்கள், ‘படம் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கிறது அதை தடை செய்யவேண்டும்’ என்று தமிழக அரசிடம் நேற்று மனு கொடுத்திருக்கிறார்கள்.
அவசர அவசரமாக கோவை மாவட்ட ஆட்சியாளரும், ‘கோவையில் படத்தை வெளியிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்’ என்று அரசுக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்.
பல விசயங்களில் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் செவி சாய்க்காத தமிழக அரசு இரவோடு இரவாக விஸ்வரூபத்திற்கு 15 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.
‘சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்’ என்று காரணம் சொல்லியிருக்கிறது.
ஆனால், இந்தத் தடை ‘திரையரங்குகளில் படத்தை வெளியிடக்கூடாது’ என்பதாகத்தான் இருக்கிறது. மாறாக, டி.டி.எச். ல் வெளியிடுவதை பற்றி எந்த தகவலும் இல்லை.
கமல்ஹாசன் கூட திரையரங்குகளில் வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.
‘படம் இஸ்லாமிய எதிர்ப்பாக இருப்பதால் இது வெளியானாலும், எதிர்ப்பின் காரணமாக மூன்று நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடாது’ என்பதால்தான் அவர் டி.டி.எச். ல் ஒளிபரப்ப அதிக ஆர்வம் காட்டியிருக்கக் கூடும்.
தியேட்டர்களில் வெளியான பிறகு டி.டி.எச். ல் ஒளிபரப்பினால், அந்த நிறுவனங்களிடம் லாபமான வர்த்தகத்தை கமல்ஹாசனால் பெற முடியாது. நிச்சயம் முதலுக்கே மோசம் ஏற்படும். அதனால்தான் அவர் முதலில் டி.டி.எச். என்பதிலேயே உறுதியாக இருந்தார்.
ஆனால், திரையரங்க உரிமையளார்களின் எதிர்ப்பினாலேயே முதலில் தியேட்டர்களில் வெளியிடலாம் என்கிற முடிவுக்கு பல போராட்டங்களுக்கு பிறகு வந்தார்.
‘முன்கூட்டியே படத்தைப் பார்த்தால் இஸ்லாமிய அமைப்புகள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள், அதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும்’ என்கிற  எண்ணம் கமலுக்கு இல்லாமலா இருந்திருக்கும்.
பத்திரிகையாளர்களுக்கு கூட முன்கூட்டி படத்தை போட்டுக் காட்டாமல், இஸ்லாமிய கட்சி தலைவர்களுக்கு, போட்டுக்  காட்டியதின் காரணம் என்ன? (21ஆம் தேதி)
இதில் வேறு ஏதோ உள் நோக்கம், (டி.டிஎச். ல் ஒளிபரப்பு) இருக்குமோ என்கிற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை.

வீரமணி For விஸ்வரூபம்! இஸ்லாமிய மக்களுக்கு தி.க. தலைவர் வேண்டுகோள்

Viruvirupu
“பேசித் தீர்க்க வேண்டிய விவகாரம் இது”
“பேசித் தீர்க்க வேண்டிய விவகாரம் இது”
விஸ்வரூபம் பட பிரச்சனையில் இஸ்லாமிய சகோதரர்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல், பிரச்சனையை பேசித் தீர்க்க முன்வர வேண்டும் என கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவராலும் ‘உலக நாயகன்’ என்றழைக்கப்படும் பெருமைமிகு நடிப்புத்துறை கலைஞர் கமலஹாசன், தமிழ் நாட்டின் அரிய கலைச் செல்வம். சிறுவயதிலிருந்து இன்றுவரை வளர்ந்துள்ள ஒப்பற்ற கலைத்துறை மாற்றுச் சிந்தனையாளர், மனிதநேயர், பகுத்தறிவாளர்.
அவர் பல வகையில் புதுமையைப் புகுத்த எண்ணுபவர்; எனவே, எதிர்ப்புக் காட்டுவது பழைமையையே கெட்டியாகப் பிடித்துள்ள நம் நாட்டவருக்கு இயல்பேயாகும்.
அவரது ‘விஸ்வரூபம்’ என்ற திரைப்படத்திற்கு, இஸ்லாமிய சகோதரர்களையும், அவர்களது உணர்வுகளை சங்கடப்படுத்துவதுமான காட்சிகள் இருப்பதாகக் கூறி, ஆங்காங்கு இஸ்லாமிய சகோதரர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது சம்பந்தமாக நமது அன்பான வேண்டுகோள்: இரு சாராரும் சந்தித்து தங்களது உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி, புரிந்து கொண்டு, நட்புறவும், பல்வேறு சமூகத்தவர்கள், கலைஞர்களுக்கிடையே நல்லிணக்கமும் ஏற்படும்படிச் செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும்.
அடிப்படையில் நண்பர் கமலஹாசன் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர்; யார் மீதும் வெறுப்பு கொள்பவர் அல்ல.
எனவே, அவரது திரைப்படத்தில் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாற்று கூறப்படும் நிலையில், இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமல்ல, அவர் ஈடுபட்டுள்ள கலைத்துறை, திரையரங்க உரிமையாளர்கள் அனைவரது நல்லெண்ணத்தையும், பேராதரவினையும் பெறவேண்டியவர்.
இன்று அவர் விடுத்துள்ள உருக்கமான அறிக்கை பற்றியும் இஸ்லாமிய சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.
பேசித் தீர்வு காண முடியாத பிரச்சினையாக இது ஆகக் கூடாது.

சிரிப்பு தான் வருகிறது! அலெக்ஸ் பாண்டியன் - சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை

அலெக்ஸ்பாண்டியன் பலவித புரமோஷன்களால் ரசிகர்களிடையே ஏகத்தும் எதிர்பார்ப்பை கிளப்பியது . டிரெய்லரின் மூலம் அலெக்ஸ்பாண்டியன் கமர்ஷியல் மசாலா படம் என்பதை உணர்ந்த ரசிகர்கள் டிரெய்லரே இப்படி இருந்தால் படம் எப்படியிருக்கும் என்ற அதிர்ச்சியுடன் தான் தியேட்டருக்குள் நுழைந்தார்கள். சமீபகாலமாக தெலுங்கு ரசிகர்களை குறிவைத்திருக்கும் கார்த்தி, தெலுங்கு படங்களையே மிஞ்சும் அளவிற்கு அலெக்ஸ்பாண்டியனில் அசத்தியிருக்கிறார். படம் துவங்கிய முதல் பத்து நிமிடங்கள் ஒரே ஆக்‌ஷன் பிளாக் காட்சிகள் தான். கார்த்தி அடிக்கும் அடியில் அடியாட்கள் காற்றிலேயே பறந்து கொண்டிருக்க, அனுஷ்காவும் கார்த்தியும் ரயிலின் மேல் ஓடி பக்கா ஆக்‌ஷன் காட்சியை ரசிகர்களுக்கு எவ்வித தடங்கலுமின்றி கொடுக்கிறார்கள். அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயிலை கார்த்தி எப்படி குறுக்கு வழியில் சென்று பிடிக்கிறார் என்பது கடைசி வரை உடைக்கப்படாத சஸ்பென்ஸ். ரயில் டிக்கெட் விலையையும் ஏற்றிவிட்ட சமயத்தில் ஏன் இந்த ரயில் சேஸிங் சண்டை என்ற கேள்விக்கு பதிலாக துவங்குகிறது கதை?

ஆப்கன் போரை வீடியோகேமுடன் ஒப்பிடும் இளவரசர் ஹாரி ! இப்போ யார் பயங்கரவாதி ?

லண்டன்-: ஆப்கன் போரை வீடியோகேமுடன் ஒப்பிட்டு பேசியிருக்கும் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மனநலம் பாதித்தவராக இருக்கலாம் என்று தலிபான் இயக்கம்  கூறியுள்ளது. அவரது பேச்சுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது. ஆப்கனில் தலிபான், அல் கய்தா தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. இந்த படையில் பிரான்ஸ்,  இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் படைகளும் இடம்பெற்றுள்ளன. இங்கிலாந்து ராணுவத்தில் பயிற்சி பெற்ற இளவரசர் ஹாரியும் (28), ஆப்கனில் நடக்கும்  போரில் பங்கேற்றார். இவர் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - மறைந்த இளவரசி டயானா தம்பதியின் இளைய மகன். இங்கிலாந்து ராணுவ ஹெலிகாப்டர்  பைலட்டாக 20 வாரம் பணியாற்றிய ஹாரி, பணி முடிந்து லண்டன் திரும்புகிறார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘ஆப்கனில் உள்ள நேட்டோ தரைப்படைகளுக்கு உதவியாக ஹெலிகாப்டர்களில் சென்று தலிபான்களின் முகாம்கள்  மீது நான் தாக்குதல் நடத்தினேன். என்னைப் போல பல வீரர்களும் போரில் திறம்பட செயல்பட்டார்கள். பிளேஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ் போன்ற வீடியோகேம்  போல ஆப்கன் போர் இருந்தது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

சென்னை புத்தகக் காட்சி - அதிகம் விற்ற புத்தகங்கள்

இன்றோடு சென்னை புத்தகக் காட்சி முடிவுறப் போகிறது. நேற்றைய நிலவரத்தின்படி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு எங்கள் ஸ்டால்களில் மட்டுமான விற்பனையைக் கணக்கில் எடுத்துக்கொண்டதில் அதிகம் விற்ற புத்தகங்கள் என்ற பட்டியல் இதோ. மேலே உள்ளது அதிகம் விற்றுள்ளது. கீழே செல்லச் செல்ல விற்பனை எண்ணிக்கை குறைவு. இந்தப் பட்டியலில் இன்றைக்குப் பிறகு சில மாறுதல்கள் இருக்கலாம். நாங்கள் வாங்கி விற்கும் பிறர் பதிப்புத்துள்ள புத்தகங்களை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. இந்த ஆண்டில் இதுவரை நாங்கள் அதிகம் விற்றிருப்பது மதன் எழுதிய ‘கிமு கிபி’தான்.
  • கிமு கிபி
  • மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி
  • குமரிக் கண்டமா சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலும்
  • பிரபல கொலை வழக்குகள்
  • மோட்டார் சைக்கிள் டைரி
  • Tamilnadu 3 பெண்களை மணந்த Head Constable

    கோவையில் 3 பெண்களை திருமணம் செய்த புகாரில் செல்வபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செந்தில் குமாரை பணியிடை நீக்கம் செய்து கோவை கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
    தம்மை ஏமாற்றி மேலும் 2 பெண்களை திருமணம் செய்ததாக முதல் மனைவி கமிஷனரிடம் புகார் கூறியிருந்தார். விசாரணையில் திருமண மோசடி உறுதியானதால் கமிஷனர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்

    எந்த கலாச்சாரம்? அமெரிக்க இந்தியர்கள் குழப்பம்

    சென்னை:""அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில், எந்த கலாசாரத்தை பின்பற்றுவது என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இதனால், எதிர்கால வாழ்க்கைக்கும், சந்ததிகளுக்கும் அவர்களால் பயனில்லாமல் போகிறது,'' என, அமெரிக்காவின் ஜியார்ஜியா பெரிமீட்டர் கல்லூரி பேராசிரியர் சால்லி வர்கீஸ் கூறினார்.சர்வதேச சமூக அறிவியல் மாநாடு, சென்னை எத்திராஜ் கல்லூரி நேற்று துவங்கியது. மூன்று நாள் மாநாட்டில், சமூக அறிவியலின் புதிய கோணங்கள், அம்சங்கள், வளர்ச்சி முறைகள், புதுமை புகுத்தல் உள்ளிட்ட குறித்து, கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் விவாதிக்கின்றனர்.மாநாட்டை எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். அமெரிக்கா ஜியார்ஜியா பெரிமீட்டர் கல்லூரி பேராசிரியர் சால்லி வர்கீஸ் பேசியதாவது: அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் குழந்தைகள், இந்திய கலாசாரத்தை பின்பற்றி ஒரு வாழ்க்கையும், அமெரிக்கா கலாசாரத்தை பின்பற்றி மற்றொரு வாழ்க்கையும் வாழ்கின்றனர்.  அமெரிக்காவில் மட்டும் இந்த பிரச்சனை இல்லை தமது தாய் நாடுகளை    விட்டு வெளிநாடுகளில் குடிபுகுந்த எல்லா வெளிநாடுகளில் வசிக்கும் எல்லோருக்கும்  உள்ள பிரச்சனைதான் இது.

    விஸ்வரூபம்: அரபு நாடுகளில் இன்று ரிலீஸ் தடை! பின்லேடன் பற்றி சீன்கள் உள்ளதால் UAE அரசு மீளாய்வு!

    விஸ்வரூபம் படம் ஏற்படுத்திய சர்ச்சை, இந்தியாவுக்கு வெளியேயும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அறிவிக்கப்பட்டிருந்த பட ரிலீஸ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய ஊடக கவுன்சில் (National Media Council), விஸ்வரூபம் படத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று கூறி, ரிலீஸை தடை செய்துள்ளது. இந்த அமைப்புதான், எந்தவொரு படமும் அங்கு காண்பிக்கப்பட அனுமதி வழங்க வேண்டும். கிட்டத்தட்ட சென்சார் போர்டு போல!
    இது தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய ஊடக கவுன்சிலின் Media Content Tracking Department டைரக்டர் ஜூமா ஒபாய்ட் அல்-லீமை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, படத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.
    “விஸ்வரூபம் படம் தொடர்பாக நாம் இன்னமும் முடிவு எடுக்கவில்லை. அதனால், படத்தை இன்று ரிலீஸ் செய்ய அனுமதியில்லை. படத்தை பார்த்தோம். கதை சில சென்சிட்டிவ்வான விஷயங்களை தொட்டுச் செல்கிறது. ஒசாமா பின் லேடன் பற்றிய பிரஸ்தாபமும், இஸ்லாமிய அமைப்புகள் பற்றிய பிரஸ்தாபமும் படத்தில் உள்ளன. குண்டுவெடிப்புகளும், கொலைகளும், இவற்றுடன் தொடர்பாக காண்பிக்கப்படுகின்றன.
    இவற்றை மீளாய்வு செய்ய எமக்கு கால அவகாசம் தேவை. எமது குழுவினர் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒருதடவை இந்தப் படத்தை பார்த்தபின் முடிவு எடுப்போம்” என்றார் viruvirupu.com

    பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை பரிந்துரை

    புதுடில்லி :" பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு, அரசின் செயலின்மையே காரணம். இந்த விஷயத்தில், அரசு, போலீஸ் துறை, பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புமே, செயல் இழந்து, உணர்ச்சியற்று இருப்பது, கவலை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சட்டம் தேவை' என, வர்மா கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
    AnandaRajan - Singapore,சிங்கப்பூர்

    AnandaRajan அவ்வோலோதான். ஏதோ சுட்டுருவங்க, கொன்னுருவங்கன்னு நினைச்சோம் இனிமே ஒருத்தரும் இது பத்தி பேச மட்டங்க. கற்பளிச்சவங்களும், ஒரு நாலஞ்சு மாசம் கழிச்சு வெளிய வருவாங்க. மறுபடியும் கற்பளிப்பங்க. நம்மாள்களும் மறுபடியும் இது மாதிரி கத்துவாங்க நீதியே செத்து போச்சு இந்தியாவுல. பெண்கள் மட்டுமல்ல இனி யாராலும் இந்தியாவுல நிம்மதியா வாழ முடியாது. இப்படியே கமிஷன் போடுவாங்க, அவங்களும் அரசுக்கு சாதகமா ஒரு அறிக்கை குடுப்பனக பேசாம வெல்லைகாரன்கிட்டயெ இந்த நாடு இருந்திருக்கலாம், அவன் கிட்ட இருந்து காப்பாத்தி இந்த குண்டங்க கிட்ட குடுதுட்டங்க போங்கடா நீங்களும் உங்க நீதியும்.

    பல் மருத்துவ கல்லூரிகளில் சி.பி.ஐ., அதிரடி சோதனை

    சென்னை: முகப்பேர் தாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட நான்கு இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம், மேல்வருத்தூரில் உள்ள, ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில், முதுநிலை படிப்பு தொடங்குவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில், கல்லூரி நிர்வாகிகள் ராமபத்திரன், கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ., பழனி, பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர் முருகேசன் ஆகியோர், ஜன., 7 ல் கைது செய்யப்பட்டனர்.
    இந்த வழக்கில், இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் நீண்ட கால உறுப்பினரும், தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சில் தலைவருமாக இருந்த குணசீலனுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, ஜன., 18 ல், குணசீலன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படார். அவரிடம் இருந்து, 75 லட்ச ரூபாய பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
    பல் மருத்துவ கவுன்சிலில் குணசீலன் நீண்ட காலம் உறுப்பினராக இருந்ததால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் உள்ள கல்லூரி நிர்வாகங்களிடமும், பணம் பெற்றிருக்கலாம் என்ற கோணத்திலும் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    விஸ்வரூபம் தமிழக அரசு திடீர் தடை


    visvarupamசென்னை: கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் நாளை தமிழகம் முழுவதும் வெளியாக இருந்தது. இந்நிலையில், விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதனால், அந்த படத்தை வெளியிட கூடாது என்று முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதை தொடர்ந்து விஸ்வரூபம் படத்தை முஸ்லிம் அமைப்புகளுக்கு கமல்ஹாசன் போட்டு காட்டினார். படத்தை பார்த்த அமைப்பினர் முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிராக படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.

    புதன், 23 ஜனவரி, 2013

    கமலஹாசனை மாபெரும் தியாகி என்று சித்தரிக்கும் அவஸ்தை

    கமல்ஹாசன்
    நாளை மறுநாள் திரையிடப்படும் இப்படத்தை அனுமதிக்கக் கூடாது என்று இசுலாமிய அமைப்புகள் அறிவித்திருக்கும் நிலையில் சற்று பின்னே சென்று பார்க்கலாம்.
    முதலில் கமலஹாசனை மாபெரும் தியாகி என்று சித்தரிக்கும் அவஸ்தையை பார்ப்போம். கமல் சினிமாவில் சம்பாதித்ததை முழுக்க இந்தப்படத்தில் செலவழித்திருக்கிறார், அந்த அளவு சினிமாவை நேசிக்கிறார், தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு போகத் துடிக்கிறார் என்று கேழ்வரகில் நெய் வடிவதாக சத்தியம் செய்கிறார்கள். விசுவரூபம் தயாரிப்புச் செலவு 90 கோடி என்றால் கமல் இவ்வளவு வருடங்களாக இம்புட்டுதான் சம்பாதித்தார் என்பது நம்பும்படியாக இல்லை. விட்டால் டீக்காசு கூட இல்லாமல் கமல் கஷ்டப்படுகிறார் என்று அழுதாலும் அழுவார்கள்.
    தொலையட்டும். சினிமா என்பது கலையோ இல்லை உன்னத விழுமியங்களை வளர்க்கும் சமூக நடைமுறையோ இல்லவே இல்லை. அது அப்பட்டமான வியாபாரம். மாபெரும் மூலதனத்தை கோரி நிற்கும் முதலாளித்துவத் தொழில். சரியாகச் சொல்லப்போனால் கிச்சு கிச்சு மூட்டி உணர்ச்சிகளை சுரண்டி கோடிகளில் வயிறு வளர்க்கும் ஒரு பிரம்மாண்டமான ஜந்து. ஒருவர் சினிமாவில் இருக்கிறார் அல்லது சினிமாவுக்கு செல்ல ஆசைப்படுகிறார் என்றால் அதன் பொருள் அவர் கலைத்தாகம் கொண்ட யோகி என்பதல்ல. சினிமா தரும் அளப்பரிய பணம், புகழ், போதை, சொத்து, அதிகாரம், பிரபலம் இவைதான் ஒரு நபர் சினிமாவில் இருப்பதற்கு அடிப்படையான காரணம்.

    பவர்ஸ்டார்! காதுகுத்து வளைகாப்பு பூப்புனித நீராட்டுவிழா என எதுநடந்தாலும் ஆஜராகி

    லத்திகா திரைப்படத்தை முதல்நாள் முதல் ஷோ தியேட்டரில் காசுகொடுத்து டிக்கட் வாங்கி படம் பார்த்த இரண்டு பேர் தமிழ்நாட்டிலேயே நானும் நண்பர் லக்கிலுக்குமாகத்தான் இருக்க வேண்டும்.
    நான் குடியிருக்கும் முகப்பேர் பகுதியில்தான் பவர்ஸ்டாரின் அட்ராசிட்டி முதன்முதலாக தொடங்கியது. ஊருக்குள் காதுகுத்து வளைகாப்பு பூப்புனித நீராட்டுவிழா என எதுநடந்தாலும் வான்டடாக ஆஜராகி வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தார். வேண்டாம் என்பவருக்கும்கூட கையபிடித்து இழுத்து மிரட்டியாவது உதவிகள் செய்தவர் அண்ணல் பவர். இவருடைய வள்ளல்தன்மையை பார்த்து பயந்து ஓடினவர்களும் கூட உண்டு. அண்ணாநகர் சரவுண்டிங்கில் எங்கு பார்த்தாலும் அவருடைய லத்திகா,ஆனந்த தொல்லை,மன்னவா,தேசியநெடுஞ்சாலை முதலான பட போஸ்டர்கள் எப்போதும் காணகிடைக்கும். அம்மன் கோயில் திருவிழாவில் கூழ் ஊற்றக்கூட ஸ்பான்சர் செய்து எங்கள் பகுதி மக்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்தவர் பவர் ஸ்டார். athishaonline.com

    காவிரிக்காக புதுசு புதுசா வழக்கு ! எதற்கு ?

    ‘காவிரி நீர் இல்லாமல் தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் குறுவை/சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கே காரணம்’ என்று உச்சநீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடர உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
    காவிரி நதி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு உச்ச நீதி மன்ற தீர்ப்புகளையும் காவிரி நடுவர் மன்ற முடிவையும், பிரதமர் தலைமையிலான காவிரி நதி ஆணைய உத்தரவுகளையும் மதிக்காமல் திமிராக நடந்து கொள்கிறது.
    • 2012 செப்டம்பர் 19ம் தேதி காவிரி நதி ஆணையத்தின் தலைவரான பிரதமர் மன்மோகன் சிங் ‘செப்டம்பர் 21 முதல் தினமும் தமிழ்நாட்டுடனான பிலிகுண்டு எல்லையில் விநாடிக்கு 9000 கன அடி விட வேண்டும்’ என்று உத்தரவிட்டார். அதை கர்நாடகா மதிக்கவில்லை.
    • தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
    • செப்டம்பர் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசை கண்டித்து நதி நீர் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்துமாறு கூறியது.10 நாட்கள் மட்டும் விநாடிக்கு 5,000 கன அடி நீர் விட்ட கர்நாடகா அரசு உச்ச நீதி மன்ற உத்தரவையும், பிரதமர் உத்தரவையும் மீறி அக்டோபர் 8ம் தேதி நீர் விடுவதை நிறுத்தியது.

    விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்

    Tamil
    றுதியாக, உறுதியாக அல்லது ஒருவழியாக ‘விஸ்வரூபம்’ வெள்ளிக்கிழமை (25-1-2013)  வெளியாக இருக்கிறது.
    ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிடுவதில் ஏற்பட்ட சர்ச்சையில், ‘தியேட்டர், டி.டிஎச்’ என்று கமல் செய்த திரைக்கதை; ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவிற்கு பரபரப்பாக அமைந்தது.
    ‘தமிழ் சினிமாவின் பல புதுமைகைளுக்கு முன்னோடி’ என்று கமலை புகழ்கிறார்கள்; அவரின் ரசிகர்களாகவும் இருக்கிற இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள்.
    அதோடு இதையும் அவர்கள் சேர்த்து சொல்லலாம்; ‘படம் வெளியாவதற்கு முன் இதுபோன்ற விளம்பர யுக்திகளை ஹாலிவுட்டில் கூட இதுவரை யாரும் செய்ததில்லை. உலக சினிமாக்களுக்கே புதிய விளம்பர யுக்தியை அறிமுகம் செய்திருக்கிறார் உலக நாயகன்’ என்று.

    கமலின் விஸ்வரூபம்: “இஸ்லாத்துக்கு எதிராக தொடக்கம் முதல் இறுதி வரை காட்சிகள்”

    Viruvirup
    கமலின் விஸ்வரூபம் படத்துக்கு அடுத்த பிரச்னை. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பும், “விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களையும், திருக்குரானையும் இழிவுபடுத்தி சித்திரித்திருப்பதால் இப்படத்தை வெளியிட விட மாட்டோம். தடுத்து நிறுத்துவோம்” என  எச்சரித்துள்ளன.
    மேலும் இதுதொடர்பான அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கும் அவை அழைப்பு விடுத்துள்ளன.
    விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்கள் இருக்கலாம் என ஏற்கனவே இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இருப்பினும் இப்படம் இஸ்லாமியர்களைப் பெருமைப்படுத்துவதாகவே அமையும் என்று கமல்ஹாசன் கூறினார். அதையே இப்போதும் கூறி வருகிறார்.
    இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்பினர் விஸ்வரூபம் படம் இஸ்லாமையும், இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
    தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், “படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது” என்று தமது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
    “திருக்குரான், தீவிரவாதிகளின் கையேடு என்பதைப் போல் விஸ்வரூபம் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிக்கின்றன என்பது போலவும் படத்தில் சில காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன” என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், “கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

    தீவிரவாதிகளுக்கு RSS தொடர்பு! இதோ 10 பேரின் பெயர்கள்

    viruvirupu

    இதோ ஆதாரம்!

    இதோ ஆதாரம்!
    சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு உள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அவற்றில் தொடர்புடைய 10 பேர்களின் பெயர்களையும் வெளியிட்டு உள்ளது.
    “தீவிரவாதம் தொடர்பாக குற்றங்களில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்புகள் உள்ளன” என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, கூறியிருந்தார். அவரது அந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. “காங்கிரஸ் கட்சி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை அமைச்சர் ஷிண்டேவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என்று, பா.ஜ.க. வற்புறுத்தி வருகிறது.
    இந்த நிலையில், சுஷில்குமார் ஷிண்டே கூறியது சரியானதே. தீவிரவாதத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்கு தொடர்பு உள்ளது நிஜம்தான் என மத்திய அரசு கூறியுள்ளது.
    மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், “தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் (அஜ்மீர்) தர்கா ஷரீப்பில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்குதல்களில், குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 10 பேர் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன’’ என்று தெரிவித்தார்.
    சொன்னதோடு நிற்காமல், 10 பேருடைய பெயர், விவரங்களையும் ஆர்.கே.சிங் வெளியிட்டார். இதோ, இவர்கள்தான் அந்த 10 பேர்:
    சுனில் ஜோஷி (மரணம்), சந்தீப் டாங்கே (தலைமறைவு), லோகேஷ் சர்மா (கைது), சுவாமி அசேமானந்த் (கைது), ராஜேந்தர் என்கிற சமுந்தர் (கைது), முகேஷ் வசானி (கைது), தேவேந்தர் குப்தா (கைது), சந்திரசேகர் லெவே (கைது), கமல் சௌகான் (கைது), ராம்ஜி கல்சங்ரா (தலைமறைவு).
    இவர்கள் 10 பேரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் வெவ்வேறு விதங்களில் இணைந்து செயல்பட்டு வந்தவர்கள் எனவும், ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

    BJP பா.ஜ., தலைவராகிறார் ராஜ்நாத் சிங்

    புதுடில்லி : ஊழல் புகாரில் சிக்கியுள்ள, நிதின் கட்காரியை, பா.ஜ., தலைவராக மீண்டும் தேர்வு செய்ய, கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர் போட்டியிலிருந்து விலகினார். பா.ஜ.,வின் அடுத்த தேசிய தலைவராக, உ.பி., மாநில முன்னாள் முதல்வர், ராஜ்நாத் சிங், இன்று தேர்வு செய்யப்படுகிறார்.
    ஆர்.எஸ்.எஸ்.,வலியுறுத்தல் :t;மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நிதின் கட்காரி, கடந்த மூன்று ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக உள்ளார். அவரின் பதவிக் காலம், கடந்த டிசம்பர் மாதமே முடிவடைந்து விட்டது. ஆனாலும், புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை, பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.இந்நிலையில், பா.ஜ.,வின் அடுத்த தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. இந்தத் தேர்தலில், நிதின் கட்காரியை மீண்டும் தேர்வு செய்ய, அத்வானி உட்பட, கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.நிதின் கட்காரிக்கு சொந்தமான நிறுவனத்தில், பல நிறுவனங்கள் போலி பெயரில் முதலீடு செய்திருப்பதாக, சமீபத்தில் புகார்கள் எழுந்ததே இதற்கு காரணம். இருந்தாலும், "கட்காரியை மீண்டும் தலைவராக்க வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு வலியுறுத்தியது.

    சவூதி அரேபியாவுக்கு எதிராக பிக்குகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

    சவூதி அரேபியாவுக்கு எதிராக தேசிய பிக்குகள் முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
    Phikku demoசவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் இற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையை கண்டித்தும் வேலை வாய்ப்புகளுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்ப வேண்டாம் எனக் கோரியும் தேசிய பிக்குகள் முன்னணி கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியது. கொழும்பு நகர மண்டபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெருந்திரளான பிக்குகள் ஜனாதிபதி மாளிகையை நோக்கிப் பேரணியாக சென்றனர். சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் சவூதி அரேபியாவினால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை கண்டிக்கிறோம், இனிமேலும் இதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, சவூதிக்கு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகிறோம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தேசிய பிக்குகள் முன்னணியினரின் கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை ஜனாபதிக்கு கையளித்தனர். thenee.com

    ரிசானாவின் குடும்பத்தினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பபு

    ரிசானா நபீக்கின் குடும்பத்தினரை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு 10 இலட்சம் ரூபா நிதியை வழங்கியுள்ளார். மேலும் ரிசானாவின் சகோதரிக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் திருகோணமலை மாவட்ட அலுவகத்தில் வேலை செய்வதற்கான நியமனக் கடிதமும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.


    மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில் ரசீது: தேர்தல் ஆணையம்

    புதுடில்லி: "மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் ஓட்டை பதிவு செய்ததும், வாக்காளர்களுக்கு ஓட்டளித்ததற்கான ரசீது வழங்குவது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்' என, சுப்ரீம் கோர்ட்டில், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், வாக்காளர்கள் ஓட்டை பதிவு செய்ததும், ரசீது கிடைக்கும்படி செய்ய, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    Linux பயன்படுத்துவோருக்கான சில சிறந்த Browsers

    WINDOWSக்கு அடுத்தபடியாக LINUX தான் மக்களால் அதிகம் பயன்படுத்த படும் இயங்குதளம்.லினக்ஸ் பயன்படுத்துபவர்களும், அந்த சிஸ்டத்திற்கென உள்ள அனைத்து பிரவுசர்கள் குறித்து அறிந்திருப்பதில்லை. ஒன்றிரண்டு பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருப்பது பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்கள் மட்டுமே. லினக்ஸ் இயக்கத்தில் இயங்கக் கூடிய மற்ற பிரவுசர்கள் குறித்தும் இங்கு காணலாம். குரோம்: எந்த சந்தேகமும் இன்றி, குரோம் பிரவுசர் தான் நல்ல வேகத்தில் இயங்கக் கூடிய ஒரு பிரவுசராகும். லினக்ஸ் சிஸ்டத்தில் இயங்க குரோம் மற்றும் குரோம் பிரிமியம் (Chrome and Chromium Browser) என இரண்டு பிரவுசர்கள் கிடைக்கின்றன. குரோம் பிரவுசரின் ஓப்பன் சோர்ஸ் பிரவுசரே குரோமியம் பிரவுசராகும். இரண்டும் ஒரே மாதிரியான வசதிகளை அளிக்கின்றன. இந்த பிரவுசரைப் பெற http://www.google.com/chrome/intl/en/w00t.html என்ற முகவரி யில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

    செவ்வாய், 22 ஜனவரி, 2013

    விநோதினியை சிதைத்த ஆணாதிக்க அமிலம்!

    விநோதினிவினவு,
    ‘பெண்ணின் வாழ்க்கை ஆணின் காலடியில்தான்’ என்ற பாடத்தை கற்பிக்கின்றனர் ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதிகள்

      விநோதினி
      ருத்துவமனையில் இருந்தவாறு 64 நாளாக தன் உயிருக்காக  போராடிக் கொண்டிருக்கும் வினோதினி என்ற பெண்ணின் மீது அமிலத்தை வீசி, காதல் என்ற பெயரால் அவள் முகத்தை மட்டுமல்ல, அவள் வாழ்க்கையையே அழித்திருக்கிறான் ஒரு இளைஞன்.
      விநோதினிதன் ஒரே மகளுக்கு நிகழ்ந்த துயரத்தைக் கண்டு வெதும்பும் வினோதினியின் தந்தை ஜெயபால் காரைக்காலில் ஒரு நிறுவனத்தின் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். பல கஷ்ட நஷ்டங்களுடன், சொந்த நிலத்தை விற்று, கடன்பட்டு விநோதினியை படிக்க வைத்துள்ளார். ‘மகள் நல்ல வேலைக்குப் போனால் தன் குடும்பமே முன்னுக்கு வரும், அவளுக்கும் நல்ல வாழ்க்கை கிட்டும்’ என்ற எல்லா கனவுகளையும், ஏன் அப்பெண்ணின் எதிர்காலத்தையும் திருப்பிப் போட்டிருக்கிறது இச்சம்பவம்.
      23 வயதான வினோதினி குடும்பத்தில் முதல் முறையாக உயர் கல்வி பயின்றவர். பி.டெக். (ஐ.டி) படித்து, 3 மாதங்களாக சென்னையிலுள்ள சைதாப்பேட்டையில் ஒரு விடுதியில் தங்கி ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

      திரிஷா : பெண்கள் மது குடிப்பது அவரவர் விருப்பம்

      வருத்தம் தெரிவிக்க மறுத்த திரிஷாவுக்கு மதுபாட்டில்கள் அனுப்ப இந்து மக்கள் கட்சி என்ற பெயர்பலகை வைத்திருக்கும்  பயங்கர வாதிகள் அல்லது தீவிர வாதிகள் முடிவு`
      சமர்' படத்தில் திரிஷா மது அருந்துவதுபோல் காட்சிகள் உள்ளன. இதுபற்றி அவரிடம் கேட்டபோது நான் மது அருந்துவது போல் சீன்கள் இடம் பெற்ற படங்கள் ஹிட்டாகியுள்ளன. எனவே `சமர்' படத்திலும் அக்காட்சி இருக்க வேண்டும் என்பதற்காக மது அருந்துவதுபோல் நடித்தேன் என்றார். பெண்கள் மது குடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அது அவரவர் விருப்பம் என்று பதில் அளித்தார். திரிஷாவின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. தமிழ் கலாசாரத்துக்கு எதிராக அவர் பேசி உள்ளதாக கண்டனம் எழுந்துள்ளது. அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். பேசியதை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத் தப்பட்டன.

      அடுத்த கட்டமாக மது பாட்டில்களை பார்சலில் அனுப்பி எதிர்ப்பு தெரிவிக்க இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
      ’’மது அருந்துவது குறித்து திரிஷா சொன்னவை பண்பாட்டுக்கு எதிரான செயல். பெண்களை மது அருந்த தூண்டுபவை. இதற்கு வருத்தம் தெரிவிக்க கேட்டும் திரிஷா செவி சாய்க்கவில்லை. எனவே அவருக்கு மது பாட்டில்கள் பார்சலில் அனுப்பப்படும். அதோடு மதுவின் தீமையை விளக்கும் புத்தகமும் வைத்து அனுப்பப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

      Jeya coming 22 நாட்களும் ஹாயாக இருந்த 32 அமைச்சர்களும் திக்திக்!

      கொடநாட்டில் இருந்து முதல்வர் திரும்புகிறார்! அமைச்சர்கள் அமாவாசை பார்த்து திக்திக்!!

      Viruvirupu
      முதல்வர் ஜெயலலிதா நாளை மாலை சென்னை வந்து சேர்வார் என தமிழக அரசு தலைமைச் செயலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. 22 நாட்களின் பின், மாநில தலைநகருக்கு திரும்புகிறார் அவர்.
      முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து இம்மாதம் 1-ம் தேதி கொடநாடு புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு சென்றார். அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை அவர் கவனித்து வந்தார்.
      கொடநாட்டில் இருந்தபடி அவர் முதல்வர் பணிகளை செய்வது குறித்து, தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்த போதெல்லாம், அவர்கள்மீது, அவதூறு வழக்குக்கள் பாய்ந்தன. பல வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. மேலும் சில வழக்குகள் இனிமேல்தான் போடப்படவுள்ளன.
      அதே நேரத்தில், கடந்த 22 நாட்களும், அமைச்சர்கள் மன அழுத்தம் ஏதுமின்றி, ஹாயாக இருந்தார்கள். அம்மா சென்னையில் இருந்தால்தானே, புதிய பட்டியலுடன் ராஜ்பவனுக்கு புறப்பட்டு செல்கிறாரா என்பதில் கண் வைத்திருக்க வேண்டும்?
      22 நாட்கள் கொடநாட்டில் இருந்து அரசு பணிகளை கவனித்து வந்த முதலமைச்சர் ஜெயலலிதா நாளை (புதன்கிழமை) மதியம் சென்னை திரும்புகிறார். கொடநாட்டில் இருந்து 2.30 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் வரும் அவர், பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.
      22 நாட்களும் ஹாயாக இருந்த 32 அமைச்சர்களும், அடுத்த அமாவாசை எப்போது என்று காலன்டரில் தேடத் தொடங்கியுள்ளார்கள். அமாவாசையின்போது அமைச்சர்களை மாற்றுவதே அம்மாவின் வழக்கம்.

      சிவகிரியில் கல்லூரி மாணவி எரித்துக்கொலை 1000 கடைகள் அடைப்பு

      சிவகிரியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தையொட்டி 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
      ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கோட்டப்புதூரை சேர்ந்த விவசாயி நல்லசிவத்தின் இளைய மகள் நந்தினி (19).  கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த இவரது சடலம் பாதி எரிந்த நிலையில் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பின்பகுதியில் நேற்று (திங்கள்கிழமை) கிடந்தது.உடலில் உள்ள காயங்களை பார்க்கும்போது யாரோ சிலர் இவரை, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக சிவகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      Hariyana Ex Cm சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை

       முன்னாள் துணைப்பிரதமரும் ஹரியானாவின் முன்னாள் முதல்வருமான தேவி லாலின் மகன் சௌதலாதான் பின்னாளில் ஹரியானாவின் முதலமைச்சராக வந்தார் தற்போது அதே சௌதலாவுக்கும் அவரது மகன் அஜய்க்கும் ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பது அதிர்ச்சியாக உள்ளது,.
      ஆசிரியர் நியமன வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சவுதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை கேட்டதும் சவுதாலா ஆதரவாளர்கள் நீதிமன்றத்தின் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக சவுதாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹரியானா மாநிலத்தில் 2000ம் ஆண்டு இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரான ஓம்பிரகாஷ் சவுதாலா முதல்வராக இருந்த போது 3 ஆயிரம் ஆசிரியர்க நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது என்பது புகார். இந்த புகார் மீது சிபிஐ வழக்குப் பதிவு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உள்ளிட்ட 55 பேரும் குற்றவாளிகள் என டெல்லி சிபிஐ நீதிமன்றம் கடந்த 17ம் தேதி தீர்ப்பளித்தது.உடனடியாக அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறியிருந்தார். அதன்படி இன்று காலை ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் அதிகாரிகள் சஞ்சீவ் குமார், வித்யாதார் ஹெர்சிங் உட்பட 10 பேருக்கும் 10 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஏன் பணம் பதவி போன்றவை சரியாக வேலை செய்யவில்லை ?

      கலைஞர்: ரிசானாவின் பெற்றோர் வேதனையையும் சகோதரிகளின் துயரத்தையும் யாரால் போக்கிட முடியும்

        We failed you Rizana!

      ரிசானாவின் பெற்றோர் வேதனையையும் சகோதரிகளின் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட ரிசானா நபீக்கைப் பெற்று, வளர்க்க வாய்ப்பில்லாமல், அனுப்பி வைத்த அந்தப் பெண்ணின் பெற்றோர் வேதனையையும் மற்றும் சகோதரிகளின் துயரத்தையும் யாரால் போக்கிட முடியும்?'' என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.மரண தண்டனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி முரசொலியில் திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் '' உலகம் முழுவதிலும் தூக்குத்தண்டனை என்பது அறவே ஒழிக்கப்பட வேண்டுமென்று நான் கூறி வருகிறேன். அதைப்பற்றி பலவிதமான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்து கூறப்பட்ட நேரத்திலேகூட, அவர்களுக்கு தனிமைச்சிறை ஆயுள் முழுவதும் வழங்கலாம் என்ற கருத்தினைத் தான் நான் தெரிவித்தேன்.
      தூக்குத்தண்டனை கூடாது என்ற என் எண்ணவோட்டத்திற்கு பதில் அளிக்கின்ற வகையில் ஒரு சம்பவம். அந்தச்சம்பவம் பற்றி பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் விரிவாக எழுதியிருக்கிறார். இதிலே தூக்குத் தண்டனையை விட கொடுமையான தண்டனை! அதுவும் ஓர் இளம் பெண்ணுக்கு! அந்தப்பெண் செய்த தவறு என்ன? அனைவரின் உள்ளத்தையும் உலுக்குகின்ற அந்தக் கோரக்கொடுமை இதோ! 

      டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எண்ணங்கள் youtube

      சென்னை : மக்கள் சக்தி இயக்க தலைவர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நேற்று உடல் நல குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. இவரது மனைவி சீதா லட்சுமி 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். சித்தார்த்தா, அசோகன் என்ற 2 மகன்களும், கமலா என்ற மகளும் அமெரிக்காவில் பணி புரிகின்றனர். உதயமூர்த்தி தனது அண்ணன் மகன் ஜெகதீசனுடன், நீலாங்கரை அடுத்த அக்கரை விஜிபி லேஅவுட் 5வது லேனில் வசித்து வந்தார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை விலா நகரில் 1928ல் பிறந்தவர். அண்ணாமலை பல்கலை, கிண்டி பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்துள்ளார். 1989ல் மக்கள் சக்தி இயக்கம் தொடங்கி நடத்தி வந்தார். நேற்று முன்தினம் ரத்த அழுத்தம் குறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று காலை 10.30 மணிக்கு மரணம் அடைந்தார் 

      வகுப்பறையில் தலைமை ஆசிரியர்கள் நிர்வாணமாக உல்லாசம்


      வால்பாறை அடுத்துள்ள காடம்பாறையில் பணிபுரிந்து வந்த மின்வாரிய இன்ஜினியர் சுப்ரமணியம், சமீபத்தில், செக்ஸ் புகாருக்கு உள்ளாகி கைதானார். இவரிடம் இருந்து எண்ணற்ற பெண்களின் ஆபாசப் படக் காட்சிகள், "சிடி'க்களாக பறிமுதல் செய்யப்பட்டன. இவரே வீடியோ எடுத்திருந்ததும் அம்பலமானது.இந்த அசிங்கமே இன்னும் மறையாத நிலையில், அடுத்ததாக, வால்பாறை தாசில்தார் குணாளன் மீது, அலுவலகத்தில் தற்காலிக எழுத்தராக பணிபுரிந்து வந்த காளீஸ்வரி என்ற பெண், செக்ஸ் புகார் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இவ்விரு சம்பவங்களின் பரபரப்பே அடங்காத நிலையில், மூன்றாவது சம்பவமாக, பள்ளி ஆசிரியர், ஆசிரியையின் ஆபாச காட்சிப் படங்கள் இணையதளத்தில் வெளியாகி, போராட்டத்தில் மக்கள் குதிக்கும் அளவுக்கு, பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.கோவை மாவட்டம், வால்பாறையில், சோலையாறு எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது; 150 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், வேறு ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன், நிர்வாணமாக இருப்பது போன்ற ஆபாசப் படங்கள், சமீபத்தில் இணையதளம் ஒன்றில் வெளியானது.

      கனிமொழி: ஜெயலலிதாவுக்கும், தமிழகத்துக்கும் என்னங்க உறவு?

      Viruvirupu
      “அந்தம்மா எங்கோ கொடநாட்ல இருக்காப்ல”

      “அந்தம்மா எங்கோ கொடநாட்ல இருக்காப்ல”
      “ஜெயலலிதாவுக்கும், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் என்ன உறவு இருக்கிறது?” இவ்வாறு சந்தேகம் எழுப்பியுள்ளார், கனிமொழி எம்.பி.
      தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் நாட்டுப்புறக் கலைவிழா திருவொற்றியூர் விம்கோ நகர் விளையாட்டு திடலில் நடந்தபோது, அதில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி எம்.பி., “கடந்த தி.மு.க. ஆட்சியில், தை திருநாளை தமிழர்களின் புத்தாண்டாக கருணாநிதி அறிவித்தார். ஆனால் ஆட்சி மாறியதும் பழையபடி மாற்றி விட்டார்கள்.
      தமிழர்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி. ஜெயலலிதாவுக்கும், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் என்ன உறவு இருக்கிறது? தமிழகத்தை இருண்ட நிலைக்கு தள்ளிய பெருமையை தவிர வேறொன்றும் இல்லை.
      தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. மின்சாரம் இன்றி சிறிய, பெரிய நிறுவனங்கள் நடத்த முடியாமல் நஷ்டத்தில் உள்ளன. தொழிலாளர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை பற்றி கவலைப்படாமல் கொடநாட்டில் இருந்து கொண்டு ஆட்சி நடத்துகிறார்” என்றார்.
      ஆ! அம்மா கொடநாட்டில் தங்கியிருந்து ஆட்சி நடத்துவது பற்றி இவரும் பேசிவிட்டாரா? அவதூறு வழக்கு பாய வேண்டுமே!

      கூட்டணி அமைக்க வேண்டும் எனும் நோக்கில் அ.தி.மு.க

      சென்னை: "மத்திய அரசில் குழப்பம் ஏற்பட வேண்டும். அதை வைத்து, குழம்பிய குட்டையில், மீன் பிடிக்க முயல வேண்டும் என்ற எண்ணத்தில், அ.தி.மு.க.,வும், சில கட்சிகளும் உள்ளன' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை: இம்மாதம், 24ம் தேதி, மத்திய அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ஆர்ப்பாட்டம் தொடர்பான ஜெயலலிதா அறிக்கையில், "மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்து கொண்டு, தமிழகத்திற்கு தொடர்ந்து, துரோகம் இழைத்து வரும் கருணாநிதிக்கு, என் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்கிறார்.குழம்பிய குட்டையில் மீன் :காங்., கட்சியின் கூட்டணிக் கட்சி என்ற முறையில், கூட்டணிக்கு துரோகம் செய்யாமல், மத்திய அரசுக்கு உறுதுணையாக தி.மு.க., இருந்த போதிலும், தமிழகத்திற்கான பிரச்னைகள் என்று வரும் போது, தி.மு.க., அவற்றைக் கைவிட்டது உண்டா? அதற்காக, ஓங்கிக் குரல் கொடுக்காமல் இருந்தது உண்டா? ஆனால், ஜெயலலிதாவுக்கும், அவரோடு லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் எனும் நோக்கில், அவரை மறைமுகமாக ஆதரிக்கும், சில கட்சிகளுக்கும், காங்., கூட்டணியிலிருந்து, எப்படியாவது தி.மு.க., விலகி விட வேண்டும்.
      மத்திய அரசில் குழப்பம் ஏற்பட வேண்டும். அதை வைத்து, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல வேண்டும் என்பது தான், அவர்களின் உள்ளார்ந்த எண்ணம். அதை தி.மு.க., நன்றாகவே உணர்ந்துள்ளது. இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார் dinamalar,com

      வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய தடயம் இலங்கையில் கண்டுபிடிப்பு

      உலகில் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய பல தேடல்களும் சுவாரசியமான விடயங்களும் அங்காங்கே பதிவு செய்யப்பட்டிருந்தாலும் முதல் தடவையாக வேற்றுக்கிரக உயிரனங்கள் பற்றிய உறுதியான தடயம் ஒன்றை விஞ்ஞானிகள் இலங்கையில் இருந்து கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சிக்குழு ஒன்று தெரிவித்துள்ளது. இதனை அரலகன்வில பிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எரிகல் துண்டுகளை ஆராய்ச்சி செய்த பிரித்தானிய - இலங்;கை ஒன்றிணைந்த ஆராய்ச்சிக்குழுவே தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரஷ்யா ருடே இணையத்தளத்தில் பிரசுரமாகியுள்ள கட்டுரை ஒன்றில் இது தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பக்ஹின்காம் பல்கலைக்கழகத்தின் வானசாஸ்திரவியல் பேராசிரியர் சந்திரா விக்கரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இதனை கண்டுபிடித்திருக்கின்றனர் என பிரபல ரஷ்யா ருடே இணையத்தளம் தெரிவித்துள்ளது. இதேவேளை வேற்றுக்கிரக உயிரனங்களின் இருப்பு தொடர்பான கோட்பாட்டை உறுதி செய்வதற்குரிய தடயம் இலங்கையில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜேர்னல் ஒவ் கொஸ்மொலொஜி என்ற சஞ்சிகையும் ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி நாம் வாழும் பிரபஞ்சத்தில் உயிர்கள் உருவாவதற்கு வேற்றுக்கிரக மற்றும் எரிகல் தொகுதிகளே அடிப்படையாக அமைந்துள்ளன என்று பிரித்தானிய - இலங்;கை ஒன்றிணைந்த ஆராய்ச்சிக்குழு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளுக்கமைய பிரபஞ்சத்தில் ஏனைய கிரகங்களில் உள்ள உயிர்கள் பூமிக்கு வந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை பூமிக்கு வெளியில் உயிரினங்கள் உள்ளன என்பதை பொலநறுவை எரிகல் உறுதிசெய்துள்ளது என சந்திரா விக்கிரமசிங்க தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. Written By ilankainet

      வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்

      இயக்குநர் பாலாஜி சக்திவேலின் படமான வழக்கு எண் 18/9 படம், தெற்காசிய திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதினைப் பெற்றுள்ளது. பாரிஸில் நடைபெற்ற தெற்காசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், படத்தின் இயக்குநர் பாலாஜி சக்திவேல், தயாரிப்பாளர் லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டு விருதினை பெற்றுக் கொண்டனர். இந்த திரைப்பட விழாவில் வழக்கு எண் 18/9 படம் திரையிடப்பட்டதும், அதனை பார்த்த பார்வையாளர்களில் பெரும்பாலானோரை கவர்ந்ததே இவ்விருதுக்கு இப்படம் சற்றும் குறைச்சல் இல்லை என்பதை நிரூபித்தது. ஆசிய நாடுகளில் திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் மிக முக்கிய விருதான தெற்காசிய திரைப்பட விருதினை பெற்ற இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்கும், வழக்கு எண் படக் குழுவினருக்கும் பல இடங்களில் இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.thenee.com

      திங்கள், 21 ஜனவரி, 2013

      நக்கீரனின் சரித்திர சாதனை சட்டமன்றம் VS பத்திரிகை சுதந்திரம்!


              2012 ஜனவரியில் ஜெயலலிதா பற்றி வெளியான ஒரு செய்திக்காக நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதும், குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகியவை துண்டிக்கப்பட்டதும் ஆசிரியர் மற்றும் இணையாசிரியர் மீது தமிழகம் முழுவதும் 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. அதே செய்திக்காக சட்டசபை செயலாளர், சட்டசபை உரிமை மீறல் குற்றம் புரிந்ததாக விளக்கம் கேட்டு நக்கீரன் ஆசிரியர் மற்றும் இணையாசிரியருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டி, தங்களது சார்பில் வழக்கறிஞர்களை அனுப்பி சட்டசபை செயலாளர்களுக்கு பதில் அளித்தனர் ஆசிரியர் மற்றும் இணையாசிரியர். ஆனால் சட்டசபை செயலாளரோ, சட்டசபையில் வழக்கறிஞர் ஆஜராக முடியாது என்றும், தாங்கள்தான் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் வழக்கறிஞர் ஆஜராவது எந்த நடைமுறையிலும் இல்லை என்றும், இதுவரையில் இந்தியாவில் எந்த சட்டமன்றத்தில் நடைபெறாதது எனவே ஆசிரியர் மற்றும் இணையாசிரியர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.இதனை எதிர்த்து நக்கீரன் ஆசிரியர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில்,சட்டசபையில் அறிவார்ந்த அறிஞர்கள் மற்றும் நூலகர்கள், உதவி நூலகர்கள், செயலாளர்கள், உதவி செயலாளர்கள் ஆகியோர் உள்ளனர். சட்டசபை உரிமை குழு கேட்கும் சட்டபூர்வமான விளக்கத்திற்கு ஒரு சாதாரண பத்திரிகையாளரான நான் வழக்கறிஞர் மூலம் தான் தகுந்த சட்ட விளக்கம் அளிக்க முடியும். மேலும் சம்மந்தப்பட்ட பிரசுரம் முதல் அமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சேர்ந்தது. எந்த விதத்திலும் அது சட்டசபையின் கண்ணியத்தை குறைக்காது என்பதை என் சார்பில் நிலைநாட்ட சட்ட விளக்கங்களும், நீதிமன்ற முன் தீர்வு விளக்கங்களும் அளிக்க வழக்கஞர்களால்தான் முடியும். சட்ட உரிமைக் குழுவில் என் சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யவும், சாட்சிகளை விசாரிக்கவும் எனது வழக்கறிஞர்கள் என்னுடன் ஆஜரானால்தான் முறையானதாக இருக்கும். அரசியலமைப்பு பிரிவு 20ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்ட உரிமைகளை நிலைநாட்ட சட்ட அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களின் உதவி மறுக்க இயலாது. மேலும் சட்டசபை உரிமை குழுவின் பரிந்துரைகளை ஏற்று சபாநாயகர் என்னை தண்டிக்கவும், சிறைக்கு அனுப்பவும் அதிகாரம் உள்ளது. இந்த எல்லையில்லா அதிகாரங்களுடன் என்னை தண்டிக்க முயலும் போது என் தரப்பு வாதங்களை கேட்கவும் எனக்கான எதிர்வாதங்களை சமர்பிக்கவும் சட்டம் கற்று நீதிமன்ற நெறிமுறைகள் தெரிந்த வழக்கறிஞர்களை என் சார்பாகவும் அல்லது தேவைப்படும்போது என்னுடனோ அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
      ஆசிரியர் சார்பாக வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், எல்.சிவக்குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
      இதே பிரச்சனையை மேற்கோள்காட்டி நமது வழக்கறிஞர் எட்விக், சட்டசபையில் வழக்கறிஞர்களை அனுமதிக்க முடியாது என்பது வழக்கறிஞர் சட்டம் பிரிவு 30க்கு எதிரானது. எனவே நக்கீரன் கோபால் சார்பாக சட்டசபையில் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த வக்காலத்து மற்றும் பதில் உரைகளை ஏற்க முடியாது என்று சட்டசபை செயலாளர் கூறுவதை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
      வழக்கறிஞர் எட்விக் சார்பாக, நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரூபட் பர்ணபாஸ் ஆஜராகி வாதாடினார்.

      படிக்கட்டுப் பயணப் படுகொலைகள்!

      vinavu/
      கொல்லப்பட்ட மாணவர்கள்சென்னை மாநகரில் தினந்தோறும் 5,000 பேருந்துகளை இயக்குவதற்குத் தமிழக அரசு உரிமம் பெற்றிருந்தாலும், 3,300 பேருந்துகளை மட்டுமே இயக்குகிறது. இந்த 3,300-லும் 600 பேருந்துகள் தொழிலாளர் பற்றாக்குறையால் அடிக்கடி நிறுத்தப்படுகின்றன.
        சென்னைக்கு அருகேயுள்ள பெருங்குடியில் கடந்த மாதம் 10-ஆம் தேதியன்று காலையில் சென்னை மாநகரப் பேருந்தும் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிவந்த லாரியும் ஒன்றோடொன்று உரசிக் கொண்டதில், அப்பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்துவந்த நான்கு இளம் மாணவர்களின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டது; மேலும் மூன்று மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர்.
        பதின் வயதைச் சேர்ந்த மனோஜ்குமார், விஜயன், பாலமுருகன், சேகர் என்ற இந்த நான்கு மாணவர்களின் சாவும் தமிழக அரசு பொதுப் போக்குவரத்தைத் தொடர்ந்து அலட்சியப்படுத்திவருவதன் விளைவாகத்தான் நடந்திருக்கிறது. வேண்டுமென்றே அலட்சியமாக நடந்துகொண்டு நான்கு உயிர்களைப் பறித்திருக்கும் தமிழக அரசு மீது கொலைக் குற்றம் சுமத்த வேண்டும்.

        அமெரிக்காவில் 2வது முறையாக அதிபராக முறைப்படி பதவியேற்றார் ஒபாமா

        வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக 2வது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பாரக் ஒபாமா இன்று பிற்பகல் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாளை பொது மக்கள் முன்னிலையில் மீண்டும் ஒபாமா பதவியேற்பு விழா நடக்கிறது. அமெரிக்காவில் 4 ஆண்டுக்கு ஒரு முறை அதிபர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. ஒருவர் 2 முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். ஜனநாயக கட்சி சார்பில் அதிபராக இருந்த ஒபாமா கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் 2வது முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி தோல்வி அடைந்தார்.

        Rahul Ghandhi பெரிய வெற்றிகளைப் பெறவில்லை

        பட்டத்து இளவரசர்" ராகுல் காந்தி
        இந்தியாவை ஆளும் கூட்டணிக்கு தலைமையேற்கும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் வந்துள்ளன.
        அவரால் அடுத்து வரக்கூடியத் தேர்தல்களில் கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என ஒரு சாராரும், அவருக்கு அத்தகைய வல்லமை இல்லை என்று மறு சாராரும் கூறுகிறார்கள்.காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தை மட்டுமே நம்பியுள்ளது பரிதாபகரமான நிலை< என் ராம் தற்போது காங்கிரஸ் கட்சி தோல்வி மேல் தோல்வியடைந்து ஒரு நெருக்கடியில் உள்ளது என்றும், ராகுல் காந்தியால் உறுதியாக கட்சிக்கு வெற்றியை தேடித் தரமுடியும் என்று கூற முடியாது என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் ''இந்து''பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம். என். ராம் பேட்டி ராகுல் காந்தியின் பதவி உயர்வு:ராம் கருத்து
        காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளது குறித்து இந்து பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம் கருத்து.

        ராமதாஸ்: திருமாவளவனுடன் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை

        ஈரோட்டில் நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்க ஆலோ சனை கூட்டத்தில்  பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
        அப்போது அவர்,  ‘’விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சமாதானம் என்ற பேச்சு க்கே இடமில்லை.
        சாதியை ஒழிக்க கலப்புத் திருமணம் ஒன்றே வழி என்ற தவறா ன பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது.  இத்த கைய பிரச் சாரங்களில் குறிப்பிட்ட கட்சியினர் மட்டுமே ஈடுபடுகின்றனர்’’ என்று தெரிவித்தார்.

        தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தை திருமணம்

        தமிழகத்தில், குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதால், அவற்றை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில், கடந்த, 10 ஆண்டுகளாக குறைந்துஇருந்த குழந்தை திருமணங்கள், மீண்டும் தலைதூக்கி வருகிறது. அதுவும், சில மாதங்களாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், சிவகங்கை, விழுப்புரம், திருவள்ளூர் போன்ற, பொருளாதாரத்தில் பின்தங்கிய வறட்சி மாவட்டங்களில், குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகின்றன.குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதற்கு அதிகாரிகளே காரணம். குறிப்பிட்ட பகுதியில் திருமணம் நடக்கிறது என, தெரிந்தவுடன், அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தாமல், தாமதப்படுத்துகின்றனர். அதனால், அதிகாரிகள் செல்வதற்கு முன், திருமணம் நடந்து முடிகிறது.சில இடங்களில், அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினாலும், அதன் பின், ஒரு வாரத்திற்குள் திருமணம் நடக்கிறது.கிராம புறங்களில் வசிக்கும் பெற்றோர்களிடம், குழந்தை திருமணங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கவில்லை.முற்றிலும் தடுப்பது எப்போது?

        Stalin..5000 ரூபாய் கொடுத்தால் முத்தம் கொடுத்தும் போட்டோ

        நாம் முத்தம் கொடுத்தால் தினமலர் நாளிதழுக்கு என்ன சங்கடம்?” ஸ்டாலின் கேள்வி!

        Viruvirupuநாமென்ன unkissableஆ?
        நாமென்ன unkissableஆ?
        “தினமலர் நாளிதழில் முத்தம் கொடுப்பது குறித்து விமர்சனம் செய்வது குறித்து எனக்கு கவலை இல்லை. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார், மு.க.ஸ்டாலின்.
        தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டத்தில் பேசியபோதே, இவ்வாறு குறிப்பிட்டார். “நாடாளுமன்ற தேர்தல் குறித்த நேரத்திலோ, முன்பாக வந்தாலோகூட நாம் அதற்கு தயாராகவே உள்ளோம்” என்றவர், தேர்தல் நிதி பற்றி குறிப்பிடும்போதே, தினமலர் முத்தம் பற்றி விமர்சித்தது குறித்து கருத்து தெரிவித்தார்.
        அவர் பேசும்போது, “நாடாளுமன்ற தேர்தல் நிதியாக, பாசறையில் கலந்து கொண்டவர்கள் 100 ரூபாய் கொடுத்தால் அவர்களுடன் போட்டோவும், 500 ரூபாய் கொடுத்தால் கைகுலுக்கியும், 1000 ரூபாய் கொடுத்தால் தோளில் கை போட்டபடியும் , 5000 ரூபாய் கொடுத்தால் முத்தம் கொடுத்தும் போட்டோ எடுக்கலாம் என்று நான் நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் கூறினேன். இப்படி நான் கூறியதற்கு தினமலர் நாளிதழில் முத்தம் கொடுப்பது குறித்து விமர்சனம் செய்திருந்தனர்.
        இதைப் பற்றி அவர்களுக்கு என்ன சங்கடம்? தினமலர் நாளிதழில் அவ்வாறுதான் செய்வார்கள். அதை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை” என்றார்.

        ஞாயிறு, 20 ஜனவரி, 2013

        அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில பங்கேற்ற நீதிபதி பணியிடை நீக்கம்

        நாமக்கல்லிலநடைபெற்அதிமுதேர்தலஆலோசனைககூட்டத்திலபங்கேற்மாவட்முதன்மஅமர்வநீதிமன்நீதிபதி வேலபணியிடநீக்கமசெய்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌திரடி உ‌த்தர‌வி‌ட்டுள்ளார்.நாமக்கல்லிலஉள்தனியாரவிடுதி ஒன்றிலஅ.ி.ு.நாடாளுமன்தொகுதியினதேர்தலஆலோசனைககூட்டமகடந்மாதம் 15ஆமதேதி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஓ.பன்னீரசெல்வம், நத்தமவிஸ்வநாதனஉள்பகட்சியினமூத்நிர்வாகிகளபலருமபங்கேற்றனர்.இந்நிகழ்ச்சிககவந்நீதிபதி வேலு, பார்வையாளர்களவரிசையிலஅமர்ந்தகூட்டமமுடிவடையுமவரநிகழ்வுகளைககவனித்தார். நீதிபதி ஒருவர், கட்சி நிகழ்ச்சியிலபார்வையாளராகககலந்தகொண்டது, சர்ச்சையஏற்படுத்தியது.இதையடுத்து, இதுதொடர்பாசென்னஉயர்நீதிமன்றமவிசாரணமேற்கொண்டது. இந்த நிலையில், நீதிபதி வேலுவபணியிடநீக்கமசெய்தஉயர்நீதிமன்பதிவாளரஉத்தரவபிறப்பித்தார்.பணியிடநீக்கமசெய்யப்பட்நீதிபதி வருமஜூலை 31ஆமதேதியுடனபணியிலஇருந்தஓய்வபெற இரு‌க்‌கிறா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது webdunia