சனி, 26 ஜனவரி, 2013

விரைவு கோர்ட்டுகளில் வழக்குகளை தீர்க்க மத்திய அரசு

புதுடில்லி: நாடு முழுவதும் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு விரைவு கோர்ட்டுகள் அமைக்க முடிவு செய்துள்ளது. இத‌ற்காக சட்டத்துறை அமைச்சக குழுவினர் தயாரித்துள்ள திட்ட அறிக்கைகள் 13-வது நிதி குழுவின் ஒப்பு‌தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதிகுழுவின் மூலம் சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரையில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நாடு முழுவதும் நி 2010-2015-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்திலான ஆயிரத்து 100 சிறிய வழக்குகள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்‌கப்படுகிறது.


இது குறித்து சட்டத்துறையை சேர்ந்த மூத்த அலுவலர்கள் கூறுகையில் சுமார் 500 ‌கோடி ரூபாய் செலவில் காலை மற்றும் மாலை நேர கோர்ட்டுகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும், மேற்கண்ட நிதியை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் பாலியல் குற்றங்கள் மற்றும் விரைவு நீதிமன்றங்களை துவக்குவதற்கும் பயன்படுத்தப்படும் என தெரிவித்தார். இந்த நிதி மூலம் நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரம் நீதிபதிகள் நியமிக்க கோரிமாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டிருப்பதாகவும், விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதற்காக சுமார் 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் உள்ளதாகவும் சட்டத்துறை தெரிவித்துள்ளது. அதேசமயம் 2010-ம் ஆண்டுகளில் காலை மாலை ‌நீதிமன்றங்கள் அமைப்பதில் சில மாநிலங்களில் இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

நாட்டில் பீகார் மாநிலத்தில் மட்டுமே அதிக அளவில் விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டுள்ளது, தொடர்ந்து அசாம் மணிப்பூர் அருணசால பிரதேசம் ,வடகிழக்கு மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்று்ளது. மேற்குவங்கம், மகாராஷ்டிரா மாநிலங்கள் உட்பட ஒரு சில மாநிலங்கள் மட்டுமே தங்களது சொந்த நிதியின் மூலம் விரைவு நீதிமன்றங்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக