விஸ்வரூபம் படம் ஏற்படுத்திய சர்ச்சை, இந்தியாவுக்கு வெளியேயும்
எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஐக்கிய அரபு எமிரேட்ஸில்
அறிவிக்கப்பட்டிருந்த பட ரிலீஸ், தேதி குறிப்பிடாமல் தள்ளி
வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய ஊடக கவுன்சில் (National Media Council), விஸ்வரூபம் படத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று கூறி, ரிலீஸை தடை செய்துள்ளது. இந்த அமைப்புதான், எந்தவொரு படமும் அங்கு காண்பிக்கப்பட அனுமதி வழங்க வேண்டும். கிட்டத்தட்ட சென்சார் போர்டு போல!
இது தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய ஊடக கவுன்சிலின் Media Content Tracking Department டைரக்டர் ஜூமா ஒபாய்ட் அல்-லீமை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, படத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.
“விஸ்வரூபம் படம் தொடர்பாக நாம் இன்னமும் முடிவு எடுக்கவில்லை. அதனால், படத்தை இன்று ரிலீஸ் செய்ய அனுமதியில்லை. படத்தை பார்த்தோம். கதை சில சென்சிட்டிவ்வான விஷயங்களை தொட்டுச் செல்கிறது. ஒசாமா பின் லேடன் பற்றிய பிரஸ்தாபமும், இஸ்லாமிய அமைப்புகள் பற்றிய பிரஸ்தாபமும் படத்தில் உள்ளன. குண்டுவெடிப்புகளும், கொலைகளும், இவற்றுடன் தொடர்பாக காண்பிக்கப்படுகின்றன.
இவற்றை மீளாய்வு செய்ய எமக்கு கால அவகாசம் தேவை. எமது குழுவினர் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒருதடவை இந்தப் படத்தை பார்த்தபின் முடிவு எடுப்போம்” என்றார் viruvirupu.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக