வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

10வது மாடியில் மகனை தொங்கவிட்ட தாய் - சாரியை எடுக்கவாம் ..பதறவைக்கும் காட்சி. ஹரியானா

கலைஞர் செய்திகள் : ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள 10-வது மாடியின் பால்கனியில் ஒரு தாய் தனது மகனை அந்தரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூட்டிய 9வது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் சிக்கிய தனது புடவையை எடுக்க பெண் ஒருவர் தனது மகனை 10-வது மாடி பால்கனியில் இருந்து பெட்ஷீட்டில் கட்டி இறக்கி அந்தரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள செக்டார் 82-ல் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் ஒன்பதாவது மாடியில் பூட்டிய வீட்டின் பால்கனியில் விழுந்த புடவையை எடுக்க, தாய் ஒருவர் தனது மகனை பெட்ஷீட்டில் கட்டி 9வது மாடியின் பால்கனிக்கு அனுப்பியுள்ளார்.
10வது மாடியில் மகனை தொங்கவிட்ட தாய் - பதறவைக்கும் காட்சி - நடந்தது என்ன?



பின்னர் அவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து மகனுடன் பெட்ஷீட்டை இழுத்துள்ளனர். சிறுவன் பெட்ஷீட்டை பிடித்துக்கொண்டு தொங்கும் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை எதிர் கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் படம் பிடித்து பகிர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கீழ் தளத்தில் விழுந்த புடவையை எடுப்பதற்காக தாய் தனது மகனின் உயிரைப் பணயம் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக