புதன், 9 பிப்ரவரி, 2022

கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் நோய் தீவிரம் ஆவதில்லை, இறப்பும் நேர்வதில்லை! ஆராய்ச்சியில் தகவல்

 தினத்தந்தி :  கொரோனா தடுப்பூசி, அதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு பற்றி சுவீடன் நாட்டில் ஆராய்ச்சி  : லண்டன்,  கொரோனா தடுப்பூசி, அதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு பற்றி சுவீடன் நாட்டில் ஆராய்ச்சி நடத்தி உள்ளனர்.இந்த ஆராய்ச்சியில் கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தி 7 மாதங்களில், தொற்று நோய்க்கு எதிராக கிடைத்த பாதுகாப்பு குறையத்தொடங்கி விடுகிறது என தெரிய வந்துள்ளது.
மேலும், தடுப்பூசிகளினால் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் ஆஸ்பத்திரிக்கு செல்லக்கூடிய அளவுக்கு நோய் தீவிரம் ஆவதில்லை, இறப்பும் நேர்வதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி ஆராய்ச்சியாளரான சுவீடன் உமியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் நார்ட்ஸ்ரோம் கூறுகையில், “கொரோனா தடுப்பூசி நோய் தீவிரம் ஆவதில் இருந்தும், மரணம் நேரிடுவதில் இருந்தும் பாதுகாப்பை சிறப்பாக பராமரிக்கிறது. எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வது புத்திசாலித்தனமானது, முக்கியமானது” என தெரிவித்தார்.

இந்த ஆராய்ச்சியில் பைசர் தடுப்பூசியின் 2-வது டோஸ் போட்டு 6 மாதங்களுக்கு பிறகு அதனால் கிடைத்த பாதுகாப்பு 29 சதவீதமாக குறைந்து விடுவதும், மாடர்னா தடுப்பூசியைப் பொறுத்தமட்டில் 2-வது டோஸ் போட்டு 6 மாதங்களுக்கு பிறகு பாதுகாப்பு 59 சதவீதமாகவும் குறைந்து விடுவது தெரிய வந்துள்ளது.

இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல்கள், தி லேன்செட் மருத்துவ பத்திரிகையில் வெளியாகி உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக