சனி, 21 ஆகஸ்ட், 2021

சமஸ்கிருதம் ஒரு மூல மொழியல்ல; அது அந்நிய பல நாட்டுக் கதம்ப மொழி... தந்தை பெரியார்

100 Best Images - 2021 - தந்தை பெரியார் ஐயா - WhatsApp Group, Facebook  Group, Telegram Group

 அய்யாவின் குரல்  :  இதுதான் சமஸ்கிருதம- தந்தை பெரியார்..
சமஸ்கிருதம் ஒரு மூல மொழியல்ல; அது அந்நிய பல நாட்டுக் கதம்ப மொழி.
அடிநாளில் (நீண்டநாளுக்கு முன்) மேற்கு மத்திய ஆசியாவில் வாழ்ந்த நார்டிக் ஆரிய மக்கள் பேசிவந்த மொழியே, பலமொழிகள் கலந்து சமஸ்கிருதம் என்பதாக ஆயிற்று.
அதாவது, தங்கள் தாயகத்தின் சுற்று வட்டார எல்லை நாடுகளின் மொழிகளான டர்கிஸ் (ஜிக்ஷீளீமீ) மொழி, ஈரானிய மொழி - பாக்ட்ரினியாவில் குடியேறிய பின் பர்மீரியன் மொழி ஆகியவற்றிலிருந்து தொகுத்த கதம்பமே சமஸ்கிருத மொழி.
மேற்கு மத்திய ஆசியாவில் வசித்த இந்த ஆரியர்கள் பாக்ட்ரினியாவிலிருந்து இரு பிரிவாகப் பிரிந்து, கி.மு. 1350ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கிந்தியாவில் குடியேறிய போது இந்த சமஸ்கிருத மொழியையும் வடமேற்கிந்தியாவில் புகுத்தினர்.
இவர்கள் வடமேற்கிந்தியாவில் இரு முறை நுழைந்தனர். முதலாவது கி.மு. 1400 வேதகாலம்; இரண்டாவது கி.மு. 58இல் பாக்ட்ரினியா, சாக்டியானா நாடுகளில் கிரேக்க - பாரசீக மொழிக் கலைத் தொடர்புகளின் பலனாக இந்த சமஸ்கிருத மொழி மேற்கண்ட பாரசீக - கிரேக்க மொழிக்கலை இலக்கிய இலக் கணங் களையும் தழுவி மேற்கொண்டு திருத்தப் பெற்றது.

நடிகை சித்ரா மாரடைப்பால் உயிரிழந்தார் .. அதிகாலையில் .

நடிகை சித்ரா (பழைய புகைப்படம்)

விகடன் - வெ.வித்யா காயத்ரி  :  'சேரன் பாண்டியன்' படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. அதன்பிறகு 'நல்லெண்ணெய்' சித்ரா என்பது இவரது அடையாளமாக மாறியது.
80'களில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் சித்ரா. 'சேரன் பாண்டியன்' படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்த இவரது கதாபாத்திரம் மிகவும் பிரபலம். தொடர்ந்து சினிமா, சீரியல்களில் நடித்துவந்தவர் ஒரு நல்லெண்ணய் விளம்பரத்தில் நடிக்க அதன்பிறகு நல்லெண்ணய் சித்ராவாகவே அடையாளப்படுத்தப்பட்டார்.
சென்னையில் கணவர் மற்றும் மகளுடன் வசித்துவந்த சித்ரா இன்று அதிகாலை மாரடைப்பால் திடீர் மரணமடைந்திருக்கிறார். இப்போது அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.
கடந்த மே 21-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார் சித்ரா. அதுகுறித்து ‘’21-ம் நூற்றாண்டு, வருஷமும் 21, நாளும் மே 21-ன்னு சொல்லி சிலர் வாழ்த்தினப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது’’ என்று விகடனுக்கு அளித்த பேட்டியில் பேசியிருந்தார் சித்ரா. இப்போது அதே 21-ம் தேதி சித்ரா மரணமடைந்திருப்பது அவரது நண்பர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

தாலிபான்கள் மீது அதிரடி தாக்குதல்கள்! ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தலிபான்களுக்கு எதிராக ..

tamil.asianetnews.com - Ezhilarasan Babu  :  :ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணைத் தலைவர் அம்ருல்லா சலே , நாட்டின் தற்காலிகத் தலைவர் என்று அறிவித்துக் கொண்டு, பஞ்ச்ஷிர் மாகாணத்தில் இருந்து தலிபான்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி உள்ளார்.
ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும்  தாலிபன்கள் வசம் விழுந்ததாக  கூறப்படுவதுடன்,
விரைவில் ஆட்சி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது
இந்த  நிலையில், தலிபான்களுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு படை ஆப்கானிஸ்தானில் உள்ள பொல் - இ - ஹேசர், தே சலா மற்றும் பானு  ஆகிய மூன்று மாவட்டங்களை கைப்பற்றி உள்ளதாகவும்,
இந்த எதிர் தாக்குதலில் பல தலிபான்கள் படுகாயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
அமெரிக்க படை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய உடன் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

அரசு வழக்கறிஞர்கள்: திமுகவில் உலவும் உத்தேசப்பட்டியல்!

 மின்னம்பலம் : திமுக அரசு பதவியேற்று நூறு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் இன்னமும் பல்வேறு துறை நியமனப் பதவிகளில்.. முந்தைய அதிமுக அரசால் நியமிக்கப்பட்டவர்களே இருக்கிறார்கள்.
அதுவும் குறிப்பாக நீதித்துறை சார்ந்த அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களில் இன்னமும் அதிமுகவினரே இருப்பதாக திமுகவினர் புலம்பி வருகிறார்கள்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தாலும் இன்னமும் ஆட்சியின் நிர்வாக நரம்புகளில் முழுமையாக திமுகவினர் பணியமர்த்தப்படவில்லை.
புதிய ஆட்சி அமைந்ததும் அரசு தலைமை வழக்கறிஞர் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டார்.
அதுபோலவே அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் பதவிக்கு அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார். இந்த இருவரது நியமனங்களைத் தவிர அடிஷனல் அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட முக்கியமான பதவிகளை நிரப்பாமலேயே வைத்திருந்தார் முதல்வர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்களே அந்த இடத்தில் இருக்கிறார்கள். சிலர் ராஜினாமா செய்துவிட்டனர்.

திரையரங்குகள் திறப்பு, கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி: அரசு அறிவிப்பு

  Rayar A  -  Oneindia Tamil News  :  சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு குறித்து முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து.. !என்ன காரணம்.. ஊரடங்கு குறித்து முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து.. !
தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடந்தது
இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவ வல்லுநர்கள், பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தற்போதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது வரும் 23-ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவு பெறும் நிலையில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செம்படம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும்.

ஆப்கனில் 3 மாவட்டங்களை கைப்பற்றிய உள்ளூர் கிளர்ச்சியாளர்கள்.. பொல்-இ-ஹேசர், தே சலாஹ் மற்றும் பானு ஆகிய மாவட்டங்களை மீட்ட...

Afghan rebels recapture 3 districts .: Pol-e-Hesar, Deh Salah and Banu districts in #Baghlan provinces have been captured by the Public’s Resistance Forces, & a number of Taliban killed & injured. Local reporters from Baghlan

 Hemavandhana   -     Oneindia Tamil News  :  காபூல்: ஆப்கனில், தாலிபான்களுக்கு எதிராக போராடும் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் 3 மாவட்டங்களை கைப்பற்றினார்கள்...
உள்ளூர் மக்கள் பலர் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஒரு சிலர் தாலிபான்கள் அடக்குமுறைக்கு பயந்து வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடுமையான சண்டை நடந்த நிலையில், அந்நாட்டின் முக்கிய பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.
இதனால் அந்நாட்டு மக்களிடையே ஒருவித பதட்டமும், பயமும், பீதியும், அச்சமும், பற்றியுள்ளது.. மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி கொண்டிருப்பதால், காபூல் ஏர்போர்ட்டில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
இதனால் தொடர்ந்து காபூல் ஏர்போர்ட்டில் மக்கள் குவிவதால், அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் சர்வதேச ஊடகங்களில் தகவல் வெளியானது
இந்நிலையில், ஆப்கனில், தாலிபான்களுக்கு எதிராக போராடும் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் 3 மாவட்டங்களை கைப்பற்றினார்கள்... உள்ளூர் மக்கள் பலர் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஒரு சிலர் தாலிபான்கள் அடக்குமுறைக்கு பயந்து வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

கொடநாடு கொலை கொள்ளை .. சிக்கப்போகும் எடப்பாடியும் அத்தனை அதிமுக அமைச்சர்களும் பிரமுகர்களும்

May be an image of 6 people, people standing and text that says 'உண்மை வெளிவருமா? தவிக்கும் தொண்டர்கள்! த கஜானா கொள்ளையர்!'

நக்கீரன் தமோதரன் பிரகாஷ்   :  📍900 ஏக்கர் எஸ்டேட்
📍மாட மாளிகை
📍நிர்வாகிளின் மன்னிப்பு கடிதம் முதல் மன்னிப்பு வரை
📍MLA முதல் மந்திரிகள் வரை அனைவரின் புள்ளி விவரங்கள்
இவை அனைத்தும் உள்ளடக்கிய #கொடநாடு எஸ்டேட்டில் 2017ல் நடந்த கொலை&கொள்ள சம்பவம்...
📍அய்வர் அணி அமைக்கப்படுகிறது. அதற்க்கு எடப்பாடி பழனிச்சாமி பொருளாளராக நியமிக்கப்படுகிறார்
📍அதன் அடிப்படையில் Driver கனகராஜ் பழக்கமாகிறான்
📍சஞ்சீவன், கொடநாட்டு பங்களாவில்  மர வேலை செய்யும் வேளை பார்த்து வந்தான். அதனால் அந்த பங்களாவில் உள்ள அனைத்து அறைகளும் இவருக்கு அத்துப்படி.
📍ஆகையால் அம்மா & சின்னம்மா அவர்களின் குட் புக்கில் இடம் பெற்றிருந்தார். ஒரு கட்டத்தில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வர தொடங்கினார். அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு எடப்பாடி & அவரின் அண்ணனிடம் நெருக்கம் அதிமாகி, அவர்களின் வீட்டு கபோர்டு வேலைகளையும் இவரே செய்கிறார்.
📍பின்நாளில் இவருக்கு கழக வர்த்தக அணியில் பதவி தரப்படுகிறது.
📍Deiver கனகராஜும், சஞ்சீவனும் பழக்கமாகி தங்களுடைய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஆப்கானிஸ்தான் இந்தியர்களை மீட்க தயார் நிலையில் விமானப்படை விமானம்

 தினத்தந்தி  : ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படை விமானம் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
 ஏற்கனவே இரண்டு விமானங்களில் தூதர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா வந்துள்ளனர்.
மேலும், 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கவேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க விமானப்படைக்கு சொந்தமான சி-17 ரக விமானம் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் ஆவணங்கள் கவனிப்பார் அற்ற நிலையில் ! பிலிம் நியூஸ் ஆனந்தனின் அந்தப் பொக்கிஷங்கள் கேட்பாராற்று

May be an image of 3 people and text that says '9 FNE 7 10 11 13 15 17 21 21'
May be an image of 4 people

பாண்டியன் சுந்தரம்  : தமிழ் திரைப்பட வரலாற்று நூல்கள் பலவற்றுக்கும் ‘சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு' என்ற புத்தகம்தான் அடிப்படை ஆவணம்.இது தமிழ்சினிமாவின் பெரிய சொத்து.அதில் அவ்வளவு தகவல்கள், போட்டோக்கள் இருக்கின்றன...
இந்த நூலை,  தொகுத்து அளித்தவர் முதல் தமிழ் திரைப்பட மக்கள் தொடர்பாளர் என்று கொண்டாடப்பட்ட ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன். 
இவர் தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்டவர். இவர் தாத்தா கிருஷ்ணசாமி முதலியார் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேராசியர். அவருக்கு 4 பிள்ளைகள்.
ஆனந்தன் அப்பா ஞானசாகரம், இரண்டாவது மகன். பேரன்கள் எல்லோருக்கும் 80 ஆண்டுகள் கெட்டியான ஆயுள் என்று கணித்துச் சொல்லியிருக்கிறார் ஜோதிடர். ஆனால் அண்ணன் கோபாலகிருஷ்ணனும்  சித்தப்பா மகன் ராமகிருஷ்ணனும் பெரியம்மை கண்டு ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இறந்துவிட்டார்கள்.
துக்கம் தாளாமல் ரயிலில் கிளம்பி வட இந்தியாவுக்கு யாத்திரை போய் வந்திருக்கிறார் தாத்தா. பிறகு ஆனந்தன் பிறக்க அக்குழந்தைக்கு ஜாதகம் எழுத அப்பா மறுத்துவிட்டார். 

Buddha collapsed out of Shame தாலிபானின் கொடூரங்கள் பற்றிய விருது பெற்ற திரைப்படம்

Amazon.com: Buddha Collapsed Out of Shame [Import anglais] : Movies & TV

 வெட்கத்தினால் உடைந்தழிந்து போனார் புத்தர்
- எம்.ரிஷான் ஷெரீப்  :              ஒரு ஐந்து வயது ஏழைச் சிறுமி. அவளைச் சூழவும் துப்பாக்கிகள் குறிபார்த்திருக்கின்றன. அவளது நெஞ்சளவு குழி தோண்டப்பட்டு அதில் பலவந்தமாக இறக்கி விடப்படுகிறாள். கற்களாலெறிந்து கொல்லப்பட தீர்ப்பளிக்கப்படுகிறாள். அவ்வாறு செய்யப்பட அவள் செய்த குற்றம்தான் என்ன?
            அவள் சிறைசெய்யப்பட்ட இடத்தில் இன்னும் சில சிறுமிகள். ஆளுக்கொரு குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அவர்களது கண்களும் வாயுமிருக்குமிடத்தில் மட்டும் துளைகளிடப்பட்ட பைகளால் முகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. புதிதாக அங்கே கொண்டு வந்து விடப்பட்ட ஐந்து வயதுச் சிறுமி அவர்களைப் பார்த்துக் கேட்கிறாள்.
'அந்தப் பையை எடுத்து விடுங்கள். நீங்கள் யாரென்று நான் பார்க்க வேண்டும்.'
'முகத்தைக் காட்டுவதற்கு நான் அச்சப்படுகிறேன்.'
'யாரைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்?'
'அந்தப் பையன்களைப் பார்த்து'
'ஏன்?'
'நான் என் முகத்தை மறைக்காதிருந்தால் அவர்கள் என்னைக் கல்லாலெறிந்து கொன்று விடுவார்கள்.'
'அவர்கள் எதற்காக உன்னைக் கைது செய்தார்கள்?'

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி திருட்டு

May be a cartoon of 1 person and text that says 'நிலக்கறிலயைக் அனல்மின் கோடி வடசென்னை 85 நிலையத்தில் மதிப்புள்ள 2.36 காணவில்லை. லட்சம் டன் வரையிலான மார்ச் நிலக்கரியைக் 31 ஆட்சியில் குளறுபடி. அதிமுக கணக்கெடுப்பில் P தங்கமணி?! ணி ?! மாட்டுவாரா முன்னாள் அமைச்சர்'

 கலைஞர் செய்திகள் - Vignesh Selvaraj  :  வடசென்னை அனல்மின் நிலைய நிலக்கரி சேமிப்பு கிடங்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்ட பிறகு அ.தி.மு.க ஆட்சியின் முறைகேடு குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 85 கோடி ரூபாய் மதிப்பிலான 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி மாயமாகி உள்ளது. அனல் மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் காணவில்லை.
அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

Pakistan doublecrossed USA and enjoyed the friendship of Taliban and USA. ... ஆப்கான் தாலிபான்களும் பாகிஸ்தான் தாலிபான்களும்

Rajendra Babu : நான் 2007 ஆகஸ்டு மாதம் ஒரு நெடுஞ்சாலை திட்ட வரைவு பணிக்காக காபூல் சென்று இருந்தேன். ஒரு அமெரிக்கா கம்பனியில் இருந்தேன் அப்போது. அவர்கள் யாரும் காபூல் வர பயந்து என்னையே சாலையை பார்வையிட மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூறினார்கள்.

Rajendra Babu   : The Taliban are now in possession of more Blackhawk helicopters than 166 other nations around the globe !! Basically Biden gifted Taliban 20 billion dollars $ worth of most dangerous military hardware in the world.
Thanks to US,
Taliban has an air force now, 11 military bases.
That includes an army of well-trained soldiers equipped with latest weapons and gadgets, well-planned military bases but most importantly, something the Taliban never dreamt of—an air force.
In the three months from April to June 2021, the US handed over to the Afghan National Defense and Security forces (ANDSF) six A-29 light attack aircraft,
174 High Mobility Multipurpose Wheeled Vehicles (Humvees), about 10,000 2.75 inch high-explosive rockets,
61,000 40-mm high explosive rounds, 9,00,000 rounds of .50 calibre ammo,
and 20,15,600 rounds of 7.62 mm bullets.

ஆப்கானிஸ்தானில் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டை நடத்தும் தாலிபன்.. BBC

BBC :  நேட்டோ படைகள் மற்றும் முன்னாள் ஆஃப்கன் அரசிற்காக பணியாற்றியவர்களை தேடும் பணியில் தாலிபன் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.
வீடு வீடாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் தாலிபன்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் அச்சுறுத்தி வருகின்றனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.
டாய்ச்ச வில்லே என்ற ஜெர்மனி அரசுக்கு சொந்தமான ஊடகத்தில் பணியாற்றி வந்த ஒரு பத்திரிகையாளரைத் தேடிய தாலிபன்கள் அவரது நெருங்கிய உறவினர் ஒருவரை தாலிபன்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய கடும்போக்கு இஸ்லாமியவாத குழுவான தாலிபன், தாங்கள் பழிவாங்கும் செயலில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்திருந்தது.
இருப்பினும் தாலிபன்கள் தங்களின் நிலையிலிருந்து மாறியிருக்க வாய்ப்பில்லை என்ற அச்சமே நிலவுகிறது.
இந்த தேடுதல் வேட்டை குறித்து, நார்வேயை சேர்ந்த உலகளாவிய பகுப்பாய்வு மையமான RHIPTO மையம் வெளியிட்டுள்ள ரகசிய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த மையம் ஐ.நாவிற்கு உளவு செய்திகளை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

14 எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்- புதிய கூட்டணி உருவாக்கம்

 மாலைமலர்  :காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள் மற்றும் இஸ்லாமிய கட்சிகள் நல்ல உறவு நிலையுடன் தோழமைக் கட்சிகளாக உள்ளன.
14 எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்- பாஜகவை தோற்கடிக்க புதிய அதிரடி திட்டம்
பாராளுமன்றத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற இயலாத வகையில் படுதோல்வியை சந்தித்தது. மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்படத் தவறியதால் அந்த கட்சிக்கு இத்தகைய பெரிய இழப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தொடரில் வேளாண் சட்ட மசோதா, பெகாசஸ் உளவு கேட்ட விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. 14 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்ததால் பாராளுமன்றத்தை பா.ஜனதா அரசால் சுமூகமாக நடத்தி முடிக்க முடியவில்லை. 80 சதவீத பாராளுமன்ற பணிகள் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பால் முடங்கின.

ஆப்கன் விவகாரத்தில் அதிக பாதிப்பு இந்தியாவுக்கே!

ஆப்கன் விவகாரத்தில் அதிக பாதிப்பு இந்தியாவுக்கே!

மின்னம்பலம் : தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருபது வருடங்களுக்குப் பின்னால் இப்போது கொண்டுவந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி க்ளைமாக்ஸாக அவர்கள் அந்நாட்டின் தலைநகர் காபூலை கைப்பற்றி அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர்.
இப்போது வரை தாலிபான்களின் தலைமையில் அரசாங்கம் முறைப்படி அமையவில்லை என்றாலும், ‘முழுமையான இஸ்லாமிய அரசாக ஆப்கான் இருக்கும். ஷரியத் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும்’ என்று தாலிபான் அறிவித்துள்ளது.
பொதுப் பார்வையில் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா சூடுபட்டு பின்வாங்கியுள்ளது என்றும்,வியட்நாமுக்கு அடுத்து ஆப்கானில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது என்றும் விமர்சனங்கள் மேலெழுகின்றன. ஆனால், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய விவகாரத்தில் அமெரிக்காவை விட அதிகம் பாதிக்கப்படப் போவது இந்தியாதான் என்கிறார்கள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள்.

மேட்ரிமோனியால் விளம்பரம் மூலம் சுமார் 50 தமிழ் பெண்கள்… நாசம் செய்த பெங்களூர் வாலிபர்..!

tamil.samayam.com : சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள கானத்தூர் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தனது மகளுக்கு மேட்ரிமோனியல் மூலம் வரன் பார்த்து வந்துள்ளனர்.
அப்போது சூர்யா (28) என்ற இளைஞர் இளம்பெண்ணின் விவரத்தை வைத்து செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது பெண்ணின் தாயாரிடம் பேசிய சூர்யா, உங்களது மகளின் போட்டோவை பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
நான் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறேன். எனது பெற்றோர் இருவரும் வெளிநாட்டில் பிசினஸ் செய்து வருகின்றனர் என கட்டுக்கதைகளை கட்டியுள்ளார்.
வாலிபரின் பேச்சை நம்பிய இப்பெண்ணின் தாய், மகளுக்கு புளியங்கொம்பாய் வரன் வந்துவிட்டதாக நினைத்துள்ளார்.
மேலும், பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதால் நான் மட்டும் முதலில் பெண் பார்க்க வீட்டிற்கு வருகிறேன் என கூறியுள்ளார் சூர்யா.

சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு கட்டாய பாலியல் வன்கொடுமை- சிபிசிஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்

 மாலைமலர்  : சிவசங்கர் பாபா மீது ஒரு வழக்கில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த 2 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டப்பிரிவும் அவர் மீது பாய்ந்துள்ளது.

தப்பிக்க முயன்ற ஆப்கானிஸ்தான் கால்பந்து வீரர் ஜக்கி அன்வாரி.. விமானத்தில் இருந்து தவறி விழுந்து பலி

An Afghan footballer killed after falling from a plane in Kabul!

  Velmurugan P  -   Oneindia Tamil News  :  காபூல்: ஆப்கானிஸ்தான் தேசிய அணி கால்பந்து வீரரான ஜக்கி அன்வாரி காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க விமானத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தார் என்று ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் அரியானா தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதி தாலிபன்கள் காபூலை கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிக்க ஏராளமான மக்கள் விரும்புகிறார்கள். பலர் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டார்கள்.

புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிட முறைகேடு பன்னீர்செல்வம் சிறை செல்வாரா? கிரிமினல் வழக்கு தொடரவேண்டும்: திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் !

மின்னம்பலம் : புளியந்தோப்பு கட்டட விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சட்டமன்றத்தில் திமுக எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் புளியந்தோப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள கே.பி பார்க் பன்னடுக்கு கட்டிடம் தரமற்று இருப்பதாக அங்குக் குடியிருப்பவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கட்டிடத்தில் பூசப்பட்டுள்ள சிமெண்ட் விழுவதாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த கட்டிடத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் பணத்தில் மீண்டும் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தினார்.

ஆப்கானில் ஜனநாயகம் இருக்காது: ஷரியத் சட்டம்தான் .. தாலிபான் திட்டவட்டம்!

 மின்னம்பலம்  : ஆப்கானிஸ்தானை ஒரு குழு அமைத்து ஆளப் போவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலுள்ள ஒரு அடையாளம் காட்டப்படாத பகுதியில் வைத்து தாலிபானின் மூத்த கமாண்டர் வஹிதுல்லா ஹாஷ்மி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு ஓரிரு நாட்கள் முன்பு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியின் விவரங்கள் இன்று (ஆகஸ்டு 19) பாகிஸ்தானின் டான் உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன.
“"நம் நாட்டில் எந்த அடிப்படை அமைப்பும் இல்லாததால் ஜனநாயக அமைப்பு இருக்காது" என்று அவர் கூறினார். "
ஆப்கானிஸ்தானில் எந்த வகையான அரசியல் அமைப்பை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி நாங்கள் விவாதிக்க மாட்டோம், ஏனெனில் அது தெளிவாக உள்ளது.

கந்தகார் விமான கடத்தல் Flashback 26 Aug 2014 - 178 பயணிகள், இரு விமான ஓட்டிகள், ஏர் ஹோஸ்டஸ்கள், 15 ஏர்லைன்ஸ் ஊழியர்கள். மொத்தம் 193 பேர்.

 hindutamil.in  -  : டீல்: தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை!
டிசம்பர் 24, 1999. மாலை மணி 4.25. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐ.சி. 184 நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து தில்லிக்கு வந்துகொண்டிருக்கிறது. 178 பயணிகள், இரு விமான ஓட்டிகள், ஏர் ஹோஸ்டஸ்கள், பிற உதவியாளர்கள் என 15 ஏர்லைன்ஸ் ஊழியர்கள். மொத்தம் 193 பேர்.
மணி ஐந்து ஐந்து. ஐந்து பயணிகள் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்திருக்கிறார்கள். இருவர் விமான ஓட்டி அறை அருகே போகிறார்கள்: மற்ற மூவரும், விமானத்தின் முன், நடு, பின்பகுதிகளில். அவர்கள் கைகளில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கத்திகள். பயணிகள் எல்லோருக்கும் புரிந்துவிட்டது – விமானம் கடத்தல்காரர்கள் கையில். தீவிரவாதிகள் என்ன செய்யப்போகிறார்கள்? பயணிகள் எல்லோரின் லப் டப்பும் எகிறுகிறது.
கடத்தல்காரர்கள் தங்களைக் காஷ்மீரில் இருக்கும் ஹர்கத்-உல்-முஜாஹிதீன் என்னும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தொண்டர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தலைவன் சீஃப் என்று தன் சகாக்களால் அழைக்கப்படுகிறான். விமானத்தைப் பாகிஸ்தானில் லாகூர் விமான நிலையத்தில் இறக்கச் சொல்கிறான். லாகூர் விமான அதிகாரிகள் அனுமதி தர மறுக்கிறார்கள்.

பெண் நீதிபதிகள்தான் தாலிபான்களின் முதல் குறியாக இருப்பார்கள்! கடந்த கால தாலிபான் பாலியல் குற்றவாளிகள்..

May be an image of 1 person and standing

Vidhya Suresh   :  இரத்தம் தோயாத ரொட்டித்துண்டு !
          “என்னை நினைத்து வெட்கமாக இருக்கிறது. நான் இப்பொழுது அவர்களுடன் நின்றிருக்க வேண்டும், அவர்களுக்கான உதவிகளை செய்து கொண்டிருக்க வேண்டும். எல்லாவற்றையும் விடுத்து நான் மட்டும் இங்கு சுகமாக இருப்பதை நினைக்கும்போது….” முடிக்குமுன்பே தேம்பி அழத்தொடங்கிவிட்டார் Marzia Babakarkhail- இங்கிலாந்தில் அகதியாக தஞ்சம் புகுந்து பிரிட்டிஷ் குடியுரிமைப் பெற்று  வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஆஃப்கனின் முன்னாள் பெண் நீதிபதி.
            “பெண் நீதிபதிகள்தான் தாலிபன்களின் முதற்குறியாக இருப்பார்கள். கடந்த காலங்களில் கற்பழிப்பு, வன்புணர்வு, பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக தீர்ப்பு சொன்ன பெண் நீதிபதிகளிடம் இன்னமும் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் அனைவரும் வீடு, வீடாக மாறி, மாறி ஒளிந்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றும் சிலர் நகரை விட்டு வெளியே சிறு கிராமங்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். ஆஃப்கன் நிலைமை மிகவும் அச்சமூட்டுகிறது. ஏனெனில், நம்பிக்கை என்ற வார்த்தையும், தாலிபனும் ஒன்றுக்கொன்று முரணானவை”

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

ஹைதி நிலநடுக்கம்: இறந்தோர் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரம் ஆனது, அவல நிலையில் 5 லட்சம் குழந்தைகள்

 BBC  : லெஸ் கேய்ஸ் என்ற இடத்தில் பழைய கல்லறைகளை உடைத்து நிலநடுக்கத்தில் இறந்தவர்களைப் புதைக்கிறார்கள்.
லெஸ் கேய்ஸ் என்ற இடத்தில் பழைய கல்லறைகளை உடைத்து நிலநடுக்கத்தில் இறந்தவர்களைப் புதைக்கிறார்கள்.
ஹைதி தீவில் சனிக்கிழமை நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைந்தது 1,941 ஆகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 7.2 என்ற அளவில் பதிவானது. இடிபாடுகளில் இருந்து மீட்புப் பணியாளர்கள் 34 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். ஆனால், இன்னும் பலர் மீட்கப்படாமல் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே புதன்கிழமை தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு தீவுக்கூட்டம் அருகே 6.8 அளவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1650 மருத்துவ சீட்கள் இந்த ஆண்டிற்கான தொகுப்பு கிடைத்துள்ளன. ஒவ்வொரு மாவட்ட கல்லூரிக்கும் 150 சீட்கள் அதிகமாக கிடைக்கும் .. அமைச்சர் மா. சுப்பிரமணியம்

நாளைமுதல் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்-  Dinamani

Muralidharan Pb   :  நேற்றைய சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் சில உண்மைகளை அற்புதமாக பதிவு செய்தார்.
1650 மருத்துவ சீட்கள் இந்த ஆண்டிற்கான தொகுப்பு கிடைத்துள்ளன. அதனால் 150 சீட் ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள கல்லூரியிலும் அதிகமாக கிடைக்கும் என்ற தகவலை அண்ணன் மாசு கூற, அதற்கு அதிமுக சமஉ ராஜன் செல்லப்பா, அதிமுக கொண்டு வந்த 11 மருத்துவக் கல்லூரிகள் தான் காரணம் என பேச,
அமைச்சர் உண்மைகளை ஒவ்வொன்றாக அடுக்கினார்.
2006ல் கலைஞரின் செயல்திட்டமான மாவட்டந்தோறும் அரசு மருத்துவ கல்லூரிகள் என்ற கொள்கையை நிறுவிய அரசு, 11 கல்லூரிகளுக்கு ஒன்றிய மருத்துவத் துறையில் ஒப்புதல் பெற்று, 6 கல்லூரிகளை 2006-2011 ஆட்சிக்குள் முடித்துவிட்டார்.
ஒன்றிய துறையின் சார்பில் மூன்று வாரங்களாக மாவட்டத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்து வந்த விவரத்தை கூற,
முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, அம்மையார் 2011 துவக்கத்தில், 1945 என்றிருந்த மருத்துவ சீட்கள் 5200 ஆக உயர்ந்தது என்று வாதிட்டார்.
அப்போது, தான் திமுகவுக்கு சாதகமாக பேசுகிறோமே என்பது கூட தெரியாமல் பாயிண்ட் எடுத்துக் கொடுத்தார் அண்ணன் பழனிச்சாமி.
அடுத்ததாக மாநிலத்தில் நிறைய அரசு மருத்துவ கல்லூரிகளையும் துவங்கப்பட்டதும் திமுகவின் திட்டத்தில் என்ற உண்மை விளங்குகிறது.

கார்த்தகீனியா - 17 - சேர சோழர்கள் ஆப்ரிக்கர்களா....? கானா Ghana

May be an image of outdoors and monument

புகச்சோவ்  :  கார்த்தகீனியா - 17  -  சேர சோழர்கள் ஆப்ரிக்கர்களா....?
கானா Ghana
      கிபி1250 க்கு பிறகு கானா மாலி பேரரசின் சிற்றரசானது. மாலியின் மன்டின்கே அரசன் Mansa musa keita இஸ்லாமிய கலப்பில் வந்த முதல் அரசனாவான். மன்சா என்பது மனுஷ்யன் அல்லது மன்னன் என்பதன் வேர்சொல்லாக இருக்கவேண்டும். மன்சா என்றால் மன்னன் என்பதாகும். இவனது காலத்தில் யோருபா மாகாணம் இன்றைய நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியாகும். இங்கே சோனின்கே மற்றும் மன்டின்கே மக்களின் மதமானது Hard knowledge ( கடும் அறிவு அல்லது பட்டறிவு, தர்மத்தை ஒழுகுதல்) என சொல்லப்படுகிறது.

இனி மீண்டும் பெண்களை கல்லால் அடிப்பார்கள்” : ஆப்கனின் முதல் பெண் விமானி வேதனை!

“இனி மீண்டும் பெண்களை கல்லால் அடிப்பார்கள்” : ஆப்கனின் முதல் பெண் விமானி வேதனை!
“இனி மீண்டும் பெண்களை கல்லால் அடிப்பார்கள்” : ஆப்கனின் முதல் பெண் விமானி வேதனை!

கலைஞர் செய்திகள் . பிரேம் குமார்   : ஆப்கனில் நடப்பதைக் கேட்கும்போது என்னால் உறங்க முடியவில்லை. எனக்கு பயமாக உள்ளது என ஆப்கானிஸ்தான் விமானப்படையின் முதல் பெண் விமானி நிலோபர் ரஹ்மானி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் படைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், தனது ஆட்சியைக் காப்பாற்ற முடியாமல் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை வெளியேறிவிட்டார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டார்கள். இதனால் அந்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் விமான நிலையங்களில் குவிந்தனர்.
பேருந்தில் ஏறுவதைப் போல, விமானங்களின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஏறி, பறக்கும்போது கீழே விழுந்து உயிரைவிட்ட அவலமும் அறங்கேறியது.
இந்நிலையில், ஆப்கனில் ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபான்கள், கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இஸ்லாம் விதிமுறைகளின்படி, அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு வழங்குவோம் என்று கூறிவருகின்றனர்.
தாலிபான்களால் பாதிக்கப்பட்டு, பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும் மலாலா தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதாகவும் தாலிபான்களுக்கு எதிராக உலக நாடுகள் செயலாற்றவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

ஆப்கான் பெண் கவர்னர் சலீமா மசாரி திடீர் கைது ! தாலிபான்களுக்கு எதிராக போராடிய ஆப்கான் கவர்னர்!

 Shyamsundar -  e Oneindia Tamil :    காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகளுக்கு எதிராக போராளி குழுக்களுடன் பயிற்சி எடுத்து வந்தவரும், தொடர்ந்து தாலிபான் படைகளை எதிர்த்து வந்தவருமான கவர்னர் சலீமா மசாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் கவர்னரான இவர் திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் தாலிபான்களின் ஆட்சி முறை மீதான கேள்வியை எழுப்பி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தாலிபான்கள் தங்களுக்கு என்று ஒரு இமேஜை உருவாக்க முயன்று வருகிறார்கள்.
அதாவது உலக அளவில் தங்கள் முகம் மோசமாக இருப்பதை சரி செய்ய தீவிரமாக முயன்று வருகிறார்கள். உலக நாட்டு மக்களிடம் நம்பிக்கையை பெறுவதோடு தங்கள் சொந்த நாட்டு மக்களிடம் நம்பிக்கையை பெற வேண்டும், அவர்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதில் தாலிபான்கள் தரப்பு தீர்க்கமாக இருக்கிறது.

தாலிபான்களின் பொய் பிரசாரம் முன்னாள் அதிபர் கர்ஸாய் மீது போலி குற்றச்சாட்டு

எல்லாம் அந்த 9.5 பில்லியன் டாலரை விடுவிக்க தாலிபான்கள் போடும் நாடகம்தான்

 மின்னம்பலம் : ஆப்கானிஸ்தான் முழுமையும் தலிபான்களின் கைக்குள் வந்த நிலையில் அவர்கள் காபூலில் உள்ள அதிபர் மாளிகைக்குள்ளும் நுழைந்துவிட்ட நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி அமெரிக்க ஆதரவு ஆப்கன் அரசின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அதிபர் மாளிகையில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்தும் வெளியேறி விட்டார்.
அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது குடும்பத்தினருக்கும், தனக்கும் அடைக்கலத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்
அதேநேரம் அவர் ஆப்கானிஸ்தானின் கருவூலத்தை சூறையாடி சென்றுவிட்டதாக தாலிபான்கள் ஆப்கன்  கூறத் தொடங்கிவிட்டார்கள்.
அதிபர் கனி ஆப்கனை விட்டு பறக்கும்போது நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் முழுக்க அமெரிக்க டாலர் கரன்சிகளை அடைத்து எடுத்துச் சென்றதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

இந்திய பொருட்கள் இறக்குமதி ஏற்றுமதிக்கு தடை விதித்த தலிபான் தலைவர்கள்

 மாலைமலர் : ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதே போல ரூ.3,800 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
காபூல்: தலிபான்கள் இந்தியாவுக்கு எதிரிகளாகவே இதுவரை இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அவர்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகம் மூடப்பட்டது. தூதரை வாபஸ் பெறுவதாக இந்தியா அறிவித்தது. இதைத்தொடர்ந்து தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டனர்.
தூதரை வாபஸ் பெற்றதால் தலிபான்களுக்கு இந்தியா மீது கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளனர். அதே போல இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்து இருக்கிறார்கள்.

தாலிபான் கைவைக்க முடியாத 9 பில்லியன் டாலர் அமெரிக்க ரிசர்வ் வங்கியில் உள்ளது .. US freezes nearly $9.5 billion Afghanistan central bank assets எதிர்பார்க்காத செக்..!

 Prasanna Venkatesh   -   GoodReturns Tamil  :   ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் மொத்தமாகக் கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
எங்கு பாரத்தாலும் துப்பாக்கி உடன் ஆட்கள் நடமாட்டம், ராணுவ வாகனங்கள் இடைவிடாமல் சாலையில் ரோந்து, இதற்கிடையில் மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் இயங்க துவங்கியுள்ளது,
ஆனால் மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபான்களுக்கு அந்நாட்டின் அரசின் சுமார் 9 பில்லியன் டாலர் அளவிலான தொகையைத் தொட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
 சுமார் 20 வருடப் போராட்டத்திற்குப் பின்பு தாலிபான்கள் ஆட்சி அமைக்கும் நிலையை ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியது மூலம் அடைந்துள்ளது.
ஆனா ஆட்சியை நடத்துவது என்ன அவ்வளவு ஈசியா, எவ்வளவு பணம் வேண்டும்..? இந்த பணத்திற்குத் தான் தற்போது செக் வைக்கப்பட்டு உள்ளது. ஆப்கான் நாணயத்தின் மதிப்பு ஆப்கான் நாணயத்தின் மதிப்பு தாலிபான் ஆப்கான் நாட்டின் முன்னேறி வரும் காரணத்தால் முதலீட்டாளர் டாலர் முதலீட்டை அதிகளவில் வெளியேற்றி வந்த காரணத்தால் டாலர் முதலீடுகள் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் ஆப்கான் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது.

ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை.. எல்லாம் ஷரியத் சட்டம்தான்.. தலிபான்கள் அறிவிப்பு

 Vishnupriya R  -   Oneindia Tamil :   காபூல்: ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை, எல்லாம் ஷரியா (ஷரியத்) சட்டத்தின்படி நடக்கும் என தலிபான்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் ஆட்சியை யார் நடத்துவார் என்ற கேள்வி எழுகிறது. இடைக்கால அரசு குறித்தெல்லாம் வதந்திகள் ரெக்கை கட்டி பறக்கின்றன. ஆனால் இதை தலிபான்கள் அமைப்பு மறுத்துள்ளது.
இந்த நிலையில் ஆட்சி குறித்தும் அதிகாரம் குறித்து தலிபான்களின் மூத்த தலைவர் வஹிதுல்லா ஹாஷிமி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் எப்படி ஆட்சி செய்வர் என்பது குறித்து நிறைய விஷயங்கள விவாதிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் ஆப்கானிஸ்தான் ஒரு ஜனநாயக நாடாக இருக்காது.
ஆப்கானிஸ்தானில் எந்தமாதிரியான அரசியல் அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பது குறித்து நாங்கள் இதுவரை விவாதிக்கவில்லை.

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் 16 பேர் தற்கொலை முயற்சி

  மாலைமலர் : கடந்த மாதம் சிறப்பு முகாமில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி  மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் மற்றும் வங்காளதேசம், நைஜீரியா, சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள் என 100-க்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர்.
இந்தநிலையில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தங்களை தண்டனை காலம் முடிந்தும் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர் என்றும், ஜாமீனில் வந்தவர்களையும் கைது செய்துள்ளனர் என்றும் இலங்கை அகதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் கொரோனா காலத்திலாவது எங்களை விடுதலை செய்ய வேண்டும்.
குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
 கடந்த மாதம் சிறப்பு முகாமில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

(சுவாதி ) ராம்குமார் கொலை வழக்கு கிளறப்படுகிறது ...மனித உரிமைகள் ஆணையம் முன் சிறைஅதிகாரிகள், மாஜிஸ்ட்ரேட் ஆஜர்

சுவாதி கொலை வழக்கில் மர்மம் விலகியது: கொலையாளி ராம்குமார் பிடிபட்டது  எப்படி? | சுவாதி கொலை வழக்கில் மர்மம் விலகியது: கொலையாளி ...

Jeyalakshmi C  -   Oneindia Tamil News  :  சென்னை: இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் மாநில மனித உரிமை ஆணையத்தில் சிறைத்துறை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அலுவலகம் செல்வதற்காக காத்திருந்த மென்பொறியாளர் சுவாதி காலை 6.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த படுகொலை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சுவாதி படுகொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அடுத்த சில நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் (வயது 22) என்ற இளைஞரைக் கைது செய்தனர்.

ஆப்கன் தாலிபனின் வெற்றிக்கு உதவிய ராணுவ முறைகேடுகளும் உளவியல் சிக்கல்களும்

தாலிபன்
ராகவேந்திர ராவ் - பிபிசி செய்தியாளர் : பட மூலாதாரம்,SCOTT OLSON/GETTY IMAGES படக்குறிப்பு,காந்தஹாரில் நடந்த சண்டையில் பங்கேற்ற ஆப்கன் ராணுவ வீரர் தேதி: ஜூலை 8, 2021. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் ஒரு பத்திரிகையாளருக்கும் இடையிலான உரையாடலைக் கவனமாகப் பாருங்கள் கேள்வி: ஆஃப்கானிஸ்தானில் தாலிபன் ஆக்கிரமிப்பு இப்போது உறுதியாக உள்ளதா? பதில்: இல்லை, அது அவ்வாறு இல்லை. கேள்வி: ஏன் அப்படி?

பதில்: ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மூன்று லட்சம் பேர் கொண்ட ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட ராணுவத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு விமானப்படை உள்ளது. அதே நேரத்தில் தாலிபான்களின் எண்ணிக்கை சுமார் 75 ஆயிரம் தான். ஆக்கிரமிப்பு சாத்தியமில்லை.

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கனி அமீரகத்தில் உள்ளார்!

 தினத்தந்தி  : காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலீபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
அவர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துக்கொண்டு ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகின.
அதே சமயம் அவர் கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றதாக மற்றொரு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.‌
மேலும், அவர் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுமே அஷ்ரப் கனி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

சிலிண்டர் விலை - மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை!

 மின்னம்பலம் : சிலிண்டர் விலையைக் குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று சட்டப் பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
சிலிண்டர் விலை மாதம்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த எட்டு மாதங்களில் 150 ரூபாய்க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 875 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில் நேற்று, பாமக தலைவர் ஜி.கே.மணி இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
சிலிண்டர் விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த விலை உயர்வைக் குறைக்க ஒன்றிய, மாநில அரசுகள் முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.

கார்த்தகீனியா -18 சேர சோழர்கள் ஆப்ரிக்கர்களா...??? கானா (Ghana)

No photo description available.

Seetha Ravi Suresh   கார்த்தகீனியா -18   சேர சோழர்கள் ஆப்ரிக்கர்களா?
கானா (Ghana)
   கானாவில் முதல் இஸ்லாமிய அரசனாக பட்டத்துக்கு வந்தவன் Mansa musa keita கிபி 1400. இவனது காலத்தில் அட்லான்டிக்கின் கடற்பயணத்தை மேற்கொண்டது மாலியின் கடற்படை. முதல் கட்டமாக 400 கப்பல்களுடன் பயணம் புறப்பட்டது கடற்படை உலகத்தின் அனைத்து பகுதிகளையும் வெல்ல வேண்டும் என்கிற
 முசா கேதனின் ஆசையினால் அட்லான்டிக்கில் விடப்பட்ட மாலியின் படைகள் திரும்ப வரவேயில்லை.
          இதன்பிறகு சில வருடங்கள் கழித்து இரண்டாயிரம் கப்பல்களுடன் கடற்படையினர் அட்லான்டிக்கில் விடப்பட்டனர். ஆனால் அவர்களும் நாடு திரும்பாதலால் மாலியின் கடல்கடந்த ராஜ்ஜியம் அமைக்கும் முயற்ச்சிகள் முடிவுக்கு வந்தன. "Canoes of the coast of africa ready to sail" போர்ச்சுகீசிய கடற்பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். கொலம்பஸ் தனது 3rd voyage ல் கூறுவதாவது. தலையில் நீலநிற தலைப்பாகை அணிந்த கறுப்பு நிற மனிதர்களை வட அமெரிக்காவின் ஜமைக்கா மற்றும் கரீபியன்  கடற்கரைகளில் கண்டதாக குறிப்பிடுகிறார்.

உதயநிதி ஸ்டாலின் முதல் சட்டமன்ற பேச்சு .. முழு விபரம்

 Kuttimani Thala  : சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது முதல் உரையை ஆற்றினார்.*
சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினின் கன்னிப் பேச்சு வருமாறு:
“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மூவரையும் வணங்கி என்னுடைய கன்னிப் பேச்சை இந்த அவையில் பதிவு செய்கிறேன்.
I belong to the Dravidian Stock. நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன். இந்தக் குரல் எப்போதோ ஒலித்த குரல் அல்ல. எப்போதும் ஒலிக்கின்ற குரல். இப்போது என்னிடமிருந்து ஒலிக்கின்ற உரிமைக் குரல்.
திராவிடன் என்ற உணர்வை எங்களுக்கு ஊட்டிய தந்தை பெரியார். அந்த உணர்வை அரசியல் கொள்கையாக்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரக்க முழங்கிய பேரறிஞர் அண்ணா. திராவிட இனத்தின்-இயக்கத்தின் தனிப் பெரும் தலைவராக விளங்கி, இந்திய அரசியலுக்கே வழிகாட்டிய முத்தமிழறிஞர் கலைஞர்.
கலைஞரின் தோழராக, அண்ணனாக இருந்து இன உணர்வும், திராவிட இயக்க சிந்தனைகளும் கடைக்கோடி கழக தொண்டர்களை சென்றடைய செய்த பேராசிரியர் தாத்தா அவர்கள். இன்னும் எண்ணற்ற திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்த - காக்கின்ற தொண்டர்களுக்கும் என் வணக்கம்.

புதன், 18 ஆகஸ்ட், 2021

பெண்களை தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு தலிபான்கள் வலியுறுத்து

 soodram  :தமது வெற்றி மகத்தானது என்று கூறும் தலிபான் தலைவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், படையினர் மற்றும் பொதுமக்கள், நாடு தமது கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லையென்று உறுதியளித்துள்ளனர்
ஆனால், தலிபான்களால் கைப்பற்றப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் மீது தலிபான்கள் தாக்குதல்களை நடத்துவதாகவும், கைது செய்யப்பட்ட வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் கூறுகிறார்கள்.
மேலும் அவர்கள், தமது வீரர்களுக்கு திருமணமாகாத பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு தலிபான் கமான்டர்கள் வற்புறுத்துகிறார்கள் என்றும் கூறினர்.
இது பாலியல் வன்முறை !  இதேவேளை, சரணடைந்த ஆப்கான் இராணுவ வீரர்களுக்கு தலிபான்கள், மரண தண்டனை விதிப்பதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், இது ஒரு போர் குற்றமென்றும் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

பெண் உரிமை பற்றிய கேள்விக்கு கேலியாக சிரித்த தாலிபான்கள்- வைரல் வீடியோ

News18 Tamilஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். பெண் அரசியல்வாதிகளுக்கு ஆப்கான் மக்கள் வாக்களிப்பாளர்களா என்று கேட்ட போது தாலிபான்கள் சிரிப்பில் ஆழ்ந்து ‘நிறுத்து’ என்று கூறிய வீடியோ வைரலாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். பெண் அரசியல்வாதிகளுக்கு ஆப்கான் மக்கள் வாக்களிப்பாளர்களா என்று கேட்ட போது தாலிபான்கள் சிரிப்பில் ஆழ்ந்து ‘நிறுத்து’ என்று கூறிய வீடியோ வைரலாகியுள்ளது.
பெண் பத்திரிகை நிருபர் ஒருவர் தாலிபான்களிடம் கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அந்தப் பெண் நிருபர் தாலிபான்கள் பெண்களுக்கு உரிமையளிப்பார்களா என்று கேட்ட போது, இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் பெண்ணுரிமை காக்கப்படும், என்றனர்.
பிறகு அதே பெண் பத்திரிகை நிருபர் பெண் அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து ஆட்சியதிகாரத்துக்கு ஆப்கன் மக்கள் அனுப்புவார்களா என்று கேட்ட போது, சிரிப்பில் ஆழ்ந்த தாலிபான்கள், படம்பிடிப்பதை நிறுத்து என்றனர்.

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்

மாலைமலர் : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி பாஸ்கர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.
சென்னை:    பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவரான பாரதி பாஸ்கர் தனது நகைச்சுவை பேச்சால் உலக அளவில் தமிழர்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.
கெமிக்கல் என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ள இவர் வங்கியில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் பாரதி பாஸ்கர் கடந்த வாரம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட கசிவை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்த மருத்துவ முயற்சி வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக தெரிகிறது. பாரதி பாஸ்கர் உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இலங்கையில் உச்சம் தொட்டன கொரோனா உயிரிழப்புக்கள்

 tamil.adaderana.lk  :கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 171 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
102 ஆண்களும் 69 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 35 பேர் மரணித்துள்ளனர். 30 வயதுக்குக் கீழ் 2 பேர் மரணித்துள்ளார்.
அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 6,434 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் மேலும் 3,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 365,629 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,325 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 314,507 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 45,026 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கமலஹாசன் : அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் என்பது ம நீ மையின் கொள்கை ! இந்தியாவெங்கும் இது நிகழ வேண்டும்!

makkal needhi maiam chief and actor kamalhaasan tweet

நக்கீரன் செய்திப்பிரிவு   :  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மக்கள் நீதி மய்யத்தின் செயல்திட்டங்களுள் ஒன்று.
தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம்.
இப்போது தமிழ்நாட்டில்  நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டுக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்

முதல்வர் ஸ்டாலின் பேசும்போது அமளி- சட்டமன்றத்தில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்! பாஜகவினர் இருந்தனர்

 மாலைமலர் : அ.தி.மு.க. உறுப்பினர்கள் வேண்டும் என்றே கூச்சல், குழப்பம் ஏற்படுத்துகிறார்கள் என சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:    தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மறுநாள் (14-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது.
இந்த ஆண்டு பட்ஜெட் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது.
நேற்று 2-வது நாள் விவாதம் நடந்தது. 3-வதுநாள் விவாதத்துக்காக இன்று காலை 10 மணிக்கு சட்டசபை வழக்கம் போல் கூடியது.
கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த ஜெயலலிதா ஓய்வு எடுத்த கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக பேச தொடங்கினார்.
உடனே சபாநாயர் குறுக்கிட்டு என்னிடம் அனுமதி பெறாமல் நேரமில்லா நேரத்தில் பேசுவது போல் பேசுகிறார்கள். இதை அனுமதிக்க முடியாது என்றார்.

சுப்பிரமணியன் சாமி : அனைவரும் வரும் அர்ச்சகராகும் சட்டம்.. ஸ்டாலின் செய்தது சட்டப்படி தவறு.. வழக்கு தொடுப்பேன்

 Shyamsundar  -   Oneindia Tamil  :  சென்னை: தமிழ்நாட்டு அரசின் 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க போவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பல வருட முயற்சிக்கு பின், பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பின் தமிழ்நாட்டில் அனைவரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் அமலுக்கு வந்து இருக்கிறது.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற நபர்கள் பல வருடங்களாக தங்களுக்கு பணி நியமன ஆணை கொடுக்க வேண்டும் என்று போராடி வந்த நிலையில் 3 நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் அனைவரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை கொண்டு வந்தார்.
மயிலாப்பூரில் இருந்து தொடங்கப்பட்டு உள்ள இந்த திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு முழுக்க பல்வேறு கோவில்களில் இதற்கான பணியாணைகள் வழங்கப்பட உள்ளது.

பிடியை இறுக்கும் தலிபான்; கேள்விக் குறியாகும் ஆப்கான் பெண்களின் நிலை....!

The status of women in question in Afghanistan ....!

நக்கீரன் -பா. சந்தோஷ்  :  ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றிருப்பது, அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாகியிருக்கிறது. பெண்கள் கல்வி கற்கக் கூடாது; பணிக்குச் செல்லக் கூடாது. ஆண் துணையின்றி வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது.
இவற்றை மீறினால் மரண தண்டனைக் கூட வழங்கப்படும். கடந்த முறை தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த போது, பெண்களுக்கு விதிக்கப்பட்ட சட்டங்கள் இவை.
இந்த அடிமைத்தனங்களில் இருந்து மீண்டு, கடந்த 20 ஆண்டுகளாகச் சுதந்திர காற்றைச் சுவாசித்து வந்த ஆப்கான் பெண்களின் எதிர்காலம் மீண்டும் இருண்ட காலத்தை நோக்கித் திரும்பக் காத்திருக்கிறது தற்போது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதால் அங்கிருக்கும் பெண்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
குறிப்பாக, பெண் உரிமைக்காகப் போராடியவர்களின் நிலை என்னவாகும் என்பதைக் கணிக்கவே முடியாது என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.

கோடநாடு வழக்கு: EPSன் தூண்டுதலால்தான் கொள்ளையே நடந்தது? பரபரப்பு வாக்குமூலம் அளித்த சயான்!

கோடநாடு வழக்கு: EPSன் தூண்டுதலால்தான் கொள்ளையே நடந்தது? பரபரப்பு வாக்குமூலம் அளித்த சயான்!

கலைஞர் செய்திகள்  : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் நிபந்தனை ஜாமினில் உள்ள சயானிடம் கோத்தகிரி போலிஸார் மூன்று மணி நேரம் நடத்திய விசாரணை நிறைவுற்றுள்ளது.
கோடநாடு வழக்கு: EPSன் தூண்டுதலால்தான் கொள்ளையே நடந்தது? பரபரப்பு வாக்குமூலம் அளித்த சயான்!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இங்குள்ள சொகுசு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலில் இருந்த ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார்.
அந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கோவையை சார்ந்த பேக்கரி உரிமையாளர் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேருக்கு தொடர்பு உள்ளதாக கூறி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். அதனையடுத்து சயான், வாளையாறு மனோஜ், தீபு, சதீசன், உதயக்குமார் உள்ளிட்ட 10 பேரை கைது செய்யப்பட்டனர்.

கலப்பட டீசல் விற்பனை: குண்டர் தடுப்பு சட்டம் பாயும்!

மின்னம்பலம் : தமிழகத்தில் கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளான சேலம், சங்ககிரி, நாமக்கல், திருசெங்கோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் டிஜிபிஆபாஸ்குமார் உத்தரவுப்படி, காவல் துறையினர் பல குழுக்களாக பிரிந்து மேற்படி பகுதிகளில் கலப்பட டீசல் வாகன சோதனையை தீவிரமாக மேற்கொண்டனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாக மொத்தம் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 26,400 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த டீசல் ஏற்றி வந்த ஐந்து டேங்கர் லாரிகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடத்தல் செயலில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அதில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கள்ள சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கை  ற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொடநாடு கொலைகள் தமிழ்நாடு போலீஸ் புதிய வலை! கைவிட்ட மோடி: கலக்கத்தில் எடப்பாடி!

கொடநாடு கொலை: தமிழ்நாடு போலீஸ் புதிய வலை! கைவிட்ட மோடி: கலக்கத்தில் எடப்பாடி!

மின்னம்பலம் : ஊட்டி, கொடைக்கானலில் ஒரு எஸ்டேட் வாங்குவதாக இருந்தால், அதைப் பார்த்த மாத்திரத்தில் அல்லது ஆவணங்களை வாங்கிப் பார்த்து விசாரித்துவிட்டு அதன் மதிப்பைச் சொல்லிவிடலாம். ஆனால் யாராலும் எளிதில் மதிப்பிட முடியாத ஒரு எஸ்டேட் இருக்கிறது.
அதன் பெயர் கொடநாடு!
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான நீலகிரியின் கடைக்கோடியில் இருக்கிறது கொடநாடு காட்சி முனை.
அங்கிருந்து பார்த்தால், சமவெளியில் வளைந்து நெளிந்து செல்லும் மாயாறு மனதை மயக்கும்; தெங்குமரஹடா கிராமத்தின் பேரெழில் பிரமிக்க வைக்கும். இதமான குளிர், அழகான சூழல் அங்கு செல்லும் யாரையும் அத்தனை எளிதில் நகரவிடாது.
அந்தக் காட்சி முனைக்குச் சற்று முன்பு இருபுறமும் பச்சைப் பசேலென்று பரந்து விரிந்திருக்கும் தேயிலைத் தோட்டம்தான் கொடநாடு எஸ்டேட்.
ஆங்கிலேயர்களால் அழகுற வடிவமைக்கப்பட்ட அந்த எஸ்டேட், பல கரங்கள் மாறி, கிரேக் ஜோன்ஸ் வசமிருந்தபோதுதான் சசிகலாவின் கண்களில் பட்டது.
அவரின் அன்புச் சகோதரி, அப்போதுதான் முதன்முறையாக தமிழக முதல்வராகியிருந்த ஆட்சிக்காலம்.

ஆப்கானிஸ்தானில் பர்தா அணியாமல் வெளியே சென்ற பெண்ணை தலிபான்கள் சுட்டுக் கொன்றனர்

Maniam Shanmugam - தேசாபிமானியில் ஸ்ரீகாந்த் பி.கே  - தமிழில்: சி.முருகேசன்   :  ஆப்கானிஸ்தானில் கம்யூனிஸ்ட் அரசைக் கவிழ்க்க தலிபான் பயங்கரவாதிகளை வளர்த்த அமெரிக்கா!
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரும் ஜனநாயக கட்சித் தலைவருமான ஹிலாரி கிளிண்டன் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட உரை இன்னும் யூடியூபில் உள்ளது.
“கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட நாங்கள் தலிபான்களுக்கு உதவினோம், இன்று அவர்கள் எங்களுக்கும் மற்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக மாறிவிட்டனர்” என்கிறது அந்த உரை.தலிபான்கள் இறுதியாக காபூலைக் கைப்பற்றினர்.
ஜனாதிபதி மாளிகையில் ஆப்கானிஸ்தான் கொடியை இறக்கி தலிபான் கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாட்டின் பெயரை விரைவில் “ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்” என்று மாற்ற உள்ளதாக தலிபான்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாமல், ஜனாதிபதி அஷ்ரப் கனியும் அவரது துணை ஜனாதிபதியும் நாட்டை விட்டு வெளியேறினர். நம்கண்முன்னே, ஒரு நாட்டின் மக்கள் மீண்டும்இருண்ட யுகத்தில் விழுந்துகொண்டிருக்கிறார்கள்.