சனி, 21 ஆகஸ்ட், 2021

கொடநாடு கொலை கொள்ளை .. சிக்கப்போகும் எடப்பாடியும் அத்தனை அதிமுக அமைச்சர்களும் பிரமுகர்களும்

May be an image of 6 people, people standing and text that says 'உண்மை வெளிவருமா? தவிக்கும் தொண்டர்கள்! த கஜானா கொள்ளையர்!'

நக்கீரன் தமோதரன் பிரகாஷ்   :  📍900 ஏக்கர் எஸ்டேட்
📍மாட மாளிகை
📍நிர்வாகிளின் மன்னிப்பு கடிதம் முதல் மன்னிப்பு வரை
📍MLA முதல் மந்திரிகள் வரை அனைவரின் புள்ளி விவரங்கள்
இவை அனைத்தும் உள்ளடக்கிய #கொடநாடு எஸ்டேட்டில் 2017ல் நடந்த கொலை&கொள்ள சம்பவம்...
📍அய்வர் அணி அமைக்கப்படுகிறது. அதற்க்கு எடப்பாடி பழனிச்சாமி பொருளாளராக நியமிக்கப்படுகிறார்
📍அதன் அடிப்படையில் Driver கனகராஜ் பழக்கமாகிறான்
📍சஞ்சீவன், கொடநாட்டு பங்களாவில்  மர வேலை செய்யும் வேளை பார்த்து வந்தான். அதனால் அந்த பங்களாவில் உள்ள அனைத்து அறைகளும் இவருக்கு அத்துப்படி.
📍ஆகையால் அம்மா & சின்னம்மா அவர்களின் குட் புக்கில் இடம் பெற்றிருந்தார். ஒரு கட்டத்தில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வர தொடங்கினார். அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு எடப்பாடி & அவரின் அண்ணனிடம் நெருக்கம் அதிமாகி, அவர்களின் வீட்டு கபோர்டு வேலைகளையும் இவரே செய்கிறார்.
📍பின்நாளில் இவருக்கு கழக வர்த்தக அணியில் பதவி தரப்படுகிறது.
📍Deiver கனகராஜும், சஞ்சீவனும் பழக்கமாகி தங்களுடைய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

📍புரட்சி தலைவி அம்மா அவர்கள் மரணமடைகிறார், சின்னம்மா அவர்கள் சிறை வாசம் செல்கிறார்.
📍ஆட்சியிம், அதிகாரமும் எடப்பாடி கையில் வருகிறது.
📍கனகராஜ் தன் கொள்ளை திட்டத்தை முன்னாள் அமைச்சர் வேலுமணியின் தம்பி அன்பரசனிடம் தெரிவிக்கிறான்.
📍பின் அன்பரசன் வேலுமணி மூலமாக EPS&OPS&CO விடம் தெரிவிக்கப்படுகிறது.
📍கொள்ளைத் திட்டம் தயாராகிறது.
📍சேலத்தில் பேக்கரி நடத்தி வரும் கேரளாவை சேர்ந்த சயன் என்பவன் கனகராஜுக்கு ஏற்க்கனவே நல்ல பழக்கம். அதனால் இந்த திட்டத்தை அவனிடம் விவரித்து, கேரளாவில் இருந்து ஆட்களை தயார் செய்கிறான்.
📍சயன், தமிழக கேரளா எல்லையில் உள்ள வாளையார்  பகுதியை சேர்ந்த ஏற்க்கனவே பல கொள்ளை கொல்லை சம்பவங்களில் சம்பந்தப்பட்ட மனோஜ் என்பவனின் உதவியை நாடுகிறான்
📍பிறகு  குழு உருவாகிறது.
📍கொள்ளையடிக்க கொடநாடு சென்றுள்ளனர்.
📍அங்கு ஏற்க்கனவே திட்டமிட்டபடி மின் வெட்டு, CCTV செயலிழப்பு,காவல்துறையின் ஒத்துழைப்பு போன்ற ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
📍அங்கு மெய்காப்பாளராக இருந்த ஓம் பகதூர் என்ற காவலாளி தடுக்க, அவரை கொலை செய்கிறது இந்த கும்பல்
📍பின் உள்ளே சென்ற இவர்கள் அங்கிருந்த முக்கிய ஆவணங்கள், பணம் உள்ளிட்டவையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
📍திட்டமிட்டபடி இவர்கள் கோத்தகிரி போலிசிடம் மாட்டுகிறார்கள்
📍கொடநாட்டு எஸ்டேட்டில் காவலாளியை கொன்று, உள்ளே உள்ள குதிரை பொம்மை, கைக்கடிகாரம் திருடப்பட்டதாக நீலகிரி போலிஸார் வழக்கு பதிவு செய்கிறார்கள்
📍வழக்கு விசாரணைக்காக கொடநாடு செல்போன் டவரை ஆய்வு செய்கிறார்கள்
📍அதில் கனகராஜ்-அன்பரசன்-வேலுமணி-எடப்பாடி ஆகியோர் பேசிய கால்கள் பதிவாகிறது.
📍இவை அனைத்து ஆதாரங்களும் தகவல்களும் எடப்பாடியிடம் ஒப்படைக்கப்படுகிறது
📍இந்த அனைத்து சம்பவங்களும் கனகராஜ் தன் கூட்டாளிகளிடம் பகிர்ந்துக் கொள்கிறான்
📍சில நாட்கள் கழித்து கனகராஜ் கார் விபத்தில் உயிரிழக்கிறான்
📍தினேஷ் என்ற கணினி ஆப்ரேட்டர் தற்க்கொலை செய்து கொள்கிறான்
📍கேரளா திருச்சூரில் குடும்பத்துடன் பயனித்துக்கொண்டிருந்த சயன் கார் மீது லாரி மோதி விபத்து. இதில் அவனின் மனைவி&மகள் மரணமடைகிறார்கள்.e படுகாயத்துடன் சயன் தப்பித்துக்கொள்கிறான்.
📍பிறகு சயன், அனைத்து சம்பவங்களையும் பத்திரிக்கையாளராகிய மேத்திவ் சாமுவேல் இடம் தெரிவிக்கிறான்
📍பின் எடப்பாடி தரப்பு சயன்,மனோஜ்&மேத்திவ் சாமுவேல் ஆகியோர் இந்த கொல்லை கொள்ளை சம்பவங்களை பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவை வாங்குகிறார்கள்
📍பின் அனைத்து வழக்குகளும் விரைவாக நீலகிரி நீதிமன்றத்தில் நடக்கத்தொடங்கியது.
📍மனோஜ்ஜிடம் எடப்பாடி தரப்பு பணத்தாசையைக் காட்டி தங்கள் பக்கம் வளைத்தனர்.
📍மனோஜ் மூலம் சயனிடம் தூது விடப்படுகிறது
📍ஆனால் சயன் ஒத்துவரவில்லை
📍ஆட்சி & காட்சி மாறுகிறது
📍சயன்&மனோஜ் ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்து வெளியில் வருகிறார்கள்
📍இந்த வழக்கை விசாரித்த ஆய்வாளர், நீதிமன்றத்தில் மீண்டும் மறு புலனா‌ய்வு செய்ய அனுமதி வாங்குகிறார்கள்
📍சயன் தன்னுடைய ரகசிய வாக்குமூலத்தை தருகிறான்
📍சயன் தந்த வாக்குமூலம் என்னவாக இருக்கும் என்பதை EPS,OPS,சில முன்னாள் அமைச்சர்களுக்கு நன்கு தெரியும்
📍டெல்லி மேலிடமும் கைவிரிப்பு
📍இனி நடப்பதை பொருத்திருந்து வேடிக்கை பார்ப்போம்...
📍இந்த அனைத்து தகவல்களும் நக்கீரன் தமோதரன் பிரகாஷ் கொடுத்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக