புதன், 23 ஜனவரி, 2013

தீவிரவாதிகளுக்கு RSS தொடர்பு! இதோ 10 பேரின் பெயர்கள்

viruvirupu

இதோ ஆதாரம்!

இதோ ஆதாரம்!
சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு உள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அவற்றில் தொடர்புடைய 10 பேர்களின் பெயர்களையும் வெளியிட்டு உள்ளது.
“தீவிரவாதம் தொடர்பாக குற்றங்களில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்புகள் உள்ளன” என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, கூறியிருந்தார். அவரது அந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. “காங்கிரஸ் கட்சி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை அமைச்சர் ஷிண்டேவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என்று, பா.ஜ.க. வற்புறுத்தி வருகிறது.
இந்த நிலையில், சுஷில்குமார் ஷிண்டே கூறியது சரியானதே. தீவிரவாதத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்கு தொடர்பு உள்ளது நிஜம்தான் என மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், “தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் (அஜ்மீர்) தர்கா ஷரீப்பில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்குதல்களில், குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 10 பேர் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன’’ என்று தெரிவித்தார்.
சொன்னதோடு நிற்காமல், 10 பேருடைய பெயர், விவரங்களையும் ஆர்.கே.சிங் வெளியிட்டார். இதோ, இவர்கள்தான் அந்த 10 பேர்:
சுனில் ஜோஷி (மரணம்), சந்தீப் டாங்கே (தலைமறைவு), லோகேஷ் சர்மா (கைது), சுவாமி அசேமானந்த் (கைது), ராஜேந்தர் என்கிற சமுந்தர் (கைது), முகேஷ் வசானி (கைது), தேவேந்தர் குப்தா (கைது), சந்திரசேகர் லெவே (கைது), கமல் சௌகான் (கைது), ராம்ஜி கல்சங்ரா (தலைமறைவு).
இவர்கள் 10 பேரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் வெவ்வேறு விதங்களில் இணைந்து செயல்பட்டு வந்தவர்கள் எனவும், ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக