சனி, 12 பிப்ரவரி, 2022

பாஜகவில் இருந்து மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வம்.. பாஜக மீது பரபரப்பு புகார்

நக்கீரன் செய்திப்பிரிவு  : திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இருந்து வந்த ஆயிரம் விளக்கு முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் தற்போது மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.
கடந்த வருடம், திமுகவின் ஆயிரம் விளக்கு எம்எல்ஏவாக இருந்து வந்த கு.க.செல்வத்தை கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் எனக்கூறி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கட்சியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
நீக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கு.க.செல்வம் தன்னை பாஜகவில் இணைந்துகொண்டார்.
மேலும் திமுக தரப்புக்கு எதிராக பல்வேறு பேட்டிகளையும் அவர் தொலைக்காட்சிகளில் தெரிவித்து வந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக அவர் மீண்டும் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை மீண்டும் திமுகவில் ஐக்கியமாக்கிக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக