ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு - உலக தலைவர்கள் இரங்கல்

 மாலைமலர் : தேனினும் இனிய தனது குரலால் இசை உலகில் தனி ராஜ்ஜியம் செய்த லதா மங்கேஷ்கர் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.  ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் (92), சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். 2001-ம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.


லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

லதா மங்கேஷ்கர் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரி, நேபாள பிரதமர் ஷெர் பகதுர் தூபா மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லதா மங்கேஷ்கர் மறைவால், உலகம் அறிந்த சிறந்த பாடகிகளில் ஒருவரை துணைக்கண்டம் இழந்துவிட்டது எனபதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக