திங்கள், 7 பிப்ரவரி, 2022

முதல்வர் ஸ்டாலின் நடிகை எம் எல் ஏ ரோஜா சந்திப்பு .. சித்தூர் மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு....

 Manikandaprabu S | Samayam Tamil : ஆந்திர மாநில எம்.எல்.ஏ.வும், நடிகையுமானா ரோஜா முதல்வர் ஸ்டாலினை சந்தித்த போது, பரிசு ஒன்றை அளித்துள்ளார்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் வழங்குவது உள்ளிட்ட சில கோரிக்கைகள் குறித்து நடிகையும், எம்.எல்.ஏ.வுமான ரோஜா முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
அப்போது, பட்டுத் துணியில் நெய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினின் உருவப்படம் அடங்கிய பரிசை ஸ்டாலினுக்கு ரோஜா வழங்கினார். இந்த நிகழ்வின் போது, ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணியும் உடனிருந்தார்.


ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பெருபான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார்.
வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவரும், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவருமான நடிகை ரோஜாவுக்கு ஜெகன்மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாதி வாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ரோஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதையடுத்து, தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத்தலைவர் என்ற பதவி நடிகை ரோஜாவுக்கு கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. தற்போது நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் அப்பகுதியில் பம்பரமாக சுற்றி பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக