வியாழன், 24 ஜனவரி, 2013

எந்த கலாச்சாரம்? அமெரிக்க இந்தியர்கள் குழப்பம்

சென்னை:""அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில், எந்த கலாசாரத்தை பின்பற்றுவது என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இதனால், எதிர்கால வாழ்க்கைக்கும், சந்ததிகளுக்கும் அவர்களால் பயனில்லாமல் போகிறது,'' என, அமெரிக்காவின் ஜியார்ஜியா பெரிமீட்டர் கல்லூரி பேராசிரியர் சால்லி வர்கீஸ் கூறினார்.சர்வதேச சமூக அறிவியல் மாநாடு, சென்னை எத்திராஜ் கல்லூரி நேற்று துவங்கியது. மூன்று நாள் மாநாட்டில், சமூக அறிவியலின் புதிய கோணங்கள், அம்சங்கள், வளர்ச்சி முறைகள், புதுமை புகுத்தல் உள்ளிட்ட குறித்து, கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் விவாதிக்கின்றனர்.மாநாட்டை எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். அமெரிக்கா ஜியார்ஜியா பெரிமீட்டர் கல்லூரி பேராசிரியர் சால்லி வர்கீஸ் பேசியதாவது: அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் குழந்தைகள், இந்திய கலாசாரத்தை பின்பற்றி ஒரு வாழ்க்கையும், அமெரிக்கா கலாசாரத்தை பின்பற்றி மற்றொரு வாழ்க்கையும் வாழ்கின்றனர்.  அமெரிக்காவில் மட்டும் இந்த பிரச்சனை இல்லை தமது தாய் நாடுகளை    விட்டு வெளிநாடுகளில் குடிபுகுந்த எல்லா வெளிநாடுகளில் வசிக்கும் எல்லோருக்கும்  உள்ள பிரச்சனைதான் இது.
இதனால், அவர்கள் வாழ்க்கையில், தெளிவு இல்லாமல் போகிறது.பருவ வயது அடையும் பெண்கள், பெற்றோருடன் நேரம் செலவிடவும், வாழவும் விரும்புவதில்லை. ஏதாவது காரணம் கூறி, பெற்றோருடன் விலகி, தனியாக வாழவே விரும்புகின்றனர்.மேற்படிப்பிற்காக செல்லும் பெண்கள், வெளிநாட்டு ஆண்களை திருமணம் செய்து கொண்டு, இரு கலாசாரத்தையும் இணைந்து புது கலாசாரத்தை உருவாக்குகின்றனர்.இந்திய கலாசாரத்தை, அந்நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். சில பெண்கள், அங்குள்ள ஆண்களை திருமணம் செய்து கொண்டு, ரகசிய வாழ்க்கையும் வாழ்கின்றனர்.இவ்வாறு சால்லி வர்கீஸ் பேசினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக