வருத்தம் தெரிவிக்க மறுத்த திரிஷாவுக்கு மதுபாட்டில்கள் அனுப்ப இந்து மக்கள் கட்சி என்ற பெயர்பலகை வைத்திருக்கும் பயங்கர வாதிகள் அல்லது தீவிர வாதிகள் முடிவு`
சமர்'
படத்தில் திரிஷா மது அருந்துவதுபோல் காட்சிகள் உள்ளன. இதுபற்றி அவரிடம்
கேட்டபோது நான் மது அருந்துவது போல் சீன்கள் இடம் பெற்ற படங்கள்
ஹிட்டாகியுள்ளன. எனவே `சமர்' படத்திலும் அக்காட்சி இருக்க வேண்டும்
என்பதற்காக மது அருந்துவதுபோல் நடித்தேன் என்றார். பெண்கள்
மது குடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அது அவரவர்
விருப்பம் என்று பதில் அளித்தார். திரிஷாவின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை
ஏற்படுத்தி உள்ளன. தமிழ் கலாசாரத்துக்கு எதிராக அவர் பேசி உள்ளதாக கண்டனம்
எழுந்துள்ளது. அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். பேசியதை வாபஸ் பெற
வேண்டும் என்று வற்புறுத் தப்பட்டன.
அடுத்த
கட்டமாக மது பாட்டில்களை பார்சலில் அனுப்பி எதிர்ப்பு தெரிவிக்க இந்து
மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் சென்னை மண்டல
தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’மது
அருந்துவது குறித்து திரிஷா சொன்னவை பண்பாட்டுக்கு எதிரான செயல். பெண்களை
மது அருந்த தூண்டுபவை. இதற்கு வருத்தம் தெரிவிக்க கேட்டும் திரிஷா செவி
சாய்க்கவில்லை. எனவே அவருக்கு மது பாட்டில்கள் பார்சலில் அனுப்பப்படும்.
அதோடு மதுவின் தீமையை விளக்கும் புத்தகமும் வைத்து அனுப்பப்படும்’’ என்று
குறிப்பிடப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக