தி.மு.க.வில் முக்கிய பதவி அஞ்சா நெஞ்சருக்கு கிடைக்காத பட்சத்தில்
ஜெ.வுடன் சேர்ந்தால் இம்மாதிரியான விமர்சனம் எல்லாம் வராது..... நல்ல
யோசிங்க அஞ்சா நெஞ்சரே....
சென்னை : மத்திய உரத்துறையில் மானியம் வழங்குதல் மற்றும் விலை நிர்ணயம் ஆகியன தொடர்பான விவகாரத்தை பயன்படுத்தி உர நிறுவனங்களுக்கு லாபம் கிட்டுமாறு முறைகேடு நடத்தி மத்திய அரசுக்கு ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதல்வர் ஜெ., திடுக் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தி தி.மு.க.,வை சேர்ந்த மத்திய உரத்துதுறை அமைச்சர் அழகிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெ., பிரதமருக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது வேளாண்மை. இந்த விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் கிராம விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரம் வழங்கப்படவில்லை.
அதிகபட்ச விலை நிர்ணயம் : விவசாயிகளுக்கு விற்கப்படும் உரத்தின் விலையை நிர்ணயிக்கும் விதமாக ஏற்கனவே இருந்த கொள்கை மாற்றப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் என்ற புதிய கொள்கை உருவாக்கப்பட்டு சூழலுக்கு ஏற்ப உர நிறுவனங்கள் விலையை அவ்வப்போது மாற்றி நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் உர நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளளன. விவசாயிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிலையாக இருந்த நேரத்திலும், அதிகபட்ச விலையை உர நிறுவனங்கள் அவ்வப்போது ஏற்றியுள்ளது. பல்வேறு மானியமும் உர உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்குநன்மைகள் நேரடியாக போய்ச்சேரவில்லை.அழகிரியால்
மானியம் குறையும் என கருதி தேவையில்லாமல் உரம் அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொட்டாஷ் உரத்தில் டன்னுக்கு 4 ஆயிரத்து 500 ம் , பாஸ்பேட்டில் டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதமும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கொள்கையினால் மத்திய உரத்துறையில் பெரும் முறைகேடு நடந்திருக்கிறது. <உரங்களை சந்தைக்கு அனுப்புவதில் நடந்தது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா கூட அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: இது தொடர்பாக சி.பி.ஐ., மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும். இழப்பிற்கு காரணமானவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மவுனம் சாதித்து வரும் மத்திய அமைச்சர் அழகிரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு ஜெ., கூறியுள்ளார். பிரதமருக்கு அனுப்பியுள்ளபுகாரில் செய்திதாள்களின் விவரங்களையும் இணைத்து அனுப்பியுள்ளார்.
உரத்துறை அமைச்சகம் மறுப்பு : இது தொடர்பாக உரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. செய்தித்தாள்களில் வெளியானது ஆதாரமற்றது. இது தவறானது , விவசாயிகளின் நலனை காப்பதில் அமைச்சகம் அக்கறை கொண்டுள்ளது , நலனை முன்வைத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளது. உர நிறுவனங்கள் லாபம் அடையும் படி செயல்படவில்லை. அனைத்து முடிவுகளும் வெளிப்படையாக எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக