வேலூர்: ""வன் கொடுமை வழக்குகளை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்,'' என, சமூக சமத்துவ படை கட்சி தலைவி சிவகாமி பேசினார்.தர்மபுரி
கலவரத்துக்கு நீதி கேட்டு சமூக சமத்துவ படை கட்சி தலைவர் சிவகாமி, 22ம்
தேதி முதல் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று, வேலூர் மாவட்டம்
குடியாத்தம், பள்ளிகொண்டா, கந்தனேரி, செதுவாலை, பொய்கை வழியாக வேலூர்
வந்தார். கந்தனேரியில் அவர் பேசியதாவது: தர்மபுரியில் நடந்து முடிந்துள்ள,
வன் கொடுமை சம்பவம் தமிழகத்தில் புரையோடிக் கொண்டிருக்கும் தீண்டாமையையும்,
ஜாதி வெறியையும் அம்பலப்படுத்துவதோடு, நாகரிக வாழ்க்கைக்கு இன்னும்
தயாராகவில்லை என்பதை எடுத்துரைக்கிறது. திராவிடம் என்றாலும், தமிழ் அரசியல்
என்றாலும், இந்திய சமுதாயத்தில் ஜாதி உணர்வே மேலோங்கி இருப்பதை, கடந்த கால
திராவிட ஆட்சியில், ஜாதி ஒழிப்பு பணியை தீவிரவாக மேற்கொள்ளவில்லை என்பதை
உறுதிபடுத்தியிருக்கிறது. சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம் என்றாலும், வன்
கொடுமை தடுப்பு சட்டமானாலும் ஆதிக்க சக்திகள், அதிகாரத்தில் இருக்கும் வரை,
இந்த சட்டங்களால் பயன் இல்லை என்பது தர்மபுரி கலவரத்தின் மூலம் தெளிவாக
தெரிகிறது. இதை தடுக்க வேண்டுமானால், கலப்பு திருமணம் ஒன்று தான்
தீண்டாமைக்கு நிரந்திர தீர்வாகும். சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை
ஒழித்து, சமத்துவ சமூகம் ஏற்பட செய்தாலே, கலப்பு திருமணங்கள் அதிகமாகும்.
தர்மபுரியில் வீடு புகுந்து கொள்ளை அடித்துச் சென்ற பொருட்களை மீட்டுத் தர
வேண்டும். இல்லையென்றால், பறிமுதல் செய்து தர வேண்டும். இன்னமும் அங்கு
அச்சுறுத்தல் உள்ளது. பாதுகாப்பு வேண்டி போலீசாரிடம் மனு கொடுத்தும்,
பாதுகாப்பு வழங்கவில்லை. டீ கடையில் டீ தர மறுக்கின்றனர். தலித் மக்களுக்கு
வேலை தரவில்லை.
எனவே, வன்கொடுமை சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். வன் கொடுமை வழக்குகளில், 100க்கு, 93 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். வன் கொடுமை வழக்குகளை, தமிழக முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும்.
தலித் மக்கள் எண்ணிக்கைக்கு தகுந்த படி, 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணம், தலித் மக்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறதா என தெரியவில்லை. 18 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினாலும், 6,000 டெபிடி கலெக்டர் பணியிடங்கள் தலித் கோட்டாவில் காலியாக உள்ளன. சிலர் ஆரம்பித்த தலிக் கட்சிகள் அவர்கள் வயிறு வளர்க்கத் தான் உள்ளது. நிறைய தலித் அமைப்புக்கள் இருந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை. இதனால், நாம் தாக்கப்படுகின்றோம். தர்மபுரி கலவரத்தில் ஏன் அனைவரையும் கைது செய்யவில்லை. இவ்வாறு பேசினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக