சனி, 26 ஜனவரி, 2013

பத்மபூஷன் விருதை புறக்கணித்த S,ஜானகி

சென்னை: பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி புறக்கணித்துள்ளார். இந்தாண்டிற்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜானகி, பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் வட இந்தியர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதும், தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதும் தமக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதனால், தான் மிகவும் ஏமாற்றமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணிப்பதாகவும் ஜானகி தெரிவித்துள்ளார். 74 வயதான எஸ். ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக