வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

ஆளுநருக்கு துரைமுருகன் எச்சரிக்கை!

 மின்னம்பலம் :   நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த விவகாரம் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திலும் எதிரொலித்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தும் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டமும் பிப்ரவரி 10ஆம் தேதி அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சரும் சட்டமன்ற அவை முன்னவருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய துரைமுருகன்,
"இதுவரையில் எந்த கவர்னருமே நடந்து கொள்ளாத வகையில் இந்த கவர்னர் நடந்து கொண்டிருக்கிறார்.


234 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நீட் தேர்வு தொடர்பாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அதனை ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநரிடம் அளித்தால், அவர் அதில் கையெழுத்து போட்டு அனுப்ப வேண்டும்.

டீ பார்ட்டியில் அவரைப்பார்த்து மென்ஷன் பண்றோம். அப்புறம் நானும் தளபதியும் பார்த்து இத பத்தி பேசுறோம். அதுக்கு அப்புறம் நீங்க போயிட்டு வாங்க என்று சொல்லி என்னை அனுப்பி வைச்சாரு. நான் ஒரு மணி நேரம் கவர்னர் கிட்ட பேசி இருக்கேன்.

இவ்வளவுக்கும் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தில் அடித்தாற்போல் அதை திருப்பி அனுப்பி உள்ளார்.

மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி சட்டமன்றத்தைக் கூட்டி சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் ஆளுநருக்கு தீர்மானம் அனுப்பியுள்ளோம். அதனை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பினால் சனியன் தொலைந்தது என்று அவர் இருந்து விடலாம். இல்லையென்றால் கவர்னரை வருஷம் ஃபுல்லா திட்டிக் கொண்டே இருப்போம்" இன்று ஆளுநருக்கு எச்சரிக்கை விடுத்தார் துரைமுருகன்

வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக