எழுக்கதிர் : வவுனியா பல்கலைக்கழகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நேற்று (11) திறந்து வைக்கப்பட்டது.
இது, இலங்கையின் 17வது பல்கலைக்கழகமாகும். வவுனியா பல்கலைக்கழகமூடாக தொழில்நுட்ப சவால்களை முறியடிப்போம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
வவுனியா பல்கலைக்கழகத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, “இது ஒரு விசேஷமான நாள் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்துக்கு அமைய இந்த பல்கலை கழகம் ஆரம்பிக்கப்பட்டு இந்த பிரதேசத்தை கல்வி, பொருளாதார ரீதியில் உயர்வடைய இந்த வவுனியா பல்கலைக்கழகம் இன்று திறந்து வைக்கப்படுகிறது.
சனி, 12 பிப்ரவரி, 2022
வவுனியாவில் புதிய பல்கலைக்கழகம்! திறந்து வைத்தார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச!
பாஜகவில் இருந்து மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வம்.. பாஜக மீது பரபரப்பு புகார்
கடந்த வருடம், திமுகவின் ஆயிரம் விளக்கு எம்எல்ஏவாக இருந்து வந்த கு.க.செல்வத்தை கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் எனக்கூறி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கட்சியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
நீக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கு.க.செல்வம் தன்னை பாஜகவில் இணைந்துகொண்டார்.
பிப்ரவரி 16 முதல் திரையரங்குகளில் 100 சதவீதம் அனுமதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாலைமலர் : தமிழ்நாட்டில் தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திட, குறைத்திட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மார்ச் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சீரான வேகத்தில் குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி வருகிறது.
இதற்கிடையே, கூடுதல் தளர்வுகளுடன் தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி 16-ம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களிலும் 100 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அபார்ஷன்.. பாத்ரூமில் நடந்த பகீர்.. பெண் டாக்டர் வாயில் கோமியத்தை ஊற்றி டார்ச்சர்.. 7 வருஷம் ஜெயில்
Hemavandhana - Oneindia Tamil : சென்னை: மனைவி என்றும் பாராமல், ஒரு பெண் என்றும் பாராமல், ஒரு டாக்டர் என்றும் பாராமல், மனிதாபிமானமும் இல்லாமல், கோமியத்தை குடிக்க வைத்து டார்ச்சர் செய்தே கொன்றுள்ளார் கொடூர கணவர்.. அவருக்குதான் 7 வருஷம் தண்டனையை ஹைகோர்ட் தந்துள்ளது..!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்தவர் மரியானோ ஆன்டோ புருனோ.. 36 வயதாகிறது..
இவரது மனைவி பெயர் அமலி விக்டாரியா.. 32 வயதாகிறது.. இவரும் ஒரு டாக்டர்.. கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
ஹிஜாப் தடை நாடுகள் பிரான்ஸ் பெல்ஜியம் நெதர்லாந்து இத்தாலி ஜெர்மனி ஆஸ்திரியா நார்வே ஸ்பெயின் பிரிட்டன் டென்மார்க் ரஷ்யா ......
BBC : உலகளவில் ஹிஜாப் குறித்த சர்ச்சைகளும் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளும்
கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் தீர்வு காணாத வரையில், ஹிஜாப் அல்லது காவி மேல்துண்டு எதுவாக இருந்தாலும், மதம் சார்ந்த உடைகளுக்கு அனுமதி இல்லை என உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உடனடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சிலர் இது தங்கள் சட்டப்பூர்வமான உரிமை என்றும் சிலர், கல்வி நிறுவனங்களில் மதச் சின்னங்களை அணிவது முறையன்று என்றும் கருதுகின்றனர்.
பாகிஸ்தான் மனித உரிமை போராளி அஸ்மா ஜஹாங்கீர்
Saadiq Samad Saadiq Samad : அஸ்மா ஜஹாங்கீர் ! பாகிஸ்தானின் மனித உரிமைப் போராளி.
பாகிஸ்தானில் ஆணின் சாட்சியத்துக்கு என்ன மதிப்போ, அதில் பாதி மதிப்புதான் பெண்ணின் சாட்சியத்துக்கு என்று கூறுகிற வகையில் (இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில்) சட்டம் ஒன்று வர இருந்தது. அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்.
பாலியல் வன்முறைக்கு ஆளான பெண், தான் குற்றமற்றவர் என்று அவரேதான் நிரூபிக்க வேண்டும், இல்லையேல் தண்டனை உண்டு என்ற அவசரச் சட்டத்தை எதிர்த்துப் போராடினார்.
சஃபியா என்றொரு சிறுமிக்கு 13 வயது. பார்வையற்றவர். அந்தச் சிறுமியின் எஜமானரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்.
அதில் கருவுற்றார். குற்றவாளியைத்தானே சட்டம் தண்டிக்கும்?
ஆனால் இங்கே பாதிக்கப்பட்டவரைத்தான் தண்டித்தது. ‘ஜினாஹ்’ என்னும் முறைபிறழ்ந்த உடலுறவுச் சட்டத்தின்கீழ் அந்தச் சிறுமிக்கு சாட்டையடியும் மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. அதை எதிர்த்து முறையீடு செய்து, போராட்டத்தையும் நடத்தினார்
வெள்ளி, 11 பிப்ரவரி, 2022
பாமர முஸ்லிம்களை உசுப்பி விடும் ஊடகவியலாளர்கள் .. சமூகவலையில் ஜீவாசகாப்தன் மீது கடும் விமர்சனம்
நான்கு இஸ்லாமிய அடைப்படைவாதியால் நாலாயிரம் முஸ்லிம்களும் அவர்களின் சொத்துக்களும் பாதிக்கப்படும் .உசுப்பிவிட்ட நீ ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு போயிடுவே
இழப்புகளை யாருடா சுமப்பது ?
உன்னுடைய யூடிபிற்கு லைக் கிடைக்க எவனோ ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி எழுதி கொடுத்த ஸ்க்ரீப்ட்டை படித்து அப்பாவி மக்களை உசுப்பி விடுவது தவறு மிஸ்டர் ஜீவ சகாப்தன்
அப்புறம் என்ன கலாச்சாரமா? ...
உனக்கு கலிமா சொல்லிக்கொடுத்து , கத்னா பண்ணிவிட்டால் உன் முந்தைய கலாச்சாரம் அனைத்தும் க்ளோஸ்
அப்புறம் சாப்பிட ஆரம்பிக்கும்போது பிஸ்மி சொல்லனும் Men தும்மினால் அல்ஹம்துலில்லாஹ் சொல்லனும்
10வது மாடியில் மகனை தொங்கவிட்ட தாய் - சாரியை எடுக்கவாம் ..பதறவைக்கும் காட்சி. ஹரியானா
கலைஞர் செய்திகள் : ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள 10-வது மாடியின் பால்கனியில் ஒரு தாய் தனது மகனை அந்தரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூட்டிய 9வது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் சிக்கிய தனது புடவையை எடுக்க பெண் ஒருவர் தனது மகனை 10-வது மாடி பால்கனியில் இருந்து பெட்ஷீட்டில் கட்டி இறக்கி அந்தரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள செக்டார் 82-ல் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் ஒன்பதாவது மாடியில் பூட்டிய வீட்டின் பால்கனியில் விழுந்த புடவையை எடுக்க, தாய் ஒருவர் தனது மகனை பெட்ஷீட்டில் கட்டி 9வது மாடியின் பால்கனிக்கு அனுப்பியுள்ளார்.
10வது மாடியில் மகனை தொங்கவிட்ட தாய் - பதறவைக்கும் காட்சி - நடந்தது என்ன?
நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம்
மின்னம்பலம் : தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில்... அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (பிப்ரவரி 11) திருச்சி மாவட்ட அதிமுகவின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைவது உள்ளாட்சி மன்ற தேர்தல்தான்.
இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு மரண அடி கொடுக்க வேண்டும்.
அறுவை சிகிச்சையின்போது “கற்பூர பொம்மை ஒன்று..” பாடிய சீதாலட்சுமி - இளையராஜா சந்தித்திப்பு இன்ப அதிர்ச்சி கொடுத்த மருத்துவமனை!
கலைஞர் செய்திகள் -Vignesh Selvaraj : அறுவை சிகிச்சையின்போது இசைஞானி இளையராஜாவின் பாடலை பாடிய சீதாலட்சுமியை இளையராஜாவுடன் சந்திக்கச் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
சென்னைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. நல்ல குரல்வளம் கொண்ட பாடகரான இவர் சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.
ஆளுநருக்கு துரைமுருகன் எச்சரிக்கை!
மின்னம்பலம் : நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த விவகாரம் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திலும் எதிரொலித்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தும் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டமும் பிப்ரவரி 10ஆம் தேதி அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சரும் சட்டமன்ற அவை முன்னவருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய துரைமுருகன்,
"இதுவரையில் எந்த கவர்னருமே நடந்து கொள்ளாத வகையில் இந்த கவர்னர் நடந்து கொண்டிருக்கிறார்.
எனக்குள்ளிருந்த இளையராஜாவை நான் கண்டுபிடிக்கவில்லை பஞ்சு அருணசலம்தான் கண்டுபிடித்தார்.
Kalaichelvan Rexy Amirthan : இராசையாவுக்குள் இருந்த இளையராஜாவைக் கண்டுபிடித்தது எப்படி ?
இசைஞானியை இசையமைப்பாளர் விஜய் அன்ரனி எடுத்த பேட்டியை 3 பகுதியாக யூடியூப்பில் பார்க்க முடிகிறது முடிந்தவர்கள் பாருங்கள்
ஏனென்றால் இசை ஜாம்பவான் ஒருவரை அவரின் பாதையில் பயணிக்கும் அவரின் ரசிகர் பேட்டி எடுக்கும்போது அந்தப்பேட்டியில் பல சுவராஸ்யமான விஷயங்கள் வெளிவரும்
அப்படிப்பட்டதொரு உரையாடல் இது. இந்தப்பேட்டியில் "உங்களை நீங்கள் அடையாளம் கண்டது எப்போது" என்ற கேள்விக்கு ராஜாவின் பதில் :
சினிமாவில் வாய்ப்புப் பெறுவதற்காக 10 பாடல்கள் மட்டில் உருவாக்கி முழு Orchestration உடன் மண்டபம் ஒன்றில் அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர்களை அழைத்து இசைத்துக் காட்டினேன்
“கிரிப்டோகரன்சி வாங்குங்க.. கோடி கோடியா சம்பாதிக்கலாம்” : ‘சதுரங்க வேட்டை’ பாணியில் மோசடி செய்த கும்பல்!
கலைஞர் செய்திகள் - Vignesh Selvaraj : கிரிப்டோகரன்சி என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த பாண்டிக்கருப்பன் என்ற ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரியின் மனைவியான கோமதி என்பவர் சேலை விற்பனை சுயதொழில் செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் மதுரை அய்யர் பங்களா பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை என்ற குடும்ப நண்பர் கோமதியிடம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறியதோடு கோவையைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் ரெஜினாகுமாரி ஆகிய இருவரையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
வியாழன், 10 பிப்ரவரி, 2022
ரூ.1500 கோடி சம்பளமா.. சன் டிவி கலாநிதி மாறன், காவேரி கலாநிதி சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு..
kaveri - kalanidhi maran |
kaaviya maran |
Prasanna Venkatesh - GoodReturns Tamil : தென் இந்தியாவில் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி குழுமத்தின் ப்ரோமோட்டர்களாக இருக்கும் கலாநிதி மாறன் மற்றும் அவருடைய மனைவியான காவேரி கலாநிதி ஆகியோர் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நிறுவனத் தலைவர்களாக உள்ளனர்.
இந்நிலையில் தற்போது கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி ஆகியோரை மீண்டும் சம்பள உயர்வுடன், உயர் நிர்வாகப் பதவியில் உட்கார வைக்க முடியாது என்று சன் டிவி பங்கு முதலீட்டாளர்கள் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஹிஜாப் அணியவில்லை என்பதற்காக முஸ்லீம் மஜ்லிஸ் காடையர்களால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட யாழ் பல்கலைக் கழக மாணவியின் கதை இது
Rishvin Ismath : ஹிஜாப் அணியவில்லை என்பதற்காக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பல்கலைக் கழக மாணவியின் கதை இது. HijabIsMyRight - HijabIsChoice என்று பகிர்ந்து திரிபவர்களும், ஆதரவுக் குரல் கொடுப்பவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய கதை இது.
யாழ் பல்கலைக் கழகத்தில் ஹிஜாப் அணியாத மாணவியாக இருந்ததற்காக அந்தப் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸின் காடைய இஸ்லாமியவாதிகளின் ஆபாச வார்த்தைத் தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், தீண்டாமைப் புறக்கணிப்பிற்கும் உள்ளன மாணவியின் குமுறல் இது.
பாஜகவினரை ஓட ஓட விரட்டிய தெலுங்கானா TRS !. மோடியை எதிர்த்து ஹைதராபாத் ...
Shyamsundar - Oneindia Tamil : ஹைதராபாத்: தெலுங்கானாவில் பிரதமர் மோடியை எதிர்த்து பல இடங்களில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகிறார். பிரதமர் மோடியை தொலைநோக்கு பார்வை இல்லாதவர் என்றும், பாஜகவை கடலில் தூக்கி வீச வேண்டும் என்றும் சந்திசேகர ராவ் சமீபத்தில் குறிப்பிட்டார்.
அதேபோல் பட்ஜெட் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார். மேலும் தெலுங்கானாவிற்கு சமீபத்தில் ராமானுஜர் சிலையையே திறக்க வந்த பிரதமர் மோடியை சந்திசேகர ராவ் விமான நிலையத்தில் வரவேற்காமல் தவிர்த்தார்.
சென்னை பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!
நக்கீரன் செய்திப்பிரிவு : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றுள்ளனர். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் யாருக்கும் காயமில்லை.
ஒரு துணிக்காக அவர்கள் எம் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்.. “They are ruining our future for a piece of cloth” ஷர்மிளா செய்யத்
Sharmila Seyyid : “They are ruining our future for a piece of cloth”
"ஒரு துணிக்காக அவர்கள் எம் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்”
முஸ்கான் சொல்லும் இந்த கூற்றில் 'அவர்களை' நாமே சுதந்திரமாக தீர்மானிக்கும்படி அவள் விட்டது தற்செயல்.
ஆனால், அந்த 'அவர்கள்' காவி சங்கிகள் மட்டுமேயல்ல. பச்சை சங்கிகளும் என்பதையும் நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்..
Premraj Thangavel : எல்லோரும் சிறுபிள்ளைத்தனமாக நடக்கிறார்கள் இந்தப் பெண் உட்பட. இப்பொழுது அவள் அடிப்படைவாதிகளின் கையாளாக.
Sharmila Seyyid : Premraj Thangavel முஸ்கான் என்ன செய்தாள்? அவள் சிறுபிள்ளைதான் ஆனால் எதை எப்படி எதிர்கொள்ளவேண்டுமோ அதை அப்படியாக எதிர்கொண்டாள். மாமனிதர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடக்கிறார்கள் என்பதை ஏற்கலாம்.
புதன், 9 பிப்ரவரி, 2022
மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் - ஈரானில் வைரலான வீடியோ
மாலைமலர் : டெஹ்ரான் : இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஈரான் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி தனது இளம் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் குறித்த வீடியோ ஈரான் நாட்டின் சமூக வலைதளங்களில் பரவியது. இது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவை ஆய்வு செய்த போலீசார், மோனா ஹெய்டாரி என்ற 17 வயது பெண்ணின் தலை அது என்பதை கண்டறிந்தனர். ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில் அந்த பெண் வாழ்ந்து வந்த இடத்தில் சோதனை நடத்தினர்.
ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
tamil.indianexpress.com : கர்நாடகாவில் உள்ள சில கல்லூரிகளில் ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி புதன்கிழமை உத்தரவிட்டது.
ஹிஜாப் வழக்கு, ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்,
கர்நாடகாவில் உள்ள சில கல்லூரிகளில் ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி புதன்கிழமை உத்தரவிட்டது.
பெங்களூருவில் உள்ள பள்ளிகள், புதுமுக கல்லூரிகள் (பியூசி), கல்லூரிகள் அல்லது பிற கல்வி நிறுவனங்களின் வாயில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டம் நடத்துவதற்கு, கூட்டம் கூடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு கர்நாடகா மாநில காவல்துறை தடை விதித்துள்ளது. ஹிஜாப் சர்ச்சை தொடர்பான மனுக்களை செவ்வாய்கிழமை விசாரித்த நீதிமன்றம், மாணவர்களும் பொதுமக்களும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த நபர்
மாலைமலர் : இஸ்லாமாபாத்:.ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த நபரை பெஷாவர் போலீசார் தேடி வருகின்றனர்.
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி பெண்களுக்கு நேரும் கொடுமைகள் உறவுகள் மூலமும் அரங்கேறும் கொடூரமும் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
பாகிஸ்தானில் வசிக்கும் பெண் ஒருவருக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதையடுத்து, அடுத்து பிறக்கப் போகும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்பதற்காக சில சடங்குகளை செய்யுமாறு உள்ளூர் வைத்தியரிடம் கூறியுள்ளார். அவரும் கர்ப்பிணியின் தலையில் ஆணி அடித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் நோய் தீவிரம் ஆவதில்லை, இறப்பும் நேர்வதில்லை! ஆராய்ச்சியில் தகவல்
தினத்தந்தி : கொரோனா தடுப்பூசி, அதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு பற்றி சுவீடன் நாட்டில் ஆராய்ச்சி : லண்டன், கொரோனா தடுப்பூசி, அதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு பற்றி சுவீடன் நாட்டில் ஆராய்ச்சி நடத்தி உள்ளனர்.இந்த ஆராய்ச்சியில் கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தி 7 மாதங்களில், தொற்று நோய்க்கு எதிராக கிடைத்த பாதுகாப்பு குறையத்தொடங்கி விடுகிறது என தெரிய வந்துள்ளது.
மேலும், தடுப்பூசிகளினால் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் ஆஸ்பத்திரிக்கு செல்லக்கூடிய அளவுக்கு நோய் தீவிரம் ஆவதில்லை, இறப்பும் நேர்வதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி ஆராய்ச்சியாளரான சுவீடன் உமியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் நார்ட்ஸ்ரோம் கூறுகையில், “கொரோனா தடுப்பூசி நோய் தீவிரம் ஆவதில் இருந்தும், மரணம் நேரிடுவதில் இருந்தும் பாதுகாப்பை சிறப்பாக பராமரிக்கிறது. எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வது புத்திசாலித்தனமானது, முக்கியமானது” என தெரிவித்தார்.
ரோஜா ஆந்திரா போய் சேரும் முன் பறந்த ஆர்டர்.. முதல்வர் ஸ்டாலின் வேகம் வியப்பின் எல்லையில் ரோஜா!
Shyamsundar - Oneindia Tamil : சென்னை: ஆந்திர எம்எல்ஏ நடிகை ரோஜா முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தான் வைத்த கோரிக்கை ஒன்று துரிதமாக நிறைவேற்றி உள்ளதாக ரோஜா நன்றி தெரிவித்துள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினரும் ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏவுமான நடிகை ரோஜா நேற்று முதல்நாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முதல்வர் ஸ்டாலினை ரோஜா சந்தித்தார்.
செவ்வாய், 8 பிப்ரவரி, 2022
நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றம்!
நக்கீரன் செய்திப்பிரிவு : சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று (08/02/2022) காலை 10.00 மணிக்கு சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. அப்போது, நீட் விலக்கு மசோதாவைத் திருப்பியனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
அதைத் தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்து உரையாற்றினார்.
Hijab Issue : தேசியக் கொடியின் இடத்தில் காவிக்கொடி... ஜெய் ஸ்ரீராம் கோஷம்... போர்க்களமான ஷிமோகா கல்லூரி!!
tamil.asianetnews.com -Narendran S : கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் சிவமோகாவில் ஒரு கல்லூரியில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை அகற்றிவிட்டு காவி கொடியை மாணவர் ஒருவர் ஏற்றியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முஸ்லீம் மாணவிகள் தலையில் ஹிஜாப்பை அணிய கர்நாடகாவில் ப்ரீ யூனிவர்சிட்டி கல்லூரிகளில் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுவே இப்போது அந்த மாநிலத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. குந்தாப்பூரில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
தென்னிந்திய பாடகிகளும் லதா மங்கேஷ்க்கார்களும்
Sathyaperumal Balusamy : எம்.எஸ்.சுப்புலட்சுமி, என்.சி.வசந்தகோகிலம், டி.கே.பட்டம்மாள், கே.பி.சுந்தராம்பாள், யு.ஆர்.ஜீவரத்தினம், பி.ஏ.பெரியநாயகி, ராவு பால சரஸ்வதி, பி.பானுமதி, எஸ்.வரலக்ஷ்மி, எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, ஜிக்கி, இன்னும் எத்தனையோ பேர் தமிழ் திரையிசையில் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பி.சுசீலா வந்ததும் அவரே பின்னணிப் பாடகியரின் இலக்கணமாக மாறிப்போனார்.
ஒரே இரவில் இருவர் வீட்டிலும் (கலைஞர் எம்ஜியார்) உணவு ... flashback
நீண்ட நாட்களாக அரங்கேறிக் கொண்டிருந்தன.
இது பற்றி தமிழ்நாடு தலைவர்களுக்கும் இந்திய அரசுக்கும் விளக்கமாக கூறும்
பொருட்டு நேரில் 1983 ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி திரு அப்பாப்பிள்ளை
அமிர்தலிங்கம் தம்பதியர்கள் சென்னை வந்திருந்தனர்
திரு அமிர்தலிங்கம் தம்பதியர் அன்றிரவே கலைஞரின் இல்லத்திற்கு சென்று அவரோடு விரிவாக விவாதித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்
கலைஞரின் இல்லத்திலேயே இரவு உணவையும் முடித்து கொண்டு விடுதிக்கு சென்றனர்
இந்த செய்தி முதலமைச்சர் எம்ஜி அறிந்து கடுப்பாகிப் போனார்
முதலமைச்சராக இருந்தும் தன்னை சந்திக்காமல்
கலைஞரை திரு அமிர்தலிங்கம் சந்தித்தது எம்ஜி யின் சின்னபுத்தியை பிசைந்தது
அமிர்தலிங்கம் தம்பதியரை தனது இல்லத்திற்கு வருமாறு தொலைபேசியில் வற்புறுத்தியும் மறுபுறத்தில் நேரில் அவரை அழைத்து வருமாறு ஒருவரை அனுப்பியும் இருந்தார்.
நிதியமைச்சர் பிடிஆரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்க.. ஒன்றிய அரசின் அடாவடி மிரட்டல்
Giridharan N | Samayam Tamil : மத்திய அரசின் நிதி உதவிகள் கிடைக்க வேண்டுமென்றால், முதலில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு டில்லியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.
ஆட்சி, அதிகாரம், அரசியல் என அனைத்திலும் எப்போதும் பரபரப்பாக பேசப்படுபவர்கள் பட்டியலில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு.
அமைச்சராக பொறுப்பேற்றதும் தான் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே மத்திய அரசை 'ஒன்றிய அரசு' எனக் குறிப்பிட்டு, தேசிய அளவில் கவனத்தை பெற்றவர்... பிரிதொரு சந்தர்ப்பத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல், அரசின் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், அதனை பொதுவெளியில் பகிரங்கமாக தெரிவித்து உடன்பிறப்புகளையே ஒரு கணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியவர்.
கொரோனாவை பரப்பியதே காங்கிரஸ் கட்சிதான்".. மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 31ம் தேதி துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தன் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கியது.
இதையடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு விளக்கம் அளித்துப் பேசினார்.
அப்போது பிரதமர் மோடி பேசுகையில், "இந்தியாவில் கொரோனா தொற்று முதல் அலையின்போது காங்கிரஸ் கட்சி பொறுப்பற்ற முறையில் செயல்பட்டது. அப்போது இருக்கும் இடத்திலேயே மக்கள் இருக்க வேண்டும் என சொல்லப்பட்டது.
படகுகள் ஏலம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
மின்னம்பலம் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு அறிவித்தது. அதன்படி, நேற்று முதல் படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வர மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இருதரப்புமே அடிப்படைவாத கூட்டம்தான்... உண்மையில் அந்த பிள்ளைகள் அப்பாவிகள்.
Rubasangary Veerasingam Gnanasangary : அவரவர் விரும்பிய உடைகள் அணிவது அவரவர் விருப்பம்.
புலி பட்டியலில் பாராளுமன்றம் சென்ற தங்கேஸ்வரி கதிராமன் ஒருநாள் பஞ்சாபியோட (தப்பா நினைச்சிடாதேங்க - சுரிதார் உடை அணிந்து),
பாராளுமன்றம் சென்றபோது dress code மீறப் பட்டிருந்தமையால் அவருக்கு அமர்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப் பட்டிருந்தது.
இந்த வீடியோவில் உள்ள இஸ்லாமிய மாணவிகளும் அந்த பாடசாலையின் சீர் உடையை அணியவில்லை. அதி தீவிர இந்து வலதுசாரிகள் மாணவர்களைத் தூண்டி அந்த மாணவிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
இது சமகாலத்தில் கர்நாடகாவின் உடுப்பியில் நடந்து வருகிறது.
என்னைப் பொருத்தமட்டில் இருதரப்புமே அடிப்படைவாத கூட்டம்தான்.
திங்கள், 7 பிப்ரவரி, 2022
தமிழரசுக் கட்சித்தலைவர்களின் மலையகப் பிரவேசமும் இ.தி.மு.க. தடையும் (எழுதாத வரலாறு-4) - பெ.முத்துலிங்கம்
namathumalayagam.com : மலையகத்தின் பிரதான அரசியல் சக்திகளால் நெடுங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தவர் தோழர் இளஞ்செழியன்.
நீண்டகலாமாக அவர் எழுதத் தலைப்பட்ட மலையகத்தின் வரலாறு முழுமையாக சாத்தியப்ப்படுமுன்னரே அவர் மரணித்து விட்டார்.
அதனை அவர் எழுதுவதற்காக சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் மிகப் பெறுமதியானவை. அவற்றின் உதவியுடன் தோழர் பே.முத்துலிங்கம் எழுதி முடித்த "எழுதாத வரலாறு" நூல் மலையக வரலாற்றில் பேசப்படாத இன்னொரு பக்கத்தை வெளிக்கொணர்ந்தது.
குறிப்பாக இலங்கையில் திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்பவற்றின் வரலாற்றுப் பாத்திரம் இதில் பதிவானது. அந்த நூலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றாக இங்கே "நமது மலையகம்" வாசகர்களுக்காக வெளியிடுகிறோம்.
முதல்வர் ஸ்டாலின் நடிகை எம் எல் ஏ ரோஜா சந்திப்பு .. சித்தூர் மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு....
Manikandaprabu S | Samayam Tamil : ஆந்திர மாநில எம்.எல்.ஏ.வும், நடிகையுமானா ரோஜா முதல்வர் ஸ்டாலினை சந்தித்த போது, பரிசு ஒன்றை அளித்துள்ளார்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் வழங்குவது உள்ளிட்ட சில கோரிக்கைகள் குறித்து நடிகையும், எம்.எல்.ஏ.வுமான ரோஜா முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
அப்போது, பட்டுத் துணியில் நெய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினின் உருவப்படம் அடங்கிய பரிசை ஸ்டாலினுக்கு ரோஜா வழங்கினார். இந்த நிகழ்வின் போது, ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணியும் உடனிருந்தார்.
"விடுதலை என்பது தலையை மூடியிருக்கும் துணியிலிருந்து அல்ல! ஷர்மிளா செய்யத்
Sharmila Seyyid : "விடுதலை என்பது தலையை மூடியிருக்கும் துணியிலிருந்து அல்ல, மூளையைச் சுற்றியிருக்கும் குருட்டுச் சிலந்தி வலைகளிலிருந்து வெளியேறுவது தான்" என்று ஒரு சகோதரி முகநூலில் எழுதி உள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் 'ஹிஜாப் ஆர்மி' தற்கொலைப் படை ரேஞ்சுக்கு களமிறங்கி செயல்படும் என்பது எதிர்பார்த்ததுதான்.
இது ஹிஜாபிற்கு ஆதரவாக நிற்க வேண்டிய தருணமே, சந்தேகமில்லாமல்!
ஏனெனில் இங்கே ஹிஜாபிற்கு எதிராக கிளர்ச்சி செய்வோர் இஸ்லாம் விரோத சக்திகள்.
அதேநேரம் ஹிஜாப் ஆர்மியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணமும் இதுவே.
இந்த சந்தர்ப்பத்தில் தான் பெண்களின் சுய சிந்தனை வெளிப்பாட்டுத் திறனில், இளம் சந்ததிகளின் மண்டையில் சம்மட்டி கொண்டு அடிப்பார்கள்.
தொட்டாலும் தீட்டு பட்டாலும் தீட்டு குளிப்பத்தில் உள்ள கஷ்டம் .. கலைஞரின் மதத்தில் புரட்சி செய்த மகான்
Arul Prakasam : ராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான் என்று கலைஞர் தொலைக்காட்சியில் கலைஞர் கைவண்ணத்தில் ஒரு தொடர் ஒளிபரப்பானது.!
இந்த தொடரை தெலுங்கில் மொழிப்பெயர்த்து ஒளிபரப்புவதைப்பற்றி பேச, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்தவர்கள் சிலர் கலைஞரை சந்தித்தார்கள். ஆம், அவர் வீடு தேடி வந்துதான் பார்த்தார்கள்.!
கலைஞர், இந்த தொடர் எழுதபோகிறார் என்றபோதே பல விமர்சனங்கள் வந்தன.! அதற்கு அவரும் மற்றவர்களும் விடை தந்து சற்று அடங்கிய தருணத்தில் இந்த நிகழ்ச்சி பலருக்கு வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததுபோல் ஆனது.!
ஹிஜாப் - காவித் துண்டுக்கு எதிராக நீலத் துண்டு ! கர்நாடக மாணவர்கள்
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்வர் ஸ்டாலின் அறிவித்த அனைத்திந்திய சமூக நீதி கூட்டணி - காங்கிரஸ் சார்பில் வீரப்ப மொய்லியை நியமித்தார் சோனியா காந்தி
மின்னம்பலம் : தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின், இந்திய அளவில் சமூகநீதி கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தப் போவதாக கடந்த குடியரசு தினத்தன்று அறிவித்திருந்தார். அதன்படி நாட்டில் உள்ள 37 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி, சமூகநீதி கூட்டமைப்பில் அவர்களின் பிரதிநிதியை தெரிவிக்கும்படி கேட்டிருந்தார்.
இந்தப் பின்னணியில் திமுக பொருளாளரும் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு இன்று (பிப்ரவரி 7), காங்கிரஸ் கட்சியின் தலைவர் . சோனியா காந்தியை நேரில் சந்தித்து, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து, மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தை ஒப்படைத்தார்.
தமிழ்நாட்டுக்கு விரோதமான திட்டம் எது வந்தாலும் அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
Mathivanan Maran - Oneindia Tamil : சென்னை: தமிழ்நாட்டுக்கு விரோதமான திட்டம் எது வந்தாலும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, காணொலி வாயிலாக, கோவை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, "உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி" என்ற முழக்கத்தோடு நாம் தேர்தலைச் சந்திக்கிறோம்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் விடியலுக்கும் எதிர்காலத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்தால்தான் சரியாக இருக்கும் என்று தொலைநோக்குப் பார்வையுடன் வாக்களித்தார்கள்.
ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு - உலக தலைவர்கள் இரங்கல்
மாலைமலர் : தேனினும் இனிய தனது குரலால் இசை உலகில் தனி ராஜ்ஜியம் செய்த லதா மங்கேஷ்கர் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் (92), சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். 2001-ம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
சீட்டுக்கு 5 லட்சம் டிமாண்ட் வைக்கும் ( பாஜக) தாமரை... ஆடியோ வைரல்!
பி சிவன் - ப.ராம்குமார் - நக்கீரன் : தென்காசி நகராட்சியின் 8- வது வார்டிலிருக்கும் செல்வியை 2011- ல் பா.ஜ.க. நகராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட வைத்ததில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
பின்னர் 2016- ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், தாமரைக் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் வற்புறுத்தலின் பேரில் தென்காசி சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு கரன்சிகள் காலியானதோடு கரையேறவும் முடியாமல் போயிருக்கிறது.
இரண்டு முறை தோற்றதால் விக்கிரமாதித்த முயற்சியாக தளராமல் தற்போதைய தென்காசி நகராட்சியின் தனது 8- ம் வார்டு பெண்களுக்கானது என ஒதுக்கப்பட்டதால் போட்டியிடும் பொருட்டு பா.ஜ.க. கட்சித் தலைமைக்கு விருப்பமனுக் கொடுத்தவர் நேர்காணலுக்கும் சென்றிருக்கிறார்.
அம்பானியை மிஞ்சிய அதானி.. டாப் 10ல் கூட அம்பானிக்கு இடமில்லை..!
Prasanna Venkatesh - GoodReturns Tamil : இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு ஏற்ப இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அப்படி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்திலேயே இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
இது மட்டும் அல்லாமல் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் யாரும் எதிர்பார்க்காத மாற்றமும் தற்போது நடந்துள்ளது.
ஒட்டுமொத்த ஆசியச் சந்தையிலும் மிகப்பெரிய பணக்காரர் என உச்ச நிலையை நீண்ட காலம் முகேஷ் அம்பானி வைத்திருந்தார். இவருடைய இடத்திற்குச் சீனாவின் அலிபாபா மற்றும் டெக் நிறுவனத் தலைவர்கள் போட்டிப்போட்ட நிலையில் சீனா அரசின் கட்டுப்பாடுகளும், விதிமுறைகளைச் சீன பணக்காரர்களின் சொத்து மதிப்பை பெரிய அளவில் குறைத்தது.
முதல்வர் ஸ்டாலின் : இணைய திமுக தொண்டர்களுக்கு அறிவுரை + எச்சரிக்கை! பொய்களுக்கு பதிலடியாக உண்மைகளை பரப்புங்கள்
மின்னம்பலம் : திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் மாநில செயலாளராக இருந்த நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து நேற்று (பிப்ரவரி 5) தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நடைபெற்ற காணொலிக் கலந்துரையாடலில் பங்கேற்று, வழிகாட்டுதல்களை வழங்கி உரையாற்றினார் திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின்.
"இந்த அணியை உருவாக்கி இதில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். நிதி அமைச்சராக ஆன பிறகு இரண்டையும் சேர்த்து கவனிக்க இயலாத அளவுக்குப் பணிச்சுமையில் தள்ளப்பட்டார். 'இந்தப் பொறுப்பில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்’ என்று அவர் என்னிடம் சொன்னார். அதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகச் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நியமிக்கப்பட்டார்.
ராமானுஜரின் 216 அடி உயர சிலை - மோடி திறந்து வைத்தார் . Telangana CM சந்திரசேகர் ராவ் புறக்கணித்தார்
மாலைமலர் : ராமானுஜரின் வாழ்க்கை பயணம் மற்றும் போதனைகள் குறித்த 3D விளக்கக்காட்சியும் நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.
ஐதராபாத்:ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை இங்கு லட்சுமி நாராயண யாகம் நடைபெற்று வருகிறது.
வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும் கல்விக் கூடம் ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ ராமானுஜாச்சார்யா ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிகளால் பஞ்சலோகத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
'தம்பிகளை பார்த்துக்கோங்க' சித்தியின் உச்சகட்ட கொடுமை: தஞ்சை மாணவி வழக்கில் திருப்பம்
tamil.samayam.com : தஞ்சை கிறிஸ்துவ பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட மாணவி தனது சித்தியால் அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா தஞ்சை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்ததும் விடுதியில் பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்டதற்கு கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கான அழுத்தமே காரணம் என்று பாஜகவினரும், இந்து அமைப்பினரும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை அவசர அவசரமாக எடுத்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். தற்போது அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கருப்பும் சிவப்பும் இணையத்தை ஆளட்டும்!” : மு.க.ஸ்டாலின் பேச்சு!.. “குற்றச்சாட்டு வைத்தால் பதிலடி கொடுங்க.
கலைஞர் செய்திகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.கழக தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு வழிகாட்டுதல்களை வழங்கி உரையாற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நடைபெற்ற காணொலிக் கலந்துரையாடலில் பங்கேற்று, கழகத் தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு வழிகாட்டுதல்களை வழங்கி உரையாற்றினார்.
தகவல் தொழில்நுட்ப அணியினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வருகிறது. கழக அரசின் சாதனைகளை இளைஞர்களிடையே – சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் உள்ளது.
அபாய முகமூடிகள் கொண்டு வந்தவர்களே . இன்று தீனுக்கான் போர் என்று ... ஷர்மிளா சையத் :
ஷர்மிளா சையத் : அபாய முகமூடிகள் கொண்டு வந்தவர்களே . இன்று தீனுக்கான் போர் என்று ... இந்த பதிவு கசப்பானவையாக இருக்கலாம் ...
Sharmila Seyyid : 2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென
உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி பார்ப்பது ”ஹராம்” என்று பிரச்சாரம் செய்யத்தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. வீடு வீடாகச் சென்று அன்டனாக்களை உடைப்பது, சீடி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து, கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது.
கறுப்பு அபாயாக்களையும், நீண்ட அங்கிகளையும் கொண்டுவந்து இதுதான் இஸ்லாமிய உடை என்று யாரோ சில வியாபாரிகள் அறிமுகம் செய்தார்கள். எங்கள் இறுதித் தூதர் முஹம்மத் நபி அவர்கள் வாழ்ந்த மண்ணில் பெண்கள் எல்லாம் இதைத்தான் அணிகின்றார்கள். இது எங்கள் கலாசாரம் என்று ஏற்பதற்கு பெண்களையும் பிள்ளைகளையும் பழக்கப்படுத்தினார்கள்.